Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

January 5, 2025  10:19 pm

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. 

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நடந்து  முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம். 

இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்  கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம். 

அதற்கு முன்னதாக மாவட்ட  நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. 

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.

புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தில் மாற்றம். அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது. என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது. 

அந்த அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காக தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடமாக தேசிய இனப்பிரச்சனை புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கிறது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கிறது. 

கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபை தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் என கூறுகிறார்கள். தாமதமாக நடநத்த வேண்டும் என்ற தேவை இருக்கா. அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா  போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம் மாகாணசபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும. 

இந்த அரசாங்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, அரசாங்கம் வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு  புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும். அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சனையை தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையை தீர்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்கள அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைநது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். 

முதலாவது இந்த அரசாங்கம் குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடத்திலா அல்லது மூன்று வருடத்திலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்கு தெரியாது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். 

அவ்வாறு விடப்பட்டால் தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவை திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசங்கம் விரைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 

அப்போது தான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  
 
https://tamil.adaderana.lk/news.php?nid=198332

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன்

வடக்கு .கிழககு என தனியாக இருந்தும் சுயாட்சி நடத்தலாம் அல்லவா?...இரண்டு தமிழ் பேசும் முதலமைச்சர்கள் ,தமிழ் பேசும் அமைச்சர்கள் பலர் தெரிவு செய்ய வாய்ப்பு உண்டு ... பதவிகளை  விரும்பும் தமிழர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் ...கட்சிகள் பல உருவாக வாய்ப்பு உண்டு ..
 
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

வடக்கு .கிழககு என தனியாக இருந்தும் சுயாட்சி நடத்தலாம் அல்லவா?...இரண்டு தமிழ் பேசும் முதலமைச்சர்கள் ,தமிழ் பேசும் அமைச்சர்கள் பலர் தெரிவு செய்ய வாய்ப்பு உண்டு ... பதவிகளை  விரும்பும் தமிழர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் ...கட்சிகள் பல உருவாக வாய்ப்பு உண்டு ..
 
இல்லை 

அது நாளடைவில் தமிழரை பலவீனப் படுத்தி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இல்லை 

அது நாளடைவில் தமிழரை பலவீனப் படுத்தி விடும்.

ஏற்கனவே பலவீனப்பட்டுக்கொண்டே போகின்றோம் ...சிறிலங்கா அதிகார வர்க்கம் ஒருநாளும் தமிழ் பிரதேச சுயாட்சியை தரமட்டார்கள் ...தமிழர் தாயகம் என்ற ஒர் பிரதேசத்தை அங்கிகரிக்க மாட்டார்கள் அதற்காக தான் 75 வருடங்களுக்கு மேலாக உழைக்கின்றனர் ..அதில் வெற்றி கண்டு வருகின்றனர் ...
 ...தொடர்ந்து தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்த தான் இந்த வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோஷம் உதவும் ..அத்துடன் அது சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மேலும் தமிழர்களை பலவீன படுத்த உதவியாக இருக்கும்...
தமிழர் பிரதேசத்திலிருந்து சிறிலங்கா தேசிய கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது ஒர் அறிகுறி.. எமது நிலம் எம்மவரின்  ஆதரவுடன் இழக்கப்படும் நிலை ஆரம்பமாக போகின்றது என்பதின்..

மாவட்ட அதிகார சபையை ஏற்றுக் கொள்ளாமல் மாகாணசபையை ஏற்றுக் கொள்வது சிறப்பானது 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

அவ்வாறு இருப்பின் நல்லது என்ற உங்கள் கருத்துக்கே இல்லை என்று பதில் எழுதினேன்.

ஆனால் அதை பின்னர் பார்க்கலாம் என்ற எழுத்து வடிவ உத்திரவாதத்துடன் நகர்வதே இன்றைய நிலையில் நன்று. 

ஏனெனில் சிக்கலான,  கடுமையான நிபந்தனைகளை முன்வைத்து இன்று பெற வேண்டியதை விட்டு விடுவது இன்றைய நிலையில் உகந்ததல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இரண்டு தமிழ் பேசும் முதலமைச்சர்கள் ,தமிழ் பேசும் அமைச்சர்கள் பலர் தெரிவு செய்ய வாய்ப்பு உண்டு ... பதவிகளை  விரும்பும் தமிழர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் ...கட்சிகள் பல உருவாக வாய்ப்பு உண்டு ..

