Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புல்லை வெட்டுங்கோ

----------------------------------
நாலு நாள் ஆகிவிட்டது
ஒவ்வொரு குழாயின் கீழும்
அண்டா குண்டா என்று வைத்து
 
தேனும் பாலும்
இனி வீடு தேடி வரும் என்றனர்
 
வைத்த
அண்டாவும் குண்டாவும்
அப்படியே
காத்து வாங்கிக் கொண்டு
காத்துக் கிடக்கின்றன
 
தேன் எப்ப வரும்
பால் எப்ப வரும் என்று
கொஞ்சம் முன்னரே சொன்னால்
தனி தனியே பிடித்து
வீடு முழுக்க வைத்துக் கொள்வேன்
 
எட்டு வருடம் முந்தியும்
வரும் வரும் என்றீர்கள்
வரவே இல்லை
கடைசி மட்டும்
 
பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள்
 
இப்ப வந்து விட்டீர்கள்
 
இந்த தடவை என்றாலும்
ஓட விடுங்கள் பாலையும் தேனையும்
 
'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல
புல்லை வெட்டுங்கோ...........'
உள்ளிருந்து வந்தது
எப்பவும் அன்பாக அதட்டும்
ஒரே குரல்
 
கற்பனை கலைந்தது.
  • Like 7
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரசோதரன் said:
பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள்
 
இப்ப வந்து விட்டீர்கள்
 
இந்த தடவை என்றாலும்
ஓட விடுங்கள் பாலையும் தேனையும்

பார்க்கலாம், புல்லை வெட்டுறதா? ‘புல்லா’ வெட்டுறதா என்பதை 14ந்திகதிக்குப் பிறகு பார்க்கலாம்.

கோபத்தோடு அவ சொன்னாலும் உங்களுக்கு அன்பா கலந்த அதட்டலாகத் தெரியும் கற்பனை அருமை

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எட்டு வருடத்துக்குப் பிறகும் கூட இனியும் வரும் வரும் என்று எதிர்பார்ப்போடு இருப்பதுதான் பொறுமையின் உச்சம் ......!

கவிதைக்கு நன்றி ரசோ . .........!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரசோதரன் said:

'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல

புல்லை வெட்டுங்கோ...........'
உள்ளிருந்து வந்தது
எப்பவும் அன்பாக அதட்டும்
ஒரே குரல்
 
கற்பனை கலைந்தது.

வழக்கம் போல்... பொய் வாக்குறுதிகளுடன் நடக்கும் தேர்தல்.
ஏமாந்த மக்கள்... மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். வேறு வழி...?
நல்ல தொரு கவிதைக்கு நன்றி ரசோதரன். கவிதையின் முடிவு அருமை. 😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரசோதரன் said:

நாலு நாள் ஆகிவிட்டது

ஒவ்வொரு குழாயின் கீழும்
அண்டா குண்டா என்று வைத்து
 
தேனும் பாலும்
இனி வீடு தேடி வரும் என்றனர்
 
வைத்த
அண்டாவும் குண்டாவும்
அப்படியே
காத்து வாங்கிக் கொண்டு
காத்துக் கிடக்கின்றன
 
தேன் எப்ப வரும்
பால் எப்ப வரும் என்று
கொஞ்சம் முன்னரே சொன்னால்
தனி தனியே பிடித்து
வீடு முழுக்க வைத்துக் கொள்வேன்
 
எட்டு வருடம் முந்தியும்
வரும் வரும் என்றீர்கள்
வரவே இல்லை
கடைசி மட்டும்
 
பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள்
 
இப்ப வந்து விட்டீர்கள்
 
இந்த தடவை என்றாலும்
ஓட விடுங்கள் பாலையும் தேனையும்

அமெரிக்க அதிபரை நம்பினோர்....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Companies ready price hikes to offset Trump's global tariff ...

நீங்க யாரைச் சொல்கிறீர்கள் என்று ஒரே குழப்பமாகவும் உள்ளது.

ரம் வந்தால் விலைகள் குறையும் என்றார்கள்

இன்று மேலே உள்ள தலையங்கம் ஏதோ விபரீதம் ஏற்படப் போகிறதென்றே சொல்கிறது.

பொறுமை பொறுமை பொறுமை

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

Companies ready price hikes to offset Trump's global tariff ...

நீங்க யாரைச் சொல்கிறீர்கள் என்று ஒரே குழப்பமாகவும் உள்ளது.

ரம் வந்தால் விலைகள் குறையும் என்றார்கள்

அண்ணா,

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, இறக்குமதி வரிகளைக் கூட்டி அமெரிக்கப் பொருட்களின் சந்தையை அகலமாக்கி வேலை வாய்ப்புகளை வழங்குவது, பதிவுகள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் பதினொரு மில்லியன் மக்களை வெளியேற்றி வீடுகளின் விலைகளை குறைப்பது, இன்னும் அதிக துளைகள் போட்டு மலிவு விலையில் எரிபொருட்கள் வழங்குவது, ........... இப்படியானவற்றை நம்பித்தான் இங்கு வாக்களிக்கப்பட்டது.

