Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, குமாரசாமி said:

எல்லாரும் புதுக்க புதுக்க வெளுத்து வாங்குவார்கள். போகப்போகத்தான் எல்லா வெளிச்சமும் தெரியும். சத்தம் போட்டு ஒலிவாங்கி முன் பேசுவதால் எல்லோரும் அரசியல்வாதியாக முடியாது.

தம்பி விஜய் நேரடியாக சினிமாகாட்சி போல் முதல்வர் கதிரையை நோக்குகின்றார். அது சரிவராத காரியம் ராசா.....😁

அரசியல் என்பது கரடுமுரடான நெடிய பாதை. அதில் பயணிப்பது சுலபமில்லை.😎

நடிகர் விஜய்ய பார்த்து பரிதாபப்படுகின்றேன். 😂

மகிந்த குடும்பத்தின் அரசியல் ஓரங்கட்டபடும் என நாம் முன்பு நினைக்கவில்லை. எதுவும் நடக்கலாம். 

மகிந்த குடும்பம் விஜயின் தீவிர இரசிகர்கள் என நினைக்கின்றேன்.

  • Replies 306
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

island

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

பாலபத்ர ஓணாண்டி

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
Posted
நடிகர் விஜய் அவர்களே...!
"திராவிடமும் தமிழ்த் தேசியமும் இருகண்கள்.." என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? நீங்கள் அரசியலை இன்னும் தெளிவுற கற்கவில்லையா? அல்லது அரசியல் அறிவியலில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை என்பதாகவே இதைப் பார்ப்பதா? அல்லது உங்களின் திட்டமிட்ட சதியா?
'சாதி, மதம் கடந்த அரசியல்..' என்பது உலகளாவிய நடைமுறை. அதிலொன்றும் பேசுவதற்கு இல்லை. அதேசயத்தில் 'இனம் கடந்து, மொழி கடந்து..' என்று உங்கள் வாய்க்கு வருவதை எல்லாம் பேசினால் அது அரசியல் பிழையாகும். இதன் மூலமாக நீங்களும் தமிழினத்திற்கு துரோகத்தை மட்டுமே வழங்குவீர்கள் என்ற அச்சம்தான் உண்டாகிறது. அதற்கான காரணங்களை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன்.
உலகம் முழுவதும் உருவாகிய தனி நாடுகளில் 99% இனத்தின் வழியாக மட்டுமே உருவானவை. எனவே இனம் சார்ந்த அரசியலை போகின்ற போக்கில் நீங்கள் தட்டிவிட்டு செல்வது பிற்போக்குதனமானது. மேலும், நீங்கள் ஓர் அரசியல் தெளிவற்ற குழப்பவாதி என்பதையே உங்கள் முதல் மாநாட்டு மேடை பேச்சு வெளிச்சம் போட்டு அறிவிக்கிறது. ஒருவேளை நீங்கள் இனிமேல் தான் மேடைப் பேச்சைக் கற்றுக் கொள்வீர்கள் எனில் தலைசிறந்த அறிவாளிகளை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தொடர்ந்து இதே பாணியில் உங்கள் மேடை பேச்சு அமையும் எனில் நீங்கள் வீழ்வது உறுதி.
ஈவேரா படம் வேண்டும், ஆனால் அவரது கடவுள் மறுப்பு வேண்டாம். அண்ணாதுரையின் திராவிடம் வேண்டும், ஆனால் திராவிடம் என்ற பெயர் கட்சிக்கு வேண்டாம். தமிழ்த் தேசியம் வேண்டும், ஆனால் தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் வேண்டாம். பாஜகவின் கடவுள் ஏற்புக் கொள்கை உண்டு, ஆனால் அந்த கடவுளின் பெயரால் உருவான ஏற்றத்தாழ்வை ஏற்கமாட்டோம். அடேங்கப்பா... எப்படிப்பட்ட ஒரு குழப்பவாதி நீங்கள்..?
விஜய் அவர்களே.. நீங்கள் குழப்பவாதியா..? அல்லது உங்களுக்கு இந்த வசனங்களை எழுதிக் கொடுத்தவன் குழப்பவாதியா..? உங்களைப் பின்னின்று நகர்த்தும் உளவு அமைப்புகளின் திட்டமிட்ட சதியா?
'தேசியம்' என்றால் என்னவென்று உங்களுக்கு முதலில் தெரியுமா?
இந்திய தேசிய கட்சிகள் இந்தியா என்ற நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் வேலை செய்பவை. திராவிட தேசிய கட்சிகள் திராவிட நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் வேலை செய்பவை. இந்தியா ஒரு நாடாக என்றுமே இருந்தது இல்லை. திராவிட நாடு ஒரு கற்பனா வாதம். ஆனாலும் அக்கட்சிகள் சரியோ தவறோ தங்களுக்கு என்று ஒரு கொள்கை, ஒரு நில எல்லையை தீர்மானித்து வேலை செய்தன.
தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களின் விடுதலை கோட்பாடு. தமிழர்களுக்கு என்று நில எல்லை உண்டு. அதன் உரிமையை வெல்வதே தமிழ்த் தேசியம். எனில் இதில் நீங்கள் எந்த புரிதலின் படி திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று மேடையில் வாந்தி எடுத்து வைத்தீர்கள்?
இந்தியா என்ற நாட்டை நாங்கள் ஏற்க முடியாது என்பது திராவிட வாதம். இந்தியா என்பதும் பொய், திராவிடம் என்பதும் பொய், தமிழர் நாடு என்பதே மெய் என்று தேசிய அரசியலின் இறுதி வடிவத்தை வலிவுறுதுவது தான் தமிழ்த் தேசிய கோட்பாடு. எனில், இந்த கோட்பாட்டு வரையறைகளில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது தானே அரசியலின் முதல் கேள்வியாக இருக்க முடியும். அந்த முதல் கேள்விக்கே நீங்கள், ' திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் ' என்ற மிகவும் மட்டமான ஒரு பதிலை சொல்லி இருப்பது எப்படி ஏற்புடையது ஆகும்?
கேள்வித்தாளில் A அல்லது B இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால், இரண்டையும் தேர்வு செய்வது முட்டாள்தனம் இல்லையா?
உங்களின் இந்த குழப்பவாத பேச்சுக்கு பின்பாக, ஒருவேளை நீங்களும் உங்கள் அரசியல் ஆலோசகர்கள் குழுவும் எழுந்து வரும் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கலாமோ? அல்லது இந்தியாவின் கொள்கை வடிவமைப்பாளர்கள் எம் ஜி யார் , வைகோ , விஜய காந்த் போன்றவர்கள் மூலமாக தமிழ்த் தேசிய எழுச்சி வராமல் தடுக்க அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தியது போல, அடுத்து உங்களையும் பயன்படுத்த முனைகிறார்களோ? என்ற கேள்விகளும் எழுகிறது.
