Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

ஈழப்பிரியனின் இருட்டடிக்கும் பெருமாளின் அதட்டலுக்கும் பயந்து விட்டீர்கள் போல. 2006 ம் ஆண்டின் பின்னர் புலிகளும் அதையே செய்தனர்.  புடின் போல தொடர்ச்சியான தவறான அரசியல் இறுதியில் என்ன செய்தும் வென்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனம்,  இவ்வாறான அயோக்கித்தனங்களை செய்ய வைக்கும். 

உங்களின் வழக்கமான புலிக்காய்ச்சல் சந்தடி சாக்கிலை மொட்டை  பொய்யையும் சேர்த்து செருகிவிடுவதுதான் உங்கள் திறமை .

ரசோ வையும் என்னையும்   கோர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன அலாதி இன்பம் ?

  • Replies 71
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    😌................... ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ

  • ரசோதரன்
    ரசோதரன்

    'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களு

  • வாலி
    வாலி

    நீங்கள் பேசக்கூடாத பக்கத்தை புரட்டிவிட்டீர்கள். இனி உங்களுக்கு இருக்கு கச்சேரி!😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

அவர் ‘சிறீலங்கர்களை’ ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்றுதான் கேட்டிருந்தார். இந்த மூவரும் ஈழத்தவர்கள்,தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஈழப்பிரியனின் இருட்டடிக்கும் பெருமாளின் அதட்டலுக்கும் பயந்து விட்டீர்கள் போல. 

உண்மை தான் ஐலண்ட்............. எனக்கு இங்கு களத்தில் சிலரின் மீது ஒரு பயம் இருக்கின்றது. சில திரிகளுக்குள் நான் போவதே இல்லை, மற்றும் சிலவற்றை சில நிலைகளில் தவிர்த்துவிடுகின்றேன். நேற்று வேறு ஒரு திரியில் கருத்துகள் எழுதப்பட்டது போல எழுதும் வல்லமை எனக்கு கிடையாது. 

ஆனால் ஈழப்பிரியன் அண்ணா மீது பயம் துளியளவும் இல்லை................🤣. நாங்கள் இப்பொழுது ஒரே ஊர்க்காரர்களாம்................... 

வன்னியில் நடந்தவை பற்றி  சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். கதைகள், நாவல்கள் வாசித்திருக்கின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து 1989ம் ஆண்டு வெளியேறினேன். அன்றுவரை அங்கு நடந்தவையை வைத்தே நான் அதைச் சொல்லியிருந்தேன்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

இது காணாது  கொஞ்சம் கூட்டி. கொடுங்கள் 🤪

🤣..............

30 minutes ago, Kavi arunasalam said:

அவர் ‘சிறீலங்கர்களை’ ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்றுதான் கேட்டிருந்தார். இந்த மூவரும் ஈழத்தவர்கள்,தமிழர்கள்.

அது முன்னர்...........ஆனால் இப்பொழுது ஒரே ஒரு அடையாளம் தான் நாடு முழுவதும்.................🤣. இந்த புதிய மாற்றத்தை ரஷ்யாவிற்கும் யாராவது சொல்லிவிடவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

அண்ணை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று நினைக்கிறேன்.

 

👍...........

அவர்கள் தான், ஏராளன்.

என்னுடைய தலைக்குள் பதிந்திருந்த பழைய பிழையான தகவலை அழித்துவிட்டேன்........................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

👍...........

அவர்கள் தான், ஏராளன்.

என்னுடைய தலைக்குள் பதிந்திருந்த பழைய பிழையான தகவலை அழித்துவிட்டேன்........................🤣.

நீங்கள் ஈபிடிபி எண்டு எழுதினால் என்ன ஈபிஆர் எல் எப் எண்டு எழுதினா என்ன - அது எல்லாம் தரவு உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்போர் கவலை படும் விடயம் 🤣.

எமக்கு என்ன கவலை எண்டால் - நீங்கள் அவசரத்தில் பெயர் சொல்லாமல் “இயக்கம்கள்” என எழுதிப்போட்டியள்.

அது புலிகளையும், மேலே வில்லவன் எழுதிய 2006 க்கு பின் நடந்த உண்மைகளையும் குறிப்பதாகவும் அமைந்து விடலாம்.

