Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

படிச்சானோ என்னவோ தெரியல! ஆனால் வேலையில சீரியஸ் ஆனவன். அண்மையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அவன் வளர்க்கும் மாடு கட்டி நின்ற இடங்கள் எல்லாம் வெள்ளம். ஒரு மாடு வழுக்கி நிலத்தில் விழுந்து விட்டது. பெரியம்மா மகனுக்கு போனடிச்சா றிங் போகுது எடுக்கவில்லை. எனக்கு போனடிச்சா மாடு விழுந்து போச்சு என்று, உடன முதியோர் சங்கத்தில இருந்த அப்பாவையும் அழைத்து பக்கத்தில இருக்கும் இளைஞர்கள் நால்வரும் சென்று மாட்டை எழுப்பி பாதுகாப்பான இடத்தில் நிப்பாட்டி புகைபோட்டு வெப்பப்படுத்தி இளஞ்சூட்டுதண்ணீர் குடிக்கவைத்து பசுமாடு காப்பாற்றப்பட்டது. அந்த நேரம் தம்பி காரைநகரில் மழைவெள்ளம் தனது உதவியாளர்களுடன் வெட்டி விட்டுக்கொண்டிருந்திருக்கிறான்.

சிறப்பு

  • Thanks 1
  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

குழைக்காட்டர் என்றால் படிக்காதவர்கள் என்ற அர்த்தமும் உண்டு.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடபகுதியில் பெரும்பாலான மண் புழுதிமண். அங்கே உள்ள பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமாக மூன்றடுக்கில் விதம் விதமான கல் அடுக்கியே ஒரு வீதியை அமைப்பார்கள்.

பெரிய பாறாங்கல் பரப்பி அதன் மேல் அமைத்த வீதிகளே வெள்ளங்களுக்கு காணாமல் போய் விடுகின்றது.
இந்த நிலையில் அங்கிருக்கும் ரோட்டு ஓவசியர்களுக்கு  புலம்பெயர்ந்த தமிழர் பாடம் எடுக்க முடியாது.😂
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Pavement design codes, bridge design codes, building codes................. இப்படியானவை பலதரப்பட்ட நிலைமைகளுக்கும், காலநிலைகளுக்கும், தரைத் தோற்றங்களுக்கும் சேர்த்தே வரையைப்பட்டவை. 

சிராபுஞ்சியில் வீதி போடுவது என்றாலும், ராஜஸ்தான் பாலைவனத்தில் வீதி போடுவது என்றாலும், இவற்றில் அதற்கான விதிமுறைகளும், அளவுகளும் இருக்கின்றன.

இந்த இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணமும், இலங்கையில் பெரும்பகுதியும் 'பச்சை தண்ணீர்' இடங்கள்......... சிக்கலற்ற இடங்கள்................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி, றோட்டைத் திருத்த எந்திரி வரைந்த வரைபடத்தைப் பார்த்தால் எல்லா கேள்விக்களுக்கும் விடை கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

பொலித்தீனுக்கும் காவோலைக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், உலகில் எங்கேயிருந்தும் ஆலோசனை கொடுக்கலாம். ஓவசியர் மார் எந்திரிகள் அல்ல.

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

அரசியலும் எந்திரவியல் எனப்படும் விஞ்ஞானமும் ஒன்றல்ல. அரசியல் என்பது மக்கள் சக்தி/மக்கள் எண்ணம். விஞ்ஞானம்/பௌதீகவியல் ஜேர்மனியிலும், அமெரிக்காவிலும், இலங்கையிலும் ஒன்று தான்.

வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Justin said:

வீதி அமைப்பில், பொலித்தீன் செய்யும் அதே தொழிலை காவோலை செய்யுமா? என்பது தான் அடிப்படைக் கேள்வி. இதைப் புரிந்து கொண்டு கருத்துரைப்பதை விடுத்து "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை போடுகிறேன்" என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். # ரைம் பாஸ்/நேர சங்ஹாரம்😂!

உங்களை நான் ஏதாவது கேட்டேனா?

நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது.
கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, குமாரசாமி said:

இந்த திரியில் என்ன எழுதினீர்கள் என்பதையே உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியிருக்கிறதா😂?

