Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, சுவைப்பிரியன் said:

இதென்ன விளையாடு திரியா எண்டு ஷாக் ஆகிடடன் 😃

Screenshot-20250224-183755-Chrome.jpg

சுவை அண்ணா

உங்க‌ளுக்கும் என‌க்கும் மிகவும் பிடிச்ச‌ வீர‌ர் இன்னொரு ம‌க‌ளிர் கிரிக்கேட் பெண் கூட‌ நீச்ச‌ல் குள‌த்தில்..................................

Edited by வீரப் பையன்26

  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ம் ஆண்டுக்கு போக‌னும் என்று..................டென்மார்க் பெட்டைய‌லுக்கு ஹாய் சொன்னால் உட‌ன‌ என்ர‌ ம‌டியில் வ‌ந்து இருப்பால‌வை குருநாதா🙏🥰❤️❤️😁..............

இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.

எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு

நீங்க‌ள் வ‌சிப்ப‌தும் அமெரிக்காவா அண்ணா.................

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250224-183755-Chrome.jpg

சுவை அண்ணா

உங்க‌ளுக்கும் என‌க்கும் மிகவும் பிடிச்ச‌ வீர‌ர் இன்னொரு ம‌க‌ளிர் கிரிக்கேட் பெண் கூட‌ நீச்ச‌ல் குள‌த்தில்..................................

அட இவனுமா ☹️😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்று தெரிந்திருந்தால், பிந்திப் பிறந்து கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் போல.......................😜.

கொஞ்சம் பொறுங்கோ ரசோசார்...இது எல்லாம் நம்ம கையில் இல்லை...அல்லா பக்தர்களுக்கு அடுத்தலோகத்தில் ..72 கன்னியரும் ..மாட மாளிகையும் கிடக்கும் என்பது அந்த சமய சட்டம் ...இதுபோல நம்ம சாமிகளும் சேர்ந்து...இந்த அரசியலமைபுச் சட்டத்தை...அடுத்தபிறவியில் கிரிக்கட்டு விளையாட்டு வீரருக்கு அழகான பொண்ணு கிடைக்குமென்று சட்டதிருத்தம் செய்யட்டும் ...அப்புறம் இதைப்பற்றி யோசிப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.

8 minutes ago, alvayan said:

எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு

ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

@ரசோதரன்

Screenshot-20250224-165612-Chrome.jpg

த‌ன‌து காத‌லியுட‌ன் டுபாயில் ஹில்..................கில் நீ என்ன‌ செய்யுறீயோ ஏது செய்யிறியோ தெரியாது இந்த‌ ச‌ம்ப‌ய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அதிக‌ ர‌ன்ஸ் நீ தான் அடிக்காறாய்

என‌க்கு புள்ளிய‌ பெற்று தாராய் ,

ம‌வ‌னே ஏதும் சுத‌ப்ப‌னும் க‌ல்லால் எறிந்து உன் ம‌ண்டைய‌ உடைப்பேன் லொள்...............................

ஏ ஐ?

27 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.

Small print: குந்துவதெல்லாம் பென்சன் கிழவிகள் 😆

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

அட இவனுமா ☹️😀

இவா Yajswal விட‌ ஜ‌ந்து வ‌ய‌தில் மூப்பு அண்ணா.....................இர‌ண்டு பேரும் கிரிக்கேட்டில் க‌ல‌க்க‌ள் ஆட்ட‌ம் அதே போல் மைட்டைய‌டியில் இர‌ண்டு பேரும் Left Hand batter...............................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் வ‌சிப்ப‌தும் அமெரிக்காவா அண்ணா.................

கனடா

4 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா 😀

இருக்கு சார்...ஆனால் இருக்கும்வரை சந்தோசமா இருப்பமேயென்றுதான்....😆

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா 😀

சுவை அண்ணா ஈழ‌ப்பிரியன் அண்ணா சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதின‌வ‌ர்.................அவ‌ர் இங்கை வ‌ர‌ மாட்டார் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும்

ஒன்னில் ஊருக்கு போவார் அல்ல‌து அமெரிக்காவையே சிற்றி பாப்பார் அம்மா கூட‌.....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் போட்டி ந‌ல்லா இருக்கும் பார்க்க‌................என‌து தெரிவு தென் ஆபிரிக்கா.......................................