ஆகவேதான் உங்களை மிரட்டும் தொனியில் விளக்கம் கேட்க வேண்டியதாயிற்று.

ஏன் எங்களுக்கு புலிகள் நற்பெயர் மீது, உண்மையை மறைக்கும் அளவுக்கு பற்று என நீங்கள் நினைக்கலாம்.

அப்படி பற்று ஒன்றும் இல்லை - நாம் இலங்கையில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் தீவிர ஆதரவாளர்கள். அவரின் கையாலாகததனத்தை மறைப்பதே எங்கள் பிரதான தொழில். 

அதற்கு நாம் பல முகமூடிகளை போட்டு கொள்வோம் அதில் ஒன்று புலிகளின் மீது அபரிமிதமான பற்று என காட்டி கொள்வது.

55 minutes ago, ரசோதரன் said:

ஆனால் ஈழப்பிரியன் அண்ணா மீது பயம் துளியளவும் இல்லை................🤣. நாங்கள் இப்பொழுது ஒரே ஊர்க்காரர்களாம்................... 

இருபாலையை வடக்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா? அல்லது வல்வெட்டித்துறையை  தெற்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

அதற்கு நாம் பல முகமூடிகளை போட்டு கொள்வோம் அதில் ஒன்று புலிகளின் மீது அபரிமிதமான பற்று என காட்டி கொள்வது.

யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் செத்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடைய எறும்புப்புற்றை விட்டை வெளியே வருகின்றதாக இல்லை..............🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:
11 hours ago, ஏராளன் said:

அண்ணை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று நினைக்கிறேன்.

 

👍...........

அவர்கள் தான், ஏராளன்.

என்னுடைய தலைக்குள் பதிந்திருந்த பழைய பிழையான தகவலை அழித்துவிட்டேன்

பரந்தன் ராஜனின் தலமையில் இயங்கிய

இ என் டி எல் எவ் என்ற இயக்கமும் இதே வேலையை செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் செத்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடைய எறும்புப்புற்றை விட்டை வெளியே வருகின்றதாக இல்லை..............🤣.

யானை காதில் எறும்பு புகுந்தால் என்னாகும் தெரியும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இருபாலையை வடக்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா? அல்லது வல்வெட்டித்துறையை  தெற்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா🤣

🤣.....................

அண்ணன் ஆறு மாதங்கள் நியூ யோர்க், ஆறு மாதங்கள் கலிஃபோர்னியா என்று கிழக்கும், மேற்குமாக நகர்ந்து கொண்டிருக்கின்றார்................

2 minutes ago, goshan_che said:

யானை காதில் எறும்பு புகுந்தால் என்னாகும் தெரியும்தானே.

முடிவெடுத்துவிட்டீர்கள்............. எப்படியும் இன்றைக்கு இந்த எறும்பை ஒரு வழி பண்ணாமல் விடப் போவதில்லை போல.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பரந்தன் ராஜனின் தலமையில் இயங்கிய

இ என் டி எல் எவ் என்ற இயக்கமும் இதே வேலையை செய்தது.

ஓம்…

அப்போ ஈபி ஆர் எல் எப், டெலோ, புளொட்டின் ஒரு பகுதி இந்தியன் ஆமியோடு சேர்ந்தியங்கினர்.

இவர்களை திரீ ஸ்டார் என்றோம்.

இவர்களில் இருந்த உறுப்பினரை கொண்டு அதே சமயத்தில் உருவான அமைப்புத்தான் ஈ என் டி எல் எப்.

யாழில் பல ஊர்களில் ஈ பி தான் ஆதிக்கம், அராஜகம் கூட. ஆனால் டவுனில் ஈ என் டி எல் எவ் வதை முகாம் ஒன்று இருந்தது.

டெலோ மன்னரிலும், வன்னியின் A9 இன் இருமருங்கிலும் ஈ என் டி எல் எவ் ஆதிக்கம். வவுனியாவில் புளொட்.

1988 மாகாண சபை தேர்தலுக்கு பின், இவர்கள் மூவரும் இந்தியா உருவாக்கிய TNA எனும் துணை இராணுவத்துக்கு ஆள் பிடிக்க தொடங்கினார்கள்.