திராவிட நாடு கோரிக்கையை அண்ணாதுரை கைவிட்ட பொழுது, ஒருத் தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர். அண்ணாதுரையின் மறைவுக்கு பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தமிழ்த் தேசியர்கள் இயக்கம் கட்டி, மெல்ல மெல்ல தமிழ்த் தேசிய அரசியலை பேசிக்கொண்டு இருந்த பொழுது, எம் ஜி ஆர் என்ற நடிக கோமாளி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்து "இந்திய = திராவிடம்" என்று கொள்கை சமரசம் செய்த பொழுது, அதன் பின்புலம் என்னவென யோசிக்க கூட அறிவற்ற தமிழ் இளைஞர்கள் கூட்டம் அன்று எம் ஜி ஆரை நம்பி வீணாய் போனார்கள். மீண்டும் ஒரு தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர்.
இந்திய அமைதிப் படை ஈழ நிலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படையுடன் மோதி தோல்வி அடைந்து நாடு திரும்பிய பின், மெல்ல மெல்ல துளிர்விட்டு எழுந்த தமிழ்த் தேசிய உணர்வை வைகோ என்ற ரா ஏஜண்டை கொண்டு ஒரு கட்சித் தொடங்கி, மீண்டும் ஒருத் தலைமுறை தமிழ் இளைஞர்களை திசைதிருப்பி ஏமாற்றியது இந்தியாவும் அதன் கொள்கை வகுப்பாளர்களும். வைகோவின் காட்டிக் கொடுப்புக்கு பலனாக அவர் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றம் செல்ல வழிவகுத்தது இந்தியாவும் அதன் கூட்டுக் களவாணியான திராவிடமும்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று விஜய் காந்த் கொஞ்ச காலம் உருட்டியதும், தமிழ்த் தேசியம் என்ற கொள்கை பக்கம் தமிழ் இளைஞர் கூட்டம் வரக் கூடாது என்பதற்காக மட்டுமே. அதன் தொடர்ச்சி தான் இன்று நீங்கள்.?
ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு பின், தமிழ்நாட்டில் நடந்த தமிழ்த் தேசியப் பெருவெடிப்பு பல லட்சம் தமிழ் இளைஞர்களின் உயிர் கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை ஏற்க வைத்தது. இன்று அதை மீண்டும் ஒருமுறை அழிக்க கோடம்பாக்கத்தில் இருந்து மீண்டும் ஒரு ஆளாக நீங்கள் வந்து இருப்பதை உணர முடிகிறது விஜய் அவர்களே...!
எம் ஜி ஆர்.. 'இந்தியா = திராவிடம்' என்று தேசிய இன அரசியல் கொள்கையை நீர்த்துப் போக வைத்தது போல, நீங்கள் 'திராவிடம் = தமிழ்த் தேசியம்' என்று சொல்வதன் மூலமாக மீண்டும் எங்கள் நிலத்தில் எழுந்துள்ள இன அரசியலை நீர்த்துப் போக துடிப்பீர்கள் எனில்... ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வோம்...
இது எம் ஜி ஆர் காலமும் இல்லை... நீங்கள் எம் ஜி ஆர்ரும் இல்லை...
இயல்பாகவே நீங்கள் தோற்றுபோக பல நூறு அரசியல் காரணங்கள் இன்று உள்ளது. அவற்றை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது விளக்க விரும்பவில்லை. ஆனால், உறுதியாக ஒன்றை சொல்கிறோம்...
தமிழ்த் தேசிய அரசியலை உங்களின் மசாலா அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்கள் போதைக்கு எங்கள் உயிர் அரசியலை ஊறுகாய்யாக பயன்படுத்த விரும்பாதீர்கள்...
ஒரு குத்துப் பாட்டு, ஒரு காதல் பாட்டு, ஒரு சண்டை, ஒரு கொலை, ஒரு கொள்ளை, ஒரு நகைச்சுவை என்று கலவையாக மசாலா படம் நடித்து நீங்கள் பெரிய நடிகனாக வந்ததில் பிரச்சனை இல்லை. அதே பாணியில் கொஞ்சம் இந்தியம், கொஞ்சம் திராவிடம், கொஞ்சம் தலித்தியம், கொஞ்சம் தமிழ்த் தேசியம் என்று மசாலா அரசியல் செய்ய நினைப்பது கேவலமானது.
அன்று எம்ஜிஆர் செய்த பித்தலாட்ட அரசியல் அவரது ரசிக தொண்டர்களுக்கு புரியவில்லை. வைகோவின், விஜயகாந்தின் பித்தலாட்ட அரசியல் அன்றைய தமிழ் இளைஞர் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், இன்று நீங்கள் ஆட நினைக்கும் இந்த ' இந்திய - திராவிட - தமிழ் தேசிய கூட்டாச்சோறு எங்களுக்கு நன்றாக புரிகிறது.
நீங்களும் உங்களை பின் நின்று நகர்த்தும் சதிகார கூட்டமும் என்ன ஆட்டம் ஆடினாலும், இனி தமிழ்த் தேசியத்தை எவனாலும் வீழ்த்த முடியாது என்று அறிந்து கொண்டு களமாடுங்கள் விஜய் அவர்களே...!
நீங்கள் என்ன நோக்கத்தோடு வந்துள்ளீர்கள் என்று நாங்கள் அறிவோம்... ஆனால் உங்களின் அப்பாவி ரசிக தொண்டர்கள் அறிய வாய்ப்பில்லை... கொஞ்ச காலத்தில் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்...
உங்கள் அரசியல் வருகையால் ஒரேவொரு நன்மை நடந்துள்ளது... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்...
பல லட்ச கணக்கான உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் உங்கள் வாய் வழியாகவே 'தமிழ்த் தேசியம்' என்ற வார்த்தையை கடத்தி உள்ளீர்கள்... உங்களுக்கு ஒருவேளை அந்த வார்த்தையின் அர்த்தமும் ஆழமும் புரியாமல் போகலாம், உங்களின் ஒரேவொரு தொண்டன் அதன் ஆதியையும் அந்தத்தையும் தேடினால் போதும்... மற்றது தானாக நடக்கும்... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்...
நன்றி..
-பேராசிரியர் ஆ. அருள் இனியன்
தலைவர்
தமிழர் நாட்டுக் கட்சி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, நியாயம் said:

மகிந்த குடும்பத்தின் அரசியல் ஓரங்கட்டபடும் என நாம் முன்பு நினைக்கவில்லை. எதுவும் நடக்கலாம். 

மகிந்த குடும்பம் விஜயின் தீவிர இரசிகர்கள் என நினைக்கின்றேன்.

