Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

களைகிறது பெரியாரிச மாயை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களைகிறது பெரியாரிச மாயை!

ஆம், ஏமாந்தது போதும்..! தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!

இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!

"பெரியார் ஒரு தமிழ் இன விரோதி" என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், "குருவிகள்" என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் "தேடற்சரம்" வலைப் பதிவின் மூலம்.

"தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய "ஆப்பு" ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!

"சந்திப்பு என்னும் வலைப் பதிவர்" இத்தகைய "தீரா-விட" சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-

பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!", என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் - இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?

அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?

திராவிட மாயை என்பது ஒரு "விஷச் செடி" என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.

"திண்ணை" இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய "ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை "திண்ணை" வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், "விஸ்வாமித்ரா" அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.

ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் "காலச்சுவடு" கட்டுரையில்.

தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள்.

http://kichu.cyberbrahma.com/archives/159

---------------------

இது இந்திய இறையாண்மையை மதித்து.. தமிழனாக வாழ விரும்பும் தமிழகத் தமிழனின் குரல்.

Edited by வலைஞன்
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. குருவிகள் இதைவிட வேறென்ன சொல்லப்போகிறது.. அதை நம்பி அடுத்தவரும் கட்டுரை படைத்திட்டார்..

அடிமைத்தனத்திற்கும் சுரண்டலுக்கும் ஆதரவானவர்கள் எப்போதுமே பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்தான். இதில் புதிதாக என்ன இருக்கப்போகின்றது.

பார்ப்பனியத்தை ஆதரிப்பதனூடாக சுரண்டலையும் அடிமைத்தனைத்தையும் மறைமுகமாக ஆதரிப்பவர்கள் சாதாரண மக்களின் எதிரிகளாகவே கருத்தப்படவேண்டும். அவர்களது கருத்தியலும் மக்கள்விரோதக் கருத்தியலாகவே கொள்ளப்படவேண்டும். இவர்களுடன் இணக்கம் காணவோ, சமரசம் காணவோ முடியாது. ஏனெனில் எப்போதுமே "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்ற கொள்கையில் உள்ளோர் இவர்கள். இவர்களுடம் அறிவுபூர்வமான ஒரு விவாதத்தைக் கூட நடத்தமுடியாது. அறிவியல் பூர்வமான அடிப்படைகள் எதுவும் பாவிக்க்கப்படாது, ஆழமான வாசிப்பற்ற, நுனிப்புல் மேய்ந்து அறிவியல்ரீதியான கட்டுரை எனப் "பம்மாத்து" விளையாட்டுக்கள் காட்டுவர்.

எப்போதுமே சாதாரணமான்வர்களின் பலவீனங்கள் என்ன என்பதையே ஆராய்ந்து கொண்டிருக்கும் இவர்கள், அப்பலவீனங்களை எங்கனம் தம் சுயநலத் தேவைகளுக்காகப் பாவிக்கலாம் என்பதிலேயே குறியாய் இருப்பவர்கள். கருத்தியல்ரீதியாகக் கூட சமூகத்திற்கு எதிரான தமது கொள்கைகளை மெதுவாக மற்றவர்கள் மேல் திணிக்க முயல்பவர்கள். இதற்காக எத்தகைய முகமூடிகளையும் அணியத் தயங்காதவர்கள். ஆரோக்கியமான விவாதம் செய்ய முனையாமல் எதிர்க் கருத்துக்களை அழிக்க முயல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். விவாதப் பரப்பை மட்டுப் படுத்த முயல்வது, இழிவாகக் கருத்துக்கள் வைப்பது, கருத்துக்களைத் திசை திருப்புவது, கருத்தாளர்களிடையே முரண்பாட்டை வளர்க்க முயல்வது எனப் பல தந்திரங்களைப் பாவித்துக் தமது கொள்கைகளை நிலை நிறுத்துவது இவர்களின் பண்பாகும்.

இதற்கு மேல் கூற எதுவுமில்லை!

Edited by இணையவன்
கடுமையன சொற்பிரயோகங்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பானியம், பார்ப்பானியம் என்று சொல்லிக் கொண்டு தாங்கள், தங்களுக்குக் கீழ் கணிக்கப்பட்டவர்களுக்குச் செய்த துரோகங்களை மறைப்பதற்கு எடுத்துக் கொண்ட கபடச் செயலே, பகுத்தறிவு. இவர்கள் மற்றவர்களை அடிமையாக்கிச் சுறண்டி வாழ்ந்த வாழ்க்கையை அப்போது மன்னித்துக் கொள்ளமுடியுமா?

பார்ப்பானி செய்தது தப்பு என்றால், இவர்களும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே! பார்ப்பானியைக் குற்றம்சாட்டி ஒரு போதும் தப்பித்து விட அனுமதிக்கக் கூடாது.

சிலர் நியாயமாக விவாதிக்கத் தெரியாமல் பார்ப்பானி இப்படித் தான், இவர்கள் இப்படித் தான், முயலுக்கு மூன்று கால் என்று என்று ஒரே வட்டத்துக்குள் நின்று மற்றவர்களைச் சொல்லிக் கொள்வதே விவாதமாக்கிக் கொள்ளவார்கள். ஒரு கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலம், அதை உண்மையாக்கிடலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பானிக்கும் பார்ப்பனியவாதிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது..

இதற்கு மேல் கூற எதுவுமில்லை!
  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப் பட்ட வார்த்தைகள் பாவித்தாலும், ராமசாமிலிசம் என்ன நோக்கத்தில் கதைத்தது என்பதைப் புரிந்து கொள்ளாத அளவு மற்றவர்கள் ஒன்றும் கற்றுக்குட்டிகள் அல்ல.

உங்களுக்கு வேண்டுமானால் பேச ஒன்றுமில்லாமல் இருக்கலாம். எமக்கு நிறைய இருக்கின்றது. யாழ்நிர்வாகமும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் தான் எம் வார்த்தைகளை முடக்கிப் போட்டிருக்கின்றது.

எனக்கு ஒரு விடயம் சரியாகப் புரியவில்லை.

ஒருபுறம் பெரியாரை தலித் விரோதி என்று வெங்கடேஸ்வரன் போன்ற சில தமிழ்நாட்டுத் தமிழர்கள் எழுதுகிறார்கள்.

மறுபுறம் விடுதலைப் புலிகளை தலித் விரோதிகள் என்று சொல்லிக் கொண்டு, பாரிஸில் சிலர் மாநாடு செய்கிறார்கள்.