நேட்டோ, ரஷ்யா, இஸ்ரேல் இவை போன்ற சமாச்சாரங்களுக்காக அல்ல. இங்கு உள்ளூரில் இவை போதைக்கு தேவையான ஊறுகாய்கள் போல மட்டுமே.

எதுவும் முன்னரும் நடக்கவில்லை. எதுவும் இனியும் இவர்களால் நடக்கப் போவதில்லை. அதுவாக உலக ஒழுங்கில் நடந்தால், அவரவர் என்னால் தான் நடந்தது என்று சொல்லி பெருமைகளை அடுக்கிக் கொள்ளலாம். பில் கிளின்டனுக்கு கிடைக்காத பெருமைகளா............

எங்கள் வீட்டுப் புல்லை நாங்களே வெட்டினால் தான் உண்டு........

இங்கு அநேகமாக எல்லோரும் மாதம் 50 டாலர்கள் கொடுத்து புல்லு வெட்டிக் கொள்கின்றனர். வெளியேற்றப் போகின்றோம் என்று சொல்லப்படும் அந்த பதினொரு மில்லியன் மக்கள் தான் இவர்களின் புற்களை மாதம் 50 டாலருக்கு வெட்டிக் கொடுக்கின்றனர்.

திறமை அடிப்படையில் இங்கு முறையாகக் குடியேறியவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் புல்லு வெட்டும் மெஷினுடன் வெளியே வரட்டும்........எனக்கும் ஒரு கூட்டணி வேண்டும் தானே..........😜.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

பார்க்கலாம், புல்லை வெட்டுறதா? ‘புல்லா’ வெட்டுறதா என்பதை 14ந்திகதிக்குப் பிறகு பார்க்கலாம்.

கோபத்தோடு அவ சொன்னாலும் உங்களுக்கு அன்பா கலந்த அதட்டலாகத் தெரியும் கற்பனை அருமை

🤣.............

கவிஞரே,

எல்லா தேசங்களிலும் ஒரே கதை.......

எல்லா வீடுகளிலும் ஒரே கதை............

முழு உலகமுமே ஒரே ஒரு கதையால் மட்டும் தான் ஆனதோ..............

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ரசோதரன் said:

திறமை அடிப்படையில் இங்கு முறையாகக் குடியேறியவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் புல்லு வெட்டும் மெஷினுடன் வெளியே வரட்டும்........எனக்கும் ஒரு கூட்டணி வேண்டும் தானே..

அது மட்டுமா?

உணவு விடுதிகளில் அவரவர் தின்ற தட்டுக்களை அவரவரே கழுவியும் வைக்க வேண்டிவரலாம்.

தைமாதத்திலிருந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பயப்பிடுகிறார்கள்.

பிள்ளைகள் பாடசாலையில் தாய் தந்தையர் சொந்த ஊரில்.

இப்படி எத்தனையோ பார்க்கப் போகிறோம்.

உள்ளே வரும் சாமானுக்கு வரியை கூட்டினால் 

அது நம்ம தலையிலேயே விழப்போகுது என்பதை உணர்வதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2024 at 02:54, ரசோதரன் said:
'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல
புல்லை வெட்டுங்கோ...........'
உள்ளிருந்து வந்தது
எப்பவும் அன்பாக அதட்டும்
ஒரே குரல்

புல்லு வெட்டியாச்சோ....? 😂
 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

புல்லு வெட்டியாச்சோ....? 😂
 

🤣..................

ஒரு மாதிரி இழுத்து இழுத்து வெட்டி விட்டேன், அண்ணை.

சொல் கேட்ட அக்கணமே புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி.......... என்ன உரு எடுக்க வேண்டுமோ அந்த உரு எடுத்து............ காலால் இட்ட பணிகளை தலையால்............. அடுத்த பிறவியில் செய்வதாக உள்ளேன்........😜.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2024 at 17:41, ஈழப்பிரியன் said:
On 10/11/2024 at 17:41, ஈழப்பிரியன் said:

அது நம்ம தலையிலேயே விழப்போகுது என்பதை உணர்வதாக தெரியவில்லை.

 

On 10/11/2024 at 17:41, ஈழப்பிரியன் said:

அது நம்ம தலையிலேயே விழப்போகுது என்பதை உணர்வதாக தெரியவில்லை.

அமெரிக்கர்களும் ரம்ப் உம்.  அதை சீனா காட்டப்போகுது  என்று நினைத்து விட்டார்கள் 🤣 வரி குறையும்   பொருள்கள் மலியும் என்கிறார்கள்  நடக்காது   



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.