Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது எனவும், 13ஆவது திருத்தம் அவசியம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா
வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410848

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோமியம் குடிக்கத் தொடங்கி 40 வருடங்களாகின்றன. இடையில் நிறுத்தவா முடியும்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

கிளிப்பிள்ளை மாதிரி... சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கின்றார்.
வேறு மாதிரி சிந்திக்கும்  திறன் இருக்கவும் வேணுமே... 
தலையில், உள்ள கொள்வனவு அம்புட்டுத்தான்.

இதுவரை... இவர்கள் இந்தியாவை நம்பி, 
தமிழர்களுக்கு இந்தியாவால் கிடைத்த நன்மை ஒன்றை சொல்வாரா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

நீங்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தியாவை இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது என்பதல்ல பகைத்துக்கொள்ளவே முடியாது.

ஒருதடவை ஜேஆர் இந்தியாவை பகைத்துக்கொள்ளபோய் உள்நாடும் உயிர்களும் சிதைந்தது வரலாறு, பின்னர் இந்தியாவையே மிரட்டி பார்க்க ஆசைப்பட்ட ஜேஆரை பவ்வியமா ஒரு கதிரையில் இருக்கப்பண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஜேஆருக்கு சுளுக்கெடுத்தது வடக்கத்தைய தேசம்.

பின்பு அதே ஜேஆர் இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்களை சுளுக்கெடுத்தான் என்றாலும், சிங்கள தேசத்தின் அரசியலை  இனி எக்காலமும் இந்திய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக மேற்குலகம் சார்ந்து இயங்காதபடி தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தது என்பதே வரலாறு.

சிங்களவர்களில் 100%மானவர்களுக்கு இந்திய படங்கள் பிடிக்கும், உடைகள் பிடிக்கும், உணவுகள் பிடிக்கும் ஆனால் இந்தியாவின் இலங்கைமீதான அரசியல் அழுத்தம் பிடிக்காது  பிடிக்காது,

அப்படியிருந்தும்  சிங்களவர்களும் பிக்குகளும்   தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை இந்திய அரசை புறக்கணிக்கும்படி பகிரங்கமாக கோருவதில்லை,  அது நடைமுறை சாத்தியமற்றதொன்று என்பது அவர்களுக்கு தெரியும்,

அப்படி முயற்சித்தால் மறுபடியும் இந்திய றோவால் இலங்கையில் குண்டுகள் வைக்க முடியும், இலங்கை பொருளாதாரத்தை முடக்க முடியும், கடன்களை வைத்தே இலங்கையை இறுக்க முடியும், மறுபடியும் தமிழர்களுக்காக கவலைப்பட்டு ஐநாவில் சிக்க வைக்க முடியும்

அடைக்கலநாதன் அறியவேண்டியது  இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ளாது, அது எப்போதும் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில்தான் வைக்கும்,

இந்தியாவும் இலங்கைகூட இருக்கும், ஆனால் அது ஒருபோதும் தமிழர்கள்கூட  துணை நிக்காது, சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதுவும் செய்து தராது.

பெயருக்குத்தான் இலங்கை சுதந்திரநாடு ஆனால் , துறைமுகங்கள், விமான போக்குவரத்துக்கள், பாதுகாப்பு எல்லைகோடுகள், தண்டவாளங்களிலிருந்து சாலைகள் அமைப்பு, உணவிலிருந்து ஓடும் பஸ் ஆட்டோ இறக்குமதியிலிருந்து உள்நாட்டு கட்டுமானங்கள்,பங்கு சந்தைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், போக்குவரத்து, பொருளாதாரம் சந்தைப்படுத்தல் என்று இந்தியாவின் மறைமுக கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுதான் இலங்கை, அதனால்தான் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் பயணம் இந்தியாவுக்கே. 

உலகில் எந்தநாட்டுக்கும் இல்லாத வரம் ஒன்று இலங்கைக்கு உண்டு, அது ,

இலங்கையின் அனைத்து நட்புநாடுகளும் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள், ஆனால் அத்தனை நாடுகளும் இலங்கைக்கு நண்பர்கள்.