யாழில் ஈபி யிடம் தப்பினால், கிளிநொச்சியில் ஈ என் டி எல் எவ், பஸ்சால் /ரயிலால் இறக்கி கூட்டி போவார்கள், அதிலும் தப்பினால் வவுனியாவில் புளொட் இறக்கும்.

பணம் இருந்தோர் பலாலி-ரத்மலானை என ஓடி தப்பினார்கள்.

கிழக்கு மாகாணத்திலும் இதே போல் ஒரு நிலைதான். படுவான்கரை பக்கம் போய் கேட்டு கேள்வி இன்றி அள்ளிப்போனார்கள்.

———————

அது புலிகள் திரும்பி வரமாட்டார்களா என மக்கள் தவமிருந்த காலம்.

இப்படி ஒரு ஆள் பிடிப்பை புலிகளும் செய்வார்கள் என நான் உட்பட பலர் கனவிலும் நினைத்திராத நாட்கள் அவை.

நான் ஊரில் இருக்கும் வரை அப்படி ஏதுவும் நடந்ததாக நான் அறியவில்லை.

ஆனால் பாஸ் நடைமுறை 1990 இல் அமலுக்கு வந்தது. 

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் கருணா மட்டகளப்பில் வலுக்கட்டாயமாக பிடிக்கிறார் என கதை வந்த போது, முதலில் நம்ப கடினமாக இருந்தது.

பின்னர் தலைவருக்கு தெரியாமல் பிடிக்கிறார் என நம்மை நாமே தேத்தும் நிலை வந்தது.

2006 இன் பின் - எனது தம்பி முறையானவர்கள், ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிக்க, முல்லைதீவில் இருந்து நாயாற்று, மணலாறு காட்டு வழியாக புல்மோடை போய் அங்கிருந்து திருமலை நகரம் போனபோது, அதில் ஒரு குடும்பத்தில், மகன் திரும்பி வரும் வரை பெற்றாரில் ஒருவரை இயக்கம் கூட்டிப்போன போது - அதற்கு மேலும் நடக்கும் உண்மையை மறுக்கும் நிலை அற்றுப்போனது.

இது யார் மீதான குற்றப்பத்திரிக்கையும் அல்ல.

ஈபி யின் ஆட்சேர்ப்பு அவர்கள் இருப்பை பேண, புலிகளின் ஆட்சேர்ப்பு இனத்தின் இருப்பை பேண.

இது மிக முக்கியமான வேறுபாடு.

ஆனால் கட்டாய ஆட்சேர்புக்கு உள்ளானோருக்கு அதன் நோக்கம் இரெண்டாம் பட்சமாகவே இருக்கும். 

ஒரு மண்மீட்பு யுத்தம் நிகழும் போது - அதன் ஒப்பற்ற தலைமைக்கு ஆள் சேர்ப்பதில் பிரச்சனையே வந்திருக்க கூடாது.

அப்படி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை வரும் அளவுக்கு நிலமை மோசம் அடைய இரெண்டு காரணங்களை நான் காண்கிறேன்.

1. ஓடி வந்த, இயக்கத்துக்கு போகாத என் போன்ற( இங்கே எழுதும் அனைவரினதும், அப்போ சிறுவாராக இருந்தோர் தவிர) சுய நலன்

2. கட்டாய ஆட் சேர்பின் மூலம் ஒரு விடுதலை போரை வெல்லலாம் என நினைத்த இயக்கத்தின் நிலைப்பாடு

இனி இதை கதைத்து எந்த பலனுமில்லை.

ஆனால் இனியும் போத்து மூடுவதிலும் ஒரு பலனுமில்லை என்ற வகையில் - என் வாழ்ந்த அனுபவமாக இதை எழுதுகிறேன். 

அவ்வளவுதான்.

 

 

4 minutes ago, goshan_che said:

ஈபி யின் ஆட்சேர்ப்பு அவர்கள் இருப்பை பேண, புலிகளின் ஆட்சேர்ப்பு இனத்தின் இருப்பை பேண.

இது மிக முக்கியமான வேறுபாடு.

இரு பக்க பிரச்சாரங்களுக்கு அப்பால் வரலாறு இந்த உண்மையை எழுதும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரஸ்யாவின் ஆட்சேர்புக்கும், உக்ரேனின் ஆட்சேர்புக்கும் உள்ள வித்தியாசம் போன்றது இது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

👍...........

