Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யால காட்டில் அமைந்திருந்த படைப்பாசறை தாக்கி அழிப்பு: 6 படையினர் பலி - போர் கருவிகள் மீட்பு

Featured Replies

இராணுவ இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.Army point at Thalgasmankada comes under LTTE attack Media Centre for National Security (MCNS) said, an army point at Thalgasmankada, South of Paanama has come under a terrorist' attack this evening. The sources said that the attack has started around 6 p.m. More information will follow...புதினம் இணையத்தளத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் உள்ள தல்கஸ்மங்கட ராணுவ முகாம் இன்று மாலை 6 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... மேலதிக விபரங்கள் தெரியவில்லை..

http://www.defence.lk/new.asp?fname=20071015_07

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

South Asia News

Gunfire and explosion sounds reported in Sri Lanka military camp

Oct 15, 2007, 14:16 GMT

Colombo - Sounds of gunfire and explosions have been reported from a military camp located deep inside the jungles in south eastern Sri Lanka, residents from the area said Monday.

The sounds have been reported from a camp in Thalgasmankada, 380 kilometres south east of the capital on Monday evening, according to residents in the area.

The area borders the eastern province where Tamil rebels still maintain pockets and carry out small-scale attacks on the security forces.

A private radio station reported that a group of rebels had arrived in boats from the south eastern coast and launched an attack on the small military detachment located inside the jungle.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said he had received reports about sounds of gunfire, but could not confirm whether the place was under attack or say anything about the nature of the incident.

Tamil rebels last week warned that they would launch attacks shortly and that they were preparing for their next step.

© 2007 dpa - Deutsche Presse-Agentur

அம்பாந்தோட்டை மாவட்டம் கதிர்காமம் அருகே புலிகள் திடீர் தாக்குதல்

அம்பாந்தோட்டை மாவட்டம் கதிர்காமம் தல்கஸ்மங்கடப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள், கதிர்காமம் தல்கஸ்மங்கடப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றை தாக்கி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க தற்போது அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போதும் மோதல்கள் நடைபெற்று வருவதால் சேத விபரம் குறித்து உடனடியாக தெரியவில்லை என்றார் அவர்.

கதிர்காமத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் பகுதியில் தல்கஸ்மங்கடப் பகுதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- நன்றி : தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் கதிர்காமம் அருகே திடீர் தாக்குதல்

Written by Seran - Oct 15, 2007 at 08:56 PM

சிறிலங்காவின் கதிர்காமம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவ முகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் திடீர் தீவிர தாக்குதல் சிறிலங்கா அரசதரப்பு தகவல்

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டம் கதிர்காமம் தல்கஸ்மங்கடப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தகவல் தெரிவிக்கையில்

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் காட்டுப் பகுதிக்குள்ளால் ஊடுருவிய விடுதலைப் புலிகள், கதிர்காமம் தல்கஸ்மங்கடப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றை தாக்கி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க தற்போது அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போதும் மோதல்கள் நடைபெற்று வருவதால் சேத விபரம் குறித்து உடனடியாக தெரியவில்லை என்றார் அவர்.

கதிர்காமத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் பகுதியில் தல்கஸ்மங்கடப் பகுதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.net/index.php?option=c...38&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 15-10-2007 21:42 மணி தமிழீழம் [சிறீதரன்]

பொத்துவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படைமுகாம் தாக்கியழிப்பு : 6 படையினர் பலி

திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறீலங்கா படையினருக்கு சொந்தமாக பனாம படைமுகாம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது அம்முகாமில் 55 சிறீலங்கா படையினர் இருந்ததாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் அம்முகாம் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சுமார் மூன்று மணிநேரம் இருந்ததாகவும் 6 படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது விடுதலைப்புலிகளால் பெருமளவு ஆயுததளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரி-81 ரக சுடுகலன் - 04

ரி-56-1 ரக சுடுகலன் - 01

ரி-56-2 ரக சுடுகலன் - 01

தொலைத்தொடர்பு சாதனம் - 02

கவசம் துளைக்கா அங்கி - 05

ஏ.கே ரவைகள் - 500

ஆகியவற்றை விடுதலைப் புலிகளால் மீட்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

SLA camp in Paanama in Poththuvil under attack

[TamilNet, Monday, 15 October 2007, 14:33 GMT]

The Sri Lanka Army (SLA) camp in Paanama in Poththuvil in Ampaa'rai district has come under attack around 6:30 p.m. Monday, according to military sources in Colombo. 55 SLA troopers were stationed in the camp, the southern most detachment of the SLA in the district, according to initial reports. Meanwhile, official information from the Sri Lankan Ministry of Defense said the attack targeted a post south of Panama, at Thalgasmankada.