இது நீங்கள் எழுதியது:

19 hours ago, குமாரசாமி said:

வடபகுதியில் பெரும்பாலான மண் புழுதிமண். அங்கே உள்ள பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமாக மூன்றடுக்கில் விதம் விதமான கல் அடுக்கியே ஒரு வீதியை அமைப்பார்கள்.

பெரிய பாறாங்கல் பரப்பி அதன் மேல் அமைத்த வீதிகளே வெள்ளங்களுக்கு காணாமல் போய் விடுகின்றது.
இந்த நிலையில் அங்கிருக்கும் ரோட்டு ஓவசியர்களுக்கு  புலம்பெயர்ந்த தமிழர் பாடம் எடுக்க முடியாது.😂
 
ஆலோசனை நானும் கொடுத்திருப்பதால் நானும் பதில் தரக் கடமை இருக்கிறது.

பதிலுக்கு -அடிப்படை விடயத்தில் ஒரு கருத்தும் இல்லாமல்- நீங்கள் எழுதிய பதில் இது:

1 hour ago, குமாரசாமி said:

பொலித்தீன் இல்லாமல் காவோலையும் கிடுகையும் வைத்து வாழ்ந்தவர்கள் நம்மவர்கள். 

நிலா சோறு சாப்பிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தனர்.அப்படி நானும் கொஞ்சக்காலம் வாழ்ந்துள்ளேன். 
அரசியலில்  புலம்பெயர்ந்தவன் பாடம் எடுக்கக்கூடாது.ஆனால் காவோலை என்றவுடன்.......?🤪

இதையெல்லாம் எழுதும் போது "பதில் தராதீர்கள்" என்ற fine print போட்டு எழுதினீர்களா?

26 minutes ago, குமாரசாமி said:

உங்களை நான் ஏதாவது கேட்டேனா?

நான் உங்களை யாழ்கள கருத்தாளர் என்பதால் நன்கு மதிக்கின்றேன். மரியாதையும் இருக்கின்றது.
கீரைக்கடை விடயங்கள் எல்லா திரிகளுக்கும் ஒவ்வாது. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

யாழ்களத்தில் நான் உங்களுடன் அதிகம் விவாதித்தால் என்னை தடை செய்துவிடுவார்களோ என்றொரு அச்சமும் எனக்கு அண்மைக்காலமாக இருந்து வருகின்றது.எனவே நான் எழுதுவது பிழையென்றால் பெட்டீசம் போடுங்கள். என் கருத்திற்கு பதில் எழுதாதீர்கள். அல்லது ஒரு சிவப்பு புள்ளியிடுங்கள்.உங்களுக்கும் ஆத்ம திருப்தியாகும்.

உங்கள் அச்சத்தை நீங்கள் நிர்வாகத்திடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எழுதுவதற்கு கருத்து எதுவுமில்லாதவர்கள் சிவப்புப் புள்ளியைப் போட்டு சுயமாக இன்பங் (ஆத்ம திருப்தி😎) காண்பர். இது வரை நான் பயன் படுத்தியதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Justin said:

இந்த திரியில் என்ன எழுதினீர்கள் என்பதையே உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியிருக்கிறதா😂?

இது நீங்கள் எழுதியது:

ஆலோசனை நானும் கொடுத்திருப்பதால் நானும் பதில் தரக் கடமை இருக்கிறது.

பதிலுக்கு -அடிப்படை விடயத்தில் ஒரு கருத்தும் இல்லாமல்- நீங்கள் எழுதிய பதில் இது:

இதையெல்லாம் எழுதும் போது "பதில் தராதீர்கள்" என்ற fine print போட்டு எழுதினீர்களா?

உங்கள் அச்சத்தை நீங்கள் நிர்வாகத்திடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எழுதுவதற்கு கருத்து எதுவுமில்லாதவர்கள் சிவப்புப் புள்ளியைப் போட்டு சுயமாக இன்பங் (ஆத்ம திருப்தி😎) காண்பர். இது வரை நான் பயன் படுத்தியதில்லை!