பெரியார் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் அவர்களுடைய எதிரிகள் ஒரே விதமான குற்றச்சாட்டுக்களை வைப்பது என்பது தற்செயலாக நடக்கிறதா?

அல்லது இதற்கு தகுந்த காரணம் எதாவது இருக்கிறதா?

எனக்கு உண்மையிலேயே பெருத்த ஆச்சிரியமாக இருக்கிறது. தந்தை பெரியார் மீது என்னவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்தாலும், மறுபுறம் அதே குற்றச்சாட்டுக்களை சிலர் விடுதலைப் புலிகள் மீதும் வைப்பதைப் பார்க்கிறேன்.

இது ஏன்?

யாராவது விளங்கப்படுத்துவீர்களா?

எனக்கு ஒரு விடயம் சரியாகப் புரியவில்லை.

ஒருபுறம் பெரியாரை தலித் விரோதி என்று வெங்கடேஸ்வரன் போன்ற சில தமிழ்நாட்டுத் தமிழர்கள் எழுதுகிறார்கள்.

மறுபுறம் விடுதலைப் புலிகளை தலித் விரோதிகள் என்று சொல்லிக் கொண்டு, பாரிஸில் சிலர் மாநாடு செய்கிறார்கள்.

பெரியார் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் அவர்களுடைய எதிரிகள் ஒரே விதமான குற்றச்சாட்டுக்களை வைப்பது என்பது தற்செயலாக நடக்கிறதா?

அல்லது இதற்கு தகுந்த காரணம் எதாவது இருக்கிறதா?

எனக்கு உண்மையிலேயே பெருத்த ஆச்சிரியமாக இருக்கிறது. தந்தை பெரியார் மீது என்னவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்தாலும், மறுபுறம் அதே குற்றச்சாட்டுக்களை சிலர் விடுதலைப் புலிகள் மீதும் வைப்பதைப் பார்க்கிறேன்.

இது ஏன்?

யாராவது விளங்கப்படுத்துவீர்களா?

இரண்டு எதிர்ப்புக்களும் வேறுவேறானவை அல்ல. ஆதிக்கப் போட்டியின் இரு முகங்களே. இதை இயக்கும் சூத்திரமும், உருப் போடும் மந்திரமும் ஒரே இடத்தில் இருக்கின்றன.

:rolleyes::unsure:

தந்தை பெரியார் தமிழ் விரோதி ?

பெரியார் தமிழை முன்னிறுத்தவில்லை, மாறாக 'திராவிடர் இயக்கம்' என்று சொல்லை முன்னிறுத்திவிட்டார், அவர் தம்மை கன்னடர் என்று கருதி இருந்ததாலேயே தான் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர், எனவே பெரியார் தமிழுக்கு விரோதியா ? என்கிற ஐயப்பாட்டை நண்பர் அரைபிளேடு வெளிப்படுத்தினார்.எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பொதுமக்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதில் அதிக மீன்களை சுலமாக பிடிக்க முடியும் என்பது ஒரு வகை உத்திதான். பெரியார் கொள்கைகளை அறிந்த நண்பர் அரைபிளேடு அதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. 'திராவிட' என்ற சொல்லே 'சூத்திர' பாசை என்று இழித்துக் கூறப்பட்ட தமிழை முதன் முதலில் பலுக்கத் தெரியாமல் (உச்சரிப்பில்) திரித்துச் சொல்லப்பட்ட தமிழின் மற்றொரு பெயர் ( பாவணர் கூற்றுப்படி தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட). பின்னாளில் தமிழிலிருந்து திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் மலையாளம். இவை பேசப்படும் நிலப்பரப்புகளை நாம் இன்னாளில் திராவிட நிலங்கள் என்று புதிதாக அடையாளப்படுத்தவில்லை. அவை ஏற்கனவே வடமொழியாளர்களால் அப்படி குறியீடு செய்யப்பட்டவைதான். சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் திராவிட என்ற சொல்லை பார்பனீய அல்லது பிராமன சித்தாந்தங்களுக்கு எதிராக பயன்படுத்தி அந்த சொல்லை வெளிக் கொணர்ந்தவர் அயோத்திதாச பண்டிதர். அதன் பிறகே பெரியாரும் அதே சொல்லை திராவிட இயக்கம் என்ற பெயருக்கு பயன்படுத்திக் கொண்டார்.எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிய கொடுமைகள் நடப்பதாக பெரியார் நினைத்திருந்தால் 'தமிழர் இயக்கம்' என்று கூட வைத்திருந்திருப்பார். அவர் கேரளா வைக்கம் வரை சென்று போராடி இருப்பதை நினைவு கூர்ந்து பார்க்கையில் ஒட்டு மொத்த திராவிட நிலப்பரப்பும் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று பரந்த நோக்கில் 'திராவிடர் இயக்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பெரியார் தம் இயக்கம் வலுப்பெற்றிருந்தாலும் அதை அரசியல் கட்சியாக்கி நிறுவனப்படுத்த பெரியார் நினைத்தவர் அல்ல. இந்நாளில் திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து 'தூய அரசியல்' செய்து கொண்டிருப்பதை பார்க்கையில் பெரியாரின் முன்னறிதலால்(தீர்க தரிசனம்) உணர்ந்திருந்து, திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக வளர்ந்தால் அதனால் சமரசங்கள் ஏற்பட்டு கொள்கைகள் திரியும் என்று நன்கு உணர்ந்திருந்தார்.பெரியார் சுதந்திர நாளை துக்க தினமாக அறிவித்ததற்கு காரணமே ஆட்சி அதிகாரம் என்பது ஆதிக்க சக்திகளின் கைகளில் வீழ்ந்து மீண்டும் இந்திய பழமை வாதத்தைத் தாங்கிப் பிடித்து, மூவர்ண கொடி என்பது நான்கு வருண கொடியாகவே ஆகிவிடும் என்று நம்பியதால் தான். அதையே தான் மகாத்மா காந்தி வேறு வடிவில் வலியுறுத்தினார். அதாவது சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். பெரியார் சொன்னதும் சரி, மகாத்மா சொன்னதும் சரி இரண்டுமே ஆதிக்க சக்திகளின் கையில் மீண்டும் இந்தியா விழுந்துவிடும் என்று நன்கு உணர்ந்தாதால் ஏற்பட்ட மாற்றுச் சிந்தனைகள். அண்ணாதுரை போன்றவர்கள் சுதந்திர தினம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் குறுதிக்கு கிடைத்த பலன் என்றும் அந்த சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தது தவறு என்று போர் கொடி தூக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். திராவிட கட்சிகளின் உதயம் என்பது சுதந்திரம் அடைந்ததை குறித்த வெளிப்படையான கருத்துக்களால் பெரியாருக்கும் அவரது பற்றாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவான இயக்கம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவாக்கி முதல்வராக அமர்ந்த அண்ணாதுரை அவர்களும் அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கி தாம் பெரியாரின் பாசறையை சேர்ந்தவர் என்று பெரியாருக்கே புரியவைத்தார் என்பது பெரியார் திரைப்படத்திலும் பதிவாகி இருக்கிறது.பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :lol: பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.'மெல்லத் தமிழினி சாகும்' என்று சொல்லில் தமிழ் வீழவேண்டும் என்ற ஆசையில் தான் பாரதி தமிழுக்கு சாபம் கொடுத்தான் என்று நாமாகவே நினைத்து கேள்வி எழுப்பி பாரதியின் தமிழ்பற்றை குறைபட்டுக் கொள்ளவது எவ்வளவு நம் அறியாமையை காட்டுமோ, அது போல் தான் தந்தை பெரியாரின் தமிழ் குறித்த பேச்சுக்கள் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்.

