Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்

adminNovember 11, 2024
douglas-1170x780.jpg

 

 

 

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.  இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/208183/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விண்ணனிடம் கொடுக்கும் அளவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று.

9 hours ago, கிருபன் said:

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

 ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, satan said:

அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று.

 ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

 

கோடி கோடியாக வருமானமில்லாமலா கொட்டிக் கொடுத்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, நியாயம் said:

விண்ணனிடம் கொடுக்கும் அளவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதோ. 

அதனால் தான் அவர் பெயர் விண்ணன்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, satan said:

ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣
எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கிருபன் said:

 

1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்

adminNovember 11, 2024
douglas-1170x780.jpg

 

 

 

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.  இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/208183/

 

15. -11-24 இன் பிறகு வழக்கை போடுங்கள்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் எவருமே மானநஷ்டஈடென்றால் ஆயிரம் கோடிகளிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள் போல..........

ரணிலின் ஆலோசகர் அவருடைய நண்பியின் வளர்ப்பு நாயுடன் ஏதோ செய்ததாக வந்த விடயத்திலும் அவர் நண்பியை ஆயிரம் கோடி நஷ்டஈடாக கேட்டிருந்தார் என்று ஞாபகம்.

பின்னர் ஹிருணிகாவையும் யாரோ ஆயிரம் கோடி கேட்டிருந்தனர்.

டயான கமகே ஆயிரம் கோடி கேட்டாரா அல்லது இனிமேல் தான் கேட்கப் போகின்றாரோ...... அப்படி ஏதோ ஒன்று..................

'ஆயிரம் கோடி வழக்குகள்.............' என்று ஒரு தொகுப்பே வெளிவிடலாம் போல................🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது, அவர்களது சொந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதனை வெளியில் கொண்டுவருவதற்காக இவரின் முன்னைய கொலைகளை கொண்டுவருகிறார். இவர் ஏன் இத்தனை கோடியை இவருக்கு அளித்தார்? தான்  தாடியருக்கு ஏதோ ஒரு தொழிலை சொல்லிக்கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்கிறாரே, அது என்ன தொழில்? இவரும் சாதாரணமான ஆள் அல்ல. இப்போ தாடியரால் நொந்து நொடிஞ்சு வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். அங்கயன் தாடியருக்கு தேர்தலில் வெல்வதற்காக உதவியவர் என்றால்; இவர் எப்படிப்பட்டவர்? துஸ்ட்டனுக்கு உதவி புரிந்தால் கடைசியில் அவனாலேயே அழிவது திண்ணம். தாடியர் யாரை வைத்து மற்றவரை அடக்கினாரோ அதே வழியை இவர் எடுத்து விட்டார் போலிருக்கிறது. அடுத்த முறை தாடியரின் இடத்தை இவர் நிரப்பக்கூடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நன்மை செய்திருந்தால்; அந்த மக்கள் இவரை வாழ்த்தியிருப்பர். பாவம் ஏதோ செய்யக்கூடாத தொழிலை செய்து, கூடாத கூட்டத்தோடு கூடி, அழிந்துபோய் நிக்கிறார். இப்போ... தாடியின் அரசியலும் போகப்போகுது, அவரின் சொகுசு வாழ்க்கைக்கு இவர் நஷ்ட ஈடு கொடுத்தார்தான் உண்டு. ஆனால் இவர் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த மனிதனுக்கு வாக்கு போடுற கூட்டம் போட்டுத்தான் ஆகும். இது இவரின் பிரச்சனை. அவர்களின் பிரச்சனை என்னவோ? அவர்களும் பின்னாளில் சொல்லக்கூடும். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்.  தாடியர் அரசியலில் வீழ்வது இவராலல்ல. தாடியர் மேல் அனுரா நடவடிக்கை எடுப்பாரெனில், அதில் இவர் பங்குமிருக்கும். புலிகளுக்கு ஐம்பது வீதம் கொடுக்க விரும்பாமல், இப்போ எத்தனை கோடியை இழந்து தவிக்கிறார். நேர்மையாய் சம்பாதித்திருந்தால் யாருக்கும் பயப்படாமல், எதையும் இழக்காமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இத்தனை கோடியை இழந்தவரென்றால், அதற்கு மேல் இவர் சம்பாதிக்க இவர்களின் கூட்டுறவு வேண்டியிருந்திருக்கிறது.  இவர் மேல் நஷ்ட ஈடு கேட்டு இன்னும் பலர் வழக்கு போடப்போகிறார்கள். வாங்கிய காணிக்கு கையெழுத்து வாங்காமல் விட்ட புலி இவர், இவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு ஆதாரம் வைத்திருந்திருப்பாரா? எப்படியோ இவரிலும் சம பங்கு தவறுண்டு. அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் இவர் கொடுத்த காசை வட்டியோடு திருப்பிகேக்கலாம், குற்றம் நிரூபணமானால் தாடியர் விண்ணரிடம் கேட்ட நஷ்ட ஈடும், வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பியளிக்கவும் கோரலாம். 