Additional troops have been rushed to Panama, the sources added.

Panama is located 61 km southeast of Ampa'rai town and 63 km northeast of Kataragama.

பொத்துவிலுள்ள பாணம இராணுவ முகாம் (அம்பாறை மாவட்டம்) இன்று 6:30 மாலை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது(இராணுவ செய்திகளின் படி).இம்முகாமில் 55 இராணுவத்தினர் இருந்ததாக கூறப்படுகிறது.மேலதிக துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23530

இலங்கையின் தெற்கே, மொனராகல மாவட்டம் யால தேசியப்பூங்கா அருகில் அரச படை முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களிடம் கேட்டபோது, இலங்கையில் கதிர்காமத்திலிருந்து 40 கிலோ மீட்டர் வடக்கிலும் பாணமவுக்கு தெற்கிலும் இருக்கும் தல்கஸ்மன்கடவ என்கிற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

அங்கே இலங்கையின் சில படைப்பிரிவுகள் இருந்ததாகவும், அதில் ஒரு படைப்பிரிவின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

வன விலங்குத்துறைக்கு சொந்தமான ஜீப் மீதும் புலிகள் சுட்டதாகவும், ஆனால் அந்த ஜீப் பாதுகாப்பாக கதிர்காமம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்த உதய நாணயக்கார அவர்கள், அதற்கு பிறகு கதிர்காமம் பகுதியிலிருந்து கூடுதல் படையணிகளை அந்த பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அந்த பகுதிக்கு சென்று சேர்ந்த பிறகுதான் இது குறித்து மேலதிகமான தகவல்களை தம்மால் தெரிவிக்க முடியும், என்றும் அவர் தெரிவித்தார்.

- BBC

யால காட்டில் அமைந்திருந்த படைப்பாசறை தாக்கி அழிப்பு: 6 படையினர் பலி - போர் கருவிகள் மீட்பு

[ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 15, 2007 - 06:25 PM - GMT ]

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைப் பாசறை ஒன்று இன்று மாலை விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காதிர்காமம் பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர்கள் தொலைவில் தல்கஸ்மங்கட என்ற இடத்தில் யால காட்டுப்பகுதியில் இப் படைப்பாசறை அமைந்திருந்தது.

இன்று மாலை 6.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்புக் கொமாண்டோ அணியினரால் இப்பாசறை முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. மிகக்குறுகிய நேரத்தில் குறித்த பாசறை விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மூன்று மணிநேரம் குறித்த பாசறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அங்கிருந்த போர்க்கருவிகளை மீட்ட பின்னர் அதனை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

தாக்குதல் இடம்பெற்ற வேளை 20ற்கும் அதிகமான படையினர் குறித்த பாசறையில் நிலைகொண்டிருந்ததாகவும் இவர்களில் அறுவர் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட ஏனையோர் காயங்களுடன் தப்பியோடியுள்ளனர்.

இப்பாசறையில் இருந்து விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட போர்கருவிகளின் விபரங்கள்.

ரி-81 ரக சுடுகலன் - 04

ரி-56-1 ரக சுடுகலன் - 01

ரி-56-2 ரக சுடுகலன் - 01

தொலைத்தொடர்பு சாதனம் - 02

குண்டு துளைக்கா கவசம் அங்கி - 05

ஏ.கே ரவைகள் - 500

என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இதேநாள் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் பவமாறன் லெப்.கேணல் உலகநாதன்(அஜோனி) லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய போராளிகளின் முதலாம் மாத நினைவாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ்

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

அம்பாறை கஞ்சிக்குடிச்சாற்றுப் பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் என்று நேற்றையச் செய்தி. இன்று அம்பாந்தோட்டையில் தாக்குதல் என்ற செய்தி. இன்றைய செய்திகளெல்லாம். இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இராணுவத்தினர் படுகாயம் இப்படித்தான் காணக்கூடியதாகவுள்ளது. மாரிகாலம் இராணுவத்தினருக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கப்போகின்றது. வடக்கில் படைநடவடிக்கையில் இராணுவம் ஈடுபடும் வேளை கிழக்கில் படைகளற்ற ஒருநிலை உருவாகிவிடும் போல் தெரிகிறது.