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_10.html

பெரியார் தமிழின விரோதியா?

பார்ப்பணீய கொடுங்கோன்மையின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த தமிழகத்தை வீறு கொண்டு எழச் செய்த தந்தை பெரியாருக்கு எதிராக பார்ப்பனர்களாலும், பார்ப்பனதாசர்களாலும், ஆரிய அடிமைகளாலும் வரலாற்றின் வழிநெடுக வைக்ககப்பட்ட விமர்சனங்களும், கேள்விகளும் வன்மும் வக்கிரமும் தெறிக்க கூடியவை, அந்த வகையில் சில நேரங்களில் இது போன்ற முட்டள்தனமான அவ தூறுகளும் ஆதரங்களென முன்வைக்கப்படும் என்று நமக்கு சொல்வது போல ஒருவர் பதிவிட்டிருக்கிறார், பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10

http://kedayam.blogspot.com/2007/10/blog-post.html

இன்று ராமன் பாலம் என்ற புராணப் புழுகை வைத்து பார்பன மதவெறி கும்பல் தனது கோர முகதத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது, இந்த நிலையில், இந்தியாவின் மற்றைய இனக்குழுக்களெல்லாம் பார்ப்பனீயத்தின் முன் மண்டியிட்டு கிடக்கும் போது, தமிழகம் மட்டும் இன்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது என்று சொன்னால் அதற்கு காரணமானவர் தந்தை பெரியார்.பெரியார் பிறந்த மண்ணில் ராமனை வைத்து பிழைப்பு நடத்து முடியாது என்பதனை புரிந்து கொண்டுவிட்ட பார்ப்பன இந்து மதவெறியர்கள் கொல்லைபுற வழியில் உள்ளே வர முனைந்து கொண்டிருக்கிறார்கள். பம்பாயிலிருந்து தமிழர்களை அடித்துவிரட்டிய இந்து மதவெறி நாய்கள் இன்று ஈழத்தமிழர்கள் மீது திடீர் கரிசனம் கொண்டு உணவு பொருள் சேகரிக்கிறார்கள். இந்த நிலையில் இங்கு ஒரு இனவெறியர் தமிழ் தேசியம் என்ற முகமூடியில் பெரியாரை அவதூறு செய்கிறார் என்பதனை இதனோடு இனைத்துப்பார்க்கும் போது நமக்கு நெஞ்சம் கொதிக்கிறது., அந்த இனவெறியரின் பதிவில் போடவிருந்த பின்னூட்டத்த்கினை அதன நீளம் கருதி இங்கு பதிவாக போடுகிறேன்...

1. 1956ல் இந்தியாவில் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படும் முன்னமேயே, தமிழகம் தமிழ்நாடு என்ற பெயரற்று, சென்னை மாகாணமாக இருந்த காலத்திலேயே 1938ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கை முதன்முதலில் முன் வைத்தவர் தந்தை பெரியார். அதே ஆண்டில் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து ஒரு மிகப்பெரிய கிளர்ச்சியையும் அவர் நடத்தினார். தமிழ்மொழியின் வளர்ச்சி காட்டுமிராண்டி கால வளர்ச்சியோடு நின்று போய்விட்டதே அதற்கு மேலே அதனை அறிவியல் மொழியாக எடுத்து செல்லவேண்டிய கடமையை எவரும் செய்யவில்லையே, தமிழை வைத்து பரிசில் பெறுவதும் பிழைப்பு நடத்துவதும்தானே புலவர்களுடைய வேலையாக இருந்தது, மேலும் காட்டுமிராண்டி காலத்து மூடநம்பிக்கைகளையும், அடிமைமுறையை விட கேவலமான சாதியையும் கொண்ட பார்ப்பன இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாதபடி அதனை பிணைத்துவைக்கும் வேலையைத்தானே பெரியாரின் காலத்து புலவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் அந்த ஆதங்கத்தில்தான் பெரியார் அப்படி கூறினாரே ஒழிய தமிழை பழித்து பேசும் பழக்கத்தை அவர் கொண்டிருக்கவில்லை, தமிழர்களுக்கும், தமிழுக்கும் எதிராக ஆரியம் எழுந்துதாக்க எத்தனித்த போதெல்லாம் அதனை எட்டி உதைத்து இடுப்பெலும்பை முறித்தவர் தந்தை பெரியார். சர்வாகம், பெளத்தம், சித்தர்கள் என்ற ஆரிய எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடித்தவர். தமிழின் வளர்ச்சிக்கு அவர் எந்த சீர்திருத்ததையும் முன்மொழியவில்லை என்று கூறுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. தமிழ்மொழியின் வடிவம் அறிவியலுக்கு உகந்தார் போல் அமைய வேண்டும் என்று எழுத்து சீர்திருத்தத்தை முன்மொழிந்தது மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும், உலக அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்பவும் அமைய வேண்டும் என்று விருப்பம கொண்டு செயல்பட்டவர் தந்தை பெரியார். அவர் இல்லாது போயிருந்தால் இந்த படிக்காசு புலவர்கள் பரம்பரையில், பாரதிதாசன் பரம்பரை என்ற ஒன்று உருவாகமலே போயிருந்திருக்கும்.

