Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.எஸ்.எம் ஜாவித்

1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக ஆயு­த­மு­னையில் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள், 34 வரு­டங்கள் கடந்தும் முழு­மை­யான மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டாது கண்­டு­கொள்­ளப்­ப­டாத சமூ­க­மாக உள்­ளனர்.

வடக்கில் தமிழ் மக்­க­ளுடன் முஸ்­லிம்கள் ஒன்­றோ­டொன்­றாக பின்­னிப்­பி­ணைந்து வாழ்ந்து வந்த வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறுதிப் பகு­தி­களைக் குறிப்­பி­டலாம். விடு­தலைப் புலி­களால் வடக்கை விட்டு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்கள் வெளி­யேற வேண்டும் என்ற சடு­தி­யான அறி­வித்தல் ஒவ்­வொரு வட­மா­காண முஸ்­லிம்­க­ளையும் தட்­டுத்­த­டு­மாறி நிலை குலைய வைத்த சம்­பவம் மறக்க முடி­யாத வடுக்­க­ளா­கவே இன்றும் இருந்து வரு­கின்­றது.

சொந்த பூர்­வீ­கத்தை விட்டு வெளி­யே­று­வது என்­பது எவ­ராலும் ஜீர­ணிக்க முடி­யாத ஒரு சம்­ப­வ­மாகும். அது மட்­டு­மல்­லாது வாழ்வா? சாவா? என்ற இரண்­டுக்கும் மத்­தியில் தமது சொத்­துக்கள், வீடுகள், தொழில் துறைகள், காணி, பூமிகள் என அனைத்­தையும் விட்டு விட்டு வெளி­யே­று­வது என்­பது யாராலும் ஏற்றுக் கொள்­ளவோ அல்­லது ஜீர­ணித்துக் கொள்­ளவோ முடி­யாத ஒரு கசப்­பான சம்பவம் எனலாம். அந்­த­ள­விற்கு முழு முஸ்லிம் சமு­கத்­தி­னதும் மனங்கள் சுக்கு நூறாக்­கப்­பட்ட இந்த மரண அச்­சு­றுத்தல் நிலை­மை­களை சொல்ல முடி­யாத ஒரு மாபெரும் துன்­ப­க­ர­மான நாட்­க­ளாக அந்த 90ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாத இறுதி நாட்­களைக் குறிப்­பி­டலாம்.

தமது போராட்ட வெற்­றிக்­காக விடு­தலைப் புலிகள் இயக்கம் வட­கி­ழக்­கினை தாமே ஆள வேண்டும் என்ற நோக்கில் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்த ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் வெளி­யேற்றி விட்­டனர். அவர்கள் எடுத்த தவ­றான முடி­வுகள் வட­கி­ழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் உற­வு­களின் ஒற்­று­மைக்கும் பாரிய குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­து­டனும், ஒற்­று­மை­யா­கவும் வாழ்ந்த அந்த இரு சமு­கங்­க­ளையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடி­யாத ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்குள் தள்ளு­வ­தற்கு ஆளாக்­கி­விட்­டனர்.

இந்தச் செயற்­பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை கண் கலங்க வைத்­த­துடன் சகோ­தர தமிழ் உற­வு­க­ளை­யும்­கூட வாய்­விட்டு அழு­வ­தற்கும், கவலை கொள்­வ­தற்கும் வழி சமைத்து விட்­டது. ஆயு­தத்தின் விளிம்பில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தவ­றான தீர்­மா­னத்தை தமிழ் அர­சியல் தலை­மை­களோ அல்­லது புத்தி ஜீவி­களோ அல்­லது சமயத் தலை­வர்­களோ அதனை நிறுத்­து­வ­தற்கு முன்­சென்று கேட்­ப­தற்கு முடி­யாத ஒரு ஆபத்­தான கட்­டத்தில் இருந்­த­மையும் கவ­லை­யா­ன­தொரு விட­யமே.