அவர்கள் தான், ஏராளன்.

என்னுடைய தலைக்குள் பதிந்திருந்த பழைய பிழையான தகவலை அழித்துவிட்டேன்........................🤣.

ரொம்ப குள்ளநரி சார் நீங்க 😂 

எழுதி மூன்று பக்கங்கள் தள்ளி விட்டு....?🥲

அழித்தேன் நினைவுகளை???

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ரொம்ப குள்ளநரி சார் நீங்க 😂 

இதைப் பார்த்தால் ரணில் கோபப்படப் போகின்றார், விசுகு ஐயா..................🤣.

வசனங்களின் முன்னால் எப்போதும் ஒரு பொருள் இருக்கும், சில வசனங்களின் பின்னாலும் ஒரு பொருள் இருக்கும்...............😀.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

இதைப் பார்த்தால் ரணில் கோபப்படப் போகின்றார், விசுகு ஐயா..................🤣.

வசனங்களின் முன்னால் எப்போதும் ஒரு பொருள் இருக்கும், சில வசனங்களின் பின்னாலும் ஒரு பொருள் இருக்கும்...............😀.

 

இந்த முன்னால் பின்னால் உள்ள வசனங்களை புரிந்து கொள்தல் தான் எமது பலமும் பலவீனமும் ..👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அது முன்னர்...........ஆனால் இப்பொழுது ஒரே ஒரு அடையாளம் தான் நாடு முழுவதும்.................🤣. இந்த புதிய மாற்றத்தை ரஷ்யாவிற்கும் யாராவது சொல்லிவிடவேண்டும். 

🤣

அவர் பழைய நினைவில் இன்னும் இருக்கின்றார்
அனுரகுமார திசநாயக்க தலைமையில் தமிழ் தேசியவாதிகள் பலரே ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறி நிற்பதை விளங்கி கொள்ள வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

🤣

அவர் பழைய நினைவில் இன்னும் இருக்கின்றார்
அனுரகுமார திசநாயக்க தலைமையில் தமிழ் தேசியவாதிகள் பலரே ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறி நிற்பதை விளங்கி கொள்ள வேண்டும்

 

அனுரவை ஆதரிப்பவர்களை   ஏன்  திட்டிக்கொண்டு. இருக்கிறீர்கள்???    இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு சிங்களத் தலைவர்களுடன். பேசி தான் பெற முடியும் ??? இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு 

ஆனால் தாயக மக்களுக்கு அது நன்றாகவே விளங்கியுள்ளது    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு 

இந்த ஒரு சின்ன விடயம் 🤣

அய்யா நீங்கள் பலர் வெளுத்து வாங்கிவிட்டு பொங்கி எழுந்துவிட்டு  இந்த வருடம் செம்ரெம்பரில் இருந்து அனுரகுமார திசநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறிவிட்ட நிலையில் கவி அருணாசலம் அய்யா ரஞ்சித் அண்ணா  போன்றவர்கள் எப்படி சுயமாக இருக்கிர்கள் என்ற அவர்கள் மீதான பிரமிப்பு தான்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை

26 NOV, 2024 | 09:49 PM
image

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (26) ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/199784

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த ஒரு சின்ன விடயம் 🤣

அய்யா நீங்கள் பலர் வெளுத்து வாங்கிவிட்டு பொங்கி எழுந்துவிட்டு  இந்த வருடம் செம்ரெம்பரில் இருந்து அனுரகுமார திசநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறிவிட்ட நிலையில் கவி அருணாசலம் அய்யா ரஞ்சித் அண்ணா  போன்றவர்கள் எப்படி சுயமாக இருக்கிர்கள் என்ற அவர்கள் மீதான பிரமிப்பு தான்

 

இல்லையே ....அது உங்கள் கற்பனை 

உங்களது விளங்கும். தன்மையிலுள்ள. குறைபாடு 

நல்ல செயல்களை ஆதரிக்கலாம் ஆதரிக்கிறோம். அனரவின். எல்லா செயல்களையும். ஆதரிக்கவில்லை அதேபோல 

எல்லா செயல்களையும்கூட.  எதிர்க்கவில்லை எப்படி எதிர்க்க முடியும்???? 