2. நீங்கள் எழுதியிருக்கும் விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக பெரியாரின் வாழ்நாள் பணிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவாவது படித்துவிட்டு எழுதினால் நன்றாயிருக்கும், பெரியார் வெளிநாட்டவரகளின் வளர்ச்சியை குறிப்பிட்டு காட்டி தமிழர்களை அந்த திசையில் முன்னேற தூண்டினாரே ஒழிய அவர்களிட ம் அடிமைப்பட்டு அவர்களது மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும்படி அவர் என்றுமே கூறியதில்லை. அதுவும் ஹிந்தி ஆதிக்கத்தை பெரியார் அனுமதித்தார் என்று சொல்லுமளவுக்கு பெரியாரை பற்றிய உங்கள் புரிதல் இருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் பரிதாபத்திற்குரியது.

3. இன்றும் இந்தியாவில் பார்ப்பனீயத்தின் கறை படியாமல் அதனை எதிர்த்து கொண்டு தனது இராண்டயிரமாண்டு மரபை உயர்த்தி பிடித்தபடி ஒரு இனம் இறுமாந்து நிற்கிறது என்று சொன்னால் அது தமிழினம்தான் அதற்கு காரணம் தந்தை பெரியார்தான். இன்று இராமனை பற்றி பேசினால் உத்தரபிரதேசமும் கன்னடமும் ஒரே அலைவரிசையில் கொந்தளிக்கிறது, அது பார்ப்பனீய அலைவரிசை, அந்த இனங்கள் ஆரிய பண்பாட்டுக்கு அடிமைப்பட்டு விட்டதன் வெளிப்பாடு. ஆனால் தமிழகமோ பார்பனீயத்தை எள்ளி நகையாடுகிறது, இராமனை செருப்பால் அடித்தால் தமிழக மக்கள் சிரிக்கிறார்கள்.தமிழ் தேசத்தை இப்படி தனித்துவம்மிக்கதாக, பார்ப்பனீய எதிர்ப்பின் கோட்டையாக கட்டி எழுப்பியவர் யார்? அவர்தான் தந்தை பெரியார்.

4. தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன்முதலில் முழங்கியவர் தந்தை பெரியார், மேலும் விடுதலை பத்திரிக்கையின் முதல்பக்கத்திலேயே அந்த முழக்கத்தை பொறித்து வெளியிட்டவர். இன்னும் எவ்வளவோ ஆதாரங்களை கூற முடியும், ஆனால் வரலாற்றை அறியாமல் போகிற போக்கில் சேறுவாரி இறைப்பவர்களிடம் நேரத்தை வீண் செய்ய விரும்பாததால் இதனை பற்றி இந்தளவில் நிறுத்தி கொள்கிறேன். மேலும் தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை அங்கீகரிக்காதவர்களெல்லாம் இந்தியாவில் தமிழர்களூக்கான நிலப்பரப்பை அங்கீகரிக்காதவர்கள் என்று பேசுவது எவ்வளவு அபத்தமானது.

5. பெரியாரிடமிருந்து அண்ணாத்துரை கொள்கையளவில் முரண்பட்டு வெளியேறி தனிதமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தாரா? அவர் திராவிட நாட்டு கோரிக்கையைத்தான் முன் வைத்துச் செயல்பட்டார், திராவிட நாடு இதழும் நடத்தினார், பின்னர் மத்திய அரசு 1962ல் பிரிநினைவாத தடுப்புச் சட்டம் கொண்டு வந்த போது அந்த திராவிட நாட்டு கோரிக்கையையும் கைவிட்டார்., திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா வெளியேறிய போது, பெரியாரை தூக்கியெறிந்து விட்டு அவரிடமிருந்து விலகி மேடைகளில் அண்ணாவுக்கு ஆதரவாய் முழங்கியவர் பெரியாரின் அண்ணன் மகனான ஈ.வெ.கி.சம்பத் இன்றைய மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச இளங்கோவனின் தந்தை. பெரியாரிடமிருந்து முரண்பட்டு விலகிய அவர் அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாவிடமிருந்து விலகி வெளியேறி தமிழ் தேசிய கோரிக்கையை முன் வைத்து கட்சி தொடங்கினார். உங்களின் வரயறைப்படி பார்த்தால் அவர் கன்னடர். ஒரே நகைச்சுவைதான் போங்கள்!! ஒரு தகவலுக்கு சொல்கிறேன், 1945ல் நீதி கட்சியை திராவிட கழகமாக மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மாணத்திற்கு அண்ணாத்துரை தீர்மாணம் என்றுதான் பெயர், திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டலாம் என யோசனை தெரிவித்தவரும், அதனை முன்மொழிந்தவரும் அண்ணாத்துரைதானேயொழிய தந்தை பெரியாரல்ல,. சரி, அண்ணா எப்போது தனித்தமிழ்நாடு கேட்டார் என்பதையும், பெரியார் எப்போது ஹிந்தி திணிப்பை ஆதரித்தார் என்பதையும் கூற முடியுமா!! ஆனால் ஒன்று நீங்கள் இப்படி இனவெறியோடு அணுக முயன்றால் எப்போதும் முடிவு அபத்தமாகத்தான் இருக்கும், மரபு தமிழ் தேசியம் பேசியவர்களின் சித்தாந்த குரு வெங்காலூர் குணா அண்ணாத்துரையையும், கருணாநிதியையும் தெலுங்கர் என்றது போல .

6. செம காமெடி, பெரியார் எல்லொரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று சொன்னார், அதனால் தமிழ் இனமே அழிந்து போயிருக்கும், இப்படியெல்லாம் பேச எப்படிய்யா முடியுது உங்களால? நீங்க சுப்பரமணிய சாமிகிட்ட டியூசன் படிக்கிறீங்களா?

7. மீண்டும் மீண்டும் காமெடி... சரி இதுக்கல்லாம் பொத்தாம்பொதுவாக பேசாமல் பெரியாரின் சொற்களிலேயே ஆதாரம் காட்டி எழுதினீர்கள் என்றால் பேசலாம். இப்படி மொக்கையா எழுதினால் என்ன பேசுவது.

8. எப்போது எப்படி எதனை ஆதாரமாக கொண்டு எவரை பற்றி பேசினார் என்று கூறவும் மேலும் விவாதிக்கலாம்.