இவ்­வாறு விடு­தலைப் புலிகள் வட­மா­காண முஸ்­லிம்­களை ஒட்­டு­மொத்­த­மாக வெளி­யேற்­றி­யமை முஸ்­லிம்­களால் என்றும் மறக்க முடி­யாத ஒரு துன்­ப­க­ர­மான பதி­வினை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாகும். வட­மா­காண முஸ்­லிம்கள் எந்­த­வொரு கட்­டத்­திலும் தனி­நாடு கோரி­யதோ அல்­லது இடத்தை பறித்துக் கேட்­டதோ இல்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் முஸ்­லிம்கள் துரத்­தப்­பட்­டமை மிகவும் வேத­னை­யா­ன­தொரு சம்­ப­வ­மா­கவே பதி­வா­கி­யுள்­ளது. காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்து துன்­பியல் சம்­ப­வங்கள் நாட்­க­ளாக, வாரங்­க­ளாக, மாதங்­க­ளாக, வரு­டங்­க­ளாக, தசாப்­தங்­க­ளாக, கடந்து இவ்­வ­ருட (2024) இந்த ஒக்­டோபர் மாதத்­துடன் 34 வரு­டங்­களைத் தாண்டி 35வது வரு­டத்தில் காலடி பதிக்­கின்­றமை கவ­லை­யோடு குறிப்­பிட வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும்.

இவ்­வாறு 34 வரு­டங்கள் தாண்­டிய இம்­மக்­களின் அவல நிலை தொடர்ந்தும் அகதி வாழ்­வா­கவே அமைந்து கொண்டு செல்­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்து 15 ஆண்­டுகள் கடந்தும் வட­ மா­காண முஸ்­லிம்கள் ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கங்­க­ளினால் கண்டு கொள்­ளப்­ப­டாத ஒரு சமூ­க­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர் எனலாம். ஒவ்­வொரு கணப்­பொழு­திலும் தமது அகதி வாழ்­விற்கு விடிவு கிடைக்­காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள்­கு­டி­யேற்றமாட்­டார்­களா? என்ற கன­வு­க­ளு­ட­னேயே தமது துன்­பியல் நாட்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். இன்று வரை வட­மா­காண முஸ்­லிம்­களின் திட்­ட­மி­டப்­பட்ட பரி­பூ­ரண மீள் குடி­ய­மர்வு என்­பது கானல் நீரா­கவே அந்த மக்­க­ளுக்கு இருந்து வரு­கின்­றது.

2009 ஆம் ஆண்டு யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்த மஹிந்த அர­சும்­சரி அதற்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த அர­சு­களும் சரி இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் துன்­பப்­பட்டுக் கொண்டு அல்­ல­லுறும் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யி­லேயே இருந்­தனர். அந்த மக்­க­ளுக்­காக ஆற்ற வேண்­டிய கரு­மங்­களை கவ­னத்திற் கொள்­ளாது தட்­டிக்­க­ழித்து வந்து கொண்­டி­ருக்கும் செயற்­பா­டு­களே இடம் பெற்று வரு­கின்­றன.

அதன் பின் வந்த அர­சாங்­கங்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு­சில முன்­னெ­டுப்­புக்கள் கூட வடக்கு முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை கானல் நீரான கதை­யா­கவே மாறி­விட்­டது. கடந்த காலங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்று அர­சாங்கம் ஒதுக்­கிய பல கோடி ரூபாய்­க­ளைக்­கூட வட­மா­காண சபையும் முடக்கி வைத்­த­தையும் சுட்­டிக்­காட்­டலாம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அரசும் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக புரை­யோடி இருந்த முஸ்லிம் சமு­கத்தின் அக­தி­வாழ்வு விட­யத்தில் அக்­கறை காட்­டப்­ப­ட­வில்லை.

