Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

13 DEC, 2024 | 06:37 PM

image

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 

கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், அது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இதில் முக்கியமாக வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டது. வெள்ளங்களுக்கு தீர்வு காணும் முகமாக முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்காக சுமார் 250 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும். 

வட மாகாண ஆளுநரால் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கிராமங்களை நோக்கியே திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதே எமது நோக்கமாகும். விசேடமாக கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உள்ளோம். 

கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/201193

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

அந்த நிதி கிடைக்கப்பெற்றால் வேலைகள் முன்னெடுக்கப்படும். 

கிடைக்க பெற்றால் ...எதிர்காலம்....
கிடைக்கட்டும் அதன் பின்பு வசந்தம் வீசட்டும்...வசந்த சூறாவளி வீசும் எண்டு சொல்லுறீயல்...
எல்லா புண்ணியவான் அரசியல்வாதிகளும் நல்லா விசிறி வைச்சு வீசி சென்றுவிட்டார்கள் ..இனி நீங்கள் புதுசா மின்விசிறி வைச்சு வீசப்போறியல் போல....
அனுரா அதாணி குழுமத்தின் பெரிய காற்றாலை விசிறியையே கையை வைச்சு நிறுத்தபோறார் கவனம்...

5 hours ago, ஏராளன் said:

அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, பெருமாள் said:

முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .

அது.... 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த கூட்டம் தொடர்பான காணொலி 

============

வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, 

நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள்.

ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை.

எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே..

நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.