Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம்  குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். 

அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். 

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். 

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். 

 

https://www.hirunews.lk/tamil/391359/மல்வத்து-மற்றும்-அஸ்கிரிய-மகாநாயக்க-தேரர்களை-சந்தித்து-ஆசி-பெற்றார்-ஜனாதிபதி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். 

என்னசொல்லி ஆசி வழங்கியிருப்பார்கள்? அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். இவர்கள் முன்னையவர்களுக்கும் இவ்வாறுதானே செய்தார்கள்? ஆசி பெறப்போகிறார்களோ, இவர்களை குளிர்விக்க போகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

என்னசொல்லி ஆசி வழங்கியிருப்பார்கள்? அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். இவர்கள் முன்னையவர்களுக்கும் இவ்வாறுதானே செய்தார்கள்? ஆசி பெறப்போகிறார்களோ, இவர்களை குளிர்விக்க போகிறார்களோ?

இந்தியா சேட்டை விடுறாங்கள் அவங்களுக்கு எதிராக நீங்கள் சிங்கள மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்  ....நான் (அனுரா)கண் காட்டும் பொழுது நீங்கள் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்ய வேணும் ...உங்களுக்கு தெரியும் தானே நானும் எனது கட்சிகாரரும் வீதிய்ல் இறங்க முடியாத சூழ் நிலை இருப்பது

  • Like 1
  • Haha 2
Posted

சிலவருடங்களுக்கு முன் ஜேவியின் ஒருவர் பிக்குகள் எல்லோரையும் தாம் ஆட்சிக்கு வந்தால் உள்ளுக்கு போடுவம் என்றது நினைவில் உள்ளது. (??). அது வேற வாயா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர் ஐரோப்பியர்களிடையே கூட சாம்ராஜித்திற்கு மேலாக (சிற்றரசு, அரசு, பேரரசு என்பவற்றிற்கு மேலாக) போப் இருந்தது போல இலங்கையில் பெளத்த மதம் தற்காலத்திலும் உள்ளது, பொதுவாக மதங்களின் பிற்போக்குவாதம் ஒரு நாட்டை சீரழித்த நல்ல உதாரணமாக இலங்கை இருந்துள்ளது, அது இந்த இடது சாரி என கூறிக்கொள்ளும் இந்த அரசிலும் நிகழ்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

ஆனால் இந்த நிலை எப்போதும் மாறும்? எப்போது இலங்கை உருப்படும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனவாதமும் மதவாதமும் இருக்கும்  அந்த அழகான தீவு இனி பூமியின் நரகம் அவ்வளவே .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, vasee said:

முன்னர் ஐரோப்பியர்களிடையே கூட சாம்ராஜித்திற்கு மேலாக (சிற்றரசு, அரசு, பேரரசு என்பவற்றிற்கு மேலாக) போப் இருந்தது போல இலங்கையில் பெளத்த மதம் தற்காலத்திலும் உள்ளது, பொதுவாக மதங்களின் பிற்போக்குவாதம் ஒரு நாட்டை சீரழித்த நல்ல உதாரணமாக இலங்கை இருந்துள்ளது, அது இந்த இடது சாரி என கூறிக்கொள்ளும் இந்த அரசிலும் நிகழ்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

ஆனால் இந்த நிலை எப்போதும் மாறும்? எப்போது இலங்கை உருப்படும்?

மாறாது ..வடக்கு கிழக்கு ஜெ.வி.பி தவ்வல்கள் படிக்க கணக்க இருக்கு ....



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.