Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • Replies 96
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில

  • மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா

  • வாலி
    வாலி

    இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மத

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல !

img_6139-1-780x951.jpg.webp

இனவாதி என கூறப்பட்ட மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த எமது பா.உ. கள்*

1.ALM.அதாஉல்லா

2.ரிசாட் பதியுதீன்

3.றஊப் ஹகீம் (தபால்)

4.பேரியல் அஸ்றப்

5.AHM.பெளசி

6M.H.முஹம்மட்

*Deputy -பிரதி அமைச்சர்கள்*

1.Basheer

2.Husain bahaila

3.MIM.Hizbullah

4.abdul Majeed

5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி)

6.Faizer Mushthafa

(*மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள்*).

1.AHM.பெளசி

2.றஊப் ஹகீம் (நீதி)

3ALM.அதாஉல்லா

4.ரிசாட் பதியுதீன்

5.Abdul Cader கண்டி

6.Abdul haleem கண்டி

7.Basheer segudawuth

*பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள்*

1.பைசர் முஸ்தபா

2.ஹிஸ்புல்லா

3.அமீர் அலி

4.ஹசன் அலி

5.பசீர் சேகுதாவூத்

சரி இப்ப விசயத்துக்கு வருவோம், இதெல்லாம் பிழ ஆகவே சிஸ்டம் சேஞ்ச் (சிலருக்கு சிஸ்டமே விளங்கல்ல அப்ப எப்புடி சேஞ்ச் விளங்கும் என்பது வேற கத) .நாட்டில் சட்டத்தை இயற்றுவது பாராளுமன்றம்.ஆனால் ஆளுகின்ற *ஒழுங்குவிதிகளை* ( by- laws / regulations ) உருவாக்கும் மிக மிக முக்கியமான இடம் அமைச்சரவையாகும்.அமைச்சரவை முடிவுகள் கூட்டுப்பொறுப்புடையதாகவும்,சில போது இரகசியமானதாகவும் பேணப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

இப்படியான மிக மிக முக்கியமான 21அமைச்சர்கள் நியமனங்களில் ஒண்றுகூட முஸ்லிம் இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல.அனுரவிற்கும் அங்குள்ள அத்தனைபேருக்கும் இது தெரிந்தும் தைரியமாக முஸ்லிம் ஒருவரும் இல்லாமல் நியமணங்களை வழங்கியுள்ளார்கள்.

இதற்கு பிறகு அவர்கள் ஒருவரை நியமிக்கலாம் ஆனால் அதற்கே பலமட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதென்பது நுட்பமான அழுத்தங்களின் ஆரம்பகட்டமாகவே தோன்றுகின்றது.அமைச்சரவையில் முஸ்லிம்களின் விடயங்கள்தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்த ஓரிருவராவது அவசியம் அல்லவா.

தமிழ் சமூகத்தில் இருவரை நியமித்து விட்டு (அவர்களுக்கு அப்படி என்னதகுதியோ தெரியாது,இவ்வாறு சொல்வதனால் சகோதர அந்த இனத்தை கொச்சைப்படுத்தும் அர்த்தமாகாது) இன்னொரு சமூகத்தை அவமானப்படுத்தக்கூடாது.அல்லது முஸ்லிம்கள் இங்கு ஒரு இனமல்ல அவர்கள் சாதாரண ஒரு குழுதான் என உலகிற்குச்சொல்லும் உள்குத்தா என்றும் புரியவில்லை.எமது முந்தைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம்,

அவர்கள் அமைச்சரவையில் எம் சமூகம் சார்ந்த நிலைப்பாட்டை ஆகக்குறைந்தது தெளிவாவது படுத்தின பல சந்தர்ப்பங்கள் உண்டல்லவா (இதில் விமர்சனங்கள் இல்லாமலில்லை) அதேநேரம் தமது அமைச்சுக்கள் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகளைப்பயன்படுத்தி எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சேவைகளையாவது செய்தார்களல்லவா(ஒரேயடியாக நண்றிமறத்தலும் பிழைதானே).

ஒருவருடைய பிரதிநிதித்துவம் என்பது அங்கீகாரம்,கெளரவம் அதனை இல்லாமல் செய்ததை நியாயப்படுத்த நினைக்கும் சில முகநூல் NPP போராளிகள் கொள்ளை அழகு. எந்தகட்சியாக இருந்தாலும் பிழையை பிழை என்று கூறும் மனநிலைப்பக்குவம் நம் அனைவரிடமும் இருக்கவேண்டும்.இவர்களது கொம்மியூனிச சாயல் சிலபோது மதவிடயங்களில் தலையிட்டாலும்,மம மாலிமாவ மாத்தயா எண்டுக்கு நிக்கமுடியாது என்பதும் வெளிப்படையானது.