திமுக்கா வீழ்த்த‌ முடியாத‌ க‌ட்சி கிடையாது

 கூட்ட‌னிக‌ள் வில‌கினால் திமுக்கா தானாக‌வே தோல்வி அடையும்

10வ‌ருட‌ம் திமுக்கா கூப்பில் இருந்த‌தை தாத்தா மற‌ந்து விட்டார் போல‌ இருக்கு

2011ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது திமுக்கா எதிர் க‌ட்சியா கூட‌ வ‌ர‌ வில்லை

திமுக்கா என்ர‌ க‌ட்சி அழிந்து போனால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் ம‌கிழ்ச்சி அடைவின‌ம் ந‌ம்ம‌ல‌ அழிச்ச‌ கூட்ட‌ம் அழிந்து போய் விட்ட‌தே என்று🙏...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, கந்தப்பு said:

தவெகவின் மாநாட்டில் இரண்டு ஈழத்துக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய பவதாஜினி நாகராஜன் 
ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் பாடல்களுக்கு இசையமைத்த கண்ணன் மாஸ்ரர் அவர்களின் பேத்தியார்.

அடுத்தவர் ஈழத்து எழுத்தாளரும் பாடலாசிரியருமான தன. ரஜீவன் அவர்கள். நேற்று அந்த அரங்கிலே ஒலிபரப்பி வெளியிடப்பட்ட தவெகத்தின் கழகப் பாடலை இவரே எழுதியிருந்தார்.

முதற் தடவையாக தமிழக அரசியல் மேடையில் பயன்படுத்தப்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் இவர்களே.

அப்படியா? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லையே. காங்கிரசுக்கு தூண்டில் போடுறவர் எப்படி ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவார்?திரவிடததையும் பெரியாரையும் கொள்கையாய் வைத்தது தமிழரல்லாதோர் வாக்குகளைக்கவரவும் அரசியல் பிழைத்தால் முpண்டும் சினிமாவுக்குப் போகவும்தான். எழுதிக் கொடுத்துப்பாடமாக்கி ஒத்திகை பார்த்ததை அவரது வாய்மொழி சொல்லாவிட்டாலும் உடல்மொழி சொல்கிறது.கிட்டத்தட்ட விஜயகாந் திரைப்படத்தன் கிளைமாக்ஸ் காட்சிபோல இருக்கிறது அவது பேச:ச. இது சினிமா இல்லை. இறங்கி வேலை செய்யணும். மக்களோட மக்களா நிற்கணும். பவுன்சர்களை  சுற்ற வர வைத:தக் கொண்மு மக்களை எப்படி நெருங்குவது?கூடும் கூட்டம் இல்லாம் வாக்குகளாக மாறாது. திமுக மேடையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம்  தேர்தல் முடிய உச்சத்தில் இ ருந்த வடிவேலுவை மீண்டும்  எழும்ப முடியாத நிலைக்கத் தள்ளிவிட்ட வரலாறுகளை நாம் பார்த்திருக்கிறோம். விஜய் தேர்தலில் நின்று தனக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளதென்று நிரூபிக்க வேண்டும். 10-15 வரை வரலாம்.இப்போது நாம் தீர்மானிக்க முடியாது.இருந்தாலும் விஸய் அரசியலுக்கு வருவதை நான் மனதார வரவேற்கிறேன். மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, புலவர் said:

புல‌வ‌ர் அண்ணா

தான் ஆடாட்டியும் த‌சை ஆடும்

விஜேய்க்கு எங்க‌ட‌ நாட்டு பிர‌ச்ச‌னை ந‌ல்லாவே தெரியும்

விஜேன்ட‌ அப்பா எத்த‌னையோ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்ன‌வ‌ர் த‌ன்ட‌ ம‌க‌ன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌ன் என்று

ஈழ‌ம் மீது ப‌ற்று இல்லா விட்டால் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌ன் என‌ சொல்லி இருப்பார்

விட்டு பிடிப்போம் விஜேயை இப்போதைக்கு எதிர்க்க‌ வேண்டாம்..................அர‌சிய‌லில் எந்த‌ சூழ‌லில் எது வேணுன் என்றாலும் ந‌ட‌க்க‌லாம்

நாம‌ முன்பு எந்த‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக்கு ஆத‌ர‌வு கொடுத்தோமோ அதையோ கொடுப்போம்......................200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ள் எம்பிட்டால் அவைய‌ வேட்டை ஆட‌ வேண்டிய‌து தான்........................ அர‌சிய‌லில் குறுக்கு வ‌ழியில‌ போனால் எங்க‌ள் இல‌க்கை அடைந்து மாவீர‌ர் உயிர் நீத்த‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும் என்றால் அர‌சிய‌லில் குறுக்கு வ‌ழிய‌ தொட‌ர்வ‌து த‌ப்பே இல்லை🙏............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, வீரப் பையன்26 said:

திமுக்கா வீழ்த்த‌ முடியாத‌ க‌ட்சி கிடையாது

 கூட்ட‌னிக‌ள் வில‌கினால் திமுக்கா தானாக‌வே தோல்வி அடையும்

10வ‌ருட‌ம் திமுக்கா கூப்பில் இருந்த‌தை தாத்தா மற‌ந்து விட்டார் போல‌ இருக்கு

2011ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது திமுக்கா எதிர் க‌ட்சியா கூட‌ வ‌ர‌ வில்லை

திமுக்கா என்ர‌ க‌ட்சி அழிந்து போனால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் ம‌கிழ்ச்சி அடைவின‌ம் ந‌ம்ம‌ல‌ அழிச்ச‌ கூட்ட‌ம் அழிந்து போய் விட்ட‌தே என்று🙏...................................

வீழ்த்த முடியாத கட்சி இல்லை சரி. ஆனால், வரும் தேர்தலில் வீழ்த்தக்கூடிய கட்சி இல்லை என நினைக்கின்றேன். அதேசமயம் @குமாரசாமி கூறியது போல் விஜய் கட்சி மூலம் எவ்வளவு தூரம் அரசியல் சாக்கடையில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் எதிர்வு கூறுவதற்கு கடினமானது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, நியாயம் said:

வீழ்த்த முடியாத கட்சி இல்லை சரி. ஆனால், வரும் தேர்தலில் வீழ்த்தக்கூடிய கட்சி இல்லை என நினைக்கின்றேன். அதேசமயம் @குமாரசாமி கூறியது போல் விஜய் கட்சி மூலம் எவ்வளவு தூரம் அரசியல் சாக்கடையில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் எதிர்வு கூறுவதற்கு கடினமானது.

திமுக்காவின் கூட்ட‌னிக‌ள் உடைந்தால் அவ‌ர்க‌ளை சிம்பிலா தோக்க‌டிக்க‌லாம்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

உங்க‌ள் பார்வைக்கு அவ‌ர் எப்ப‌டியும் இருந்து விட்டு போக‌ட்டும்......................திராவிட கூட்ட‌ம் 2009க‌ளில் ச‌ரியா செய‌ல் ப‌ட்டு இருந்தால் இன்று சீமானை பெரிதாக‌ யாருக்கும் தெரிந்து இருக்காது 👍

சீமான் அப்ப‌டி என்ன‌ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ செய‌லை எம் இன‌த்துக்கு செய்தார்................அதுக்கான‌ ஆதார‌ம் இருந்தால் இணையுங்கோ என்னாலான‌ ப‌திலை த‌ருகிறேன்👍

ஒரு இன‌ம் அழிந்து கொண்டு இருக்கையில் க‌ருணாநிதியிட‌ம் இன‌ அழிப்பை ப‌ற்றி கேட்க்க‌ ம‌ழை விட்டாலும் தூவான‌ம் விடுவ‌தில்லை என்று ந‌க்க‌ல் அடிச்ச‌தை ம‌ற‌ந்து விட்டிங்க‌ளா😉😒....................

