Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

15 NOV, 2024 | 04:31 PM

image

(சி.சிவகுமாரன்)

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம்.

https://www.virakesari.lk/article/198879

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள்!

அது சரி தொண்டமான் தரப்பு எங்கே நிற்கின்றது. ஆசனம் ஏதும் கிடைத்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருமையாக உள்ளது, தமிழ் சகோதரிகளே.
மிக நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்கள் இல்லாத குறையை நீங்கள் நீக்கி விட்டீர்கள்.

புலிகள் காலத்தில்… பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றில் இருந்தவர் என நினைக்கின்றேன்.

அனுர கட்சி தமிழ் பெண்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயம் said:

வாழ்த்துக்கள்!

அது சரி தொண்டமான் தரப்பு எங்கே நிற்கின்றது. ஆசனம் ஏதும் கிடைத்ததோ?

 திகாம்பரம், ஜீவன் தொண்டமான் போகிறார்கள் என நினைக்கிறன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயம் said:

வாழ்த்துக்கள்!

அது சரி தொண்டமான் தரப்பு எங்கே நிற்கின்றது. ஆசனம் ஏதும் கிடைத்ததோ?

நுவரெலியாவில் வெற்றிப்பெற்ற நபர்கள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்

01. மஞ்சுள சுரவீர - 78,832
02. மதுர செனவிரத்ன - 52,546
03. ஆர்.ஜி. விஜேரத்ன - 39,006
04. அனுஷிகா திலகரத்ன - 34,035
05. கிருஷ்ணன் கலைச்செல்வி - 33,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்

1. பழனி திகாம்பரம் - 48,018
2. வேலுசாமி ராதாகிருஷ்ணன் - 42,273


ஐக்கிய தேசிய கட்சி - 01(unp)
1. ஜீவன் தொண்டமான் -46,478

https://tamil.adaderana.lk/news.php?nid=195954

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, தமிழ் சிறி said:

பெருமையாக உள்ளது, தமிழ் சகோதரிகளே.
மிக நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்கள் இல்லாத குறையை நீங்கள் நீக்கி விட்டீர்கள்.

புலிகள் காலத்தில்… பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றில் இருந்தவர் என நினைக்கின்றேன்.

அனுர கட்சி தமிழ் பெண்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றிகள்.

இன்னும் இரண்டு இளம் பெண்கள்   அதில் ஒன்று  சாவகச்சேரி அனுர கட்சியின்  அமைப்பாளரார்  பெயர் வென்னிலா  இராலிங்கம்.  தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது   கொழும்பு பக்கம் தான்    நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

இன்னும் இரண்டு இளம் பெண்கள்   அதில் ஒன்று  சாவகச்சேரி அனுர கட்சியின்  அமைப்பாளரார்  பெயர் வென்னிலா  இராலிங்கம்.  தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது   கொழும்பு பக்கம் தான்    நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁

உங்கள் ஏரியாவில் இருந்து என்றால்… கைதடி தானே. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

உங்கள் ஏரியாவில் இருந்து என்றால்… கைதடி தானே. 😁

கைதடி   நூணவில்.  நாவற்குழி           எல்லாம் சாவகச்சேரி தொகுதியில் தான் இருக்கிறது   எனவேதான் நம்ம ஏரியா.   😀.  அயல் கிராமங்கள் கூட    கோப்பாய்   நீர்வேலி   அயல் கிராமங்கள் தான்       வெயிலில் காலத்தில் நீர்வேலிக்கு  நடந்து போகலாம்    மழைகாலத்தில்.   கடல் இருக்கும் 

இதில் இந்த வெளியில் கடல்கரையில்.  ஆனி   ஆடி. அல்லது ஆவணியில்.  பெரிய மாட்டுவண்டி போட்டி நடக்கும்   

நீர்வேலியார். கைதடியாரிடம். தோற்று விடுவார்கள் 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

கைதடி   நூணவில்.  நாவற்குழி           எல்லாம் சாவகச்சேரி தொகுதியில் தான் இருக்கிறது   எனவேதான் நம்ம ஏரியா.   😀.  அயல் கிராமங்கள் கூட    கோப்பாய்   நீர்வேலி   அயல் கிராமங்கள் தான்       வெயிலில் காலத்தில் நீர்வேலிக்கு  நடந்து போகலாம்    மழைகாலத்தில்.   கடல் இருக்கும் 

இதில் இந்த வெளியில் கடல்கரையில்.  ஆனி   ஆடி. அல்லது ஆவணியில்.  பெரிய மாட்டுவண்டி போட்டி நடக்கும்   

நீர்வேலியார். கைதடியாரிடம். தோற்று விடுவார்கள் 😂🤣

நான் ஊரில் இருந்தகாலத்தில் மாட்டு வண்டி போட்டி எங்களூரில் வருடா வருடம் நடைபெறும் , கைதடியார் எங்களை வெல்ல முடியாது.

9 hours ago, Kandiah57 said:

இன்னும் இரண்டு இளம் பெண்கள்   அதில் ஒன்று  சாவகச்சேரி அனுர கட்சியின்  அமைப்பாளரார்  பெயர் வென்னிலா  இராலிங்கம்.  தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது   கொழும்பு பக்கம் தான்    நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁

வெண்ணிலா தெரிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன், மற்றவர், சரோஜா ஆச்சரியமாக மாத்தறை மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் புதியவர் என்று நினைத்திருந்தேன் ஆனால் முன்பே தேசியப்பட்டியலில் போக இருந்ததாகவும், ஹரிணிக்காக விட்டுக்கொடுத்ததாகவும் சொல்கிறார்கள், சரியாகத்தெரியவில்லை



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.