Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின

whatsapp sharing button

image_e4a68e9b68.jpg

பாறுக் ஷிஹான்

32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட  மாதிரி வாக்குச்சீட்டுக்கள்   அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில்  எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு   இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில்    பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்கு சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை  கடந்த வியாழக்கிழமை (7) மாலை கைது செய்திருந்தனர்.

மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு முஸ்லீம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும்  இலக்கம் இரண்டிற்கும்  புள்ளடி  இடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்   தெரிவித்தார்.  

தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன்  மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.tamilmirror.lk/அம்பாறை/32-ஆயரம-மதர-வககசசடடககள-சககன/74-346774

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு முசுலிம்கள்  கைது என்பதைசொல்ல தயக்கம் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

இரண்டு முசுலிம்கள்  கைது என்பதைசொல்ல தயக்கம் ...

தேசிய நல்லிணக்கம் கண்டியளோ
தமிழன் கைது என்றால் தலைப்பு செய்தி அதுதான்...அதுவும் யாழ்ப்பாணத்தில் நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தியாண்டிகளுக்கு...
யாழில் போலிவாக்கு அட்டைகளுடன் இரு தமிழர்கள் கைது ...இப்படி எழுதியிருப்பார்கள் ....பின்குறிப்பு எழுதுவார்கள் இவர்கள் .விடுதலிப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்...
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகத்தில் இல்லாத பொல்லாத குற்றம்களை செய்து போட்டு அல்லாவை ஐந்து நேரமும் கும்பிட்டு ஆடுவாங்கள் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பெருமாள் said:

உலகத்தில் இல்லாத பொல்லாத குற்றம்களை செய்து போட்டு அல்லாவை ஐந்து நேரமும் கும்பிட்டு ஆடுவாங்கள் .

ஐயோ அப்படி செப்ப வேண்டாம் ..மத நல்லிணக்கத்துக்கு விரோதமான் செயல்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, putthan said:

தேசிய நல்லிணக்கம் கண்டியளோ
தமிழன் கைது என்றால் தலைப்பு செய்தி அதுதான்...அதுவும் யாழ்ப்பாணத்தில் நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தியாண்டிகளுக்கு...
யாழில் போலிவாக்கு அட்டைகளுடன் இரு தமிழர்கள் கைது ...இப்படி எழுதியிருப்பார்கள் ....பின்குறிப்பு எழுதுவார்கள் இவர்கள் .விடுதலிப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்...
 
ஏன் ..சார் யாழிலேயே...வரிந்துகட்டி ..சாறுபிழிய சனமிருக்கே..

Edited by alvayan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, alvayan said:

ஏன் ..சார் யாழிலேயே...வரிந்துகட்டி ..சாறுபிழிய சனமிருக்கே..

என்ன.... இன்றைக்கு சதிராடுறதெண்டே நிக்கிறியள் எல்லோரும். அவரவர்  தங்கள் கவலையை மறைக்க, மறக்க பல விடயங்களில் கவனத்தை செலுத்துகிறார்கள், நீங்களும் விடுவதாயில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/11/2024 at 20:49, putthan said:

ஐயோ அப்படி செப்ப வேண்டாம் ..மத நல்லிணக்கத்துக்கு விரோதமான் செயல்

அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்

அது தானே ....ஐந்து வருடங்களின் பின்பு வீட்டுக்கு ஒரு கார் வழங்கப்போகிறார் நம்ம தோழர் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

அது தானே ....ஐந்து வருடங்களின் பின்பு வீட்டுக்கு ஒரு கார் வழங்கப்போகிறார் நம்ம தோழர் 

மோட்டச் சயிக்கிள்  ஓடவே அங்கு ரோட்டைக்காணவில்லை...இதுக்கிள்ளை  காரும் கொடுத்தால் உள்ள ரோட்டுத்துண்டுகளும் காணாமல் போய்விடும்....கற்பனக்கு ஒரு அளவு வேணும் கண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/11/2024 at 02:44, putthan said:

அது தானே ....ஐந்து வருடங்களின் பின்பு வீட்டுக்கு ஒரு கார் வழங்கப்போகிறார் நம்ம தோழர் 

வீட்டில(வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம்) இருப்பதை பிடுங்காமல் விட்டாலே போதுமண்ணை!

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.