Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது எனவும், 13ஆவது திருத்தம் அவசியம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா
வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410848

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோமியம் குடிக்கத் தொடங்கி 40 வருடங்களாகின்றன. இடையில் நிறுத்தவா முடியும்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

கிளிப்பிள்ளை மாதிரி... சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கின்றார்.
வேறு மாதிரி சிந்திக்கும்  திறன் இருக்கவும் வேணுமே... 
தலையில், உள்ள கொள்வனவு அம்புட்டுத்தான்.

இதுவரை... இவர்கள் இந்தியாவை நம்பி, 
தமிழர்களுக்கு இந்தியாவால் கிடைத்த நன்மை ஒன்றை சொல்வாரா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்.

நீங்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தியாவை இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது என்பதல்ல பகைத்துக்கொள்ளவே முடியாது.

ஒருதடவை ஜேஆர் இந்தியாவை பகைத்துக்கொள்ளபோய் உள்நாடும் உயிர்களும் சிதைந்தது வரலாறு, பின்னர் இந்தியாவையே மிரட்டி பார்க்க ஆசைப்பட்ட ஜேஆரை பவ்வியமா ஒரு கதிரையில் இருக்கப்பண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஜேஆருக்கு சுளுக்கெடுத்தது வடக்கத்தைய தேசம்.

பின்பு அதே ஜேஆர் இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்களை சுளுக்கெடுத்தான் என்றாலும், சிங்கள தேசத்தின் அரசியலை  இனி எக்காலமும் இந்திய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக மேற்குலகம் சார்ந்து இயங்காதபடி தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தது என்பதே வரலாறு.

சிங்களவர்களில் 100%மானவர்களுக்கு இந்திய படங்கள் பிடிக்கும், உடைகள் பிடிக்கும், உணவுகள் பிடிக்கும் ஆனால் இந்தியாவின் இலங்கைமீதான அரசியல் அழுத்தம் பிடிக்காது  பிடிக்காது,

அப்படியிருந்தும்  சிங்களவர்களும் பிக்குகளும்   தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை இந்திய அரசை புறக்கணிக்கும்படி பகிரங்கமாக கோருவதில்லை,  அது நடைமுறை சாத்தியமற்றதொன்று என்பது அவர்களுக்கு தெரியும்,

அப்படி முயற்சித்தால் மறுபடியும் இந்திய றோவால் இலங்கையில் குண்டுகள் வைக்க முடியும், இலங்கை பொருளாதாரத்தை முடக்க முடியும், கடன்களை வைத்தே இலங்கையை இறுக்க முடியும், மறுபடியும் தமிழர்களுக்காக கவலைப்பட்டு ஐநாவில் சிக்க வைக்க முடியும்

அடைக்கலநாதன் அறியவேண்டியது  இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ளாது, அது எப்போதும் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில்தான் வைக்கும்,

இந்தியாவும் இலங்கைகூட இருக்கும், ஆனால் அது ஒருபோதும் தமிழர்கள்கூட  துணை நிக்காது, சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதுவும் செய்து தராது.

பெயருக்குத்தான் இலங்கை சுதந்திரநாடு ஆனால் , துறைமுகங்கள், விமான போக்குவரத்துக்கள், பாதுகாப்பு எல்லைகோடுகள், தண்டவாளங்களிலிருந்து சாலைகள் அமைப்பு, உணவிலிருந்து ஓடும் பஸ் ஆட்டோ இறக்குமதியிலிருந்து உள்நாட்டு கட்டுமானங்கள்,பங்கு சந்தைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், போக்குவரத்து, பொருளாதாரம் சந்தைப்படுத்தல் என்று இந்தியாவின் மறைமுக கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுதான் இலங்கை, அதனால்தான் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் பயணம் இந்தியாவுக்கே. 

உலகில் எந்தநாட்டுக்கும் இல்லாத வரம் ஒன்று இலங்கைக்கு உண்டு, அது ,

இலங்கையின் அனைத்து நட்புநாடுகளும் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள், ஆனால் அத்தனை நாடுகளும் இலங்கைக்கு நண்பர்கள்.

ஆக அடைக்கலநாதன் செய்ய வேண்டியது இலங்கை இந்தியாவுடன் நிக்கவேண்டும் என்று கூறுவதல்ல, இந்தியா சிங்களவனை மீறி தமிழர்கள்கூட நிக்குமா என்பதை அடைக்கலநாதனுக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும், முடியுமா?