சீமானுக்கு எதிராக‌ எழுத‌ த‌ங்க‌ளை புக‌ழ் பாட‌ திமுக்கா ப‌ல‌ ஆயிர‌ம் பேருக்கு 200 கொடுத்து இணைய‌ கைகூலிக‌ளாய் வைத்து இருக்கு😡

சீமான் பிசுறு என்பார் ம‌சுறு என்பார் அது அவேண்ட‌ உள் க‌ட்சி பிர‌ச்ச‌னை அதை அவ‌ர்ளே பேசி ச‌ரி செய்து விட்டின‌ம்...........ஆனாலும் நீங்க‌ள் இப்ப‌வும் அதையே பிடித்து தொங்கி கிட்டு இருக்கிறீங்க‌ள்👎👎👎👎👎👎👎👎

திமுக்காவில் ந‌ட‌க்கும் உள் க‌ட்சி ச‌ண்டைக‌ள் ஊழ‌ல்க‌ள் முறைகேடுக‌ள் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு ந‌ல்லாவே தெரியும் அவேன்ட‌ உள் க‌ட்சி ச‌ண்டைக‌ள்😉

ம‌ன்ன‌ர் ஆட்சிக்கு முட்டு கொடுப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் விவாதிப்ப‌து ந‌ம்ம‌ட‌ நேர‌த்தை வீன் அடிப்ப‌துக்கு ச‌ம‌ம்👎👎👎👎👎👎👎

என‌க்கு க‌ம‌ல‌ பிடிக்காது விஜேயை பிடிக்கும் ஆனால் திராவிட‌ சாய‌ம் என‌க்கு அவ‌ரில் பிடிக்க‌ வில்லை

சீமான் என்ர‌ ந‌ப‌ர் இருந்த‌ ப‌டியால் தான் பிர‌பாக‌ர‌ன் என்ர‌ மாபெரும் த‌லைவ‌ரின் தியாக‌ம் த‌மிழ‌க‌மெங்கும் தெரிய‌ வ‌ந்த‌து🙏🥰👍

க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு பாவாடைய‌ திற‌ந்து பார் திராவிட‌ நாடு தெரியும் என்று  சொன்ன‌ க‌ருணாநிதிய‌ பெரிய‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர் போல் காட்ட‌ முய‌ன்ரு சீமானின் எதிர்ப்பால் ப‌லத‌ கை விட்ட‌வை 😁 இப்ப‌ தெரியுதா சீமானின் ப‌ல‌ம் 👍

க‌ருணாநிதி நாக‌ரிக‌ம் தெரியாத‌ அல்ப்ப‌ ம‌னித‌ர் இந்திரா காந்தி அம்மையாரின் உட‌ம்பில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌த்தை எப்ப‌டி எல்லாம் கொச்சை ப‌டுத்தினார்😡

இப்ப‌டி ப‌ட்ட‌ அசிங்க‌மான‌ ந‌ப‌ரை தான் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு புனித‌ர் ஆக்க‌ துடிக்கின‌ம் அது பேனா சிலையில் தொட‌ங்கி சீமானின் க‌டும் எதிர்ப்பால் கை விட்ட‌வை👍

2009க்கு பிற‌க்கு ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளும் ச‌ரி புல‌ம்பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ளும் ச‌ரி எம‌க்கான‌ த‌னி நாட்டு கோரிக்கைய‌ ஏன் ச‌ரியா எடுத்து செல்ல‌ வில்லை

இதில‌ சீமானை குறை சொல்லிக் கிட்டு

அண்ண‌ன் திலீப‌னின் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் க‌ட்சியின் த‌லைமை வ‌ருட‌ம் வ‌ருட‌ம் சிற‌ப்பாக‌ கொண்டாடுகின‌ம்

இந்த‌ வ‌ருட‌ம் அண்ண‌ன் திலீப‌னின் நினைவு நாளை புல‌ம்பெய‌ர் தேச‌த்தில் யார் எல்லாம் முன்னெடுத்தார்க‌ள்😢..................

சீமான் மீது இருக்கும் குறைக‌ள் த‌வ‌றுக‌ளை க‌தைச்சு ச‌ரி செய்ய‌லாம்.....................பொழுது போக்கு இணைய‌த்தில் கிறுக்கும் ந‌ப‌ர்க‌ளை திருத்த‌வே முடியாது👎......................

நாம் த‌மிழ‌ர் முன்ன‌னி பொருப்பாள‌ர்க‌ள் கூட‌ ம‌ன‌சில் ப‌ட்ட‌தை நேர‌டியாக‌ கேட்டு இருக்கிறேன் சாட்டை துரைமுருக‌னின் செய‌ல்க‌ள் வெறுப்பை வ‌ர‌ வைக்குது என்று எல்லாம் குறைக‌ளை சொல்லி இருக்கிறேன்👍......................

புல‌ம்பெயர் நாட்டில் காசை கொள்ளை அடித்த‌ கூட்ட‌ங்க‌ள் தான் இப்ப‌வும் ப‌ல‌ தீர்வுக்கு த‌ட‌ங்க‌ளாய் இருக்கின‌ம்

த‌லைவ‌ரின் குடும்ப தியாக‌த்தை கொச்சை ப‌டுத்துவ‌து 

த‌லைவ‌ரின் ம‌க‌ள் மாவிர‌ நாள் உரை ஆற்ற‌ போகிறா என்று யாரோ மேக்க‌ப் பையித்திய‌த்தை காட்டி உல‌க‌ த‌மிழ‌ரை ஏமாற்ற‌ பார்க்குதுக‌ள்.........................

புல‌ம்பெய‌ர் நாட்டு விச‌ச் செடிக‌ளை விட்டு விட்டு சீமானை நோண்டி கொண்டு இருப்ப‌தன் உங்க‌ள் நோக்கம் என‌க்கு புரிய வில்லை😉.................... 

இதில் பலதுக்கு முன்பே பலதடவை பதில் சொல்லியாகி விட்டது.

மேலே நான் சொன்னது புலிகளை பயங்கரவாதிகள் என எதிர்த்த மா பொ சியை சீமான் எம்மிடமே தமிழ் தேசிய பிதாமகன் என அறிமுகப்படுத்திய நய வஞ்சகத்தை.

