Jump to content

‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

October 21, 2024

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை, பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று, இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை, 13 வது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

இது முதலாவது அடி, இரண்டாவது ஐக்கியநாடுகள் பொதுச் சபையிலே, மனித உரிமை பேரவையிலே அங்கு வந்த தீர்மானத்திலே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை மறுத்து இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அதனை மறுத்து உள்ளக விசாரணைதான் என கூறியிருக்கின்றார். ஆகவே இதில் என்ன தெரிகிறது என்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் சர்வதேசத்திற்கும் உதவ தயாராக இல்லை, இதை நம்பி எங்களுடைய மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத் தேர்தலில் இறங்கியுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையின் பின்னணியிலேதான் அவர்களுடைய அந்த அமைச்சரவையில் இருக்கக் கூடிய. அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் ஜனாதிபதியின் கருத்துக்கள் தான். வெளிவிவகார அமைச்சகமும் இவ்வாறு கூறியிருக்கின்றது என்றால் இதைவிட என்ன கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன.

புதுமையான இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டும், இதுவரை தேர்தல்களில் விருப்பு வாக்கு அழிக்கப்படாது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கப்படும், ஆனால் இம்முறை விருப்பு வாக்குகளை வருகின்ற வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இது பேரினவாத கட்சிகளைப் போன்று அடிஎடுத்து வைக்கின்றது என்பதைச் சொல்கிறது.

ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.

2004 ம் ஆண்டு வீசிய கடற்கோள் அதாவது சுனாமியின் பின் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் இணைந்து சுனாமியின் பின் அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தார்கள் பீரொம்ஸ். அதாவது post tsunami operational management structure சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமானம். பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு அவற்றை எல்லாம் செயற்படுத்தப்படுகின்ற பருவம் வருகின்றபோது அதனுடைய தலமைச் செயலகம் கிளிநொச்சியிலே அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கு எதிராகவும் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்தவர்கள். அதைவிட கொழும்பிலேயும் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் செய்தவர்கள் ஜேவிபியினர். இவ்வாறு இருக்க ஜே.பி.விபியினருக்கு நீங்கள் வாக்களிக்க முயன்றல் அது எங்களை அகல பாதாளத்தில்தான் கொண்டு சென்று விடும் என்பது எனது தாழ்மையான கருத்து என்றார்.

 