இலங்கை இந்தியாவை பகைக்ககூடாது என்று சொல்லும் இவர் இந்தியா தமிழர்களை பகைக்காது இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

காலம் காலமாக சிங்களவனுக்கு அட்வைஸ் பண்ணூவதுபோல் பாவனை காட்டி  தமிழனை ஏமாற்றும் அரசியல் தொழிலை இவர்கள் ஒருபோதும் கைவிடபோவதில்லை என்பதே தொடர்கதை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இதுவரை... இவர்கள் இந்தியாவை நம்பி, 
தமிழர்களுக்கு இந்தியாவால் கிடைத்த நன்மை ஒன்றை சொல்வாரா.

அங்கே டாஸ்மாக் இங்கே சாராய கடை 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎

ர‌க‌சிய‌ டீலிங் இருக்க‌ கூடும்....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, valavan said:

நீங்கள் சொல்லவில்லையென்றாலும் இந்தியாவை இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது என்பதல்ல பகைத்துக்கொள்ளவே முடியாது.

ஒருதடவை ஜேஆர் இந்தியாவை பகைத்துக்கொள்ளபோய் உள்நாடும் உயிர்களும் சிதைந்தது வரலாறு, பின்னர் இந்தியாவையே மிரட்டி பார்க்க ஆசைப்பட்ட ஜேஆரை பவ்வியமா ஒரு கதிரையில் இருக்கப்பண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஜேஆருக்கு சுளுக்கெடுத்தது வடக்கத்தைய தேசம்.

பின்பு அதே ஜேஆர் இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்களை சுளுக்கெடுத்தான் என்றாலும், சிங்கள தேசத்தின் அரசியலை  இனி எக்காலமும் இந்திய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக மேற்குலகம் சார்ந்து இயங்காதபடி தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தது என்பதே வரலாறு.

சிங்களவர்களில் 100%மானவர்களுக்கு இந்திய படங்கள் பிடிக்கும், உடைகள் பிடிக்கும், உணவுகள் பிடிக்கும் ஆனால் இந்தியாவின் இலங்கைமீதான அரசியல் அழுத்தம் பிடிக்காது  பிடிக்காது,

அப்படியிருந்தும்  சிங்களவர்களும் பிக்குகளும்   தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை இந்திய அரசை புறக்கணிக்கும்படி பகிரங்கமாக கோருவதில்லை,  அது நடைமுறை சாத்தியமற்றதொன்று என்பது அவர்களுக்கு தெரியும்,

அப்படி முயற்சித்தால் மறுபடியும் இந்திய றோவால் இலங்கையில் குண்டுகள் வைக்க முடியும், இலங்கை பொருளாதாரத்தை முடக்க முடியும், கடன்களை வைத்தே இலங்கையை இறுக்க முடியும், மறுபடியும் தமிழர்களுக்காக கவலைப்பட்டு ஐநாவில் சிக்க வைக்க முடியும்

அடைக்கலநாதன் அறியவேண்டியது  இந்தியாவை இலங்கை பகைத்துக்கொள்ளாது, அது எப்போதும் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில்தான் வைக்கும்,

இந்தியாவும் இலங்கைகூட இருக்கும், ஆனால் அது ஒருபோதும் தமிழர்கள்கூட  துணை நிக்காது, சிங்களவர்களை பகைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதுவும் செய்து தராது.

பெயருக்குத்தான் இலங்கை சுதந்திரநாடு ஆனால் , துறைமுகங்கள், விமான போக்குவரத்துக்கள், பாதுகாப்பு எல்லைகோடுகள், தண்டவாளங்களிலிருந்து சாலைகள் அமைப்பு, உணவிலிருந்து ஓடும் பஸ் ஆட்டோ இறக்குமதியிலிருந்து உள்நாட்டு கட்டுமானங்கள்,பங்கு சந்தைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், போக்குவரத்து, பொருளாதாரம் சந்தைப்படுத்தல் என்று இந்தியாவின் மறைமுக கட்டுப்பாட்டில் இயங்கும் நாடுதான் இலங்கை, அதனால்தான் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் பயணம் இந்தியாவுக்கே. 

உலகில் எந்தநாட்டுக்கும் இல்லாத வரம் ஒன்று இலங்கைக்கு உண்டு, அது ,

இலங்கையின் அனைத்து நட்புநாடுகளும் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள், ஆனால் அத்தனை நாடுகளும் இலங்கைக்கு நண்பர்கள்.