இதே போல் தேவையில்லாமல் தலைவரை தமிழ் நாட்டில் இழுத்து போய்,

தலைவர் vs கருணாநிதி என ஒரு மாய சமன்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர், தலைவர், புலிகள் என்றாலே தமிழ்நாட்டில் பலர் வெறுக்கும் நிலையை வலிந்து உருவாக்கியவர் சீமான்.

இப்படி நயவஞ்சக லிஸ்ட் நீளும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உறவாடிக் கெடுக்கவேண்டும் அல்லது சேலையில் முள்விழுந்தால் சேலை கிழியாமல் எடுக்கவேணும் முள்ளை..

விஜய் திராவிடம் பேசி திராவிட விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்கவேண்டும்.. பின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக தமிழ்தேசியத்தை ஊட்டவேண்டும் அவர்களுக்கும்.. அவர் அதை செய்வார்.. ஏனெனில் விஜய் இயல்பில் ஒரு தமிழ்தேசியவாதி திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கியவர் அல்ல.. அது அவருக்கு ஒத்தும் வராது.. தேர்தலுக்காக அதை பேசுகிறார்.. பேசி ஆட்களை சேர்க்கட்டும் பின் தமிழ்தேசியத்தை ஊட்டட்டும்.. அதை செய்வார்.. அதை செய்யவைப்பதும் ஈசி.. ஏனெனில் விஜை பின்னால் இருந்து இயக்குபவர்களும் திராவிட சிந்தனையாளர்கள் அல்ல பூரா தமிழ்தேசியவாதிகள்..

வெல்லும் தமிழ்..💪

புலவர் ஓணாண்டியார் இப்பெல்லாம் கவிதையை விட்டுட்டு நல்லா கதை எழுத ஆரம்பித்து விட்டார்.

விஜை எஸ் ஏ சியின் மகன் - எஸ் ஏ சி திராவிட அரசியலில் வந்தவர். விஜயகாந்த் திமுக ஆதரவில் இருந்த காலத்தில் எஸ் ஏசியும் அதே நிலைபாட்டில்தான் இருந்தார். அது மட்டும் அல்ல கருணாநிதியின் பல திரைக்கதைகளை இயக்கும் அளவுக்கு திமுகவுக்கு திராவிட அரசியலுக்கு நெருக்கமானவர், இதுதான் விஜையின் அரசியல் ஆரம்ப புள்ளி.

அடுத்து விஜை பாதி மலையாளி. விஜையின் அம்மா சோபா, மலையாள பாடகர், மை மோகனுக்கு முன்பு குரல் கொடுத்த, சுரேந்தரின் அக்கா. ஆகவே சீமானின் இனத்தூய்மை திராவிட எதிர்ப்பை விஜை விரும்பினாலும் கையில் எடுக்க முடியாது. சீமானை போல் விஜை தான் மலையாளி என்பதை மறைக்கவும் முடியாது. ஆகவே விஜையால் திராவிட கொள்கையை புறம் தள்ள முடியாது.

அடுத்து விஜை என்றும் தன் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்தவரில்லை.  ஆகவே சீமானின் சங்கி-தமிழ்-தேசியத்தின்- தாய் மதம் திரும்பும் கொள்கையும் அவருக்கு ஏற்புடயதல்ல.

 அத்தோடு பெரியாரோடு முரண்படவோ, தெலுங்கு வழி சாதியினரை மூர்க்கமாக எதிர்கவோ கிறிஸ்தவ வெள்ளாள சமூகத்கை சேர்ந்த விஜைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவரின் நேற்றைய இரசிகர், இன்றைய தொண்டர் பலர் தெலுக்க்கு வம்சாவழியினர். 

ஒவ்வொரு வோட்டும் தேவை என கருதும் எந்த அரசியல்வாதியும் பெரும் இனக்கூட்டங்களை பகைக்கமாட்டார்.  அது சீமானை போல ஆட்சிக்கு வருவதில் ஆர்வம் இல்லாத, கொடுப்பனவுக்கு வேலை செய்யும்  எஜெண்டுகள் செய்யும் வேலை.

சகல அரசியல்வாதிகளும் செய்வது சகலதும் அரசியலின் பால்பட்டே.

ஆனால் விஜை திராவிடத்தை உள்ளிருந்து கொல்ல முயல்கிறார் என்பது ஓணாடியார் விட்டத்தை பார்த்து எழுதிய அருமையான கற்பனை.

தேள்வடிவ தாக்குதல், சிலந்தி வடிவ தாக்குதல், அரூஸ், நிலாந்த்தன், திருநாவுக்கரசு எல்லாருக்கும் கற்பனை வளத்தில் டப் கொடுக்கிறார் ஓணாண்டி.

புலிகள் போராட்டம் முடிவுக்கு வரும் தறுவாயில் - தம்மை தாமே தேற்ற பலர் இப்படியான கதைகளை அவிழ்த்த்து விட்டு தாமும் பேயராகி, வாசிப்பவரையும் பேயனாக்கினார்கள்.

விஜையின் வரவு, பெரியாரை நடுநாயகமாக்கி அதன் மூலம் விஜை சீமனை புறம்தள்ளியமை மூலம், சீமானின் அரசியல் கிட்டதட்ட சாம்பல் கரைக்கும் நிலைக்கு வந்து விட்டதை கண்டு மனம் ஒப்பாத அவரின் ரசிக சிகாமணிகள் இப்படியான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என நான் நினைக்கிறேன். 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..?

நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந்தேன்… நீங்கள் ஏதோ சீமானின் செயல்பாடு மட்டும்தான் தமிழ்தேசியம் என்பதுபோலும் சீமான் மட்டுந்தான் தமிழ் நாட்டீல் இருக்கும் ஒரேஒரு தமிழ்தேசியவாதி என்பது போலும் எழுதிதள்ளி இருக்கிறீர்கள்… சீமான் வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளீல வாங்க.. தமிழ்தேசியம் பரந்தது பெரியது… சீமானுக்கு முன்னம் இருந்தே தமிழ் தேசியத்தை பேசும்பல அமைப்புகள் இயக்கங்கள் தமிழ் நாட்டில் உண்டு.. 

சீமான் சிலதவறுகள் தமிழ்தேசியத்தை பின்பற்றுவதில் செய்திருந்தால் விஜைபோல் இன்னொருவர் அவற்றை திருத்தி நவீன காலத்துக்கு ஏற்றமாதிரி தன்வழியில் கொண்டுபோவார்..

திராவிட சித்தாந்தம் பேசும் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் எத்தனை இருக்கின்றன..

தமிழ்தேசியத்துக்கு மட்டும் சீமான் குத்தகையா..? எத்தனையோ பேர் இனி வருவார்கள்.. இனறு விஜய் ஆரம்பித்து இருக்கிறார்..

உங்களுக்கு தமிழ்தேசியம் மேல் வெயித்தெரிச்சல் … சீமான் மேல் அல்ல போல இருக்கிறது..

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

உங்கள் பதிவை வாசித்த போது தான் விஜய் பற்றி எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.