5 minutes ago, ரசோதரன் said:

மானநஷ்டஈடென்றால் ஆயிரம் கோடிகளிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள் போல..........

"மானம் உயிரினும் மேலானது." அதனால்தான், மானம் போனபின் உயிரை என்ன ம** கு என்பர்.

30 minutes ago, குமாரசாமி said:

ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣
எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎

இவ்வளவு காலமும் மௌனமாக இருந்தவர், இப்போ,  கூட்டம் போட்டு பேசுவதிலிருந்து விளங்குதே!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருகாலம் எங்குபோனாலும் 150 பேர் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மேலதிகமாக அதிரடிப்படை, பொலிஸ்,ராணுவம் பாதுகாப்புயாழ்ப்பாண நகரத்துக்கே ராஜா,ஸ்ரீதர் தியேட்டர் இவர் கோட்டை, இவர் வைச்சது சட்டம் கேக்காவிட்டால் வாய்க்குள்ளையே பிஸ்டலை வைச்சு சுடும் கொடூரம், ஊர்காவற்துறை அவர் வட்டகை அவரை மீறி யாரும் தேர்தலில் ஜெயிக்க கூடாது

என்ன ஆட்டமெல்லாம் ஆடினார், ஒரு வருடம் முன்பு என்னை யாரும் தொடோணூம் எண்டால் அதிரடிப்படையினரை தாண்டித்தான் வரவேண்டும்,முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிகளை நினைவு கூருகிறார்கள்  எண்டு ஒரு சிங்களவனாகவே மாறி எகத்தாளமா வேறு பேட்டி கொடுத்தார். 

இன்று பதவியும் புடுங்கப்பட்டு பாதுகாப்பும் புடுங்கப்பட்டு, ஒரு கை துப்பாக்கிகூட வைத்திருக்க அனுமதி இலாமல்,  எவர் வேண்டுமென்றாலும் இவரை சீண்டலாம் வெற்றி வாய்ப்பை இல்லாமல் பண்ணலாம் என்று அவரே சொல்லி அழும் நிலைக்கு வந்துவிட்டார்.

உங்கள் வாழ்நாளிலும் எங்கள் வாழ்நாளிலும் உங்களைபோன்றவர்களின் கும்பலின் அஸ்தமனத்தை பார்ப்பதே ஒவ்வொரு மனிதனினதும் வேண்டுதல்.

அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும்போதே இயற்கை மரணம் எய்தினால் நீங்கள் வென்றதாகவே ஆகிவிடும்

ஊரில் உள்ள இவரின் எடுபிடி ஒன்றின் கருத்துப்படி இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் லண்டனுக்குபோய் இவர் செட்டில் ஆகும் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார், லண்டனில் இவருக்கு பெரிய வியாபாரங்கள் இருக்கு என்றும் சொன்னார் உண்மை பொய் தெரியவில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரிடம் இருக்கும் அளவு வாங்கினால் அதற்கு பெறுமதி இராது தானே? அதுக்கும் மேல....



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.