இலங்கை அரசியலில் வடகிழக்கு தவிர்ந்த அரசியல்வேறு ,வடகிழக்கு அரசியல்வேறு.வடகிழக்கு 30 வருட யுத்தத்தையும்,31 ஆயிரம் பிரச்சினைகளுடனும், இரத்தம் தோய்ந்த வரலாற்றுடனும் நிற்கின்ற பூமியாகும்.

இங்கு மேட்டுக்குடி அரசியலின் இயல்பில் அல்லுண்டு *கண்மூடித்தனமாக* போவதும் சிக்கலாகிவிடலாம்.

*அழகிய வண்ணாத்துப்பூச்சியும் ஒரு புழு தான் சகோதரயா*

ML.M.Jahid- (B.A)

Varipathanchenai

https://madawalaenews.com/8766.html

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?

img_6084-1-780x927.jpg.webp

“அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?”

இன ரீதியான அமைச்சர் நியமனம் மக்கள் ஆணைக்கு முரணானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவையில் முஸ்லீம் அமைச்சர் நியமனம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தனது கருத்தாக கூறியிருந்தார். அவ்வாறெனில் புதிய அமைச்சரவையில் புத்தசாசன அமைச்சு ஒன்று வழங்கப்பட்டுள்ளதே. இதனை எந்த இனவாதமாக நோக்கமுடியாதா?

இது மிகத் தெளிவான அநீதியான மனநிலையாகும் ஒரு தேசியமாக தேசியமக்கள் சக்தி பயணிக்கும் என்ற கூறிய விமல்ரத்நாயக்க அவர்கள் புத்தசாசன அமைச்சை மறந்துவிட்டாரா? அல்லது பெளத்த தேசியமாகத்தான் இந்த நாட்டவர்கள் பயணிக்க வேண்டும் என்று கூறு வருகின்றாரா? என்ற சந்தேகம் எமக்கு எண்ணத் தோன்றுகிறது.

புத்தசாசனத்திற்குப் பதிலாக மத நல்லிணக்க அமைச்சு அல்லது சமய விவகார அமைச்சு என்று பொதுவான அமைச்சு வழங்கப்பட்டிருந்தால் விமல் ரத்நாயக்க அவர்களின் கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவரின் கூற்று பெளத்த இனவாதத்தையே பிரதிபலிக்கின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

இனவாதம் இருக்கக் கூடாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அப்பட்டமான இனவாதத்தை திணிப்பதானது, இனவாதத்திற்கூடாக ஆட்சிபீடமேறியவர்களைவிட மிகவும் மோசமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம்.

பல்லின இலங்கையில் பன்மைக் கலாசாரங்களுடன், சமய நம்பிக்கைகளுடன் பல்லின சமூகமாக வேறுபாட்டில் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் இலங்கையர்கள் என்ற உணர்வுகளுடன் ஒரேநாட்டவர்களாக அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பங்குபற்றுவதுதான் அழகாக இருக்கும்.

இதிலும், பெளத்த தேசியவாத கருத்துக்களை தெளிவாகப் போசி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களில் கூட இவ்வாறு முஸ்லீம்கள் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவிடயமாகும்.

இது போன்ற இனவாத விடயங்கள் system change க்கூடாக நடைபெறலாம் என்பதற்காகத்தான் எந்தவித அரசாங்கத்திற்கும் 2/3 பெரும்பாண்மை சென்றுவிடக் கூடாது என்றும் அவ்வாறான அபரிவிதமான அதிகாரங்கள் ஆட்சியாளர்களை மனிதர்கள் என்ற அடிப்படையில் பிழையான நடைமுறைகளுக்குள் இட்டுச் செல்லும் என்பது இவ்வளவு விரைவாக அமுல்ப்படுத்தப்படும் என்று கூட நாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் கவலை

இவைகளுக்கு மத்தியில் NPP க்கு வெளியிலிருந்து வேறுகட்சிகளுக் கூடாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது பாராளுமன்றத்திலாவது குரலாக இருக்கும் என்ற ஆருதலாவது இருக்கிறது.இவ்வாறான சந்தர்பத்தில் முஸ்லீம்கள் சார்பாக NPP க்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடந்தகால தவறுகளை, பிழைகளைத் திருத்தி இதயசுத்தியுடன் எமது சமூகத்திற்காக துணிவுடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

MLM.சுஹைல்

https://madawalaenews.com/8706.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். 

முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது.  இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀

அருமையான கருத்து வாலி. கொல பாட்ட இவராய் மள்ளி🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

👍🙏❤️

அதனால்த் தான் சண்டை சச்சரவுகளுக்குப் போகாமல் எங்கள் உரிமையில் பிடிவாதம் காட்டாமல் இயலுமானவரை சிங்கள மக்களுடன் ஒத்துப்போவோம் என்கின்றேன், அறமும் தர்மமும் எம்மை எம் அடுத்த சந்ததியை அரணாய்க் காக்கும் 

நியாயமான கருத்தே.

இப்போதைக்கு தேவை முகிழ்திருத்தல் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால் நாம் எமது அடையாளத்தைப்பேணாமல் இதை செய்யமுடியாது.

மொழியை, பாரம்பரிய வாழிடத்தை,  சுயநிர்ணயத்துக்கான அபிலாசையை நம்மில் இருந்து நீக்கிவிட்டு பாத்தால் - நாம் இந்துச்-சிங்களவரே.

200 வருடத்தில் நீர்கொழும்பு, புத்தள, சிலாபத்தின் முன்னாள்-தமிழர் போல் நாமும் ஆகிவிட்டால் - பின்னர் நாம் தமிழர் என்ற ப்ரக்ஞையே நம்மிடம் இராது. அது இல்லாத போது நாம் எப்படி ஒரு தேசிய இனமாக மீள் எழ முடியும்?

இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

தமிழரை விட உயர்ந்த்த பதவிக்கு முசுலிம்  எம்பி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்...உப சபாநாயகர் பதவி... யாழ்முசுலிமின் தலைப்பே  உபசபாநாயகரானார் .முசுலிம்.. இனி நமக்கு பிரச்சனை இல்லை...பார்லிமென்டின் ஆரம்ப உரையிலும் கக்கிம் வளைந்து நெளிந்து பேசின்னார்...இனி அவைக்கு விடிவுகாலம்

இல்லை….

1. ஜனாதிபதி

2. பிரதமர்

3. சபாநாயகர்

4.  பிரதம நீதி அரசர், எதிர்கட்சித்தலைவர்,  கபினெட் அந்தஸ்து மந்திரிகள், மத்திய வங்கி ஆளுனர், பீல்டு மார்ஷல்கள்

5. மாகாண ஆளுனர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் - 

இப்படித்தான் இந்த வரிசை போகும்.

https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_order_of_precedence

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இல்லை….

1. ஜனாதிபதி

2. பிரதமர்

3. சபாநாயகர்

4.  பிரதம நீதி அரசர், எதிர்கட்சித்தலைவர்,  கபினெட் அந்தஸ்து மந்திரிகள், மத்திய வங்கி ஆளுனர், பீல்டு மார்ஷல்கள்

5. மாகாண ஆளுனர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் - 

இப்படித்தான் இந்த வரிசை போகும்.

https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_order_of_precedence

நீங்கள், சொல்லுறதை பார்த்தால்...
உப சபாநாயகர் என்பது,  99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே. animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

முதல் ஆளாக நான் ஆஜர் 🤣.

ஆனால் நான் சொன்னது மேல வசி சொன்னது போலதான்.

நாம் பண்டா, சிறில் மத்யூவை எதிர் கொண்டது போல் நேரடியாக மூர்க்கமாக அவர்கள் ஞானசார, டான் பிரசாத், ரணவக்க, கமன்பில வை எதிர் கொள்ளவில்லை. அவர்கள் ஆட்களை வைத்தே அவர்களை காயடித்தார்கள்.

இனியும் ஜேவிபியை எப்படி கையாள்கிறார்கள் என்பதை இருந்து பாருங்கள்.

நான் அவ்வாறு நினைக்கவில்லை சகோ. தமிழரை வளர விடுவது எவ்வளவு ஆபத்து என்று அடிக்கடி கலவரம் செய்து அடக்கினார்களோ அதை விட பலமடங்கு அதிகமான ஆபத்து முஸ்லிம்களை வளர விடுவது என்பது தான் சிங்களத்தின் தூரப்பார்வை. 

ஆனால் முஸ்லிம் நாடுகளின் அரவணைப்பையும் காத்தபடி இதை அவர்கள் முஸ்லிம்களை அரவணைத்து தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக அழிவுகளை   செய்ய வைத்து தமிழர்களின் எதிரியாக்கி அதே அழிவுகளின் சாட்சியங்களை வைத்து அவர்களில் சிலரை வைத்து பேரழிவை ஏற்படுத்தி (ஏப்ரல் தாக்குதல்) முழுமையாக தனிமைப்படுத்தி எந்த அதிகாரமோ பதவியோ பாதுகாப்போ அற்ற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. 