தப்பியோடும் விடுதலைப் புலிகளின் படையணியின் தாக்குதலால் ஆறு இராணுவ வீரர் பலி. விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தலைவர் உட்பட வடக்கை நோக்கி தப்பியோடும் விடுதலைப் புலிகளினால் யாலைப் பகுதியில் படையணியினர் தங்கியருந்த பாசறை நேற்று தாக்கப்பட்டது. இதில் ஆறு இராணுவத்தினர் பலியாயினர். ஒரு இராணுவ வீரர் காயங்களுக்குள்ளானர். இன்று காலை இறந்த ஆறு இராணுவத்தினரின் உடலங்களை எடுத்துவரச் சென்ற டிரக்ரர் வண்டி ஒன்று கிளைமோர் குண்டுத்தாக்குதலில் அகப்பட்டு அதில் சென்ற இராணுவத்தினன் ஒருவருக்குக் காயம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவா பேச்சாளன் உதய நாணயக்கார ஊடகங்களுக்கத் சரடு விட்டுள்ளார். :unsure:

ஜானா

வடக்கு நோக்கி தப்பி ஓடும் புலிகள் ஏன் தெற்கு நோக்கி வந்து தாகினார்கள் இதுகூட தெரியாமல் இருகின்றார் இராணுவ பேச்சாளர் வாயால கெடுபவர்கள் என்றால் சிங்களவர்தான்

இதோ இன்னுமோரு சரடு : வவுனியா முள்ளிக் குளம் பகுதியில் இன்று அதிகாலை பெரும் சமர் வெடித்ததாகவும் பல மணி நேர மோதலில் இரு தரப்பும் ஈடுபட்டதாகவும், பின் இராணுவம் அப்பகுதியில் தேடுதல் நடத்திய பொழுது ஏழு விடுதலைப் புலிகளின் உடலங்கள் கண்டு பிடித்து செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்ப ஆயத்தம் செய்வதாகவும் செய்தி. நேற்று அள்ளிக் கொண்டு வந்த இராணுவத்தினரின் உடல்களைத்தான் வி.புலிகளின் உடலங்கள் என்று தெற்கிற்கு சரடு விடுகிறார்களோ? எத்தனை நாளைக்கு தான் ஏமாற்றப் போகின்றார்கள். :unsure:

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

யாலப் பிரதேசத் தாக்குதல் வெளிப்படுத்தும் உண்மை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந் தோட்டைப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள மொனராகலையில் முழு தென்னிலங்கைப் பகுதியில் அமைந்துள்ள யால வன விலங்குச் சரணாலயத்துக்குள் ஊடுருவி கடந்த ஞாயிறு மாலை விடுதலைப் புலிகள் நடத்திய திடீர்த் தாக்குதல் பல்வேறு பரிமா ணங்களில் முக்கியத் துவம் மிக்கதாக அமைந்திருக்கின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பிர தேசத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மிக மோசமான யுத்தத்தின் தீவிரத்தோடு ஒப்பிடுகையில் யால தல்கஸ்மங்கடவில் இடம் பெற்ற தாக்குதலும் அங்கு இடம்பெற்ற மோதலும் அதனால் நேர்ந்த நேரடி இழப்புகளும் அப்படி ஒன்றும் மோசமானவையல்ல.

ஒரு மினி முகாமே தாக்கப்பட்டிருக்கின்றது. அங்கு ஆறு, ஏழு படையி னர் வரை உயிரிழந்திருக்கின்றார்கள். மேலும் சிலர் காணாமல் போயிருக் கலாம் எனக் கருதப்படுகின்றது. அந்த மினி முகாமை ஒருசில மணி நேரம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று கூறப்படும் விடு தலைப் புலிகள், அதற்குத் தீயிட்டு எரித்த பின்னர் அங்கிருந்து வெளி யேறிவிட்டனர்.