தமிழ்நாட்டில் 

- 1 தெலுங்கர் என்பது. இது போதும் சீமான் போன்றவர்களுக்கு 

- 2 கிறித்தவர் என்பது. இந்துஸ்தானிகளுக்கு இது போதும் 

எனவே 2026இல் தனித்து நின்றால் டெபோசிற் காலி. விஜயே நின்றாலும் 5வீதம் கூட அதிகம். குறித்து வைத்துக் கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

இதில் பலதுக்கு முன்பே பலதடவை பதில் சொல்லியாகி விட்டது.

மேலே நான் சொன்னது புலிகளை பயங்கரவாதிகள் என எதிர்த்த மா பொ சியை சீமான் எம்மிடமே தமிழ் தேசிய பிதாமகன் என அறிமுகப்படுத்திய நய வஞ்சகத்தை.

இதே போல் தேவையில்லாமல் தலைவரை தமிழ் நாட்டில் இழுத்து போய்,

தலைவர் vs கருணாநிதி என ஒரு மாய சமன்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஈழத்தமிழர், தலைவர், புலிகள் என்றாலே தமிழ்நாட்டில் பலர் வெறுக்கும் நிலையை வலிந்து உருவாக்கியவர் சீமான்.

இப்படி நயவஞ்சக லிஸ்ட் நீளும்.

என‌க்கு தெரிஞ்சு த‌லைவ‌ரின் ப‌ட‌ம் த‌மிழ் நாட்டில் ல‌ச்ச‌க்கான‌க்கான‌ ம‌க்க‌ளின் வீடுக‌ளில் வைச்சு த‌லைவ‌ரை அழ‌கு பார்க்கின‌ம்

அவ‌ர்க‌ள் வீடுக‌ளில் க‌ருணாநிதி ப‌ட‌ம் கிடையாது......................அது ச‌ரி நீங்க‌ள் க‌ட‌சியா எப்ப‌ த‌மிழ் நாடு போனிங்க‌ள் Bro................. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்தில் தேசிய அரசியலில் குதிப்பவர்கள் சிவப்பு-மஞ்சள் வர்ணங்களின் வெவ்வேறு கலவைகளில் கொடிகள் வைப்பது போல தலீவர் விஜயும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கொஞ்சம் கடுமையான சிவப்பையும் மஞ்சளையும் (ஸ்பானிஸ் தேசியக்கொடி மாதிரி) தேர்ந்தெடுத்துள்ளார். 

விஜயின் கலவையான கதம்ப அரசியலுக்கு ஈழத்தமிழரும் முட்டுக்கொடுக்க இந்த வர்ணங்களே போதும்😆

spacer.png

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, கிருபன் said:

தாயகத்தில் தேசிய அரசியலில் குதிப்பவர்கள் சிவப்பு-மஞ்சள் வர்ணங்களின் வெவ்வேறு கலவைகளில் கொடிகள் வைப்பது போல தலீவர் விஜயும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கொஞ்சம் கடுமையான சிவப்பையும் மஞ்சளையும் (ஸ்பானிஸ் தேசியக்கொடி மாதிரி) தேர்ந்தெடுத்துள்ளார். 

விஜயின் கலவையான கதம்ப அரசியலுக்கு ஈழத்தமிழரும் முட்டுக்கொடுக்க இந்த வர்ணங்களே போதும்😆

spacer.png

ஒம்.   யானைகளுக்கு பதிலாக   புலிகளை இடம்பெற்றிருந்தால். 

கொடி எப்படி இருக்கும்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/talksofexpress/posts/pfbid02ARB2sa5rsNS53aQhyd5eqnHKHfN5fbRAWTrfqhyJq1cW34x18UPgUCC6etp3keY5l

சோதனை அடுத்த வருடமும் எழுதலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/talksofexpress/posts/pfbid02ARB2sa5rsNS53aQhyd5eqnHKHfN5fbRAWTrfqhyJq1cW34x18UPgUCC6etp3keY5l

சோதனை அடுத்த வருடமும் எழுதலாம்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா வாங்கோ

த‌மிழ் நாட்டில் போய் நாங்க‌ளும் ஆளுக்கு ஒரு க‌ட்சில‌ சேர்ந்து

இந்த‌ மென்ட‌ல் கூட்ட‌த்துட‌ன் சேர்ந்து  நாங்க‌ளும் மென்ட‌ல் ஆகுவோம் லொள்😁.........................

குருநாத‌ர் @ரசோதரன் ஆதிமுக்காவில் இணைத்து விடுவோம்🥰🫶😍..................... 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

ஒம்.   யானைகளுக்கு பதிலாக   புலிகளை இடம்பெற்றிருந்தால். 

கொடி எப்படி இருக்கும்???

செந்தமிழன் சீமான் சீறிப்பாய்ந்து உறுமி வழக்குத் தொடுத்திருப்பார்😁🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ மென்ட‌ல் கூட்ட‌த்துட‌ன் சேர்ந்து  நாங்க‌ளும் மென்ட‌ல் ஆகுவோம் லொள்😁.........................

குருநாத‌ர் @ரசோதரன் ஆதிமுக்காவில் இணைத்து விடுவோம்🥰🫶😍..................... 

🤣..........

பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜.

'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன்.

புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............

ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!   

Edited by ரசோதரன்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..?

நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந்தேன்… நீங்கள் ஏதோ சீமானின் செயல்பாடு மட்டும்தான் தமிழ்தேசியம் என்பதுபோலும் சீமான் மட்டுந்தான் தமிழ் நாட்டீல் இருக்கும் ஒரேஒரு தமிழ்தேசியவாதி என்பது போலும் எழுதிதள்ளி இருக்கிறீர்கள்… சீமான் வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளீல வாங்க.. தமிழ்தேசியம் பரந்தது பெரியது… சீமானுக்கு முன்னம் இருந்தே தமிழ் தேசியத்தை பேசும்பல அமைப்புகள் இயக்கங்கள் தமிழ் நாட்டில் உண்டு.. 

சீமான் சிலதவறுகள் தமிழ்தேசியத்தை பின்பற்றுவதில் செய்திருந்தால் விஜைபோல் இன்னொருவர் அவற்றை திருத்தி நவீன காலத்துக்கு ஏற்றமாதிரி தன்வழியில் கொண்டுபோவார்..

திராவிட சித்தாந்தம் பேசும் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் எத்தனை இருக்கின்றன..

தமிழ்தேசியத்துக்கு மட்டும் சீமான் குத்தகையா..? எத்தனையோ பேர் இனி வருவார்கள்.. இனறு விஜய் ஆரம்பித்து இருக்கிறார்..

உங்களுக்கு தமிழ்தேசியம் மேல் வெயித்தெரிச்சல் … சீமான் மேல் அல்ல போல இருக்கிறது..

வணக்கம் ப்ரோ,

கண்டு கனகாலம்.

