Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார்,

அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும்,

ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல்  எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி  அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு  இந்த காணொலியில் இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகேஷ் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பிச்சு வாங்குவார்.இன்றிருக்கும் நடன நடிகர்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல்  எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி  அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு  இந்த காணொலியில் இருக்கிறது

👍............

நாகேஷ், சந்திரபாபு, தனுஷ் இவர்கள் மூவரும் பிறவி நடிகர்கள், கலைஞர்கள் போல என்று நினைத்துக் கொள்வேன்...................  

  • கருத்துக்கள உறவுகள்

நாகேஷ் . .....: நாகேசுக்கு நிகர் நாகேஷ்தான்.......... நடிப்பு சொல்லி வேல இல்ல ........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍............

நாகேஷ், சந்திரபாபு, தனுஷ் இவர்கள் மூவரும் பிறவி நடிகர்கள், கலைஞர்கள் போல என்று நினைத்துக் கொள்வேன்...................  

ஆம் ரசோ,

அதுபோல் அசைக்கமுடியாத உச்சத்தில் இருக்கவேண்டியவர்கள், குடியாலும் பவுடராலும் தம் வாழ்வை கெடுத்துக்கொண்டவர்கள் என்று நான் இன்றும் நினைப்பது இரண்டுபேர்

ஒன்று ரகுவரன்:

ஹொலிவூட் தரம் என்று சொல்லி சொல்லி படம் எடுப்பார்கள் பின்பு பார்த்தால் கோமாளிதனமாக இருக்கும், ஆனால் தமிழ்சினிமாவில் எந்தவித கோமாளிதனமான நடிப்புமின்றி  ஹொலிவூட் தரத்தில் இருந்த ஒரேயொரு நடிகன் ரகுவரன்.

இரண்டு கார்த்திக்.

படத்துக்கு படம் எந்தவித கெட்டப்பும் மாத்திக்கொள்ளாமல் எல்லோராலும் விரும்பப்பட்ட பன்முக கலைஞன் . கார்த்திக் ரஜனி படங்களுக்கு மட்டுமே நகைச்சுவைக்கென்று தனியே ஆள் தேவையில்லை அவர்களே ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகர்களாகவும் மனசை அள்ளுவார்கள்.

அதேபோல் தமிழ்சினிமாவால் இன்னும் முழுசாக பயன்படுத்தப்படாத கலைஞர்கள் இருவர் என்று எண்ணிக்கொள்வதுண்டு.

ஒன்று  ராஜ்கிரண்

இரண்டு எம்.எஸ்.பாஸ்கர்

ராஜ்கிரணுக்கு ஒரு தவமாய் தவமிருந்தும்,எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மொழியும் இன்னும் இவர்களிடம் நிறைய இருக்கு என்று எண்ண தோன்றும்படங்கள்.

48 minutes ago, suvy said:

நாகேஷ் . .....: நாகேசுக்கு நிகர் நாகேஷ்தான்.......... நடிப்பு சொல்லி வேல இல்ல ......

என்ன இருந்தாலும் நாகேஷ் நடிப்பு  நம்ம தமிழ்கட்சிகள் ரேஞ்சுக்கு வராது சுவியண்ணா 😏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா போல் ஒரு கேவலம் உலகில் எங்கும் கிடையாது இன்னி வரைக்கும் எந்த நீச்சல் பாய்தலிலும் வண்டி அடிபட த்தானே நாயகனும் நாயகியும் பாய்கிறார்கள் முதலில் அதை மாத்துங்கடா பார்க்கவே சகிக்கலே .

மற்றபடி நாகேஷ் பற்றி சொல்வது என்றால் நிறைய சொல்லலாம் .

தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த நடிகர் என காலம் கடந்தும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நாகேஷ். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நாகேஷ் அவர்களின் பூர்வீகம் மைசூர்.

main-qimg-c9dd481b1b52964179146a6363583f

main-qimg-6981994b2d1ae073c6c119e7370205

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கொஞ்சம் முன்புதான் மனதோடு மனோ என்னும் நிகழ்ச்சி பார்த்தேன் . ......அதில் மனோ எம் . எஸ் . பாஸ்கரைப் பேட்டி எடுக்கிறார் . ........ அதில் அவரது பல திறமைகள் வெளிக்கொண்டு வந்திருக்கு . .........நேரமிருந்தால் பாருங்கள் யூ டியூப்பில் இருக்கு . ......!  👍

 Manathodu Mano | Epi - 33 | Jaya tv ......!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார்,

நாகேசின் நீர்க்குமிழி படம் சர்வர் சுந்தரம் இப்படி பார்க்க வேண்டும்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரபாபு வளர்ந்தது கொழும்பில், கடின வாழ்கையாகத்தான் இருந்து இருக்கும்.

காரணம், குடும்பம் இலங்கை கடத்தப்பட்டது (ஏதோ) ஓர் குற்றத்திற்காக.

ஒரு கதை இருக்கிறது, சந்திரபாபு அப்போதே பிரேக், டிஸ்கோ, பாப் dance போன்றவற்றை அந்த இளவயதில்  நன்றாக பழகி இருந்ததன் காரணம், கொழும்பில் உள்ள club களில் உழைப்புக்காக ஆடியதால் என்று.