ஆக அடைக்கலநாதன் செய்ய வேண்டியது இலங்கை இந்தியாவுடன் நிக்கவேண்டும் என்று கூறுவதல்ல, இந்தியா சிங்களவனை மீறி தமிழர்கள்கூட நிக்குமா என்பதை அடைக்கலநாதனுக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதிப்படுத்தவேண்டும், முடியுமா?

இலங்கை இந்தியாவை பகைக்ககூடாது என்று சொல்லும் இவர் இந்தியா தமிழர்களை பகைக்காது இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

காலம் காலமாக சிங்களவனுக்கு அட்வைஸ் பண்ணூவதுபோல் பாவனை காட்டி  தமிழனை ஏமாற்றும் அரசியல் தொழிலை இவர்கள் ஒருபோதும் கைவிடபோவதில்லை என்பதே தொடர்கதை.

ச‌ரி அண்ணா அர‌சிய‌லை த‌ள்ளி வைப்போம்

இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்சு 75 ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ அந்த‌ நாடு என்ன‌ முன்னேற்ற‌தை க‌ண்ட‌து கூட்டி க‌ழிச்சு பார்த்தால் பூச்சிய‌ம்

விளையாட்டை எடுத்து கொண்டால் ப‌ல‌ விளையாட்டுக்க‌ளில் இந்திய‌ர்க‌ள் பின்ன‌டைவு

உல‌கில் அதிக‌ ம‌க்க‌ள் வாழும் நாடு இந்தியா நூற்றுக்கு 40 வித‌ ம‌க்க‌ள் தான் ப‌ண‌க்கார‌ர் 60வித‌ ம‌க்க‌ள் அன்று கூலி வேலைக்கு போனால் தான் அந்த‌ அன்று அவையால் சாப்பிட‌ முடியும்

இந்தியாவில் த‌மிழ் நாடு தானாம் முன்னேறின‌ மானில‌ம் 

த‌மிழ் நாட்டிலையே ப‌ல‌ ஆயிர‌ம் குடும்ப‌ங்க‌ளுக்கு இருக்க‌ வீடு இல்லை ம‌ர‌த்த‌டியில் ச‌மைத்து சாப்பிட்டு அதே இட‌த்தில் தூங்கின‌ம்...............................

வ‌ட‌ நாட்டில் க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லாம‌ ரெயில் த‌ண்ட‌வாள‌த்தில் க‌க்கா இருக்குதுக‌ள்..........................

சொந்த‌ நாட்டுக்கு சூனிய‌ம் வைத்து விட்டு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு காசை அள்ளி கொடுப்ப‌தில் என்ன‌ பெருமை இருக்கு............................

இந்தியா என்ர‌ போலி அகிம்சை முக‌மூடி போட்ட‌ நாடு இருக்கும் வ‌ரை அய‌ல் நாடுக‌ளும் ச‌ரி இந்தியாவும் சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ அடைய‌ முடியாது........................

சுத‌ந்திர‌ம் அடைந்த‌ இந்தியாவில் எத்த‌னையோ மானில‌ங்க‌ளில் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு இன்னும் மின்சார‌ம் போய் சேர‌ல‌

இதில‌ வ‌ல்ல‌ர‌சு விம்ப‌ம் வேற‌

எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இர‌வு உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் என்று அவ‌ர்க‌ளின் தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்யின‌ம் உண‌வு கொடுக்க‌ ம‌க்க‌ளே உத‌வுங்க‌ள் என்று.......................

பிள்ளைக‌ளுக்கு போலி தேச‌ ப‌ற்றை ஊட்டி அதுங்க‌ளின் க‌ன‌வுக‌ளை சிதைப்ப‌து தான் இந்தியா..................

பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாது

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு ஜ‌ரோப்பாவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா தெரியும் திராவிட‌ பூசாண்டிக்குள்ளையும் இந்திய‌ பூச்சாண்டிக்குள்ளையும் இருந்து தாம் இழ‌ந்த‌வை ப‌ல‌தென‌........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடுத்த காசுக்கு என்னமா கூவுறான்பார்  என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, RishiK said:

குடுத்த காசுக்கு என்னமா கூவுறான்பார்  என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

உண்மையில் எழுந்தமானமாக இவ்வாறு எமது பிரதிநிதிகளை குற்றம் சொல்லி சொல்லி தான் இன்று எல்லோரையும் கள்ளராக்கி இன்றைய இழிநிலைக்கு தமிழினம் வந்து நிற்கிறது. உண்மையில் அவர் இந்தியாவிலிருந்து கையூட்டு பெற்றதாக ஆதாரங்கள் உள்ளனவா???

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.