Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை

மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1416048

  • கருத்துக்கள உறவுகள்

 

முன்னாள் ஈபிடிபி எம்பி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை பொறுப்பு எடுக்க புதிய குழுவை அமைக்கமுயன்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி. க்கும்,
மாவீரர் இல்லத்துக்கும் என்ன சம்பந்தம்?

அந்த மண்ணிலேயே, கால் வைக்க... அருகதை அற்ற கொலைவெறி மிருகங்கள்.
பல தமிழ் மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்ற 
நய வஞ்சக கும்பல்தான், இந்த ஈ.பி.டி.பி. திருட்டு கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி. க்கும்,
மாவீரர் இல்லத்துக்கும் என்ன சம்பந்தம்?

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். அவர்கள் அழிவுக்கும், எத்தனையோ வாழவேண்டிய, போராட்டத்தோடு சம்பந்தப்படாத இளைஞர்களின் அழிவுக்கும் காரணமானவர்கள். ஆமா.... கறுத்த கண்ணாடியோடு நிற்பவர், தன்ர அம்மாவுக்கு நடந்ததைத்தான் கேட்க்கிறேன் என்கிறார். என்னவோ ஒரு தேவை ஏற்பட்டிருக்கு, பொறுப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை

By Erimalai 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற சர்ச்சையில் அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிஸார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதோடு, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றன. 

நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு 

பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted  

எனினும், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு 

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் அங்கு சென்று, கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர்.

படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிசார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர். 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted

இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா குறிப்பிடுகையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார்.

அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள்

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்று சிறீதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறீதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.

சிறீதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted

அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

 

https://tamilwin.com/article/kanakapuram-maveerar-thuyilumillam-unrestricted-1736585942

  • கருத்துக்கள உறவுகள்

 

மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்?

January 11, 2025  06:58 pm

மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்?

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் அங்கு சென்றனர். அப்பகுதியில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர்.

படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர். 

இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா தெரிவிக்கையில், 

மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார்.

அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்று சிறிதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறிதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.

சிறிதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.

அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.


https://tamil.adaderana.lk/news.php?nid=198633

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி. க்கும்,
மாவீரர் இல்லத்துக்கும் என்ன சம்பந்தம்?

அந்த மண்ணிலேயே, கால் வைக்க... அருகதை அற்ற கொலைவெறி மிருகங்கள்.
பல தமிழ் மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்ற 
நய வஞ்சக கும்பல்தான், இந்த ஈ.பி.டி.பி. திருட்டு கூட்டம். 

முன்னாள் போராளிகள் பலர் இன்னாள் அரசியல்வாதிகளுடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு உள்ள  வேறு தெரிவுகள் மிகவும் குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அனுராவின் கட்சி சாவக்சேரி,கிளிநோச்சி தொகுதிகளை கைப்பற்ற தீயா வேலை செய்யினம் போல..

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

தோழர் அனுராவின் கட்சி சாவக்சேரி,கிளிநோச்சி தொகுதிகளை கைப்பற்ற தீயா வேலை செய்யினம் போல..

கொஞ்சம் பொறுங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான விபரம் இன்னும் வெளிவரவில்லை. சிறீதரன் என்கிறார்கள், ஈ. பி .டி .பி என்கிறார்கள், மாவீரர் போராளிகள் குடும்ப காப்பகம் என்கிறார்கள்.  இந்தப்பிரச்சனைக்கு  கடந்த மாவீரர் தினத்திலேயே அடிக்கல் போட்டாயிற்று. சிறிதரனை இலக்கு வைத்து பல பிரச்சனைகள், சேறடிப்புகள் பல பக்கத்தாலும் அரங்கேறுகிறது. சொந்த புத்தி இல்லாமல் இரவல் புத்தியில் கொஞ்சம் ஆடுதுகள். மாவீரர், எங்கள் நிம்மதிக்காக உணவிழந்து, உறக்கமிழந்து, உறவிழந்து, போராடி இப்போ, அமைதி கொள்கிறார்கள். அங்கேயும் அவர்களை அமைதியாக உறங்க விடக்கூடாதென எதிரி அவர் உடல்களை கிளறினான். இப்போ, இன்னொரு கூட்டம் அந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேலையில்லாததுகளின் தேவையில்லாத வேலையிது. எங்களுக்காக உழைத்து, இன்று தங்கள் வாழ்வை கொண்டுசெல்ல முடியாமல் ததத்தளிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு இவர்கள் முண்டியடிக்கட்டும் பாப்போம்!

5 hours ago, கிருபன் said:

தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

 

5 hours ago, கிருபன் said:

இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் செய்யும் தேவை யாருக்கோ இப்போது எழுந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

தோழர் அனுராவின் கட்சி சாவக்சேரி,கிளிநோச்சி தொகுதிகளை கைப்பற்ற தீயா வேலை செய்யினம் போல..

தளபதி இளங்குமரன் எம்பி துடிப்போடு செயல்படுகின்றாரோ

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

தளபதி இளங்குமரன் எம்பி துடிப்போடு செயல்படுகின்றாரோ

என்ட காலத்தில் தமிழ் போராளிககுழுக்களில் இருந்தவையளும் இடதுசாரியம் பேசிக்கொண்டுதுடிப்பா வேலை செய்தவையள் ...இப்ப புலம்பெயர் தேசத்தில் சாமி துக்குவுவதற்கு அடிபடியினம் ...எல்லாம் காலத்தின் கொடுமை

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, satan said:

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

தமிழினம் சுயமரியாதோடு இன்னொரு இன அரசின் ஆதிக்கத்திற்கு அடிமைப்படாமல் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்து வாழ்வதற்காக வேண்டிப் போராடி உயிர் நீத்தவர்கள் மாவீரர்கள்.