ஆக அடைக்கலநாதன் செய்ய வேண்டியது இலங்கை இந்தியாவுடன் நிக்கவேண்டும் என்று கூறுவதல்ல, இந்தியா சிங்களவனை மீறி தமிழர்கள்கூட நிக்குமா என்பதை அடைக்கலநாதனுக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும், முடியுமா?

இலங்கை இந்தியாவை பகைக்ககூடாது என்று சொல்லும் இவர் இந்தியா தமிழர்களை பகைக்காது இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

காலம் காலமாக சிங்களவனுக்கு அட்வைஸ் பண்ணூவதுபோல் பாவனை காட்டி  தமிழனை ஏமாற்றும் அரசியல் தொழிலை இவர்கள் ஒருபோதும் கைவிடபோவதில்லை என்பதே தொடர்கதை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இதுவரை... இவர்கள் இந்தியாவை நம்பி, 
தமிழர்களுக்கு இந்தியாவால் கிடைத்த நன்மை ஒன்றை சொல்வாரா.

அங்கே டாஸ்மாக் இங்கே சாராய கடை 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

ர‌க‌சிய‌ டீலிங் இருக்க‌ கூடும்....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, valavan said:

நீங்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தியாவை இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது என்பதல்ல பகைத்துக்கொள்ளவே முடியாது.

ஒருதடவை ஜேஆர் இந்தியாவை பகைத்துக்கொள்ளபோய் உள்நாடும் உயிர்களும் சிதைந்தது வரலாறு, பின்னர் இந்தியாவையே மிரட்டி பார்க்க ஆசைப்பட்ட ஜேஆரை பவ்வியமா ஒரு கதிரையில் இருக்கப்பண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஜேஆருக்கு சுளுக்கெடுத்தது வடக்கத்தைய தேசம்.

பின்பு அதே ஜேஆர் இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்களை சுளுக்கெடுத்தான் என்றாலும், சிங்கள தேசத்தின் அரசியலை  இனி எக்காலமும் இந்திய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக மேற்குலகம் சார்ந்து இயங்காதபடி தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தது என்பதே வரலாறு.

சிங்களவர்களில் 100%மானவர்களுக்கு இந்திய படங்கள் பிடிக்கும், உடைகள் பிடிக்கும், உணவுகள் பிடிக்கும் ஆனால் இந்தியாவின் இலங்கைமீதான அரசியல் அழுத்தம் பிடிக்காது  பிடிக்காது,

அப்படியிருந்தும்  சிங்களவர்களும் பிக்குகளும்   தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை இந்திய அரசை புறக்கணிக்கும்படி பகிரங்கமாக கோருவதில்லை,  அது நடைமுறை சாத்தியமற்றதொன்று என்பது அவர்களுக்கு தெரியும்,

அப்படி முயற்சித்தால் மறுபடியும் இந்திய றோவால் இலங்கையில் குண்டுகள் வைக்க முடியும், இலங்கை பொருளாதாரத்தை முடக்க முடியும், கடன்களை வைத்தே இலங்கையை இறுக்க முடியும், மறுபடியும் தமிழர்களுக்காக கவலைப்பட்டு ஐநாவில் சிக்க வைக்க முடியும்

அடைக்கலநாதன் அறியவேண்டியது  இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ளாது, அது எப்போதும் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில்தான் வைக்கும்,

இந்தியாவும் இலங்கைகூட இருக்கும், ஆனால் அது ஒருபோதும் தமிழர்கள்கூட  துணை நிக்காது, சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதுவும் செய்து தராது.

பெயருக்குத்தான் இலங்கை சுதந்திரநாடு ஆனால் , துறைமுகங்கள், விமான போக்குவரத்துக்கள், பாதுகாப்பு எல்லைகோடுகள், தண்டவாளங்களிலிருந்து சாலைகள் அமைப்பு, உணவிலிருந்து ஓடும் பஸ் ஆட்டோ இறக்குமதியிலிருந்து உள்நாட்டு கட்டுமானங்கள்,பங்கு சந்தைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், போக்குவரத்து, பொருளாதாரம் சந்தைப்படுத்தல் என்று இந்தியாவின் மறைமுக கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுதான் இலங்கை, அதனால்தான் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் பயணம் இந்தியாவுக்கே. 