ரஞ்சித் அல்லது கவி அருணசாலம்.  சிங்களவனுடன்  பேசாமல் தீர்வு   தமிழர்களுக்கு இலங்கையில் தீர்வு பெறலாம் என்று கூறியுள்ளார்களா??? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

எப்படி எதிர்க்க முடியும்????

அப்படி எதிர்ப்பது ஜேவிபியின் கட்சி கட்டுபாட்டை மீறும் செயலாகும் நீங்கள் ஏன் எதிர்க்க போகின்றீர்கள்   அரசியல்வாதிகள் போன்ற உங்கள் மோசமான  சந்தர்பவாதத்தை சுட்டி காட்டினேன் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி எதிர்ப்பது ஜேவிபியின் கட்சி கட்டுபாட்டை மீறும் செயலாகும் நீங்கள் ஏன் எதிர்க்க போகின்றீர்கள்   அரசியல்வாதிகள் போன்ற உங்கள் மோசமான  சந்தர்பவாதத்தை சுட்டி காட்டினேன் அவ்வளவே.

இது சந்தர்ப்பவாதமில்லை  ....எப்படி சந்தர்ப்பவாதமாகும்.?? 

தந்தை செல்வா. இரண்டு தடவையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் எழுதினார்    அதன் பின்னும்  அமிர்தலிங்கம். ஏன பேச்சுவார்த்தை நடத்தினார்  ??   எதிர்கவில்லை  காரணம் என்ன??   தலைவர் பிரபாகரன் பல தடவையாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் 

ஏன். பேசினார்??   சம்பநதனும். பேசினார்  தொடர்ந்து சுமத்திரனும். பேசினார்  இல்லையா???   

தொடர்ந்து காரணம் எதுவுமின்றி எதிர்ப்பது ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு தீர்வை பெற்று தாராது  

ஆகவே   நல்ல விடயங்களை ஆதரிக்கலாம் பேச்சுவார்த்தையும் 

நடத்தலாம்  மேலே உள்ள அனைவரும் சந்தர்ப்பவாதிகளா???   

அண்ணை  உங்களுக்கு விளங்கினால் மட்டுமே போதாது எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக. சொல்லி தாருங்கள்”    🙏

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்களை இலங்கைக்கு அழைப்பதற்கு உதவுங்கள் - ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் மீண்டும் கோரிக்கை

21 DEC, 2024 | 06:08 PM
image

ஆர்.ராம்

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.

பெல்ஜியம், ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தை செலுத்தி இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாங்கள் முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம். தற்போது ரஷ்யாவின் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் போர் நடைபெறும் எல்லைக்கு அருகில் தான் உள்ளோம். எம்முடன் பாலச்சந்திரன் என்பவரும் உள்ளார்.

ஒவ்வொரு நாளும் போர் உக்கிரமாக இடம்பெறுகிறது. நாங்கள் இருக்கின்ற இடத்துக்கு அருகில் ஆட்லறி எறிகணைகளும், ட்ரோன் மூலமான தாக்குதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் தற்போதும் இருக்கிறோம்.

எங்களுடன் இருந்த 19 இலங்கையர்களில் 3 பேர் இறந்துவிட்டார்கள். ஒருவரைக் காணவில்லை. அவர்களில் பலர் இலங்கை இராணுவம், கடற்படை போன்றவற்றில் இருந்தவர்கள். அவர்கள் கூட அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். எங்களால் போர் எல்லையில் தொடர்ந்தும் இருக்க முடியாது.

எமது உயிருக்கு உத்தரவாதமில்லை. தயவு செய்து எம்மை மீண்டும் இலங்கைக்கே செல்வதற்கு யாராவது நடவடிக்கைகளை எடுங்கள். நாங்கள் மிகத் தாழ்மையாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். எங்களை உறவுகளுடன் இணைத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, குறித்த இளைஞர்களின் உறவினர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு மேற்படி விடயம் சம்பந்தமாக எடுத்துரைத்தபோது, ரஷ்யா இலங்கையில் இருந்து எவரையும் போருக்காக இணைத்துக்கொள்ளவில்லை என்றே பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிவிவகார அமைச்சிடம் இந்த இளைஞர்களின் விடயம் சம்பந்தமாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று வினவி வாரமொன்று கடந்துள்ளபோதும் இதுவரையில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/201836

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.