புதிய அரசு தோற்றம் பெற்­ற­போது நூறுநாள் வேலைத் திட்­டத்தில் அப்­போது ஆட்­சியில் இருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்ற விட­யங்கள் தொடர்­பாக மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கூறி­யி­ருந்­த­மையும் யாவரும் அறிந்த விட­ய­மாகும். எனினும், அப்­ப­டி­யொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டதா? அதற்கு என்ன நடந்­தது என்­பது இன்னும் புரி­யாத புதி­ராக உள்­ளது.

மன்னார், யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்­ட­போது பல ஆயி­ரம்­க­ளாக காணப்­பட்ட வட­புல முஸ்­லிம்­களின் சனக்­தொகை இன்று இலட்­சத்தை கடந்­துள்­ளது.

வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு சொந்த இடத்தில் வாழ சரி­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் கண்­ணீ­ரு­டனும், கவ­லை­யு­டனும் இன்று வரை வடக்­கிற்கு வெளியே பல மாவட்­டங்­களில் ஏக்­கத்­து­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.

முஸ்லிம் மக்­களின் வெளி­யேற்றம் சர்­வ­தேசம் வரை தெரிந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யத்தில் கண்­டு­கொள்ளாத் தன்­மை­யுடன் மன­தா­பி­மா­ன­மற்ற முறையில் இருந்து வரு­வதும் சர்­வ­தே­சம்­கூட குறைந்த பட்சம் இலங்கை அர­சுக்கு அழுத்­தங்­க­ளை­யா­வது கொடுக்­கலாம் அல்­லவா ஆனால் இந்த விட­யத்­திலும் சர்­வ­தே­சமும் தொடர்ந்தும் பிழை­க­ளையே செய்து வரு­கின்­றது.

இந்த நாட்டுக் குடி­மகன் என்ற அடை­யா­ளங்­களும் ஆதா­ரங்­களும் இருந்தும் வடக்கு முஸ்­லிம்­களின் நிலை மிகவும் மோச­மான கவ­லைக்­கி­ட­மான முறையில் இருந்து வரு­வ­துடன் அரசு முன்­வந்து செய்து கொடுக்­காத நிலை­மை­கள்­கூட அவர்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் தொட­ராக காணப்­பட்டு வரும் தடங்­கல்­க­ளா­கவே இருக்­கின்­றன.

குறிப்­பாக முல்­லைத்­தீவில் முஸ்லிம் சமூகத்தின் காணிகள் முற்­றா­கவே சூறை­யா­டப்­பட்­டுள்­ள­துடன் அரச காணி­க­ளைக்­கூட பெற்றுக் கொள்­வ­தற்கு வட­மா­காண சபையும் அங்­குள்ள அர­சியல்வாதி­களும் தடை­களைப் போட்டு முஸ்லிம் சமூகத்­திற்கு எதி­ராக பொய்­க­ளைக்­கூறி ஆர்ப்­பாட்­டங்­க­ளைக்­கூட மேற்­கொண்­டனர்.

மன்­னாரில் சிலா­வத்­துறைப் பகு­தியில் கடற்­ப­டை­யினர் முஸ்­லிம்­களின் கிரா­மங்­களை முற்­றா­கவே கைய­கப்­ப­டுத்தி வைத்துக் கொண்டு விடா­தி­ருப்­பதும் முஸ்லிம் மக்­களை விரக்­தி­ய­டையச் செய்­துள்­ளது.

இதேபோல் யாழ்ப்­பா­ணத்­திலும் தமது சொந்த வீடு­க­ளைக்­கூட பாது­காத்துக் கொள்ள முடி­யா­த­ளவு இருப்­ப­துடன் சட்ட ரீதி­யான ஆவ­ணங்­க­ளைக்­கூட காட்ட வேண்­டிய நிலை­மைகள் இருந்­தன.

இவ்­வாறு யுத்­தத்தால் முஸ்லிம் மக்கள் இன்று வரை பல்­வே­று­பட்ட இன்­னல்­களுக்கு முகம்­கொ­டுக்கும் நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றனர். பல­வந்­த­மாக இவ்­வாறு விரட்­டப்­பட்டு இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட வடக்கு முஸ்­லிம்கள் எதிர்­பார்ப்­பது 1990ஆம் ஆண்­டுக்­குமுன் தமிழ் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­துபோல் மீண்டும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற ஆவ­லு­ட­னேயே இருக்­கின்­றனர்.