உலகில் எந்தநாட்டுக்கும் இல்லாத வரம் ஒன்று இலங்கைக்கு உண்டு, அது ,

இலங்கையின் அனைத்து நட்புநாடுகளும் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள், ஆனால் அத்தனை நாடுகளும் இலங்கைக்கு நண்பர்கள்.

ஆக அடைக்கலநாதன் செய்ய வேண்டியது இலங்கை இந்தியாவுடன் நிக்கவேண்டும் என்று கூறுவதல்ல, இந்தியா சிங்களவனை மீறி தமிழர்கள்கூட நிக்குமா என்பதை அடைக்கலநாதனுக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும், முடியுமா?

இலங்கை இந்தியாவை பகைக்ககூடாது என்று சொல்லும் இவர் இந்தியா தமிழர்களை பகைக்காது இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

காலம் காலமாக சிங்களவனுக்கு அட்வைஸ் பண்ணூவதுபோல் பாவனை காட்டி  தமிழனை ஏமாற்றும் அரசியல் தொழிலை இவர்கள் ஒருபோதும் கைவிடபோவதில்லை என்பதே தொடர்கதை.

ச‌ரி அண்ணா அர‌சிய‌லை த‌ள்ளி வைப்போம்

 

இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்சு 75 ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ அந்த‌ நாடு என்ன‌ முன்னேற்ற‌தை க‌ண்ட‌து கூட்டி க‌ழிச்சு பார்த்தால் பூச்சிய‌ம்

விளையாட்டை எடுத்து கொண்டால் ப‌ல‌ விளையாட்டுக்க‌ளில் இந்திய‌ர்க‌ள் பின்ன‌டைவு

உல‌கில் அதிக‌ ம‌க்க‌ள் வாழும் நாடு இந்தியா நூற்றுக்கு 40 வித‌ ம‌க்க‌ள் தான் ப‌ண‌க்கார‌ர் 60வித‌ ம‌க்க‌ள் அன்று கூலி வேலைக்கு போனால் தான் அந்த‌ அன்று அவையால் சாப்பிட‌ முடியும்

இந்தியாவில் த‌மிழ் நாடு தானாம் முன்னேறின‌ மானில‌ம் 

த‌மிழ் நாட்டிலையே ப‌ல‌ ஆயிர‌ம் குடும்ப‌ங்க‌ளுக்கு இருக்க‌ வீடு இல்லை ம‌ர‌த்த‌டியில் ச‌மைத்து சாப்பிட்டு அதே இட‌த்தில் தூங்கின‌ம்...............................

வ‌ட‌ நாட்டில் க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லாம‌ ரெயில் த‌ண்ட‌வாள‌த்தில் க‌க்கா இருக்குதுக‌ள்..........................

சொந்த‌ நாட்டுக்கு சூனிய‌ம் வைத்து விட்டு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு காசை அள்ளி கொடுப்ப‌தில் என்ன‌ பெருமை இருக்கு............................

இந்தியா என்ர‌ போலி அகிம்சை முக‌மூடி போட்ட‌ நாடு இருக்கும் வ‌ரை அய‌ல் நாடுக‌ளும் ச‌ரி இந்தியாவும் சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ அடைய‌ முடியாது........................

சுத‌ந்திர‌ம் அடைந்த‌ இந்தியாவில் எத்த‌னையோ மானில‌ங்க‌ளில் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு இன்னும் மின்சார‌ம் போய் சேர‌ல‌

இதில‌ வ‌ல்ல‌ர‌சு விம்ப‌ம் வேற‌

எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இர‌வு உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் என்று அவ‌ர்க‌ளின் தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்யின‌ம் உண‌வு கொடுக்க‌ ம‌க்க‌ளே உத‌வுங்க‌ள் என்று.......................

