Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!

sritharn.jpg

“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், அவர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அடைகின்ற வகையிலும், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைத்தும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு தேசியத் தலைவர் பிரபாகரனால் வழிகாட்டப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு எங்கள் மக்களுக்கான பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

எமது மக்களுக்கான இந்தப் பயணத்திலே தேர்தல்கள் ஒரு பெரிய முக்கிய புள்ளிகளாக மாறுகின்றன. அந்த முக்கியமான புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களுடைய ஆணை திரும்பத் திரும்ப வழங்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்பது தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை, தங்களுக்கான அரசியல் உரிமையை, தங்களுக்கான அரசியல் இருப்பைத் தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு தேர்தல் களமாக – அதற்காக தாங்கள் தெரிவு செய்கின்ற ஆணை வழங்குகின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது.

அந்தவகையில்தான் தமிழ் மக்கள் கூருணர்வோடும் தெளிவான பார்வையோடும் இந்த அரசியல் பெருவெளியில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், நாங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யார் யாரைத் தெரிவு செய்ய வேண்டும், யார் யார் நாடாளுமன்றம் சென்றால் எங்களுக்காக பேசுவார்கள், எங்களினுடைய மக்களின் உரிமைகளை கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் உங்களுடைய தெரிவுகள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலுக்கான நீதிபதிகளாக தமிழர்களே அமைவதால் அவர்களுடைய வாக்குகள் சிதறிப் போகாமல் அது தமிழ்த் தேசியத்துக்கான தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றவர்களுக்கான வாக்காக மாற வேண்டும்.

இப்போது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 44 தரப்புகளாக 396 பேர் 6 ஆசனங்களுக்காக களத்திலே இருக்கின்றார்கள். ஆகவே, தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. எங்கள் மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. மக்களுடைய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் கேட்பது வடக்கு, கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழுகின்ற தமிழர்கள் தமிழ்த் தேசியத்துக்காகத் தமிழர்களுடைய உரிமைக்காக யார் யார் உரத்துக் குரல் கொடுக்கின்றார்களோ, யார் யார் தேவையென்று கருதுகின்றீர்களோ, அந்தவகையில் தமிழ்த் தேசியத்துக்காக உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோளாகும்.

நான் மதுபானசாலைக்குப் சிபாரிசு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து எனக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது கூட்டுச் சதியாகும். எங்களது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், கிழக்கிலே இருக்கின்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து எனக்கு எதிராகத் திட்டமிட்ட கூட்டுச்சதியாகவே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

இந்தக் கூட்டுச் சதி மக்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். மக்கள் அதைப் புரிந்துகொள்கின்றார்கள். யாராவது கூடுதலாக விருப்பு வாக்குகளை எடுத்து விடுவார்கள் அல்லது கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கு அவருக்கு ஓர் ஆணையை மக்கள் வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் கட்சிக்குள் இருக்கின்ற சில அநாமதேயமான சந்தேகப் பிறவிகளுடைய அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

எங்கள் மீது மதுபானசாலை இருப்பதாகக் குறிப்பிடும் இவர்கள் தங்களுடைய படத்துடன் என்னுடைய படத்தை இணைத்து கிளிநொச்சிக்குத் தபாலில் அனுப்புகின்றார்கள். நீங்கள் அவருக்கும் (எனக்கும்) போடுங்கோ, எங்கள் இருவருக்கும் போடுங்கோ என்று. இது ஒரு கேவலமான செயல் இல்லையா? மதுபானசாலை இருக்கு என்று கூறிக்கொண்டு எங்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்கும் போக்கிலித்தனத்துக்கு ஏன் போகின்றீர்கள்? என்னுடைய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடு கீழ்த்தரமான செயற்பாடாகும். வரலாறும் காலமும் இதற்குச் சரியான பதிலை வழங்கும்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் போட்டு தடுக்காது இருந்திருந்தால் எமது கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் 4 – 5 ஆசனங்களை அலுங்கல் – குலுங்கல் இல்லாமல் நாங்கள் எடுத்திருக்க முடியும்.

தங்களுடைய சுயநலத்துக்காகவே எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய பதவி மோகங்களுக்காகத் தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழ் மக்களை வேறு திசைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த கைங்கர்யம்தான் வழக்கு. அதன் காரணமாகத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இடைக்காலத் தடை எப்போது விலக்கப்படுகின்றதோ அப்போது நான் தலைவராகப் பொறுப்பெடுப்பேன்.

அன்புக்குரிய மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது இம்முறை எனக்கு ஒரு ஆணை தாருங்கள். சிறீதரன் ஆகிய நான் திரும்பவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்தி, புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களையும், நிலத்தில் இருக்கின்ற தமிழர்களையும் ஒருங்கிணைத்து வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என்று எங்கள் தமிழர்களை ஓரணியாக ஒன்றாக்கி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் எல்லாக் கட்சிகளையும் ஒரு பாதையில் கொண்டுவந்து, தேசிய விடுதலைக்கான இயக்கத்தை அமைப்பதற்கு என்னாலான முழு முயற்சிகளையும் மற்றவர்களையும் அரவணைத்து நான் செய்வதற்கு எனக்கொரு ஆணை தாருங்கள். மீண்டும் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஆணையாக அது இருக்கட்டும் என எனது மக்களிடம் வினவி நிற்கின்றேன்.