9. ஸ்ஸ்ஸப்பா ஒன்பதாவது கேள்வியிலதான் பூனைக்குட்டி வெளியில வருது.... பிராமண வர்க்கமா? அட சுவரசியமா இருக்கே.. அது என்ன வர்க்கம் உழைக்கும் வர்க்கமா, ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற, பாவப்பட்ட வர்க்கமா? பெரியாரின் சாதி எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும்தான் தமிழ்நாட்டில் சாதி இருப்பதற்க்கு காரணம் என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு, நிச்சயம் நீங்க சுப்ரமணியசாமி ஸ்டூடண்டுதானுங்கோ.

10. பெரியார் என்ன தமிழர்களுக்கு ஞான்ஸ்தானம் கொடுத்து எல்லோரையும் திராவிடராக்கி விட்டாரா? நீங்கள் தொண்டை கிழிய கத்தும் ஈழத்தையே சுப்பிரமணிய சாமியும் இதர பார்ப்பனர்களும் இந்தியாவின் 26வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பயங்கரவாத கும்பலின் பக்கம் நின்று நீங்கள் இங்கு அவதூறு மூடைகளை அவிழ்த்து விடுவது, பெரியார் தமிழினத்தின் இருப்பையே கெள்விக்குள்ளாக்கினார் என்று சொல்வது கேவலமானத்தாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

:unsure::rolleyes:

Edited by narathar

தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு தெரியாமால் குருவி அவர்கள் கிச்சு கிச்சு மூட்டுவதாகத் தான் தமிழ் மணப் பதிவர்கள் எல்லா இடத்திலும் பதிவிடுகிறார்கள்.அத்தோடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சாதி வெறி பிடித்த வெள்ளாளரின் குறுந்தேசிய வதம் என்பதற்கு ஆதராமாக குருவியாரின் பதிவுகளே புலி எதிர்ப்பாளர்களுக்கு வெகுவாகக் கை கொடுக்கின்றன.

இவ்வாறு சுவாரசியமாக இருக்கும் குருவிகளின் பதிவை வாழ்த்தி ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் போட்ட பதிவை நண்பர் நெடுக்கலபோவான் போட முதல் கொன்சம் சீரியாசா சிந்திக்கலாம்.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத ஆதரவுச் சக்திகளனா திராவிட இயகத்தவரிடையே வெறுப்பை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கும் பாரிஸ் தலித்துக்களுக்கும் டக்கிளச் தேவனதாவுக்கும் உதவி செய்வதை தயவு செய்து நிறுத்தினால் பேருதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. குருவிகள் இதைவிட வேறென்ன சொல்லப்போகிறது.. அதை நம்பி அடுத்தவரும் கட்டுரை படைத்திட்டார்..

அடிமைத்தனத்திற்கும் சுரண்டலுக்கும் ஆதரவானவர்கள் எப்போதுமே பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்தான். இதில் புதிதாக என்ன இருக்கப்போகின்றது.

பார்ப்பனியத்தை ஆதரிப்பதனூடாக சுரண்டலையும் அடிமைத்தனைத்தையும் மறைமுகமாக ஆதரிப்பவர்கள் சாதாரண மக்களின் எதிரிகளாகவே கருத்தப்படவேண்டும். அவர்களது கருத்தியலும் மக்கள்விரோதக் கருத்தியலாகவே கொள்ளப்படவேண்டும். இவர்களுடன் இணக்கம் காணவோ, சமரசம் காணவோ முடியாது. ஏனெனில் எப்போதுமே "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்ற கொள்கையில் உள்ளோர் இவர்கள். இவர்களுடம் அறிவுபூர்வமான ஒரு விவாதத்தைக் கூட நடத்தமுடியாது. அறிவியல் பூர்வமான அடிப்படைகள் எதுவும் பாவிக்க்கப்படாது, ஆழமான வாசிப்பற்ற, நுனிப்புல் மேய்ந்து அறிவியல்ரீதியான கட்டுரை எனப் "பம்மாத்து" விளையாட்டுக்கள் காட்டுவர்.

எப்போதுமே சாதாரணமான்வர்களின் பலவீனங்கள் என்ன என்பதையே ஆராய்ந்து கொண்டிருக்கும் இவர்கள், அப்பலவீனங்களை எங்கனம் தம் சுயநலத் தேவைகளுக்காகப் பாவிக்கலாம் என்பதிலேயே குறியாய் இருப்பவர்கள். கருத்தியல்ரீதியாகக் கூட சமூகத்திற்கு எதிரான தமது கொள்கைகளை மெதுவாக மற்றவர்கள் மேல் திணிக்க முயல்பவர்கள். இதற்காக எத்தகைய முகமூடிகளையும் அணியத் தயங்காதவர்கள். ஆரோக்கியமான விவாதம் செய்ய முனையாமல் எதிர்க் கருத்துக்களை அழிக்க முயல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். விவாதப் பரப்பை மட்டுப் படுத்த முயல்வது, இழிவாகக் கருத்துக்கள் வைப்பது, கருத்துக்களைத் திசை திருப்புவது, கருத்தாளர்களிடையே முரண்பாட்டை வளர்க்க முயல்வது எனப் பல தந்திரங்களைப் பாவித்துக் தமது கொள்கைகளை நிலை நிறுத்துவது இவர்களின் பண்பாகும்.

இதற்கு மேல் கூற எதுவுமில்லை!

இந்தப் பதிலும் ஈ வெ ராமசாமியின் பிராமண வெறியும் ஒரே வகையினதே. உங்களுக்கு குருவி என்பவரின் கருத்து என்பதுதான் முன்னிற்கு நிற்கிறதே தவிர.. அவர் கையாண்டு முன்வைத்துள்ள கருத்துருவாக்கத்தை நிராகரிக்க எந்த அறிவுபூர்வமான வழிமுறையை தேர்ந்தெடுத்தீர்கள்..???!

அவரின் கருத்துக்கு கருத்தெழுதிய ஸ்ராலின் எப்பவரும் குருவியை.. எள்ளி நகையாட எடுத்துக் கொண்ட நேரத்துக்கு ஈ வெ ராமசாமியின் கருத்துக்களின் உள் மறைந்திருக்கும் போலித்தனமான சமூகவிரோத நிலைகளை குருவிகள் என்பவர் இனங்காட்டியதை போக்கடிக்க வகை செய்யல்ல..!

உதாரணத்துக்கு ஒன்று:

பெண்கள் திருமணமே செய்யக் கூடாது. பெண்களுக்கு கர்ப்பமே பெரும் தடை. என்பதை குருவி என்பவர் எடுத்து சமூகத்துக்குக் காட்டியதை நிராகரிக்க உங்களிடம் உள்ள அறிவுபூர்வமான ஏன் விஞ்ஞான மயப்படுத்திய அறிவைக் கொஞ்சம் இங்க வெளியிடுறீங்களா..??!