ஆகவே, ஒப்பீட்டளவில் நோக்கினால் அண்மைக்காலத்தில் யுத்த முனையில் இடம்பெற்றுவரும் இழப்புகள், பாதிப்புகள், சேதங்களு டன், யாலவில் இடம்பெற்றவை அவ்வளவு குறிப்பிடத்தக்க பெரிய விடயமல்ல.

ஆனால், இந்தத் தாக்குதல் இடம்பெற்ற இடம், நேரம் மற்றும் அதன் பின்விளைவுகள் ஆகியவற்றை ஆழமாக நோக்கினால் அதற்குள் புதைந்து கிடக்கும் உள்ளார்ந்த அர்த்தங்களை ஓரளவு புரிந்து கொள்ள இயலும்.

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டியடித்து விட்டாகிவிட்டது என மார்தட்டி, விழாக் கொண்டாடியது கொழும்பு அரசு. கிழக்கில் இனிப் புலிகள் மீளத் தலையெடுக்கவே முடியாது என் றும் அரசு பிரகடனப்படுத்தியது.

ஆனால் கிழக்கில் நிலைமை அதுவல்ல என்பதை அவ்வப்போது அங்கு தாம் மேற்கொள்ளும் கரந்தடித் தாக்குதல்கள் மூலம் புலிகள் நினைவூட்டி, உணர்த்தி வந்தனர்.

இப்போது கிழக்கையும் தாண்டி, தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் அறுபது துருப்புகளைக் கொண்ட ஒரு மினி முகாமையே அதிர டித் தாக்குதல் மூலம் கைப்பற்றும் அளவுக்கு கிழக்கு ஊடான ஊடு ருவலையும் தமது துருப்புகளின் நகர்வையும் செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள் அவர்கள்.

கதிர்காமத்திலிருந்து வடக்கே சுமார் நாற்பது கிலோமீற்றர் தொலை வில் அம்பாறை மாவட்டம், பாணமைக்குத் தெற்கே முற்றும் முழுதா கத் தென்னிலங்கை சிங்களத் தாயகத்தின் மத்தியில் அமைந்திருக் கின்றது இந்த யால தல்கஸ்மங்கடப் பிரதேசம். தாங்கள் நினைத்தால் இலங் கையின் எந்தப் பிரதேசத்துக்குள்ளும் ஊடுருவித் தாக்க முடி யும் என்பதை இத்தாக்குதல் மூலம் புலிகள் மீண்டும் ஒரு தடவை கொழும்புக்கு அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

யால வனவிலங்குச் சரணாலயம் சுமார் 368 சதுர மைல் பரப்பள வில் பரந்து, விரிந்து அமைந்திருந்தாலும் அதன் ஐந்து பிரதான வலயங் களில் மூன்று ஏற்கனவே தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் கார ணமாக மூடப்பட்டிருந்தன. எஞ்சியிருந்த இரு வலயங்களில் ஒன்றி லேயே ஞாயிறன்று தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

இத் தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு அடுத்ததாக முக்கியத்து வம் பெறுவது தாக்குதல் இடம்பெற்ற நேரமாகும்.

பொதுவாகப் புலிகளின் முதுகெலும்பை முறித்து விட்டதாக கொழும்பு அரசும் அதன் படைகளும் முழங்கி வருகையில், அந்த முழக்கத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தாலும் கூட, அதைவிட முக்கியமான நேரப் பொருத்தமும் இதில் சம் பந்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஐந்து வாரங்களாக வருடாந்த விடுமுறைக்காக யால சர ணாலயம் மூடப்பட்டிருந்தது. உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கான சுற்றுலாப் பருவகாலம் ஆரம்பமாகவிருந்ததை ஒட்டி, சரணாலயமும் கடந்த திங்களன்று திறக்கப்படவிருந்தது. அதற்கு முதல் நாளே இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. சரணாலயம் மூடப்பட்டிருந்த சமயமாதலால் அவ்வேளையில் அங்கு சுற்றுலாப் பயணிகள் எவரும் இருக்கவில்லை. தப்பித்தவறி ஒருநாள் பிந்தி இத்தாக்குதல் நடந்திருக்குமானால் அப்பாவி உல்லாசப் பய ணிகளும் இதில் சிக்கியிருக்கக்கூடிய ஆபத்து நேர்ந்திருக்கும்.