தேர்தல் முடிந்த பிற்பாடு நான் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுப்பேன். வழக்குகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நினைக்கின்றேன். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கின் தவணை. மேலும் தவணைகள் போகும் வாய்ப்பு உள்ளது. இப்போதும் வழக்கைப் போட்டவர்கள் கைவாங்க முடியும். அவ்வாறு செய்தால் கட்சி மீண்டும் நல்ல நிலைக்கு வரும். மக்களிடம் கட்சி மீது நம்பிக்கை வரும். கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கும்போது தமிழ் மக்களுடைய விடங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

தற்போது மக்கள் யாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுகின்ற காலம். யார், யார் என்னென்ன கேவலங்களைச் செய்கின்றார்களோ, யார் யார் மக்களுக்கு எதிரான விரோதமான நடவடிக்கைகளை ஆற்றுகின்றார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குகின்ற காலம் மக்களிடம் வந்திருக்கின்றது. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்ற காலம் போய் மக்கள் நீதிபதிகளாக மாறி இருக்கின்றார்கள். உங்களுடைய நீதிக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி கடந்து 15 ஆம் திகதி வரக் காத்திருக்கின்றோம்.” – என்றார்.

 

 

https://akkinikkunchu.com/?p=298659

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை முதலில் சுமந்திரனிடம் வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, புலவர் said:

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

கழுதை  தேய்ந்து.... கட்டெறும்பான கதை.
சுத்துமாத்து  சுமந்திரனை கட்சிக்குள் வைத்திருந்தால்.... இதுதான் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2024 at 13:05, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்

large.IMG_7490.jpeg.b3fd01d244777f7df5cb

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.

ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Justin said:

ஏன்? வீட்டுக்கு வாக்களிக்க விரும்புவோர் சுமந்திரன் உட்பட தனக்கு விருப்பமான ஒருவருக்கு அளிக்கலாம் அல்லவா? இவ்வளவு நாளும் சிறிதரன் பா.உவாக இருந்து சம்பாதித்த பார் வருமானம் போதாதாமா😂?

ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிதரன் தமிழ் மக்களுக்கு விசேட உரை!

என்னை மனைவி வீட்டுக்குள் எடுக்கிறா இல்லை. இந்த தேர்தலில் நான் மீண்டும் குடும்ப தலைவராக ஆணை தாருங்கள்🤣.

இவரெல்லாம் ஒரு தலைவர் - இவர் எமக்கு உரிமை வாங்கி தந்துடுவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புலவர் said:

ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.

சிறிதரனை விட சுமந்திரனை எதிர்ப்பீர்கள் என்று தெரியும், நீங்கள் மட்டுமல்ல, இங்கே இருக்கும் "சுமந்திரன் லவ்வர்ஸின்" நிலையும் அதுவே.

இதையெல்லாம் தாயக மக்கள் பார்க்கவில்லை, கணக்கிலெடுப்பதில்லை. அங்கேயிருக்கும் மக்களுக்கு விளங்கிய படி, சிறிதரன் தமிழர்களிடையே மிகப் பெரிய ஊழல் அரசியல்வாதி. வெளிநாட்டு தமிழரின் உதவிகளில் மூக்கை நுழைத்து செல்வாக்கு செலுத்துவது முதல், அரச அதிகாரிகளின் நியமனத்தில் தனது செல்வாக்கினால் பதவி நீக்கங்கள், இடமாற்றங்கள் என உள்ளூரில் பிரபலமானவர் சிறிதரன். இப்போது ஜேவிபியின் சார்பில் தேர்தலில் நிற்கும் சில முன்னாள் அரச பணியாளர்கள் கூட சிறிதரனின் ஊழலால் பாதிக்கப் பட்டு, ஜேவிபியின் ஊழியர் சங்கத்தினால் காப்பாற்றப் பட்டோர் என்றால், சிறிதரனின் செயல்களால் நீங்கள் காக்க முனையும் so-called "தமிழ் தேசியம்" மீதான விளைவுகள் புரிய வேண்டும்.

இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது போன்ற வட்சப் அலட்டல்கள். அலட்ட உதவும், ஆனால் தாயக அரசியலுக்கு இதனால் ஒரு விளைவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்ததச் சிறிதரன் கடந்த தேர்தலில் சுமத்தரனை ஆதரித்த போது  அவரை பாலா அண்ணைக்கு நிகரான விண்ணர் என்ற போது சிறிதரனையும் தூக்கிப்பிடித்த சுமத்திரனின் லவ்வர்ஜ்சுக்கு இப்ப சிறிதரன் என்றால் கசக்கிறது. என்னுடய விருப்பம் சும்த்திரன் சிறிதரன் 2 போருமே  தோற்க வேண்டும். சுமத்திரன்கட்டாயம் தோற்க வேண்டும். சுமத்திரன் தோற்க வேண்டுமென்றால் சிறிதரன் வெல்ல வேண்டும்.மாறாக சுமத்திரன் வென்றாலோ அல்'லது 2 பேரும் தோற்றாலோ தமிழரசுக்கட்சி சுமத்திரனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடும். பார் லைசென்ஸ விகாரம் தொடர்பாக உறுதியான தகவல்;கள் தகவல் அறியும் சட்டத்தின்படி பெறப்படும்வரை சிறிதரன் குற்றஞ் வசுமத்தப்பட்டவர்தான் சுமத்திரனின் அல்லக்கைள் போட்டோக் கொப்பி வெட்டி ஒட்டி மூக்குடைபட்ட கதையும் வட்சப் அலட்டல்களை விட கேவலமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Justin said:

இந்த "பெட்டி மாறியது, குட்டி மாறியது" என்பதெல்லாம் "சசிகலா வாக்குகளை சுமந்திரன் தூக்கி வென்றார்" என்பது

தமிழ் யுரியுப்பர்களின் அலட்டல்களைவிட மோசமானது



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.