மலையகத்தில தமிழர் சனத்தொகை பெருக்கத்தை தடுக்க... குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்த சனத்தொகைப் பெருக்கத்தை தவறாப் பாவிக்கிற சிங்கள அரசை இனங்காட்டுறீங்க.. ஆனால் தமிழ் பெண்கள் பிள்ளை பெற்றுக்கிறது அவங்கட சுதந்திரத்துக்கு தடை என்றதை சமூகப் புரட்சியா சித்தரிக்கிறீங்க. இதுக்குப் பின்னால உள்ள அறிவியலை கொஞ்சம் மடைதிறந்து விடுறீங்களா கேட்பம்.. அறிவம்...! :lol:

சும்மா விஞ்ஞானம் அறிவு என்று உச்சரிச்சாப் போல அது இங்க இருப்பதாக இல்ல உங்களின் கருத்துக்களில் மிகுந்திருப்பதாக கருத மக்கள் இப்ப படிப்பறிவற்ற கூட்டமாக இல்ல என்பதை உணர்ந்திட்டு.. எழுதிறது நல்லம்.

தமிழகத்தில் உண்மை நிலை என்ன என்பதை எல்லோரும் அறிவாங்க. நீங்க தீபாவளி தமிழர் பண்டிக்கை இல்லை என்று அளக்கிறீங்க.. ஆனா மக்கள் பெருமளவில் கொண்டாடினம். நீங்க எங்க மக்கள் எங்க.. இப்ப புரியனும் சார் யார் சமூகத்தை விட்டு தூர நின்று கருத்து வைக்கிறீங்க என்பதை.

குருவிக்கு சாட்டை அடி வழங்கிட்டம் என்று பெருமைப்பட பதிவு செய்யாதேங்க. உங்கள் அறிவுபூர்வமான சமூகப் பார்வையை கொஞ்சம் விளக்கிச் சொன்னீங்கண்ணா.. அதுக்குள்ள உள்ளது அறிவா இல்ல அறிவீனமா என்பதை மக்கள் இனங்காண வசதியா இருக்கும்.

ஒருதலைப்பட்சமா நீங்களே உங்கள் கருத்துக்களை அறிவியல்பூர்வம் என்று இனங்காட்டிக்க முனையுறது சுத்த பித்தலாட்டத்தனத்தின் வெளிப்பாடாவே எனக்குத் தெரிகிறது. இதால மக்களுக்கு எதுவும் அறிவுபூர்வமா போனதாவும் தெரியல்ல. சும்மா அறிவுபூர்வம் என்ற உச்சரிப்புத்தான் போய்க்கிட்டு இருக்கு..!

:lol::unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

ஈவேரா சாமி தமிழக தமிழர்களுக்காக விட்டு போனது என்ன.? ஒண்றை ஒண்று தாக்கி கொள்ளும் திராவிட கட்சிகள் , பதவிவெறி கொண்ட தலைவர்கள்.... இதுக்கும் முன் இந்தியாவின் பண முதலைகள் எல்லாம் தமிழகத்தையும் மக்களையும் சுறண்டும் கொடுமை...

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் தமிழன்.. மாறி மாறி ஆட்ச்சிக்கு வரும் பெரியார் தொண்டர்கள் அவர்களுக்கு ஒண்றையுமே செய்ய வில்லை... அடிப்படை வசதிகள் என்பது கூட இல்லாமல் வசிக்கும் மக்களை சுரண்டுவதுக்கும் , அவர்களை வாக்கு இயந்திரமாக மட்டும் பயன் படுத்தும் அரசியல் வாதிகள். அடிப்பாடை வசதிகளை அவர்கள் யாருக்குமே செய்யவில்லை என்பதுதான் உண்மை...

தீவிர திராவிடவாதிகள் என்ன செய்கிறார்கள்..?? அப்படி கேட்டால்... இந்த அரசியல் வாதிகள் ஆட்ச்சியில் இருக்க மாறி மாறி ஆதரவு கொடுக்கிறார்கள்.... கூட்டம் போடுகிறார்கள், பொருமுகிறார்கள், வேலைக்கு போகும் தாள்த்தப்பட்ட தொண்டனை வைத்து களக பணி செய்கிறார்கள்... இந்த தலித் தொண்டன் வளர அவர்கள் பணி செய்வது இல்லை...

இதுதான் திராவிட இயக்கம்...!!

தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு தெரியாமால் குருவி அவர்கள் கிச்சு கிச்சு மூட்டுவதாகத் தான் தமிழ் மணப் பதிவர்கள் எல்லா இடத்திலும் பதிவிடுகிறார்கள்.அத்தோடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சாதி வெறி பிடித்த வெள்ளாளரின் குறுந்தேசிய வதம் என்பதற்கு ஆதராமாக குருவியாரின் பதிவுகளே புலி எதிர்ப்பாளர்களுக்கு வெகுவாகக் கை கொடுக்கின்றன.

இவ்வாறு சுவாரசியமாக இருக்கும் குருவிகளின் பதிவை வாழ்த்தி ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் போட்ட பதிவை நண்பர் நெடுக்கலபோவான் போட முதல் கொன்சம் சீரியாசா சிந்திக்கலாம்.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத ஆதரவுச் சக்திகளனா திராவிட இயகத்தவரிடையே வெறுப்பை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கும் பாரிஸ் தலித்துக்களுக்கும் டக்கிளச் தேவனதாவுக்கும் உதவி செய்வதை தயவு செய்து நிறுத்தினால் பேருதவியாக இருக்கும்.

நீங்கள் சொல்லும் கருத்து முக்கியமானது. யாழ் மையவாதம் என்ற கருத்துருவாக்கம் பரந்து விரிகின்றது. யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்து கிழக்கு நெருக்கடிகளுடன் பிரதேச வாதமாக என்னும் விரிவடைந்தது. தற்போது புலிகளுக்கும் தாழ்தப்பட்டவர்களுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டு கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்கின்றது. இதுவே தலித் மாநாடுக்கான பிரதான காரணம்.

ஈழத்தில் ஒரு அவலம் ஏற்பட்டால் இந்துதுவ வாதிகளோ அல்லது பார்ப்பானிகளோ பெரும் அரசியல் வாதிகளோ வீதியில் இறங்கி குரல் கொடுப்பதில்லை. மாறாக பெரியாரின் தொண்டர்களும் தாழ்த்ப்பட்ட மக்களுமே ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்கள்.