எழுதுங்கள் உங்களுக்கு பொழுது போகவேணும் எல்லோ.
அதுக்காக நேரம் பொன்னானது மண்ணானது எண்ட பில்டப் இனியும் வேணாம்.

நேரம் பொன்னானது என்பவர்கள் ஏன் அரட்டை கருத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்?
விலகி போக வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

எழுதுங்கள் உங்களுக்கு பொழுது போகவேணும் எல்லோ.
அதுக்காக நேரம் பொன்னானது மண்ணானது எண்ட பில்டப் இனியும் வேணாம்.

நேரம் பொன்னானது என்பவர்கள் ஏன் அரட்டை கருத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்?
விலகி போக வேண்டியது தானே?

அரட்டைக் கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் போது சரியான தகவல்கள் வாசகர்களுக்கு கிடைக்க உதவுமானால் எழுத வேண்டும். இது அப்படியான ஒரு சந்தர்ப்பம். பொலித்தீன் காவோலை வேறு பாடு பற்றி யோசிக்காமல் @வாதவூரான் இதை தன் வேலைத் தளத்திலும் அறிமுகம் செய்ய முயன்றார் அல்லவா? அவர் வேலைக்கு ஆப்பு வராமல் நீங்களும் நானும் உதவியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்😂.

பி.கு: விஞ்ஞானம் பற்றிய குறைவான புரிதல் அல்லது விஞ்ஞான எதிர்ப்பு இருக்கும் எல்லா "அரட்டை" திரிகளிலும் நான் பதில் வைப்பேன், எனவே மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Justin said:

உங்களைப்போன்ற ஜேசுநாதர்களின் கருத்துக்களை படித்து யாழ்களம் நுழைந்தவன் அல்ல நான்.
அன்றைய கூட்டமும் சிநேகிதம்களும் புரிந்துணர்வுகளும் கருத்து பரிமாற்றங்களும் வேறு. அது ஒரு இனிய காலம்.

அன்றையவர்கள் வக்கிரத்துடன் யாழ்களம் வருவதுமில்லை.வக்கிரமாக பழகியதும் இல்லை.
ஆனால் யாழ்களத்தில் வக்கிரத்தின் முன்னோடியானவர் தாங்கள், இது எனது கண்ணோட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

ஒத்துக் கொள்கிறேன்! போலி மருத்துவம், போலி விஞ்ஞானம், போலிச் செய்திகளை  மறுத்து எழுதுவது மிகவும் வக்கிரமான செயல்! அதே நேரம் சக உறவின் குடும்பத்தினுள் நிகழ்ந்த சொந்த சோக சம்பவங்களை பொது வெளியில் இழுத்து மனமுடைந்து விலக வைப்பது "உயர்ந்த மனிதர்களுக்கே உரிய பண்பு" இந்த "உயரத்தை" நான் தொட இயலாமல் தவிக்கிறேன் ஐயா😎!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Justin said:

போலி மருத்துவம், போலி விஞ்ஞானம், போலிச் செய்திகளை  மறுத்து எழுதுவது மிகவும் வக்கிரமான செயல்!

இதை நான் மனதளவில் குறிப்பிட்டு எழுதவில்லை. உங்கள் மருத்துவ குறிப்புகள் அவசியமானது. அதை தாங்கள் எழுதும் போது இன்னொருவரை தாக்கியே எழுதுகின்றீர்கள்.அந்த தாக்குதல் அவசியமில்லை என்கிறேன்.

5 minutes ago, Justin said:

 நேரம் சக உறவின் குடும்பத்தினுள் நிகழ்ந்த சொந்த சோக சம்பவங்களை பொது வெளியில் இழுத்து மனமுடைந்து விலக வைப்பது "உயர்ந்த மனிதர்களுக்கே உரிய பண்பு" இந்த "உயரத்தை" நான் தொட இயலாமல் தவிக்கிறேன் ஐயா😎!

இது எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இது எனக்கு விளங்கவில்லை.

ஓம், விளங்காது தான்! நம்புகிறேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

ஓம், விளங்காது தான்! நம்புகிறேன்😂

சத்தியமாக எனக்கு புரியவில்லை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.நான் தெரிந்து தெரியாமலும் தவறு செய்திருக்கலாம்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.