பார்க்கலாம் சகோ. 

3 hours ago, goshan_che said:

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

🤣...............

பெருந்தோட்டத்துறைக்கும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் - சுந்தரலிங்கம் பிரதீப். அங்கே நிச்சயம் ஒருவர் வேண்டும் தானே..............

திருகோணமலையில் அருண் தான் மிக அதிக வாக்குகள் பெற்றிருந்தார் - 38, 368. 

Trincomalee District

NPP
Arun Hemachandra – 38,368
Roshan Akmeemana – 25,814

SJB
Imran Maharoof – 22,779

ITAK
Shanmugam Kugathasan – 18,470

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

பெருந்தோட்டத்துறைக்கும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் - சுந்தரலிங்கம் பிரதீப். அங்கே நிச்சயம் ஒருவர் வேண்டும் தானே..............

நிச்சயம். 

அருண் தமிழரா? அருண் என சிங்கள பெயர் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நிச்சயம். 

அருண் தமிழரா? அருண் என சிங்கள பெயர் இல்லை. 

தமிழ் என்று தான் விபரங்களில் இருக்கின்றது. ஆனால் சிங்கள மொழியில் கைதேர்ந்த ஜேவிபியினர் போன்றே பேசுகின்றார்.

The winds of change blew even stronger in Trincomalee, where a young Tamil comrade, Arun Hemachandra, an indefatigable JVP volunteer—achieved a historic victory. His triumph was not anchored in ethnic loyalties but was instead secured through the overwhelming support of Sinhala and Muslim voters. Given that the electorate had already elected an ITAK MP from the same district in this election, it was mathematically impossible for the Tamil vote alone to secure another Tamil MP for Trincomalee. It is, therefore, clear that Sinhala and Muslim voters played a decisive role in elevating Arun Hemachandra as their Member of Parliament, heralding a remarkable shift towards inclusive and collaborative politics.

https://slguardian.org/north-and-east-bid-farewell-to-rhetoric-tamil-nationalism/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது.

1 முஸ்லிம்.

1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள்.

ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣.

@MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?

இவர் தமிழர் தான், அதை விட பிரதீப்புக்கும் ஒரு பிரதி அமைச்சர் பதவி.இவர் உண்மையாகவே திறமையானவர். ஆனால் திருகோணமலையில் மூன்று இனத்தவரையும் சமாளிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி 

பிரதி அமைச்சர்களே இல்லை என்று ஒரு செய்தி வந்ததே? இது என்ன குறைநிறப்பா??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதுசரி 

பிரதி அமைச்சர்களே இல்லை என்று ஒரு செய்தி வந்ததே? இது என்ன குறைநிறப்பா??

இராஜாங்க அமைச்சர்கள் தான் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதுசரி 

பிரதி அமைச்சர்களே இல்லை என்று ஒரு செய்தி வந்ததே? இது என்ன குறைநிறப்பா??

🤣...............

இராஜாங்க அமைச்சர்கள் தான் இல்லை என்று சொன்னார்கள், விசுகு ஐயா. பிரதி அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தான் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட இந்த எண்ணிக்கை அதிகமே.

எங்களின் நிர்வாக முறையில் இந்த எண்ணிக்கை வேண்டுமே. ஆட்சிக்கு வெளியில் இருக்கும் போது எதையும் சொல்லலாம், உள்ளே வந்த பின் தான் தெரியும் எவை எவை நடைமுறையில் சாத்தியமானவை என்று.....................

இது ஒரு விதத்தில் குறைநிரப்பும் ஒரு வழியும் தான், ஆனால் இஸ்லாமியர்களின் குறை நிரப்பப்படவில்லை என்றே தெரிகின்றது............ 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாதவூரான் said:

இராஜாங்க அமைச்சர்கள் தான் இல்லை

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

🤣...............

 இஸ்லாமியர்களின் குறை நிரப்பப்படவில்லை என்றே தெரிகின்றது............ 

அவங்களுக்கு நாலு குடுத்தாலும்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாதவூரான் said:

இராஜாங்க அமைச்சர்கள் தான் இல்லை

கபினெட் அந்தஸ்து அமைச்சர்.

இராஜாங்க அமைச்சர்.

பிரதி அமைச்சர்.

இதுதான் ஒழுங்கு.

இராஜாங்க அமைச்சர் பொதுவாக தன் கீழ் வரும் துறைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார். ஆனால், கபினெட்டில் கூட்டு முடிவு எடுப்பதில் பங்கெடுக்க மாட்டார்.

