Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி

Oruvan

நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும், அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களது வீடுகளுக்குச் சென்று நாங்கள் விசாரிப்பது வழமை. அப்படி ஒரு வீட்டுக்கு சென்றது சம்பந்தமாக தான் எனக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்தது.

இதன்போது மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டவேளை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியதோடு, நாங்கள் சென்று கலந்துரையாடிய பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு எவ்வாறான முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளை வழங்கினர் என பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன். 

எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் நீங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். 

அப்படி ஏதாவது உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றோம்.

கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கின்றது.

நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர். 

இது தொடர்பாக என்னையும் சில தொடர்பு கொண்டு, கேட்டு நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர். நான் அப்படி எதுவும் இல்லை என அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

இப்படியானவர்களை மக்களாகிய நீங்கள் நம்ப வேண்டாம். எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குற்றச் செயல்களை செய்கின்றவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

https://oruvan.com/sri-lanka/2024/12/05/financial-fraud-using-namal-rajapaksas-name

  • கருத்துக்கள உறவுகள்

நாமலின் பெயருக்கு இப்பவும் பவர் உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, RishiK said:

நாமலின் பெயருக்கு இப்பவும் பவர் உள்ளதா? 

அவருக்கு பவர் இருக்கோ இல்லையோ நம்ம ஊடக குடிசை கைத்தொழில் ஜாம்பவான்கள் ஒருவன் இருந்தால் போதும் ....இல்லாத பவரையும் இருக்கு என விளாசிதள்ள 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இது தொடர்பாக என்னையும் சில தொடர்பு கொண்டு, கேட்டு நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர். நான் அப்படி எதுவும் இல்லை என அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

🤣...................

இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நாமலை கடைசியில் ஒரு நகைக்கடைக்காரராக, பயண முகவராக மாற்றியுள்ளனர் யாழ் மக்கள்...................🤣.  இது குசும்பு தானே............... கீதநாத்தும் இல்லையென்று பொறுமையாக தெளிவுபடுத்தியிருக்கின்றார்......................

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

🤣...................

இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நாமலை கடைசியில் ஒரு நகைக்கடைக்காரராக, பயண முகவராக மாற்றியுள்ளனர் யாழ் மக்கள்...................🤣.  இது குசும்பு தானே............... கீதநாத்தும் இலையென்று பொறுமையாக தெளிவுபடுத்தியிருக்கின்றார்......................

இந்தக் குசும்பை இப்படியும் எடுக்கல்லாமே...ஓடித்தப்ப வெளிக்கிடும் நாமல் தன்னிடம் உள்ள்வைகளை அரைவிலை கால்விலையில் தட்டிவிட..யோசிக்கலாம்....இதனை பயன்படுத்த....இலகுமணி  யாழ்ப்பாணத்தார் ..சொத்துகுவிக்க யோசிப்பதில் என்ன பிழை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர்.

இது அருச்சுனாவுக்கு தெரியுமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. 

16 hours ago, கிருபன் said:

எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் நீங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும்.

அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க?

சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில  போண்டா சுடுறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

இந்தக் குசும்பை இப்படியும் எடுக்கல்லாமே...ஓடித்தப்ப வெளிக்கிடும் நாமல் தன்னிடம் உள்ள்வைகளை அரைவிலை கால்விலையில் தட்டிவிட..யோசிக்கலாம்....இதனை பயன்படுத்த....இலகுமணி  யாழ்ப்பாணத்தார் ..சொத்துகுவிக்க யோசிப்பதில் என்ன பிழை

உங்களின் கேள்வியை இப்படியும் எழுதலாம்.....................🤣.

பின்வருவனவற்றில் எது பிழையான கூற்று?

1. நாமல் தப்பி ஓட வெளிக்கிடுகின்றார்

2. நாமல் தன்னிடம் உள்ளவற்றை அரைகுறை விலைக்கு விற்க முயற்சிக்கின்றார்

3. நாமல் விற்பவற்றை வாங்கி சொத்து குவிக்கும் யாழ் மக்கள் இலாபம் அடையப் பார்க்கின்றனர்

4. மேற்கூறிய மூன்றும் தவறு என்று காசிநாத் சொல்லுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

4. மேற்கூறிய மூன்றும் தவறு என்று காசிநாத் சொல்லுகின்றார்

 3% வாக்குப்பெற்ற...காசினாத்துக்கு...யாழ்ப்பாண சனம் பற்றி லிளங்கவில்லை.. என் .பி. பி வாக்கள்ளிப் போட்டு 3 சீற்றுக் கொடுத்த நம்ம சனத்தைபற்றி ...அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்த எனக்குத்தானே தெரியும்😃

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க?

சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில  போண்டா சுடுறீங்க?

கடந்த காலத்தில்… அவர்களுடன் சேர்ந்து, இவரும் “கல்லா கட்டுவதில்” மும்முரமாக இருந்திருப்பார். 😂
இப்போ… “ரைம் பாசிங்” அரசியல் செய்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த காலத்தில்… அவர்களுடன் சேர்ந்து, இவரும் “கல்லா கட்டுவதில்” மும்முரமாக இருந்திருப்பார். 😂
இப்போ… “ரைம் பாசிங்” அரசியல் செய்கிறார். 🤣

அதென்னண்டா தமிழ்சிறி,

அநுர சிங்கள ஏரியாவெல்லாம் படிப்படியா நல்லா கூட்டி மொப் அடிச்சுக்கொண்டு வாறான், அடுத்தது இவர் போன்ற அல்லகைகள்தான்.

அப்படி கோர்ட் கேஸ் எண்டு வந்தா நீதிபதிகிட்ட ஐயா நாங்க ரொம்ப நேர்மையானவங்க நீங்க வேணுமெண்டால் பொலிஸ்கிட்ட கேட்டு பாருங்க, லஞ்சம் ஊழல் பண்றது எல்லாம் தப்பு எண்டு போன கிழமைகூட நாங்கள் முறைப்பாடு கொடுத்து ஜனநாயகத்தை காப்பாத்தியிருக்கோம்  எண்டு சொல்லத்தான்.

என்ன இருந்தாலும் அநுர மொப் அடி சூப்பர்.

a man in white pants is standing in front of a couch cleaning the floor

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

அனுரவின் அடியில்... அம்மியே காற்றில் பறக்குது வளவன். 😂
👇 இவர் எல்லாம்... எம்மாத்திரம். ஜுஜுப்பி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

 3% வாக்குப்பெற்ற...காசினாத்துக்கு...யாழ்ப்பாண சனம் பற்றி லிளங்கவில்லை.. என் .பி. பி வாக்கள்ளிப் போட்டு 3 சீற்றுக் கொடுத்த நம்ம சனத்தைபற்றி ...அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்த எனக்குத்தானே தெரியும்😃

அன்று விளக்குமாற்றினால் யாழில் துரத்தப்பட்ட ஜெ.வி.பியினர் இன்று அதே மக்களின் எஜமானர் ..அவ்ர்களின்  காலில் விழுகின்றனர் யாழ் மக்கள்...
 சிறிலங்காவில் எதுவும் நடக்கும்...கடந்த தேர்தலில் 3 எம்.பிக்களை பெற்ற ஜெ.வி.பி இன்று 159 எம்பி🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.