Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு

Oruvan

எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-

"தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது.

காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்ச்சியாக வன்வலு கடந்த மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது. அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ்க் கட்சிகளின் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு, பல அணிகளாகப் பிரிவடைந்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும். இந்தத் தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கின.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

தமிழ்க் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரே இலக்கில் செயற்பட முனைவோர்கள் பிரிந்திருந்ததனால் வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டமையால் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

ஆனால், வடக்கில் உள்ள நிலைமை மிக மோசமாகிவிட்டது. ஆளும் அரசே வெற்றி பெற்றிருப்பதனால் எமது தமிழ்த் தேசியவாத அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகின்றோம் என்கின்ற கேள்வி
எழுகின்றது.

எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும்.

இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த் தேசிய உரிமை ஜனநாயகப் போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள்.

கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும் எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம்.

அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதையும், ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக் கூறும் வரட்டு வாதங்களையும் அடியோடு
மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குத் தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும். தமது குறைபாடுகளையும், செயல்பாடின்மையும் இனிமேலாவது திருத்திக் கொள்வதற்கு அவை முன் வர வேண்டும்.

ஆனாலும் தமிழ் மக்கள் இன ரீதியான சிந்தனைதுவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தமை என்பது மிகவும் வேதனைக்குரிய பரிதாபகரமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை எனும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்திவரும் ஆபத்துண்டு.

அந்த மக்கள் எதிர்வரும் காலத்தில் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த் தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலையை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்." - என்றுள்ளது.
 

 

https://oruvan.com/sri-lanka/2024/11/16/efforts-to-reunite-tamil-national-parties-sivakarans-announcement



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியலிலிருந்து ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408743
    • மனோ கணேசன் அவர்களே...  கொழும்பு  மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும்... சஜித் பிரேமதாசாவின்  கட்சி இலங்கை முழுக்க பலத்த அடி வாங்கியதும்,  அனுர அலையும் உங்களால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. அதனை நினைத்து வருத்தம் கொள்ளாதீர்கள். டக்ளஸ் என்ற வைக்கல்  பட்டறை நாலுகால் பிராணியும் கொழும்பில் போட்டியிட்டு தமிழ்  வாக்குகளை பிரித்ததும் உங்கள் தோல்விக்கு  ஒரு காரணமாக இருக்கும்.
    • வாக்கு வாங்கு மட்டும் மக்களின் கழிவுகளையும் எடுப்பார்கள் போலிருக்கே. என்னமா நடிக்கிறார்கள்? மக்களை ஏமாற்றுவதும் கொள்ளை அடிப்பதும் ஒரு கலை இவர்களுக்கு!
    • என்னது! அரசியலில் சூழ்ச்சியும் தந்திரமும் நிறைந்தவர் சுமந்திரனா? அவர் தமிழ் மக்களை, அவர்களின் மூச்சான தேசியத்தை உடைப்பதிலும் முழு மூச்சாக சூழ்ச்சியும் செய்தார், தந்திரமும் செய்தார் ஒழிய அரசியலில் மக்களுக்கு எதுவும் சாதிக்கவில்லை. அதனாலேயே இன்று அரசியலில் கேள்விக்குறியாக இருக்கிறார். பேச்சாளர் பதவியை கைவிடாமல் வைத்திருப்பது, தனக்கு வரும் அவமானங்களை தடுப்பதற்கு, ஊடக சந்திப்புகளை நடத்தி மற்றவர்களை பேசவிடாமல் தடுப்பதற்கே. போனதடவை மாவையர் தோற்றபோது என்ன நடந்தது என்பதை கொஞ்சம் மனக்கண் கொண்டுவந்து பாருங்கள். மாவையரை அறியாமல், எத்தனை அறிக்கை விட்டார், எத்தனை ஊடக சந்திப்புகளை நடத்தினார், முடிவுகளை எடுத்தார், நியமனங்களை செய்தார். இன்று, தான் எவ்வாறு செயற்படுகிறார்? அவர் யாரையும் எதையும் மதிப்பதில்லை, தன்னிச்சைப்படியே நடப்பார். இது ஒன்றும் அவரது சொந்த வீடல்ல, தான் நினைத்தபடி நடந்து கொள்வதற்கு. தன்னாலேயே கட்சி இவ்வளவு பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளது, அதிலும் இவருக்கு மீண்டெழ முடியாத அவமானம், தானே தேடிக்கொண்டது. இருந்தாலும் அதை எப்படி மாற்றி கதைவிடுகிறார் எனப் பாருங்கள். இதெல்லாம் பிறவிக்குணம். இவரை மாற்ற முடியாது, நாம் மாறவேண்டும். இவரை விட்டு கட்சியை மீட்டெடுக்க வேண்டும். இப்படியெல்லாம் அதுவும் அரசியலில் வெட்கக்கேடு. சர்வதேசமே, அட இவரிடமா பேசினோம் நாம். என நினைப்பார்கள் நிஞாய தர்மம் இல்லாதவர்.            
    • தலைப்பின் கேள்வி:  திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?  ஆம். ஆனால், சுத்துமாத்து செய்து... மத்திய குழுவை மிரட்டி, Black mail பண்ணி...  உள்ளே போவார் என்பதே பலரது கருத்து.  அது... சுமந்திரன் பாராளுமன்றம் போகவேண்டும் என்று விரும்பி போட்ட வாக்குகள் அல்ல. அவரின் சுத்துமாத்துக்கு கிடைத்தவை. 😂 வடக்கிற்கு ஒன்று என்றால்... மலையகத்திலும் ஒன்று. 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.