இதனை எதிர்த்து அரசுக்குத் துணை போய், பல மாவீரர்களைக் கொல்வதில் ஈடுபட்டு, அந்தச் செயற்பாட்டில் உயிர்நீத்து துரோகியாகியவர்களும் உள்ளனர்.

ஆகவே மாவீரர்களுக்கு “மாவீரர் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்வதுபோல், துரோகிகளுக்கும் “துரோகிகள் துயிலும்” இல்லம் அமைத்து நினைவேந்தல் செய்யவைத்தால் பிரச்சனை நீர்த்துவிடும்.🧐

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

இப்ப புலம்பெயர் தேசத்தில் சாமி துக்குவுவதற்கு அடிபடியினம் ..

சிட்னி முருகன் கோயிலைச் சொல்லுறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனின் வாக்கு வங்கியை அழிக்க சுத்துமாத்தின் சதி தான் இது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கும் எதிலும் அரசியல் செய்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அண்ணா
அவர்கள் கம்யனிச தமிழ் தனி நாடு உருவாகி அங்கிருந்து தான் மேற்குலநாடுகளுக்கு கம்யுனிச தீ பரவி அந்த நாடுகளும் மாற போகின்றது என்றார்களாம். இறுதியில் அவர்களே கப்பிட்டலிஸ்ட்டுகளாக மாறி அங்கேயே குடியேறிவிட்டார்கள்.  இப்போ கோவிலிலும் சேர்ச்சிலும் நின்று ஆன்மிக வரவேற்பு கொடுப்பதும் அவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

சிட்னி முருகன் கோயிலைச் சொல்லுறியளோ?

சீ சீ...அவையள் நாயன்மார் வம்ச்ம் கண்டியளோ😀

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் நினைத்ததை தமிழர்கள் செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனகபுரம் துயிலுமில்லத்தில், கூட வந்தவர்களே கூட்டி வந்தவர்களுக்கு எதிராக மாறிய சம்பவம்! மக்கள் எதிர்ப்பால் ஓடித்தப்பிய சந்திரகுமார் குழு!!

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2016 முதல் சிறப்பாக மாவீரர் நாளை எழுச்சிபூர்வமாக நடாத்திவருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இருக்கும் மாவீரர் பணிக்குழுவை மாற்ற வேண்டும் என்று EPDP சந்திரகுமாருடன் சேர்ந்தியங்கும் ஒரு தரப்பு கடுமையாக முயற்சி செய்தது. 

அந்த முயற்சியின் இறுதியாக இன்று 11ஆம் திகதி காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் புதிய நிர்வாக தெரிவு நடைபெறும் என்று EPDP சந்திரகுமாரின் தம்பியான தீபன் என்பவர் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் குறித்த நிர்வாக தெரிவுக்கு எதிராக மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன் பெருமளவான மக்களும் போராளிகளும் ஒன்றுகூடியிருந்தார்கள். அந்த நேரத்தில் புதிய தெரிவை ஒழுங்கு செய்ந தீபன், 13 பேருடன் துயிலுமில்லத்தடிக்கு வந்தார். 

அப்போது அங்கிருந்த மக்களும் முன்னாள் போராளிகளும் பல கேள்விகளை தீபனிடம் கேட்டார்கள். கூட வந்தவர்களிடமும் கேட்டார்கள். (“இவளவு காலமும் சிறப்பாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மாவீர்ர நாள் நடந்துவருகிறது, பிறகு ஏன் புதிய பணிக்குழு தெரிவு?” “தமிழ்த்தேசியத்தை அழித்து புலிகளை காட்டிக்கொடுத்த இனத்துரோகி சந்திரகுமாருக்கு மாவீரர் நினைவேந்தல் செய்ய என்ற அருகதை இருக்கிறது?” “2016 முதல் இதுவரை மூன்று தடவை மாவீரர் பணிக்குழு தெரிவு செய்யப்பட்டு புதிய தலைவர் செயலாளர் தெரிவு செய்ப்பட்டு வெளிப்படையாக நடக்கிறார்கள் அதை ஏன் குழப்ப முற்படுகிறீர்கள்?” “தற்போது மக்கள் மயப்பட்டிருக்கும் மாவீரர் நினைவேந்தலை தனியுரிமையாக்கும் தேவை என்ன?” போன்ற பல கேள்விகளை கூடியிருந்த மக்கள் கேட்டார்கள். 

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தீபனும் கூடவந்தவர்களும் பதறினார்கள். ஒருகட்டத்தில் தீபனுடன் கூட வந்த பெண்கள் சிலர் இன்று புதிய நிர்வாக தெரிவு என்று சொல்லி தான் அழைத்தார்கள். இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை என்று எமக்கு தெரியாது. எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னார்கள். பின் அவர்களே இந்த புதிய தெரிவு தேவையில்லை என்று சொன்னார்கள். 

தீபனுடன் வந்திருந்த EPDP சந்திரகுமாரின் கனகாம்பிகைக்குள வட்டார இணைப்பாளர் பாலன் என்பவர் புதிய தெரிவு செய்யப்பட வேண்டும் என சொல்ல வெளிக்கிட்ட போது சுற்றியிருந்த சிலர் பாலனை கடுமையாக எச்சரித்தவுடன் இருந்த இடம் தெரியாமல் பாலன் பம்மிவிட்டார். 

இறுதியாக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் கடும் எதிர்ப்பினால், புதிய தெரிவு நடாத்த வந்த EPDP சந்திரகுமார் தரப்பு வேறு வழியின்றி காயங்கள் ஏதுமின்றி உயிர்பிழைத்தால் போதும் என்று வந்த வழியே திரும்பி சென்றார்கள்.

Monisha Kokul is with மதி தீபன் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.