ஆகவே, உல்லாசப் பயணிகளுக்கும் ஏனைய அப்பாவிப் பொது மக்களுக்கும் சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சரணாலயம் மூடப்பட்டிருந்த சமயத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக் கின்றது. அதேவேளை யால சரணாலயம் இந்த உல்லாசப் பயணிகளின் வருகையை ஒட்டிய காலத்தில் செயற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்து வதற்காக, அது அடுத்தநாள் பொதுமக்கள் நடமாட்டத்துக்காகத் திறந்து விடப்படவிருக்கையில் அதன் மீது அதிரடிப் பாய்ச்சல் நடத்தப்பட்டி ருக்கின்றது. இந்த தாக்குதல் நாட்டின் பிரதான தேசிய வருமானங் களில் ஒன்றான உல்லாசப் பயணத்துறை மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

இலங்கைக்குத் தமது நாட்டின் பிரஜைகள் உல்லாசப் பயணி களாகவோ, வேறு மார்க்கங்களுக்காகவோ விஜயம் செய்வதற்கு எதிரான சிபார்சு எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்த மேற்குலக நாடு கள், இப்போதுதான் அந்தக் கருத்தியல் நிலைப்பாட்டை மீளப் பெற்றுக் கொண்டு, தமது பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய் வதைத் தடுக்கும் எச்சரிப்பு அறிக்கையை வாபஸ் பெறத் தொடங்கி யிருக்கின்றன.

இந்தச் சமயத்தில், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் விரும்பி, பெரும் எண்ணிக்கையில் வரும் முக்கிய வனவிலங்குச் சரணாலயத் துக்குள் புகுந்து இந்த அதிரடிப் பாய்ச்சலைப் புலிகள் நடத்தியிருப்பது, இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்குக் கிடைத்த பேரிடி யும், பேரடியும் ஆகும். இத்தகைய தாக்குதல்கள், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் இலங்கை வருகையைக் குறைக்கச்செய்து அத்துறையையே நிரந்தர சீக்காளியாகப் படுக்கையில் தள்ளிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் யாலவில் இடம்பெற்ற புலிகளின் தாக்குதல், இலங்கையின் பொருளாதாரத் துறையை நேரடியாக இலக்கு வைத்த ஒரு நடவடிக்கை எனத் திட்டவட்டமாகக் கூறமுடியும்.

தத்தமது நாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது அப் படி ஒன்றும் ஆபத்தான விடயமல்ல என்று மேற்குலக இராஜதந் திரிகளும், அந்தந்த நாட்டு அரசுகளும் அறிவித்து, தமது நாட்டுப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதை ஊக்குவித்தும் வந்த வேளையில், அந்த முயற்சிக்கு இலங்கைக்கு மேற்குலக உல்லாசப் பயணிகள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆப்பு வைக்கும் செய லாக அமைந்திருக்கின்றது யாலத் தாக்குதல்.

""நாங்கள் நிலைவரத்தை ஊன்றி தீவிரமாக அவதானித்து, கண்காணித்து வருகின்றோம். மீண்டும் எமது நாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு எதிராக பயண எச்சரிக்கையை வெளியிடுவதா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். '' என மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

""தமிழர் தாயகத்தின் மீது தனது போரியல் கொலை வெறித் தீவி ரத்தை கொழும்பு அரசு விஸ்தரித்து, முனைப்புப்படுத்துமானால், பதில டியாக நாட்டின் எந்தப் பகுதிமீதும் தாக்குதல் நடத்துவோம். இலங்கை யின் பொருளாதார இலக்குகள் மீதும் கண் வைப்போம்!'' என சில மாதங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியே தல்கஸ்மங்கடவில் ஞாயி றன்று அதிரடிப் பாய்ச்சலாக வெளிப்பட்டிருக்கின்றது எனலாம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.