வடக்கிற்கு ஒரு அர்ச்சுனா போன்று கிழக்கிற்கும் ஒரு அர்ச்சுனா வருவார்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அப்ப 13 வேணாமா தலைவரே?

இந்தியா கோவிக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப 13 வேணாமா தலைவரே?

இந்தியா கோவிக்காதா?

30 வருசமா ஒரு மயிரையும் புடுங்க முடியாத இந்தியாவை இனிமேலும் நம்ப வேணுமா? 13 இந்தியாவுக்கு நன்மை தரக்கூடும் அதை அவர்கள் பார்த்து கொள்ளட்டும் .....

58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வடக்கிற்கு ஒரு அர்ச்சுனா போன்று கிழக்கிற்கும் ஒரு அர்ச்சுனா வருவார்

அர்ஜூனாவை இந்தியா துணைதூதரகம் அழைத்து உள்ளதாம் என ...அவர் கூறுகின்றார்...தங்கள் நலனுக்காக அர்ஜுனாவை உபயோக படுத்த போயினமோ

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் சந்திரசேகரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, RishiK said:

போகிற போக்கைப் பார்த்தால் சந்திரசேகரன் அடுத்த வடமாகாண முதலமைச்சர் ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

ஆகலாம் ,ஆனால் தோழர் அனுராவின் புலனாய்வு துறை இவர் மீது ஒர் கண் வைத்திருக்கும்....இந்தியா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற பயத்தில் ...என்ன தான் இடதுசாரியாக இருந்தாலும் இந்தியா டமிழன் என்ற  பயம் இருக்கத்தான் செய்யும்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

வடக்கு .கிழககு என தனியாக இருந்தும் சுயாட்சி நடத்தலாம் அல்லவா?...இரண்டு தமிழ் பேசும் முதலமைச்சர்கள் ,தமிழ் பேசும் அமைச்சர்கள் பலர் தெரிவு செய்ய வாய்ப்பு உண்டு ... பதவிகளை  விரும்பும் தமிழர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைக்கும் ...கட்சிகள் பல உருவாக வாய்ப்பு உண்டு ..
 
Thinking out of the box 👏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அர்ஜூனாவை இந்தியா துணைதூதரகம் அழைத்து உள்ளதாம் என ...அவர் கூறுகின்றார்...தங்கள் நலனுக்காக அர்ஜுனாவை உபயோக படுத்த போயினமோ

ஏற்கனவே வடக்கில் எந்த கூட்டங்கள் நடைபெற்றாலும் இந்திய துணைத் தூதரகத்துக்கு தெரியாமல் நடைபெறாது கூடாது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே வடக்கில் எந்த கூட்டங்கள் நடைபெற்றாலும் இந்திய துணைத் தூதரகத்துக்கு தெரியாமல் நடைபெறாது கூடாது என்கிறார்கள்.

இனித்தான் எம்மவர்கள் சிறப்பாக அரசியல் செய்ய வேண்டும் ,,சிறிலங்கா தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்(ஜெ.வி.பி) தங்கள் செல்வாக்கை சிறிலங்கா ஜனாதிபதியிடன் பயன்படுத்தி தாயக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.....மாகாணசபையை மக்கள் ஆளும் சபையாக மாற்ற வேணும் என்ற கோரிக்கையை வைக்க  வேணும் ..சிறிலங்கா ஜனாதிபதி மறுக்க முடியாது ...

அதே போல தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியாவிடம் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முதல் முழு அதிகாரம் கொண்ட ஆட்சியை அமைக்க உதவ வேணும் எண்டு ...30 வருடங்களாக செய்யாத செயலை மூன்று மாதத்தில் செய்து காட்ட சொல்லவேணும்...

இந்தியாவின் சொல் கேட்காமல் நம்மவர்கள் ஆளுனரின் சொற்படி இனிமேல் நடக்க வேணும் அப்பதான் இந்தியா விழித்துக்கொள்ளும்....இந்தியா  அனுராவுக்கு செம்கம்பல வரவேற்பு கொடுத்து உறவு வளர்க்கின்றனர்...
 
இந்தியாவை நம்பி ஏதேனும் நடக்குமா? 

சும்ம போங்கையா,.😏

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

இந்தியாவை நம்பி ஏதேனும் நடக்குமா? 

சும்ம போங்கையா,.😏

😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.