Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

முடிவுகளை அறிவிக்க வேண்டாம் 

 

 

Editorial   / 2024 நவம்பர் 14 , பி.ப. 06:13 -

தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

 

image_1512cf1d25.png


 
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடிவுகளை-அறிவிக்க-வேண்டாம்/150-347131

  • Thanks 1
  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@கிருபன் ஜி இதுதானா யாழின் தேர்தல் முடிவுத்திரி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

@கிருபன் ஜி இதுதானா யாழின் தேர்தல் முடிவுத்திரி?

எல்லோரும் ஓம் என்றால்  தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம். ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓகே…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

எல்லோரும் ஓம் என்றால்  தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம். ☺️

முதலில் திரியைத் தொடங்கினால் அதனோடு தொடர்வது யாழின் வழமை தானே அண்ணை. வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும். இப்ப அடிக்கடி முகப்பு மேம்படுத்தப்படுவதால் முகப்பிலும் திரி தோன்றுமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதியம் 2 வரை 55% வாக்குப்பதிவாம்.

மொத்தமாக 65% வரை எதிர்பார்கிறார்களாம்.

இது ஜனாதிபதி தேர்தல் (79%)  விட மிக குறைவாம்.

தேர்தல் திணைக்கள அதிகாரியை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் செய்தி.

https://www.dailymirror.lk/top-story/EC-estimates-65-voter-turnout-in-General-election/155-295964

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:
2 hours ago, goshan_che said:

@கிருபன் ஜி இதுதானா யாழின் தேர்தல் முடிவுத்திரி?

எல்லோரும் ஓம் என்றால்  தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம்.

தலைப்பு அப்படி தானே சொல்லுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைப்பு அப்படி தானே சொல்லுகிறது.

ஆனால் உள்ள வந்து பார்த்தா…🤣🤣🤣👇

 

2 hours ago, கிருபன் said:

முடிவுகளை அறிவிக்க வேண்டாம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தபாலில் அநுர அலை அடிக்குது போல............. 

https://results.elections.gov.lk/

large.Election_SL_2024_Galle_Postal.jpg.47639d156e3e640a0d876d63b8d5b80e.jpg

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

National People’s Power (NPP) –  32,296 (79.08%)
Samagi Jana Balawegaya (SJB) -  3,523 (8.63%)
New Democratic Front (NDF) - 1,964
Sri Lanka Podujana Peramuna (SLPP) - 1,846
‘Sarvajana Balaya’ alliance (SRJB) - 607

During the 2024 Presidential Election, National People’s Power (NPP) leader Anura Kumara Dissanayake received the highest number of postal votes in the Galle District with 25,892 votes, which is 64.5% as a percentage. 
-Adaderana

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://election.adaderana.lk/general-election-2024/division_result.php?dist_id=Ratnapura&div_id=Postal-Votes-Rpura

Polling Division - Postal-Votes-Rpura - Parliamentary Election 2024

 
Party Logo
NPPJathika Jana Balawegaya
79.4%24,776
 
Party Logo
SJBSamagi Jana Balawegaya
9.51%2,969
 
Party Logo
NDFNew Democratic Front
4.9%1,528
 
Party Logo
SLPPSri Lanka Podujana Peramuna
3.3%1,031
 
Party Logo
SBSarvajana Balaya
1.48%463
 
Party Logo
DLFDemocratic Left Front
0.32%100
 
Party Logo
PSAPeople's Struggle Alliance
0.22%69
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)அனுர, 2)சஜித், 3) ரணில், 4)மகிந்த கட்சிகள் முன்பே  எதிர் பார்த்த அளவில் வரிசைக் கிரமமாக வந்து கொண்டு இருக்கின்றது.
மிகுதி எப்படி இருக்கும் என பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தபால் வாக்குகளில் மொட்டு கட்சி,  4% வரை எடுக்கிறது. ஜனாதிதேர்தலில் இது 2% ஆம்.

அதே போல் என் பி பி இப்போதைக்கு வந்த முடிவுகளில் 79%.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைக்கின்றேன் ரணிலும், சஜித்தும் தான் அடிவாங்க போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

1)அனுர, 2)சஜித், 3) ரணில், 4)மகிந்த கட்சிகள் முன்பே  எதிர் பார்த்த அளவில் வரிசைக் கிரமமாக வந்து கொண்டு இருக்கின்றது.
மிகுதி எப்படி இருக்கும் என பார்ப்போம். 

ரணிலின் காஸ் சிலிண்டர் வெடித்து பறக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணிலை அடிக்கக் கூட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்............ 'போதும் போதும், ஓரமாக ஒதுங்கிப் போங்க சாரே...........' என்ற மாதிரி கவனிக்காமால் விட்டிருப்பார்கள்..........