பிள்ளைக‌ளுக்கு போலி தேச‌ ப‌ற்றை ஊட்டி அதுங்க‌ளின் க‌ன‌வுக‌ளை சிதைப்ப‌து தான் இந்தியா..................

பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாது

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு ஜ‌ரோப்பாவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா தெரியும் திராவிட‌ பூசாண்டிக்குள்ளையும் இந்திய‌ பூச்சாண்டிக்குள்ளையும் இருந்து தாம் இழ‌ந்த‌வை ப‌ல‌தென‌........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடுத்த காசுக்கு என்னமா கூவுறான்பார்  என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, RishiK said:

குடுத்த காசுக்கு என்னமா கூவுறான்பார்  என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

உண்மையில் எழுந்தமானமாக இவ்வாறு எமது பிரதிநிதிகளை குற்றம் சொல்லி சொல்லி தான் இன்று எல்லோரையும் கள்ளராக்கி இன்றைய இழிநிலைக்கு தமிழினம் வந்து நிற்கிறது. உண்மையில் அவர் இந்தியாவிலிருந்து கையூட்டு பெற்றதாக ஆதாரங்கள் உள்ளனவா???



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣. ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣
    • 🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன் என்றார்கள். ஆனால் ஆளைப் பார்த்தால், ஆளின் தோற்றம் அன்னதான மடத்திலேயே படுத்திருந்து சாப்பிடுகிறவர் மாதிரி இருந்தார். இதென்னடா....... இந்தக் காலத்தில் எல்லா வீரர்களும் நல்ல ஃபிட்டா இருப்பார்கள் என்று சொன்னார்களே, இந்த மனுஷன் ஏன் இப்படி (என்னை விடக் கேவலமாக............🤣)  இருக்குதே என்றுதான் நினைத்தேன்..................
    • 🤣................ ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்.............. தேர்தலிற்கு முன் நிலாம்டீன் இவர் பார்க்க விஜய் போலவே இருக்கின்றார் என்றும், அது தான் கூட்டம் வடக்கிலும், கிழக்கிலும் அள்ளுது என்றும் சொல்லியிருந்தார். ஆனால், வாக்குகள் என்னவோ சஜித்திற்குத் தான் என்ற மாதிரியும் சொன்னார். கடைசியில் சனம் அம்சமான ஆளுக்கே வாக்குகளையும் அள்ளிப் போட்டுவிட்டது.................... படித்தவர்கள் கூட்டல்,  கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்று பலவற்றையும் வெறும் கணக்குகளாக மட்டுமே பல நேரங்களில் பார்த்துவிடுவார்கள். முன்பொரு காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தண்ணீர்ப் பிரச்சனைக்கு தீர்வாக ஒரு கணக்கு சொன்னது போல.......... நடைமுறைச் சிக்கல்களையும், மனிதர்களின் உள்ளங்களையும் தோழர்கள் புரிந்து நடந்து கொண்டால் முழு நாட்டிற்குமே நல்லது. முதலாவதாக டட்லி போன்ற அரிசி மாஃபியாக்களை சரியாகக் கையாள வேண்டும். இன்றைக்கு இது தான் அங்கு முக்கிய பிரச்சனை. சந்தையில் இரண்டு கிழமைகளுக்கு போதுமான அரிசியே இருக்கின்றது என்கின்றார்கள்................       
    • தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்: அருட்தந்தை மா.சத்திவேல் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.  அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும்.  தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். விரிவடைய வேண்டும்.  புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம்.  தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்.  சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம். உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம்.  கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர்.  மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது. தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே. தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர், படைத்தளங்களை கூட்டுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர், கைதும் செய்கின்றனர்). இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல.  இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை. தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம். மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.     https://oruvan.com/sri-lanka/2024/12/04/national-peoples-power-will-intensify-the-political-war-against-tamils
    • டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம் December 4, 2024  05:53 pm 5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது. குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 5.7 பில்லியன் ரூபா கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், மேலும் வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://tamil.adaderana.lk/news.php?nid=196839  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.