உண்மை, பொய் தெரியவில்லை.    

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிஅடங்கும் வாழ்க்கையடா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேர அமெரிக்கர், மேற்கத்தவரை  விஞ்சும் கனகச்சிதம் , சந்திரபாபு rock n roll 

சோடிக்காக ஆடும் பெண்ணும், rock n roll moves இல்லாவிட்டாலும், ஆட்டத்தில் சந்திரபாவுக்கு இணையாக ஆட்டம். 

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

நாகேசின் நீர்க்குமிழி படம் சர்வர் சுந்தரம் இப்படி பார்க்க வேண்டும்.

ஆம் ஈழப்பிரியன் அண்ணா, அதிலும் நம்மவர் படத்தில் ஒரு நடிப்பு நடிச்சிருப்பார், சிவாஜியையே தூக்கி சாப்பிடும் நடிப்பு.

பல பத்து ஆண்டுகள் திரையில் ஜீவனாகவே வாழ்ந்த அந்த மகா கலைஞனுக்கு நம்மவருக்கு மாத்திரமே ஒரேயொரு தேசிய விருது கிடைத்தது அதுவும் துணை நடிகருக்காக.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

ஆம் ஈழப்பிரியன் அண்ணா, அதிலும் நம்மவர் படத்தில் ஒரு நடிப்பு நடிச்சிருப்பார், சிவாஜியையே தூக்கி சாப்பிடும் நடிப்பு.

பல பத்து ஆண்டுகள் திரையில் ஜீவனாகவே வாழ்ந்த அந்த மகா கலைஞனுக்கு நம்மவருக்கு மாத்திரமே ஒரேயொரு தேசிய விருது கிடைத்தது அதுவும் துணை நடிகருக்காக.

பொதுவான காரணம், நகைச்சுவை குணசித்திர நடிப்பு வேறு மொழியில் செய்வது முடியாது.

எல்லா உணர்வுகளை விடவும், நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பது, அதை ரசிகர்களுக்கு  தோன்றச் செய்வது,  தொற்றச் செய்வது மிகக் கடினம்.

ஒரு சிலர் வேறு மொழியில் செய்கிறார்கள், அனால் அவர்கள், அந்தந்த மொழிச்சூழ்நிலையில் விபரம் தோற்றம் பெறும் வயதில்  வாழ்ந்து இருக்க வேண்டும்.

நகைச்சுவை என்பது சொல்லும் விடயத்தால் மட்டும் அல்ல,நளினம், நடிப்பு, பாவனை, தோரணை ...(குறிப்பாக அந்தந்த மொழி கலாசாரத்துக்கு உரிய) என்று உரிய வேளையில் ஒருகினையும் போதே நகைச்சவை உணர்வு தோன்றுவது, தொற்றுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நாகேஷ் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பிச்சு வாங்குவார்.இன்றிருக்கும் நடன நடிகர்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.:cool:

மகனும் சளைத்தவரல்ல  தினம் தினம் உன் முகம்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியாரின் பாடல்களுடன் பொருத்தமான வரிகளைச் சேர்த்திருப்பவர் கவிஞர் வாலி. இசையமைத்திருப்பவர் வி.குமார். பாடலைப்பாடியிருப்பவர்கள் டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன், மற்றும் கே.சுவர்ணா

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2024 at 12:46, valavan said:

கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார்,

அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும்,

ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல்  எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி  அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு  இந்த காணொலியில் இருக்கிறது

வ‌ண‌க்க‌ம் அண்ணா

சின்ன‌னில் இவ‌ரின் காமெடி ஒன்று பார்த்தேன் க‌ள‌வாய் போய் ப‌ச்சை முட்டை எடுத்து குடிப்பார் பிற‌க்கு இவ‌ரின் வாய்க்காள் கோழி குஞ்சு வ‌ரும் அந்த‌ப் ப‌ட‌ பெய‌ர் தெரியுமா

அந்த‌ப் ப‌ட‌த்தின் பெய‌ர் தெர்ந்தால் சொல்லுங்கோ மீண்டும் அந்த‌ காமெடி பார்க்க‌லாம்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அண்ணா

சின்ன‌னில் இவ‌ரின் காமெடி ஒன்று பார்த்தேன் க‌ள‌வாய் போய் ப‌ச்சை முட்டை எடுத்து குடிப்பார் பிற‌க்கு இவ‌ரின் வாய்க்காள் கோழி குஞ்சு வ‌ரும் அந்த‌ப் ப‌ட‌ பெய‌ர் தெரியுமா

அந்த‌ப் ப‌ட‌த்தின் பெய‌ர் தெர்ந்தால் சொல்லுங்கோ மீண்டும் அந்த‌ காமெடி பார்க்க‌லாம்..................................

 பையன் அண்ணன்கிட்ட ஆசைப்பட்டு கேட்டதால அது என்ன காமெடி என்று யூடியூப்பில் தேடி பார்த்தால், 

அது எம்ஜிஆர் படம்  ஆனா அந்த காமெடி பண்ணினது நாகேஷ் அல்ல சந்திரபாபு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.