அநுரவை பிடிக்காதவர்களுக்கு சஜித்தை தவிர வேறு தெரிவு எதுவும் இல்லையே இப்போதைக்கு............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

ரணிலின் காஸ் சிலிண்டர் வெடித்து பறக்கணும்.

மகிந்த & Co.  திருடர்களை பாதுகாத்ததற்காக,
ரணிலின் தோல்வி ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்ட ஒன்று.
தமது வயிற்றில் அடித்தவர்கள் மீது சிங்களவர் அவ்வளவு வெறுப்பில் இருந்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை வந்த தபால் வாக்குகள்.

சஜித்தின் அரைவாசி ரணிலுக்கு, இன்னொரு அரைவாசி மொட்டுக்கு என காட்டுகிறது.

ஆனால் 60%~79% ஆகியுள்ளது அனுர அணி.

மாவட்ட வாக்கெடுப்பில் இது நிலைத்தால் 2/3 கிடைக்கும் என நினைக்கிறேன்.

அனுரவுக்கு 2/3 கிடைத்தால் மாகாண சபை முறையை ஒழிக்க இலகுவாக இருக்கும்.

 

 

 

பிகு

தபால் வாக்குகள் பெரும்பாலும் படையினர் மற்றும் தொழில்சங்க மயப்பட்ட அரச ஊழியரினது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

இதுவரை வந்த தபால் வாக்குகள்.

சஜித்தின் அரைவாசி ரணிலுக்கு, இன்னொரு அரைவாசி மொட்டுக்கு என காட்டுகிறது.

ஆனால் 60%~79% ஆகியுள்ளது அனுர அணி.

மாவட்ட வாக்கெடுப்பில் இது நிலைத்தால் 2/3 கிடைக்கும் என நினைக்கிறேன்.

 

அடப் பாவிகளா, இரண்டே இரண்டு தபால் வாக்களிப்பை வைத்தே இவ்வளவு முடிவுகளா.............🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

இதுவரை வந்த தபால் வாக்குகள்.

சஜித்தின் அரைவாசி ரணிலுக்கு, இன்னொரு அரைவாசி மொட்டுக்கு என காட்டுகிறது.

ஆனால் 60%~79% ஆகியுள்ளது அனுர அணி.

மாவட்ட வாக்கெடுப்பில் இது நிலைத்தால் 2/3 கிடைக்கும் என நினைக்கிறேன்.

அனுரவுக்கு 2/3 கிடைத்தால் மாகாண சபை முறையை ஒழிக்க இலகுவாக இருக்கும்.

 

 

 

பிகு

தபால் வாக்குகள் பெரும்பாலும் படையினர் மற்றும் தொழில்சங்க மயப்பட்ட அரச ஊழியரினது.

ஜனாதிபதித் தேர்தலை விட பாராளுமன்றத்தேர்தலில் மகிந்த கோஸ்டிக்கு கூட வரும் என்பது எதிர்பார்த்ததே (தனிப்பட்ட செல்வாக்கும் தாக்கம் செலுத்தும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

அடப் பாவிகளா, இரண்டே இரண்டு தபால் வாக்களிப்பை வைத்தே இவ்வளவு முடிவுகளா.............🤣

🤣. உண்மைதான்….

சும்மா உருட்டி விடுவதுதானே🤣.

ஆனால் வந்த இரெண்டும் பொறுத்த மாவட்டங்கள். 

இவற்றின் தபால் வாக்கை வெல்லாது, பாராளுமன்றை வெல்வது மிக கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்.

என் பி பி தனி பெரும்பான்மை என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது. அதற்கு மேல் எவ்வளவு என்பதே இனி கேள்வி என நினைக்கிறேன்.

2 minutes ago, வாதவூரான் said:

ஜனாதிபதித் தேர்தலை விட பாராளுமன்றத்தேர்தலில் மகிந்த கோஸ்டிக்கு கூட வரும் என்பது எதிர்பார்த்ததே (தனிப்பட்ட செல்வாக்கும் தாக்கம் செலுத்தும்)

ஓம் கூடவே அங்கு அவர்களுக்கு வெற்றி வாய்பு பூச்சியம். இதில் சில எம்பிகளை தேத்தலாம்.

தவிரவும் படையினர் மத்தியில் மகிந்த தெய்யோவுக்கு இன்னும் கணிசமான செல்வாக்கு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

அனுரவுக்கு 2/3 கிடைத்தால் மாகாண சபை முறையை ஒழிக்க இலகுவாக இருக்கும்.

இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அனுரவுக்கு 2/3 கிடைத்தால் மாகாண சபை முறையை ஒழிக்க இலகுவாக இருக்கும்.

இருக்கலாம். ஆனால் தற்போதைக்குநான் கேள்விப்பட்ட வரையில் ஜனவரிக்கு உள்ளூராட்சித் தேர்தலும் ஏப்பிரலுக்கு மாகாணசபைத் தேர்தலும்நடக்கலாம்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும்.
    • நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.