தேர்தல் காலங்­களில் மட்டும் அரசும், அர­சியல்வாதி­களும் தமது வாக்கு வேட்­டைக்­காக அந்த மக்­களின் முன்­வந்து உங்­களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவோம், அது செய்து தருவோம், இது செய்து தருவோம் என்று மண்டியிடுவதும், மூட்டை மூட்டையாக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் நடந்தேறிய சம்பவங்களாகும்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்று கல்வி, சுகா­தாரம், தொழில் உள்­ளிட்ட பல தேவைப்­பா­டு­க­ளுடன் காணப்­ப­டு­வ­துடன் இவ்­வி­ட­யங்­களில் முஸ்­லிம்கள் பின்­னோக்­கிய நிலையில் இருப்­பதும் கடந்த காலங்­களில் கிடைக்­கப்­பெற்ற புள்ளி விப­ரங்­களில் இருந்து அறிய முடி­கின்­றது. இந்த வகையில் இந்த மக்கள் பூர­ண­மான மீள் குடி­யேற்­றத்­தையே விரும்­பு­கின்­றனர்.

எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் என்ற வகையில் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க வேண்­டிய பொறுப்பும் கடப்­பாடும் அர­சாங்­கத்­திற்கே உள்­ளது. இந்த விட­யத்தை அரசு சரி­யான முறையில் முன்­னெ­டுத்து துரத்­தப்­பட்ட அந்த மக்­களை அவர்­க­ளது பூர்­வீ­கத்தில் நிம்­ம­தி­யாக வாழ வழிசமைக்க வேண்டும் என்பது வடமாகாண முஸ்லிம்களின் ஏக்கமாகும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/18013

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

யுத்தம் நிறை­வ­டைந்து 15 ஆண்­டுகள் கடந்தும் வட­ மா­காண முஸ்­லிம்கள் ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கங்­க­ளினால் கண்டு கொள்­ளப்­ப­டாத ஒரு சமூ­க­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர் எனலாம். ஒவ்­வொரு கணப்­பொழு­திலும் தமது அகதி வாழ்­விற்கு விடிவு கிடைக்­காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள்­கு­டி­யேற்றமாட்­டார்­களா?

இவங்களுக்கு என்ன பிரச்சனை பேசாமல் வந்து அவங்களின் வீடுகளில் பழையபடி இருக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, பெருமாள் said:

இவங்களுக்கு என்ன பிரச்சனை பேசாமல் வந்து அவங்களின் வீடுகளில் பழையபடி இருக்கலாமே?

அவர்களுக்கு( இலங்கை முஸ்லீம்கள்) பிரச்சனையே இல்லை. அதுதான் அவர்களுக்கு பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்..... சிங்களத்தோடு கூத்தடித்துக்கொண்டு இருப்பார்கள், தமிழருக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் கிளம்பி விடுவினம்.

3 hours ago, colomban said:

வட­மா­காண முஸ்­லிம்கள் எந்­த­வொரு கட்­டத்­திலும் தனி­நாடு கோரி­யதோ அல்­லது இடத்தை பறித்துக் கேட்­டதோ இல்லை.

அவர்கள் கேட்கமாட்டார்கள், தமிழர் தனிநாடு கோரினால்,  பங்கு கேட்கவும் அதை தடுக்கவும் வருவார்கள். ஏன், ரவூப் கூறினாரே போரில் தாங்களும்  அரசுக்கு உதவியதனாலேயே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று.  

  • கருத்துக்கள உறவுகள்

இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல்

 

வடக்கு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தின் 34 ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி மாலை நடைபெற்றது.

கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் 'இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் - வடக்கு முஸ்லிம் மக்கள்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ். கதீஜா மகா வித்தியாலய அதிபர் ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 30.10.1990 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.

விருந்தினர்களின் உரைகள் ஒவ்வொன்றும் வெளியேற்றத்தின் சம்பவங்கள், மக்களின் இழப்புக்கள், அகதி வாழ்க்கையின் அவலங்கள், மீள்குடியேற்றத்தின் சவால்கள், முஸ்லிம் சமூகம் தாமாக இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், யாழ். முஸ்லிம் ஒன்றியத்தின் பிரதிநிதி ஜனாப் ஆரிப், பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் உ

இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.

நல்ல விடயம். இதே போன்று முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராகத் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு செய்யப்பட்ட காட்டிகொடுப்புக்கள், துரோகங்கள், அநீதிகள், படுகொலைகள் என்பனவும் கதைவடிவில் இந்த இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்கப்படல் வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது நினைவு கூறல்

கலாபூஷணம் பரீட் இக்பால்
                                                                                  வட மாகாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தமிழீழ விடுதலைப்

புலிகளினால் குறுகிய மணி இடைவெளியில் ஈன இரக்கமின்றி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை துடைத்தெறிந்து 34 ஆவது ஆண்டு நிறைவு ஒக்டோபர் 30ஆம் திகதி நினைவு கூறப்பட்டது. இதையொட்டி முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரும் பி. எஸ். எம். சரபுல் அனாம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் யாழ்.முஸ்லிம் ஒன்றியம் அல்துல் பரீட் ஆரிப் ஆகிய இருவரும் யாழ் முஸ்லிம்கள் சார்பாக 1990 ஆம் ஆண்டு தொடக்கும் இன்று வரை யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயரங்களை பத்திரிகையாளர் மகாநாட்டில் எடுத்துரைத்தார்கள். சரபுல் அனாம் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட விடயத்தை தெளிவாக எடுத்துரைத்தார். 34 வருடம் கடந்தும் மாறி மாறி வந்த அரசாங்கத்தினால் இதுவரை எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றம் எட்டாக் கனியாக இருப்பதாக கூறினார். வீட்டு திட்டங்களும் சரியான முறையில் எமது சமூகத்திற்கு கிடைக்கவில்லை என்ற விடயத்தையும் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய சகல விடயங்களும் இழுபறியாக இருப்பதாக மிக கவலையோடு கூறினார். அதனைத் தொடர்ந்து ஆரிப் அவர்கள் பேசுகையில் 34 வருடம் கடந்தும் பள்ளிக்குடா, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுடைய காணி அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கொடுக்க அங்குள்ள அதிகாரிகள் மறுப்பதாகவும் அந்த காணி உரிமையாளர்கள் பல தடவை வந்தும் அவருடைய காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் வளமான முஸ்லிம்களுடைய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் அண்மையில் கிளிநொச்சி காணி உரிமையாளர்கள் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்பட்ட போது அந்த செய்திகள் வடக்கு பத்திரிகையில் வரவில்லை என்றும் தென்னிலங்கை பத்திரிகையில் அந்த விடயங்கள் வந்ததாக ஆதாரத்துடன் செய்தித்தாளை காட்டினார். இந்த அக்டோபர் விடயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழ் ஆட்சியாளர்களை சார்ந்ததாகும் என கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் நிர்க்கதியாகச் சென்ற யாழ்ப்பாண முஸ்லிம்களை இரு கரம் கொண்டு வரவேற்ற புத்தளம் மக்களை பாராட்டியதோடு மறைந்த முன்னாள் பாராளுமன்ற மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அவர்களையும் நினைவு கூறினார்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.

https://madawalaenews.com/7527.html

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.... சரியான போட்டி.
சும்மா இருக்கும் தமிழர்களை... சொறிந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, 
இஸ்ரேல்காரன் தான் பொருத்தமான ஆள். இனி அவனுடன்... மல்லு கட்டுங்கோ. 👇

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.