அது சரி…. நான் முன்வைத்த தரவு அடிப்படையிலான கருத்துகள் அத்தனையும் பைபாஸ் பண்ணி விட்டு - நேரடியாக எனக்கான தமிழ் தேசிய மரபணு சோதனையில் இறங்கி உள்ளீர்கள். கருத்தை விட்டு கருத்தாளரின் ரிஷி மூலம் தேடும்  யாழின் நெளிவு சுளிவுகளை நன்றாக கற்று கொண்டு விட்டீர்கள், சபாஷ்.

சரி முதலில் உங்களுக்கான பதில்.

1. தமிழ் தேசியம் என்பது இலங்கையில் வேறு, தமிழகத்தில் வேறு. உதாரணமாக இலங்கையில் யார் தமிழர் என கருதும் போது அதில் இஸ்லாமியர் அடங்கார். ஆனால் தமிழகத்தில் அடங்குவர். ஆகவே இலங்கையில் தமிழ் தேசிய அரசியல் முஸ்லிம்களுக்கானது அல்ல, ஆனால் தமிழகத்தில் அது அவர்களையும் உள்ளடக்கியது. இது வெறும் உதாரணமே.

ஆகவே தமிழ் தேசியம் என்பது இலங்கையிலும், தமிழகத்திலும் ஒரே விடயம் அல்ல. இரெண்டுக்கும் ஒத்த வரைவிலக்கணமும் இல்லை.

2. கூடவே 1950 கள் முதல் தமிழ் தேசியம் இலங்கையில் ஒரு வரித்துக்கொள்ள பட்ட கொள்கை. திம்பு முதல் பல பிரகடங்கள் இலங்கை தமிழரின் தமிழ் தேசியத்தை வரையறுத்து, வலியுறுத்துகிறன.

3. தமிழ் நாட்டில் -  தமிழ் தேசியம் ஒரு நோஞ்சான் பிள்ளை. ஆனால் காலப்போக்கில் அது திராவிட கொள்கையை உள்ளீர்த்து, தமிழ் நாட்டினர் அனைவருக்கும் உரிய, தமிழ் நாட்டிற்கென தனித்துவமான, யார் தமிழர் என்ற வட்டத்தை  பெரும்பிக்குமான, தமிழ் தேசிய அரசியலாக மிளிர வேண்டும் என்பதே என் போன்றோரின் நிலைப்பாடு.

அது மட்டும் இல்லை, இந்திய ஒருமைப்பாட்டை மீறாத வகையிலும் (இல்லை என்றால் நசுக்கி விடுவார்கள்), அம்பேத்காரை ஏற்கும் வகையிலும் கூட இந்த தமிழ் நாட்டுக்குரிய தமிழ் தேசியம் வரையறுக்கப்படல் வேண்டும்.

இந்த வகையான தமிழ் தேசியத்தைத்தான் சீமான் கைக்கொள்ளவார் என எதிர்பார்த்து உங்கள் எல்லோருக்கும் முன்பே அவரை ஆதரித்தவன் நான்.

சீமான் இதை செய்தால் அவரை ஆதரிப்பேன் என பல தடவை யாழில் எழுதியும் உள்ளேன்.

ஆனால் அவர் இதை எல்லாம் புறம் தள்ளி, தமிழ் தேசியத்தை சாதி, மத அடிப்படையில் குறுக்கி, பிளவு படுத்தி, சங்கி-தமிழ் தேசியத்தை முன்னிறுத்தினார்.

நிச்சயமாக சீமான் பிராண்ட் சங்கி தமிழ் தேசியத்தை நான் வன்மையாக எதிர்கிறேன். இது தமிழ் தேசியமே இல்லை. போலித் தமிழ் தேசியம். 

ஆனால் விஜை முந்தள்ளும் தமிழ் தேசிய + திராவிட கொள்கை கலப்பு மிக இயல்பானது. இரு வேறு பசுக்களின் பாலினை ஒரே குடுவையில் கலப்பது போன்றது. அங்கே சோசலிச கொள்கைக்கும் இடமுண்டு, இறை வணக்கத்துக்கும் இடமுண்டு, அம்பேத்காருக்கும் இடமுண்டு.

நான் முன்பு எழுதியுள்ளேன், சீமான் தனது தாக்குதலை திராவிட கொள்கை, பெரியார், தெலுங்கு வழி சாதிகள் என ஆரம்பிக்காமல் - திமுக, அண்ணாவுக்கு பிந்திய தலைவர்கள் என ஆரம்பித்து இருக்க வேணும் என.

விஜையின் கட் அவுட் வரிசை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் ரிபரன்ஸ்சை வைத்து பார்த்தால் புரியும் - அவர் எடுத்துள்ள நிலைப்பாடு அச்சொட்டாக இதுவே.

ஆகவே எனக்கு சீமான் மீது கடுப்பா, தமிழ் தேசியத்தின் மீது கடுப்பா என்ற உங்கள் கேள்விக்கான பதில் -

எனக்கு சீமான் முன்வைக்கும் போலி/சங்கி தமிழ் தேசியத்தின் மீது கடும் கடுப்பு. அதை சுயலாபத்துக்காக முன் வைப்பதால் சீமான் மீது செம கடுப்பு.

ஆனால் மிக இயல்பான, அந்த மண்ணின் யதார்தத்தோடு அனுசரித்த போக்குடைய, கம்யூனிசம், தலித்தியம், பெரியாரிசத்தில் இருந்து நல்லன எடுத்து அல்லன விடுக்கும் விஜை முன்வைக்கும் தமிழ் தேசியம் எனக்கு மிக பிடித்தமானது.

சொல்லப்போனால் இந்த வகை மெய்-தமிழ் தேசியத்தை விஜை இதை நேற்று பிரகடன படுத்த, பல வருடங்கள் முன்பே யாழில் இதை பிரசுரித்து, சீமானுக்கு பரிந்துரைத்தவன் நான் என்ற வகையில் - இது தனியே விஜை பாணி தமிழ் தேசியம் மட்டும் அல்ல, இது கோஷான் பாணி தமிழ் தேசியமும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ரசோதரன் said:

🤣..........

பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜.

'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன்.

புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............

ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!   

இவருக்கு ஏதோ எக்கச்சக்கமான விசயங்கள் தெரிஞ்சிருக்கு....எண்படடியால ஆள பின்  தொடத்தான் இருக்கு..😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சரி @பாலபத்ர ஓணாண்டி ப்ரோ இப்போ உங்களிடம் நான் கேள்வி கேட்க்கும் முறை.

1. விஜை மாநாட்டு திரியில் நீங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் - விதை நான் போட்டது என தேவர்மகன் வசனம் பேசி சீமான் புகழ் பாடினீர்கள்? தனிமனித அபிமானம்?

2. விஜை பின்னால் நின்று இயக்குபவர்கள் எல்லாம் பெரிய தமிழ் தேசிய தூண்கள் என்றீர்கள்.

யாரிவர்கள்?

இவர்கள் விஜையை பின்னால் இருந்து இயகுவது உங்களுக்கு எப்படி தெரியும்?