பிரதி அமைச்சர் - ஒரு கபினெட் அமைச்சரின் கீழ் வேலை செய்வார், அவருக்கு கபினெட் அமைச்சரின் கீழ் வரும் துறைகளில் ஒன்று ஒதுக்கப்படும், ஆனால் அத்துறையின் முடிவு எடுக்கும் அதிகாரம் கபினெட் அமைச்சர் வசமே இருக்கும்.

பிகு

வாதாவூரன் உங்களுக்கு சொல்லவில்லை. பொதுவாக விளக்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அவங்களுக்கு நாலு குடுத்தாலும்???🤣

ஒரு வழியாக,

கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஒரு பிரதி அமைச்சர்,

மலையகத்தமிழருக்கு இரு கபினெட் அமைச்சர்கள் + ஒரு பிரதி அமைச்சர்,

முஸ்லிம்களுக்கு ஒரு பிரதி அமைச்சர் + பிரதி சபாநாயகர் கிடைத்துள்ளது.

5 எம்பிகள், 2 தேர்தல் மாவட்டங்களை அள்ளி கொடுத்த வடக்கு மாகாணத்துக்கு - குச் நஹி🤣.

அதுவும் 3 எம்பிகளை அள்ளி கொடுத்து, புதிய ஒன்றுபட்ட இலங்கையை வரவேற்ற யாழ்ப்பாண தமிழருக்கு….

சூப்பிய பனங்கொட்டை கூட இல்லையாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

ஆனால் இஸ்லாமியர்களின் குறை நிரப்பப்படவில்லை என்றே தெரிகின்றது............ 

முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப் படாததற்கு..முகநூலில் ஒரு இஸ்லாமியர்.... 
"கிடைக்க வேண்டியது... கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், 
பிந்தி கிடைத்தால்... அது அரசாங்கம் தமக்கு போடும்.. பிச்சை"  
என்று சொன்னார்.
அவர்களுக்கு இனி கொடுத்தாலும் திருப்திப்  பட மாட்டார்கள் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப் படாததற்கு..முகநூலில் ஒரு இஸ்லாமியர்.... 
"கிடைக்க வேண்டியது... கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், 
பிந்தி கிடைத்தால்... அது அரசாங்கம் தமக்கு போடும்.. பிச்சை"  
என்று சொன்னார்.
அவர்களுக்கு இனி கொடுத்தாலும் திருப்திப்  பட மாட்டார்கள் போலுள்ளது. 😂

முனீருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை 🤣.

இதை விட மன்னார் அண்ட் கம்பெனியில் மனேஜராக போட்டிருக்கலாம்🤣.

ஆனால் அருண் - வெளிநாட்டு துறை பிரதி அமைச்சர். ஹெவியான துறை.

ஒரு தமிழர் - அடுத்து வெளிநாட்டு அமைச்சராக வர கடுமையாக உழைத்து,  இலங்கை மீதான சகல சர்வதேச அளுத்தங்களையும் தவிடு பொடியாக்குவார் என எதிர்பார்கிறார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

அவங்களுக்கு நாலு குடுத்தாலும்???🤣

🤣.................

வன்முறையான வழிகள் ஒன்றையும் நீங்கள் பிரேரிக்கவில்லை தானே, விசுகு ஐயா....................

12 minutes ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப் படாததற்கு..முகநூலில் ஒரு இஸ்லாமியர்.... 
"கிடைக்க வேண்டியது... கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், 
பிந்தி கிடைத்தால்... அது அரசாங்கம் தமக்கு போடும்.. பிச்சை"  
என்று சொன்னார்.
அவர்களுக்கு இனி கொடுத்தாலும் திருப்திப்  பட மாட்டார்கள் போலுள்ளது. 😂

உரிமைக்கும், பிச்சைக்கும் இடையேயான கோடு அப்பப்ப இடம்மாறிக் கொண்டேயிருக்கின்றது, சிறி அண்ணா..................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

முனீருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை 🤣.

இதை விட மன்னார் அண்ட் கம்பெனியில் மனேஜராக போட்டிருக்கலாம்🤣.

ஆனால் அருண் - வெளிநாட்டு துறை பிரதி அமைச்சர். ஹெவியான துறை.

ஒரு தமிழர் - அடுத்து வெளிநாட்டு அமைச்சராக வர கடுமையாக உழைத்து,  இலங்கை மீதான சகல சர்வதேச அளுத்தங்களையும் தவிடு பொடியாக்குவார் என எதிர்பார்கிறார்கள் போலும்.

உண்மைதான்...  வெளி உலக  பிரச்சினைகளை சமாளிக்க,  
அந்த இனத்தவனை போட்டு..  பிரச்சினையை அடங்கச் செய்வதில் சிங்களவன் கெட்டிக்காரன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.