https://www.ilakku.org/இனவாதத்திலிருந்து-ஜே-பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தில் இருந்து சிவாஜிலிங்கமும் ஜேவிபியும் மீளவேண்டும்.  அதுவே மீட்சி. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன். ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டெட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வாய்ந்த கணினி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மலிவாகச் செய்யக்கூடிய ஒரு செயல்முறை இல்லை. இதைப் பயன்படுத்த நானோ, அல்லது நேற்று என்னுடன் பேசிய யாருமே இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை. இந்தச் செயலியை உலகம் முழுவதும் 300 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியென்றால், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? வணிகக் கணக்குகளின் மூலம் வருமானம் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ உள்ளதால் இது சாத்தியம் ஆகிறது. என்னுடையது போன்ற தனிநபர் வாட்ஸ்ஆப் கணக்குகள் இலவசமானவை. ஏனெனில், என்னைப்போன்ற தனி நபர்களுடன் பேச விரும்பும் வணிகக் கணக்குகளிடமிருந்து வாட்ஸ்ஆப் கட்டணம் வசூலிக்கிறது. கடந்த ஆண்டு முதல், இந்த நிறுவனங்கள் இலவசமாக வாட்ஸ்ஆப் சேனல்களைத் துவங்கி, அவற்றுக்கு ‘சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்குச்’ செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு குறைவாக இருந்தாலும், இந்தியாவின் பெங்களூரு போன்ற நகரங்களில் பேருந்துப் பயணச்சீட்டு, பேருந்தில் விருப்பப்பட்ட இருக்கை என எல்லாவற்றையுமே வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.   பட மூலாதாரம்,META படக்குறிப்பு, மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன் ‘அனைத்தும் ஒரே Chat-இல்’ “ஒரு வாட்ஸ்ஆப் சாட்டின் (chat) மூலம் ஒரு வணிக நிறுவனமும் அதன் வாடிக்கையாளரும் அவர்களுக்குத் தேவையான வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன். “அதாவது, உங்களுக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் துவங்கவோ, பணம் செலுத்தவோ, ஒரு சாட்-ஐ விட்டு வெளியே செல்லாமலேயே செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அவரவர் வாழ்க்கையின் மற்ற உரையாடல்களை கவனித்துக் கொள்ளலாம்,” என்கிறார். "ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்பவர்களுக்கு நேரடியாக தனிப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மட்டுமே பல கோடி டாலர்களை இந்தச் செயலி ஈட்டுகிறது," என்கிறார் நிகிலா ஸ்ரீநிவாசன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும் சிக்னல், ஸ்னாப்சாட் ஆகியவை என்ன செய்கின்றன? மற்ற மெசேஜிங் செயலிகள் வேறு வழிகளில் செயல்படுகின்றன. உதாரணமாக ‘சிக்னல்’ செயலியின் பாதுகாப்பு வழிமுறைகள் பெரிதும் அறியப்பட்டவை. இவை தொழில்முறையில் நேர்த்தியானவை. ஆனால் இது லாப நோக்கமற்ற அமைப்பு. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து எந்தக் நிதியும் பெறுவதில்லை என்று கூறுகிறது.(ஆனால், டெலிகிராம் செயலி முதலீட்டார்களிடம் இருந்து வரும் நிதியை எதிர்பார்த்து இருக்கிறது.) மாறாக, சிக்னல் செயலி நன்கொடைகளின் மூலம் செயல்படுகிறது. இதில், 2018-ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்-இன் துணை நிறுவனர்களில் ஒருவரான ரையன் ஆக்டன் வழங்கிய 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 420 கோடி ரூபாய்) நிதியும் அடங்கும். “எங்களது நோக்கமே, சிக்னலின் மீது அக்கறை உள்ள சிறிய நன்கொடையாளர்கள் கொடுக்கும் பங்களிப்புகளைக் கொண்டு முழுமையாகச் செயல்படுவதே,” என்று கடந்த ஆண்டு தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டார் சிக்னல் நிறுவனத்தின் தலைவர் மெரிடித் விட்டேக்கர். கேம் விளையாடும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசெஜிங் செயலி ‘டிஸ்கார்ட்’. இதை இலவசமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் சிறப்பம்சங்களைப் பெற, சில ‘கேம்’களை விளையாடப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் இது ‘நைட்ரோ’ (Nitro) என்னும் சந்தா வசதியையும் வழங்குகிறது. இதில் மாதம் 9.99 டாலர்களைச் செலுத்தி (இந்திய மதிப்பில் சுமார் 840 ரூபாய்) உயர் தர வீடியோக்களையும், நமக்கேற்ற எமோஜிக்களையும் பெறலாம். ‘ஸ்னாப்சாட்’ செயலியின் நிறுவனமான ‘ஸ்னாப்’, இந்த வழிமுறைகளில் பலவற்றை ஒருசேரப் பயன்படுத்துகிறது. இதில் விளம்பரங்கள் உள்ளன, இதற்கு 1.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் (ஆகஸ்ட் 2024-இன் படி). மேலும் இது மெய்நிகர் கண்ணாடிகளை (augmented reality glasses) ஸ்னாப்சாட் ஸ்பேக்டகல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இதனிடம் மேலும் ஒரு தந்திரம் உள்ளது. ஃபோர்ப்ஸ் வலைதளத்தின் அறிக்கைபடி 2016-2023 ஆண்டுகளில், இந்த நிறுவனம் கிட்டதட்ட 300 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய்) வட்டியின் மூலம் மட்டுமே சம்பாதித்துள்ளது. ஆனால், இதன் முக்கிய வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 33,600 கோடி ரூபாய்) ஈட்டுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) உள்ளது விளம்பரங்கள் எப்படி அனுப்பப் படுகின்றன? பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமான எலிமெண்ட் அதனுடைய பாதுகாக்கப்பட்டத் தகவல் பரிமாற்றச் செயலியைப் பயன்படுத்த அரசாங்கங்களிடமும், பெரிய நிறுவனங்களிடமும் பணம் வசூலிக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்கள் தனிப்பட்ட சர்வர்களில் பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகள் முன் துவங்கப்பட இந்த நிறுவனம், தற்பொழுது ‘பல கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது’ என்றும் ‘லாபம் அடையும் நிலையை நெருங்குகிறது’ என்றும் அதன் இணை நிறுவனர் மேத்தியூ ஹாஜ்சன் என்னிடம் கூறினார். விளம்பரங்கள் மூலமே ஒரு வெற்றிகரமான தகவல் பரிமாற்று செயலியை இயக்க முடியும் என்று அவர் நம்புகிறார். “பெரும்பாலான மெசேஜிங் செயலிகளில் ஒருவர் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று ஆராய்ந்த பிறகே அவர்களுக்கு ஏற்றார் போல விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன,” என்கிறார் அவர். ‘என்கிரிப்ஷன்’ பாதுகாப்பு, அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பது ஆகியவை இருந்தாலும், இந்தச் செயலிகள் பயனர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களது மெசேஜ்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது தரவுகளை (டேட்டா) வைத்தே விளம்பரங்களை விற்கலாம். “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள்தான் விற்கப்படுகிறீர்கள்,” என்கிறார் ஹாட்சன். https://www.bbc.com/tamil/articles/ce9jklp74evo
    • இலங்கை தமிழ் அரசு கட்சி தனி நபரின் கம்பனியாக மாறிவிட்டது - கே.வி.தவராசா  ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், 16 ஆண்டுகள் தமிழரசு கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் ஆஜராகியுள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறியிருக்கிறது. அந்த நபர் இவ்வாறு சர்வாதிகாரம் மிக்க நிலையில் செயற்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் காரணமாக உள்ளனர். கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கிறார்.  கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தமிழ் தேசியம் தான் எமது தமிழ் அரசு கட்சியின் தாரக மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை. கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன்.  நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர், பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகுகிறார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார். ஆனால், அவருக்கான பதவி மறுக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் அவர்கள் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும்போது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.  https://www.virakesari.lk/article/196778
    • இந்தியாவை நாறடிக்காமல் விடமாட்டானுக. 🤣
    • ""வி"" என்கிற எழுத்துடன் எது ஆரம்பித்தாலும் விசுகருக்குக் பதற்றம் சேர்ந்துவிடுகிறது.  பதற்றம் வேண்டாம் விசுகர். வியாபாரிகள் என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். நான் உங்களை "வியாபாரிகள்" வரம்பிற்குள் வைக்கவில்லை.  "குண்டூசி விற்பவர் , புண்ணாக்கு விற்பவர் எவரரும்  வியாபாரி ஸ்தானத்திற்குள் வரார் "? 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.