Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை

srithan-780x470.jpg

“அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கட்சி ரீதியாகவும், தனிநபராகவும் என்னை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள், உட்கட்சி முரண்நிலைகள் குறித்தே அமைந்திருக்கின்றன.

கட்சிக்கு எதிராகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராக நான் செயற்பட முடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு நான் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதேவேளை, என்னைக்  கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகின்றார்கள்.

என்னையும், எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற – விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.

தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார்.

17301683640.png

17301683641.png

17301683642.png

https://akkinikkunchu.com/?p=297185

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, கிருபன் said:

என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.

தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார்.

இவர் கூறுவது என்ன வென்றால்,  வட்டுக்கோட்டை தீர்மானமான தமிழீழம் எப்படி நிறைவேறாதோ அது போல் என்னை கட்சியில் இருந்து நீக்குவதும் நிறைவேறாதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அப்படி போடு அருவாளை....
இந்தத் தேர்தலுடன்.. சுத்துமாத்து சுமந்திரனை வெளியேற்றி,
தமிழரசுக் கட்சிக்கு, மஞ்சள் தண்ணி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும். 

தந்தை செல்வா... உன்னத நோக்கத்திற்காக  ஆரம்பித்த கட்சியை... 
சுமந்திரன், இனியும் சின்னா பின்னா படுத்துவதை அனுமதிக்க முடியாது. 
விருப்பம் என்றால், அவர் புது கட்சியை ஆரம்பித்து, தனது சுத்துமாத்தை தொடரலாம். 

வைத்தியர்  அர்ச்சுனா, மேயர் மணிவண்ணன், K.V. தவராசா, அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் விடுதலைப் போராளிகள் என்று ஒவ்வொருவரும்  தமது கொள்கைக்கு ஏற்ற மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்கும் திறமையும்,  துணிவும் உள்ள போது... 
சுமந்திரன்...  வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல்... மற்றவனின் கட்சியில் அடாத்தாக ஒட்டிக் கொண்டு இருந்து.. அலப்பறை பண்ணுவது பைத்தியக்காரத்தனம்.

"கறையான் புற்று எடுக்க... கருநாகம் புகுந்த மாதிரி", 
சுமந்திரன் தமிழரசு கட்சியில் இனியும்   இருப்பதை அனுமதிக்க  முடியாது.
தமிழரசு கட்சியில் இருந்து...  சுமந்திரன் உடனடியாக,  அடித்து விரட்டப் பட வேண்டிய ஆள்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, தமிழ் சிறி said:

சாரம்: சுமந்திரனுக்கு வெட்கம்,!ரோசம், மானம் ஏதும் இல்லை. 

தொக்கு நிற்பது: சுமந்திரனக் கொல்ல  வேண்டும். (சுமந்திரன் உடனடியாக,  அடித்து விரட்டப் பட வேண்டிய ஆள்) 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை

large.IMG_7382.jpeg.dfe4fda5da4c79b38ae9

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7382.jpeg.dfe4fda5da4c79b38ae9

கட்சியாக மரத்தினையும் அந்த மனிதாராக அந்த பெருச்ச்சாளியினை மாற்றினால் அதிக பொருத்தமாக இருக்குமா? 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

கட்சியாக மரத்தினையும் அந்த மனிதாராக அந்த பெருச்ச்சாளியினை மாற்றினால் அதிக பொருத்தமாக இருக்குமா? 

அந்த ஒட்டுண்ணியை பெருச்ச்சாளியாக மாற்றினாலும் நல்ல பொருத்தம்,

--------------------------------

3 hours ago, கிருபன் said:

தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார்.

வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டு அளவிட முடியாத பெரும் அழிவுகளை தமிழர்கள் சந்தித்து இன்று யுரேன் அடித்து ஒற்றை ஆடசி சிறிலங்காவின் தவைர் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி வளர்ச்சி  தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பும் நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள். அதை தான் அவர் வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டை என்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவராக இருக்க வேண்டியவர்

இப்போ கட்சியில் இருக்கவே போராட்டமா?

முடிவு சுமந்திரன் கையில்.

இப்போதைக்கு தமிழரசில் போட்டியிட சந்தர்ப்பம் தந்ததே போதலையோ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.