ஈழத்தமிழர்களை கொண்டு பெரியாரை தூற்றுவது என்ற ஒரு போக்கு

இரண்டாவது புலிகளுக்கும் தலித்துக்களுக்கும் முரண்பாடு என்பதை நிறுவுவது.

இவை இரண்டும் பொதுவாக தமிழக தமிழர்களின் இன உணர்வையும் ஈழத்தமிழர்களின் இன உணர்வையும் சிதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்ப்பில் கணிசமான வெற்றி கிடைக்கலாம்.

இந்த கருத்துருவாக்கத்திற்கு யாழ் மையவாதத்தின் பிதாமகன்கள் பேருதவி வழங்குவார்கள் என்பதும் உண்மையே. இந்த மையவாத பிதாமகன்களான மேலாதிக்கவாதிகளுக்கு இன விடுதலை ஒரு பொருட்டாக எப்போதும் இருந்ததில்லை. சிலர் விடுதலைப்போரை ஆதரிப்பதினூடாகவும் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டனர். அவர்கள் இவ்வாறான பெரியார் எதிர்ப்பு விசயங்களில் இன விடுதலையா மேலாதிக்கமா என்ற கேள்விக்கு மேலாதிக்கம் தான் என்றே முடிவெடுப்பார்கள்.

எமது இனத்தின் முரண்பாடுகளை நூறு வீதம் பயன் படுத்தும் சிங்களத்தின் முன்னால் தமிழனின் புத்தயீவித்தனம் தோற்றுப்போகின்றது. இந்த தோல்வியில் இருந்து மீள முடியாது.

பிராமணியத்தை பெரியார் எதிர்த்தால் பிராமணி சிந்திப்பான் என்று எதிர்பார்க்கலாம் ஆனால் பிராமணியத்தை எதிர்பவரை யாழ் வெள்ளாள சனாதனிகள் சிந்திக்காமல் எதிர்ப்பார்கள். இதை நாம் அன்றாடம் காண்கின்றோம். பூணூல் போடாத பிராமணிகளாகவும் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறக்காவிட்டாலும் நெற்றியில் இருந்து பிறந்தவருக்குரிய தகுதி உண்டென நிறுவ முற்படும் கூட்டம் எப்போதும் போட்டி போட்டு எதிர்க்கும். பிராமணிய எதிப்பாளர்களை எதிர்ப்பதில் இவர்கள் முன்நிலையில் நிற்க வேண்டும் அதனூடாக பிராமணியத்துக்குரிய அந்தஸ்தை அடைந்து விடலாம் என்று அலைகின்றது இந்த கூட்டம்.

இது சாதாரணமாக எழுந்த கருத்தில்லை. இராமலிங்க வள்ளலார் ஆன்மீக பாதையினூடாகவே சாதி ஏற்ற தாள்வுகள் இன்றி மனிதரை மனிதர் நேசிக்க வேண்டும் என்று போராடினார். வாடிய பயிரை கண்டு மனம் வாடிய ஒரு மென்மையான ஆன்மீக வாதி. இந்த ஆன்மீகவாதியை பிராமணரோ அல்லது தமிழ்நாட்டு சைவ மடங்களோ எதிர்த்ததைக் காட்டிலும் யாழ்பாண நாவலர் எதிர்த்தது அதிகம். இது அருட்பா மருட்பா என்று ஒரு வரலாறாக விரிகின்றது. வள்ளலாருக்கே இந்த கதி என்றால் நாத்திக பெரியாரை சும்மா விடுமா இந்தக் கூட்டம்? இன்று பெரியாரை எதிர்பதும் அதன் பின்னணியும் ஒரு நீண்ட வரலாற்று பின்புலத்தை கொண்டது. இதில் இன உணர்வை முன்வைத்து அனுசரிப்பு போக்குகளை எதிர்பார்க்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் எதிரி என்னென்ன விதத்தில் முரண்பாடுகளை உருவாக்கினாலும் கிண்டி கிளறி இன ஒருமைப்பாட்டை கூறு போட முனைந்தாலும் அதற்கு ஆயிரம் பேர் வக்காலத்து வாங்கினாலும் தமிழன் என்ற ஒரு இனம் சாதி மத வர்க்க பேதங்களை கடந்து போராடியதுக்கு சாட்சியாக இருபது ஆயிரம் கல்லறைகள் தேசத்தில் நிமிர்ந்து நிற்கின்றது , தன் இனத்திற்கு வாழும் பாதை காட்டி நிற்கின்றது. அந்த பாதையில் செல்லும் புலிகளும் மக்களும் முரண்பாடுகளை கடந்து இனமாக பயணிக்கின்றனர். நாமும் பணணிப்போம் . வில்லங்க படுபவர்களை விலத்தி நடப்போம். அவர்களுக்கு அவர்களே சுருக்கு மாட்டிக்கொள்வாரகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகன் நீங்கள் அரைகுறையாக விளங்கிக் கொண்டு கருத்தாடுறீங்க என்று நினைக்கிறேன்.

மேலே தரப்பட்ட கட்டுரை பல ஆதாரங்களை உள்ளடக்கி இருக்கிறது. வெறுமனவே அது குருவிகள் என்பவரின் கருத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எழவில்லை. பல தரப்பட்டவர்களின் தமிழுணர்வை மையப்படுத்தி ஈ வெ ராமசாமியின் அடிமனதில் இருந்த எண்ணமானது தமிழ் எதிர்ப்பு தமிழர் எதிர்ப்பு என்ற நிலைக்குள் தான் இருந்து வெளிப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல முற்படும் அதேவேளை.. அரசியலுக்காக தமிழ் தேசிய உணர்வு தமிழகத்தில் விலை போய்விட்டது என்றும் ஆதங்கப்பட்டுக் கொள்கிறது. இது குறித்த தமிழ் மக்களை விழிப்புணர்வு பெறக் கோருகிறது கட்டுரை.

குருவிகள் என்பவர் கூட தனது இடுகையை அடுத்து வழங்கியுள்ள பின்னூட்டல்களில் இவற்றைத் தெளிவாக விளக்க முற்பட்டுள்ளார்.