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்லாத விடயங்களைத் தவிர்ப்பது நலம். எமக்கு என்று ஒரு சுயகட்டுப்பாடு வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (25 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

 யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி

AUS எதிர் SA

12 அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் 12 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

அவுஸ்திரேலியா

  • ஏராளன்

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • ரசோதரன்

  • வசீ

  • வாத்தியார்

  • நியாயம்

  • வாதவூரான்

  • சுவைப்பிரியன்

  • கோஷான் சே

  • நீர்வேலியான்

தென்னாபிரிக்கா

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • நுணாவிலான்

  • நந்தன்

  • செம்பாட்டான்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • புலவர

  • கந்தப்பு

  • பிரபா

  • கிருபன்

இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

juggle-people-are-awesome.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு

யாருக்கு ஆசையில்லை பொத்திக் கொண்டு அமசடக்கியாக இருக்கிறார்கள்.

தொடர்ந்தும் முதலமைச்சர் பதவி வகிக்கும் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.

  1 hour ago, alvayan said:

எனக்கும் இந்த ஆசையிருக்கு...நானும் வரலாமா...நல்வழிகாட்டியினுதவி இருந்தால் சிறப்பு

ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா

உங்களுக்கும் பக்கத்தில தானே.

ஒரு பொடிநடை போட்டு வாறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

கிருபன் ஜி,

மனசை தளர விட வேண்டாம். உங்களுக்கும் அல்வாயானுக்கும் வெறும் 6 புள்ளிகள்தான் வித்தியாசம்😆.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பின்னொரு நாளில் இங்கிலாந்து மேட்சை ஒன்றை ஒரு வெள்ளையர் அருகில் இருந்து பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது …மேட்ச் முடிந்து எழும்பும் போதுதான் உறைத்தது அது லான்ஸ் குருஸ்னர். நீ லான்ஸ் குரூஸ்னரா என கேட்டேன்…ஆம் என கைலாகு கொடுத்து பிரிந்தார்.

ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன்.

எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன்.

எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள்.

தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவுஸ்திரேலியா

  • ஏராளன்

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • ரசோதரன்

  • வசீ

  • வாத்தியார்

  • நியாயம்

  • வாதவூரான்

  • சுவைப்பிரியன்

  • கோஷான் சே

  • நீர்வேலியான்

தென்னாபிரிக்கா

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • நுணாவிலான்

  • நந்தன்

  • செம்பாட்டான்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • புலவர

  • கந்தப்பு

  • பிரபா

  • கிருபன்

மேலே இருப்பவர்களில் நானும்எப்போதும் தமிழனும்மட்டும்தான் தென் ஆபிரிக்கா வெல்லும் கணித்துள்ள படியால் நாளையிலிருந்து இறங்கு முகம்தான் போல் தெரிகிறது. யாழ்களப் போட்டியாளர்களும் 12:12 என்று தெரிவு செய்திருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணியில் இங்கிலாந்துடனனான போட்டியில் 4 முழு அளவிலாலன பந்து வீச்சாளர்களை ஐந்தாவது பந்து வீச்சாளருக்கு பதிலாக பகுதிநேர பந்து வீச்சாளர்களையும் அவுஸ் பயன்படுத்தியிருந்தது.

பென்ஸர் ஜோன்சன் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினான் (காயம்?) அதனையும் சேர்த்து 13 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களை அவுஸ் பயன்படுத்தியது இறுதி ஓவரை பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர் மானஸினை பயன்படுத்தி இருந்தார்கள்.

அடம் சம்பா போலவே மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் சங்காவும் முழுநேர பந்து வீச்சாளர், ஆனால் அவரை போட்டியில் இறக்கவில்லை.

அவுஸை விட தென்னாபிரிக்கா பலமான அணி.

இந்த போட்டியிலும் அதே அணியுடன் அவுஸ் களமிறங்க வாய்புள்ளது, அனைத்து அணிகளும் பெரும்பாலும் இவ்வாறான கொளைகையினையே பின் பற்றுகின்றன.

இந்தியா அணியிற்கு இந்தநிலை இல்லை.

13 minutes ago, புலவர் said:

மேலே இருப்பவர்களில் நான் மட்டும்தான் தென் ஆபிரிக்கா வெல்லும் கணித்துள்ள படியால் நாளையிலிருந்து இறங்கு முகம்தான் போல் தெரிகிறது. யாழ்களப் போட்டியாளர்களும் 12:12 என்று தெரிவு செய்திருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது.

தென்னாபிரிக்க அணிதான் பலமான அணி, ஆனால் அவுஸ் அழுத்தமில்லாமல் விளையாடகூடிய அணி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

பின்னொரு நாளில் இங்கிலாந்து மேட்சை ஒன்றை ஒரு வெள்ளையர் அருகில் இருந்து பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது …மேட்ச் முடிந்து எழும்பும் போதுதான் உறைத்தது அது லான்ஸ் குருஸ்னர். நீ லான்ஸ் குரூஸ்னரா என கேட்டேன்…ஆம் என கைலாகு கொடுத்து பிரிந்தார்.

ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன்.

எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன்.

எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள்.

தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.

இப்படித்தான் ஒருநாள் சிறிலங்காவுக்கு விடுமுறையில் சென்ற பொழுது எனது உறவினர் இன்று கொழும்பு விஷ்ணு கோவிலுக்குப் போவோம் என்று 4ட்டிக் கொண்டு போனார். அங்கே ஜெயசூரியா வந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார். நான் அதுஜெயசூரியா என்று மனைவிக்கும் மகளுக்கும் மெதுவாகச் சொல்லிவிட்டு இருந்தாலும் சிறிது சந்தேகம் இருந்ததால் மெளனமாக இருந்தேன். பூசை முடிய கோவில் ஐயர் அவருடன் செல்பி எடுத்து விட்டு அவருடன் போட்டோ எடுக்கலாம் என்று சில பக்தர்களுக்கு கூறியதன்பின்னர் தெளிவடைந்து அவருடன் போட்டோ எடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் கிரிக்கேட் பார்த்து ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் என்று சொல்லுறீங்க‌ள் ஆன‌ ப‌டியால் இந்த‌ தோல்விய‌ ப‌ற்றி நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை அண்ணா👍.......................

எந்த தோல்வியினை பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன்.

எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன்.

எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள்.

தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.

உண்மைதான். நேரில் பார்க்கும் போது வேறு விதமாக இருக்கும். இந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கட் - ஸ்டம்பசை விட கொஞ்சம் வளர்த்தி. அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் டிவியில் அப்படி தெரியாது.

இப்படி பல சுவாரசியங்கள் உள்ளன.

நான் இலங்கையில் ஒரு first class கிளப்பின் 17 வயதுக்கு கீழ் பட்ட அணியில் 1st change bowler. அப்போ எனக்கு 15+தான். இலங்கை அணி, இந்திய, மே.இ தீவுகள், தெ.ஆ, இங்கிலாந்து பயிற்சியின் போது, நெட்சில் இல்லாமல் சிலசமயம் கிரவுண்டில் பேட், போல் பண்ணுவார்கள் அப்போ பீல்டிங் நாங்கள்தான். அதே போல் மேட்சில் டிரெசிங் ரூமுக்கு அடுத்த வரிசையில் எங்களுக்கும் பேர்சிக்கும் இருக்கைகள் இருக்கும்.

அசாருதீனும் பேர்சியும் ஆளோடு ஆள் தனகுவார்கள். வூக்கேரி ராமன் என ஒரு தமிழக வீரர் இந்தியன் ஓப்னராக இருந்தார் - மேட்ச் நடக்கும் போதே டிரெசிங் ரூமில் இருந்து தொடர்ந்து சிகரெட் பத்தி கொண்டிருப்பார். இந்திய அணியின் ஸ்பொன்சரும் வில்ஸ் சிகெரெட்.

1996 முந்தைய கிரிகெட்டில் பணம் பாயாத காலங்கள் அவை. வீரர்கள் மிக இயல்பாகவே இருந்தார்கள். தாஜ் சமுத்திரா ஹோட்டல் போனால் மிக சாதாரணமாக காணலாம்.

இலண்டன் வந்த பின், ஒரு நாள் அரவிந்தவை பவுண்ட இலாண்ட் எனும் மலிவு விலை கடையில் கண்டேன். கதைக்கவில்லை. ஆனால் எனது பகுதியில் குடியேறியுள்ளதாக சிலர் கூறினர்.

31 minutes ago, புலவர் said:

மேலே இருப்பவர்களில் நானும்எப்போதும் தமிழனும்மட்டும்தான் தென் ஆபிரிக்கா வெல்லும் கணித்துள்ள படியால் நாளையிலிருந்து இறங்கு முகம்தான் போல் தெரிகிறது. யாழ்களப் போட்டியாளர்களும் 12:12 என்று தெரிவு செய்திருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது.

இதுதான் பைனலாக வரக்கூடிய மேட்ச்சாகவும் இருக்க கூடும்.

தெ. ஆ வெல்ல வாய்ப்புகள் உண்டு. உள்ளதில் அதிக மிரட்டல் உள்ளதும், balance உள்ளதும் அவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க பிரபலங்கள் இந்தக் களத்தில இருக்கினம் போல. சச்சின் வந்தாக, குலுஸ்னரோட பாத்தாக, ஜெயசூரியாவோட கும்பிட்டாக..... இப்பிடிச் சொல்வி எங்களுக்கு எரிச்சலூட்டுறதே வேலையாப்போச்சு. 😛

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.