இதற்கான ஆதாரம் என்ன?

3. விஜை திராவிடத்தை மனப்பூர்வமாக ஏற்கவில்லை, உறவாடி கெடுக்க போகிறார் என்றீர்கள்.

இதை விஜை அல்லது புஸ்ஸி ஆனத் உங்களிடம் தனியாக சொன்னார்களா?

இல்லாவிடின் எப்படி உங்களுக்கு விஜையின் மன ஓட்டம் தெரிய வந்தது?

கேள்விகளுக்கு பதிலை ஆவலோடு எதிர்பார்கிறேன்.

பிகு

யாழில் நாதம், குணா கவியழகன் போன்ற “அடித்து விடும்”  ஆட்கள் என நான் நினைப்போர் அனைவரையும் கேள்வி கேட்பதை போலதான் இந்த கேள்விகளும். தனிப்பட்டு ஏதுமில்லை.

7 hours ago, விசுகு said:

உங்கள் பதிவை வாசித்த போது தான் விஜய் பற்றி எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது.

தமிழ்நாட்டில் 

- 1 தெலுங்கர் என்பது. இது போதும் சீமான் போன்றவர்களுக்கு 

- 2 கிறித்தவர் என்பது. இந்துஸ்தானிகளுக்கு இது போதும் 

எனவே 2026இல் தனித்து நின்றால் டெபோசிற் காலி. விஜயே நின்றாலும் 5வீதம் கூட அதிகம். குறித்து வைத்துக் கொள்ளலாம். 

சதவீத கணக்குக்கு நான் வரவில்லை.

ஆனால் சீமான், குறிப்பாக இதுவரை காலமும் விஜையை தம்பி, பச்சை தமிழன் என தன் வாயாலே முத்திரை குத்திவிட்டு, கூட்டணிக்கு தயார் என பல்லிளித்து விட்டு - இனி விஜையை சீமான் பாதி மலையாளி என கூறினால் - அது அம்பலம் ஏறாது.

சங்கிகள் - ஏலவே ராஜா ஜோசப் விஜை என்பதை கையில் எடுத்து, விஜையும் ஆம் நான் ஜோசப்தான் என கூறி மூக்குடைந்தார்.

என்னை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் நேரடி சங்கிகளும், மறைமுக சங்கிகளும் (சீமான்) ஒருவரை எதிர்ப்பது அவருக்கு பிளஸ்சே தவிர மைனஸ் அல்ல.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு தெரிஞ்சு த‌லைவ‌ரின் ப‌ட‌ம் த‌மிழ் நாட்டில் ல‌ச்ச‌க்கான‌க்கான‌ ம‌க்க‌ளின் வீடுக‌ளில் வைச்சு த‌லைவ‌ரை அழ‌கு பார்க்கின‌ம்

அவ‌ர்க‌ள் வீடுக‌ளில் க‌ருணாநிதி ப‌ட‌ம் கிடையாது......................அது ச‌ரி நீங்க‌ள் க‌ட‌சியா எப்ப‌ த‌மிழ் நாடு போனிங்க‌ள் Bro................. 

அதுக்கு முன்பே தமிழ் நாட்டில் தலைவரின் படத்தை அல்ல, தலைவரையும், போராளிகளையும் வைத்திருந்த பலரை நான் அறிவேன்  ப்ரோ.

சீமான் தலைவரை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்தார் என்பது சூரியனுக்கு நான் டோர்ச் அடித்த பின்பே மக்கள் சூரியனை அறிந்தனர் என்பதை போன்ற கருத்து.

முடிந்தால் இது பற்றிய டாக்டர் காந்தராஜ் பேட்டியை அல்லது வேல்முருகன் பேச்சை உங்கள் அபிமான யூடியூப்பில் பாருங்கள்.

கடைசியா போனமாதம் தமிழ் நாடு போனேன்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

இவருக்கு ஏதோ எக்கச்சக்கமான விசயங்கள் தெரிஞ்சிருக்கு....எண்படடியால ஆள பின்  தொடத்தான் இருக்கு..😀

🤣............

என்ன குமாரசாமி அண்ணை..........அங்கே நாலு பேப்பர், இங்கே நாலு பேப்பர் என்று ஆடு கடிச்ச மாதிரி மேலால வாசித்து வாசித்து, கசக்கி எறிந்த கடதாசி குப்பையாகக் கிடக்குது எங்களின் தலைகளுக்குள்.......... ஏதோ பொழுது போனால் சரி தான்..............

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

தாயகத்தில் தேசிய அரசியலில் குதிப்பவர்கள் சிவப்பு-மஞ்சள் வர்ணங்களின் வெவ்வேறு கலவைகளில் கொடிகள் வைப்பது போல தலீவர் விஜயும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கொஞ்சம் கடுமையான சிவப்பையும் மஞ்சளையும் (ஸ்பானிஸ் தேசியக்கொடி மாதிரி) தேர்ந்தெடுத்துள்ளார். 

விஜயின் கலவையான கதம்ப அரசியலுக்கு ஈழத்தமிழரும் முட்டுக்கொடுக்க இந்த வர்ணங்களே போதும்😆

spacer.png

இது நல்ல விடயம் தானே.

ஈழத்தமிழர் குமையும் விதமாக விஜை எதுவும் கூறாதவிடத்து - அவரை வரவேற்பதில் தவறேதும் இல்லையே.

அவர் என்ன திரள்நிதி கேட்டாரா அல்லது மாவீரகளை, பொட்டம்மானை தூஷித்தாரா? இல்லையே.

இது நிபந்தனை அற்ற வரவேற்பில்லை.

இப்போதைக்கு வரவேற்காமல் விட காராணம் ஏதுமில்லை.

3 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/talksofexpress/posts/pfbid02ARB2sa5rsNS53aQhyd5eqnHKHfN5fbRAWTrfqhyJq1cW34x18UPgUCC6etp3keY5l

சோதனை அடுத்த வருடமும் எழுதலாம்.

 ஓ எல் சோதனை வருடம் ஒருமுறை வரும்,  ஆனால் கிரிகெட் வேர்ல்ட் கப் நாலு வருடம் ஒரு முறைதான் வரும் 🤣.

1 hour ago, ரசோதரன் said:

🤣..........

பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜.

'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன்.

புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............

ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!   

லே ஒண்டோரியோவை தெர்மகோல் போட்டு மூடிய “சென்ற ஊர்” ராஜு அண்ணன் ரசோ வாழ்க🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, goshan_che said:

லே ஒண்டோரியோவை தெர்மகோல் போட்டு மூடிய “சென்ற ஊர்” ராஜு அண்ணன் ரசோ வாழ்க🤣.

🤣..........

எங்கள் ஊரில் போசா என்று தான் சொல்லுவோம்......... அண்ணன் தான் தெர்மகோல் என்ற சொல்லையே எனக்கு அறிமுகப்படுத்தினார்..............

அண்ணனை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.........

spacer.png

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
    • கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!              
    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.