குருவிகளின் இந்தக் கருத்தின் நோக்கம் ஈ வெ ராமசாமியை தமிழ் மக்களின் இரட்சகராக சித்தரிக்க முற்படுவதை ஏற்க மறுப்பதாக இருக்கிறதே தவிர.. அவர் தலித்தியமோ.. சாதியமோ.. பிரதேசவாதமோ.. பேசல்ல. தமிழீழ எதிர்ப்பையோ.. இந்திய எதிர்ப்பையோ.. நிலைநிறுத்த முற்பட்டல்ல.

ஈ வெ ராமசாமியின் அணுகுமுறைகள் தமிழ் விரோத தமிழ் தேசிய விரோதப் போக்கில் அமைந்திருக்கிறது என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் நீங்களும் கிருபன் என்பவரும்... ஸ்ராலின் என்பவரும் அதற்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது.. யாழ்ப்பாணம்.. வெள்ளாளர்.. நாவலர்.. தலித்தியம்.. புலி எதிர்ப்பு.. தமிழீழ ஆதரவு.. சுப்பமணியம் சுவாமி வாரிசு.. வழமையான மேதாவித்தன நுனிப்புல் அறுகம் புல்... :unsure: என்று ஈ வெ ராமசாமி நீச்சலடிச்ச அதே உளறல் குட்டைக்குள் கிடந்து நீச்சலடித்திருப்பதானது.. உங்களின் உள்ளுணர்வோடு கலந்துள்ள எண்ணங்களை வெளிக்காட்டியுள்ளது.

உங்களால் வெளிப்படையாக சாதியம்.. பிரதேசவாதம்.. புலி எதிர்ப்பு பேச முடியாது என்ற காரணத்துக்காக.. இந்தத் தலைப்புக்குள் குருவி என்பவர் எந்த வகையிலும் தனது கருத்தில் சேர்த்துக் கொள்ளாத விடயத்தை நீங்கள் சிலர் இழுத்து வைத்திருப்பதும்.. அதற்கும் அவரின் கருத்துக்கு முடிச்சுப் போடுவதும் மிகவும் கீழ்த்தரமான திரிபு என்பதை அவர் தனது வலைப்பதிவின் பின்னூட்டத்தில் வழங்கியுள்ள விளக்கத்தை நோக்குகையில் தெளிவாகிறது.

விடுதலைப்புலிகள் மீது சாதியச் சாயம் பூசுவது இது முதற்தடவையல்ல. ஏலவே சங்கரியார் யாழ் நூலக விடயத்தில் தனது அரசியல் நலன் வேண்டி அதை போதிய அளவுக்குப் பூசிட்டார். விடுதலைப்புலிகளும் அதை நன்கறிவர். அதற்காக சங்கரியாரை எதிர்க்க ஈ வெ ராமசாமியை முதன்மைப்படுத்தல்ல.. தூக்கிப் பிடிச்சு காவடியாட்டம் ஆடல்ல புலிகள். அநாவசியமாக புலிகளை இதற்குள்ள கொண்டு வந்து.. ஈ வெ ராமசாமி புலிகளுக்கு போராடக் கற்றுக் கொடுத்தவர் என்று படம் காட்டிறதைத் தவிருங்கள். ஈழப்போராட்டம் பற்றி அறியாத புகலிடப் புளுகர்களுக்கு போய் அவிழுங்கள் உங்கள் பிரச்சார மூட்டைகளை. எனவே இங்கு எது அவசியமோ அதை மட்டும் வைத்துக் கருத்துப் பகருங்கள்.

******

திராவிட இயக்கங்களின் ஈ வெ ராமசாமியின் உளறல்களால் தான் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு இருக்கிறது என்பது சுத்த கற்பனை வாதம். இது தொடர்பாக பிறிதொரு தலைப்பில் தெளிவாக எழுதி இருந்தேன். படித்தீர்களோ தெரியாது.

உங்களால்.. யாழ்ப்பாணம்.. வெள்ளாளர்.. நாவலர்.. தலித்தியமும் புலி எதிர்ப்பும்.. இவற்றை விட்டால் ஈ வெ ராமசாமியின் உளறல்களை ஈழத்துக்குள் கொண்டு வர முடியாது என்ற உண்மை தெரியும். சாதி இல்லை என்று கொண்டே வெள்ளாளரை இனங்காட்டிக் கொண்டு சாதியம் காக்க நிற்பவர்கள் நீங்கள். இதைத்தான் பிராமணரை அழிப்பதாகக் கூவிக் கொண்டு தலித்தியம் வளர்த்தவர்கள் ஈ வெ ராமசாமியும் வாரிசுகளும். அவர்களுக்கு பிராமணமும் இந்துமதமும் இல்லையேல்.. கொள்கையும் இல்லை கட்சியும் இல்லை கொடியும் இல்ல காசும் இல்ல. உங்களுக்கு யாழ்ப்பாணமும்.. வெள்ளாளரும்.. நாவலரும் இல்லையேல் ஈ வெ ராவுக்கு கருத்துக்காவவும் கம்னியுசம் பேசவும் ஈழத்தில் இடங்கிடைக்காது. உங்கள் கிழண்டிப்போன தலைமுறையின் இடத்தை பிடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயிடும்.

நீங்களும் புலி எதிர்ப்பு தலித்தியப் பிறப்பாக்கிகளும் ஒரே வகையில் தான் விடயங்களை அணுகுகிறீர்கள். அவர்களுக்கு புலி எதிர்க்க தலித்தியம் தேவை. உங்களுக்கு யாழ்ப்பாண வெள்ளாளன் தேவை. ஆக.. உங்களாலும்.. சாதியத்தை விட்டு பிரதேச வாதம் விட்டு வாதம் செய்ய முடியாது. அவர்களாலும் புலி எதிர்ப்பு செய்யாமல் சீவியம் செய்ய முடியாது. இந்த நிலையில் மேலே உள்ள கட்டுரைகள் வேண்டி நிற்கும் சமூகத்தாக்கம்.. தமிழ் தேசிய நோக்கம் விளங்கப்படும் என்பது இங்கு எதிர்பார்க்கப்பட முடியாதது. :rolleyes::lol:

நீக்கப்பட்டுள்ளது.

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு களவுறவு தன்னை மீனவர் என்று அந்தசாதியைப் பற்றிச் சொன்னபோது, அதற்கு உற்சாக வரவேற்புக் கொடுத்து சாதியை இழக்கவிடாமல் ஊக்குவித்தர்களும் இங்கே தங்களைப் பகுற்தறிவுவாதிகள் என்றும், சாதி எதிர்ப்பாளர்கள் என்றும் காட்டிக் கொள்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.