Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.

 

பெண் அடிமைத்தனம். கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"சாகும் போது கூட சமைத்து வைத்து விட்டுத்தான் சாகனும்.."..

எத்தனயோ பெண்களின் வலியை அழகாக சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல  சற்று தரம் பிழைத்தால் ஏச்சு வேறு இவற்றையும் தங்கி   பிள்ளகளுக்காக  சமுதாயத்துக்காக என்று தியாகம் செய்து ஒன்றாக வாழும் பெணகளும் உண்டு ....

ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி  மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை.

 இது சற்று முன்னரான கால நடை முறையாக இருக்கலாம். ஒரு சில இடங்களில் இன்னும் நடக்கிறது . பகிர்வுக்கு நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, தமிழ் சிறி said:

பெண் அடிமைத்தனம். கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணை.

பொதுவாக பெரும்பாலான உலகம் முழுவதும் இருக்கும் ஒரு சிந்தனை என்னவென்றால் வீட்டு  சமையல் அறை என்றால் அம்மாக்கள் நினைவு அல்லது அக்கா தங்கச்சி நினைவு வருவது ஏன் என்று தெரியவில்லை?
உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, நிலாமதி said:

ஆனால் வெளிநாடு வந்த பின் சமையல் பழகி  மனைவிக்கும் சேர்த்து சமைக்கும் ஆண மக்களும் இல்லாமல் இல்லை.

ஆண்களும் சமைக்கின்றார்கள்,வீட்டு வேலைகளும் செய்கின்றார்கள் தான் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்களின் அடிமனதில் சமையல் என்றால் பெண்கள் தான் முதல் நினைவாக வருவார்கள்.இதை பன்னாட்டு மக்களிடம் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன்.

பல இடங்களில் மனைவியின் வேலையை நானும் பங்குபோட்டு சரிசமமாக வேலை செய்கின்றேன் என சொல்லும் ஆண்களையே பார்த்திருக்கின்றேன். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்ணுக்கு இறப்பின் போதுதான் விடுதலை.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

ம் வழக்கு எப்படி முடிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

குமாரசாமி, இணைப்புக்கு நன்றி.

குறும்படத்தை வெறும் மூன்று பாத்திரங்களை வைத்து அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகாவானந்தா.

பெண்கள் மேல் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறை இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதை பழையதுதான். 55 வயதில் விவாகரத்து கேட்பதை வேண்டுமானால் இங்கே புதிது என்று சொல்லலாம். 10 சிறார்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் தான் வாழ்ந்துவிடுவேன் என்று சொல்லும் ஆளுமையுள்ள ஒரு பெண் விவாகரத்து இல்லாமலேயே தனியாகப் போய் வாழ்ந்து விடலாமே என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

சென்ற நூற்றாண்டில், ஒரு பெண் தன் குடும்பத்துக்காக எப்படித் தன் தூக்கத்தையே தியாகம் செய்தாள்,எவ்வளவு தொல்லைகள் அவளுக்கு இருந்தன என்பதை கண்ணதாசன் 1966இல் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“….கை நடுங்கிக் கண் மறைந்து

காலம் வந்து சேரும்

காணாத தூக்கமெல்லாம்

தானாகச் சேரும்…”

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எடுத்துக் கொண்ட கதைக்கரு நிஜமாகவே நெகிச்சியானதுதான் . ....... ஆனாலும் புலத்தில்  இன்றைய தலைமுறையினர் ஆண்களைப்போலவே பெண்களும் வேலைசெய்வதால் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கிறது ...... ஒருத்தருக்கு ஒருத்தர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கும் மேலாக வீட்டில் இருக்கும் வேலைகளை சமையல் உட்பட   மற்றவர் வரும்வரை காத்திருக்காமல் செய்து விடுகிறார்கள் ....... அதற்குப் பின்தான் மையல் எல்லாம் .......!  😂



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு! ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறமுடியாது. எனவே, அரசாங்கம் அப்படியொரு தீர்மானத்தை அறிவிக்குமென்றால் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போமென்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1408532
    • இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் அல்லவா?
    • 🤣. உண்மைதான்…. சும்மா உருட்டி விடுவதுதானே🤣. ஆனால் வந்த இரெண்டும் பொறுத்த மாவட்டங்கள்.  இவற்றின் தபால் வாக்கை வெல்லாது, பாராளுமன்றை வெல்வது மிக கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். என் பி பி தனி பெரும்பான்மை என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது. அதற்கு மேல் எவ்வளவு என்பதே இனி கேள்வி என நினைக்கிறேன். ஓம் கூடவே அங்கு அவர்களுக்கு வெற்றி வாய்பு பூச்சியம். இதில் சில எம்பிகளை தேத்தலாம். தவிரவும் படையினர் மத்தியில் மகிந்த தெய்யோவுக்கு இன்னும் கணிசமான செல்வாக்கு இருக்கும்.
    • அதாகப்பட்டது முதலில்  வீட்டில் மாற்றம் வேண்டும் .....அப்போதுதான் எழுத்திலும் மாற்றம் உண்டாகும் . ......!  😁 நான் வீட்டில் என்றுதான் சொல்கின்றேன் . ......வீட்டினுள் என்று சொல்லவில்லை . ......!  😴
    • ஜனாதிபதித் தேர்தலை விட பாராளுமன்றத்தேர்தலில் மகிந்த கோஸ்டிக்கு கூட வரும் என்பது எதிர்பார்த்ததே (தனிப்பட்ட செல்வாக்கும் தாக்கம் செலுத்தும்)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.