Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, Eppothum Thamizhan said:

நன்றாகவே புரிகிறது. தமிழ் தேசியத்தை சிதைக்க திராவிட கைக்கூலிகள் கையிலெடுத்த சொல் என்பது நன்றாகவே புரிகிறது. விடுதலைப்புலிகளின் கருத்து என்பதற்கும், விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வந்த கருத்து என்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத்தான் புரியவில்லை.

இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சீமானிடம் ஈழப் போராட்ட வரலாறு கற்றோர் நம்புவது அதிசயமில்லை😂!
 
8 hours ago, Eppothum Thamizhan said:

அது அடையாளமாக மாறவில்லை. திராவிட கட்சிகளால் திட்டமிட்டு மாற்றப்பட்டது. திராவிட மொழிக்குடும்பத்திலுள்ள தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ திராவிடம் என்ற சொல்லை உச்சரிப்பதே இல்லையே! ஒரு கட்சிகூட இல்லையே! அப்படியிருக்க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி?? புரியவில்லையா பெரியாரின் சூழ்ச்சி!!

இதற்கான பதில் ரசோதரன் ஏற்கனவே விளக்கி விட்டார், தேடி வாசிக்கலாம். அவரை விட தெளிவாக "விளக்க" வேண்டுமானால் நான் புளியும், தேங்காய்ப் பொச்சும் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து தான் உங்களை "வெளக்க" முடியும்😎! Not worth it!
 
  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

சந்தேகத்தை தீர்க்கும் வரை என் கட்டை வேகாது🤣.

உங்களுக்கு மட்டு அல்ல…

பலருக்கு….

எனக்கு பிடித்த யாழ்கள உறவுகள் பலருக்கு🙏.

இந்த நித்திரை போல நடிக்கும் உறவுகளுக்கும், மூளை கழுவப் பட்ட சீமான் ஆதரவாளர்களுக்கும் எதையும் நிரூபித்து வெல்லும் வரை  கட்டை வேகாதெனில், உங்களை தோழர் லெனின் போல போர்மலினில் தான் வைத்திருக்க வேண்டும்😂!

  • கருத்துக்கள உறவுகள்+
On 24/1/2025 at 02:18, கிருபன் said:

பல ஆவணங்கள் தமிழீழ ஆவணக்காப்பகம்  இணையத்தில் உள்ளன.

https://tamileelamarchive.com

நன்றி....

ஆனால் இது போன்ற வணிக வலைத்தளங்கள் தமது முத்திரையை தேசத்தின் சொத்துகள் மீது பொறித்து  வெளியிடுவது வெட்கக்கேடான விடையமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது – ‘ பெரியார் மணியம்மை திருமணம் ‘ பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???

…………………………………………………….

image-5.png?w=1024

………………………………………………………

9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து
“ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய
கட்டுரை :

………………………………………………………

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26.
அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது
ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில்
கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு
வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய்,
ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம்
செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து
கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூட கேட்டுத்
திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான்
தோன்றுமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்க
வில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள்
குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு
எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார
புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம்,
நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை,
பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால் தான்.

வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச்
சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர்
பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார்,
அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூதெய்தி
வந்தோம்… இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும்,
ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு
எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை
அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே
வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக்
காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச்
சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள்
அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை
என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை
ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம்
நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால்,
போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின்
உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட
வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள
எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து
தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது
ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –

பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய
வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம்
செய்து கொள்வதா காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும்
எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத
ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால்,
கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை
இருக்கும்…!

”ஏம்பா! திராவிடர் கழகம்…! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே…!!
என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.
சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும்
26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும்
நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று
பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும்
இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும்
ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா..! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே..!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே..! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே..! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே..! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,

இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில்,
இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள்
கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை,
என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று
சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-

என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி
மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக்
கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ
இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில்
துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் –
கதறிக்கொண்டேயிருக்கிறோம் –

கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்..! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்..!
எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த
நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்..! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம்
அயலாரைக் காண…! வேதனைப்படுகிறோம் தனிமையிலே…!
ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம்
புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி,
நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து
போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே…! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்…? உலகின் முன் தலைகாட்ட
முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள்
தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72-26 இதை மறுக்கமுடியாதே…!

இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே…!
இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது
காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே..!
ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்..!
கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள்
கேட்டும் கேள்விகள் இல்லை…!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும்
கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது,பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டிய
தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’
புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது…? பெரியாரின் உயிரைப் பாதுகாக்க,உடலைப் பாதுகாக்க தக்கவிதமான
உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது
போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில்
ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம்
படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை…!
மணியம்மை வர நேரிட்டது…!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று
தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தொண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது
குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை
எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக
இருக்கிறார் – பதிவுத் திருமணம்…!! இந்த நிலையை யார் தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது
கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன்
காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்….!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி
”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக்
கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா….? என்று உலகம் கேட்கிறது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(பின் குறிப்பு – அண்ணாவும், இதர தம்பிகளும் இப்படி கதறித் துடித்ததன்
பின்னணியில் இருந்த உண்மையான காரணம் என்ன என்பது
இந்தக்கால இளைஞர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

பெரியார் அரும்பாடு பட்டு, பல வருடங்களாக சேர்த்து வைத்த
சொத்துகள் அனைத்தையும், அவரது காலத்துக்குப் பிறகு, தாங்கள்
அனுபவிக்கலாமென்று நினைத்திருந்தவர்களின் ஆசையில் மண்ணை
அள்ளிப்போட்டது இந்த திருமணமும், அதையொட்டி, பெரியார் அவர்கள்
அத்தனை சொத்துக்கும் வாரிசாக மணியம்மையார் அவர்களை
நியமித்த சட்டபூர்வமான ஆவணமும்….!!! )

.https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/

Karthikeyan Palanisamy சொல்கிறார்:

ஆனால் அந்த அத்தனை சொத்துக்களும் சிந்தாமல் சிதறாமல் வீரமணி அய்யாவிற்கு எப்படி வந்தது என்பதை எங்களுக்கு தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

Tamil சொல்கிறார்:

பெரியாரை திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கேவலப்படுத்தியதை விட உலகத்தில் யாரும் கேவலப்படுத்த முடியாது.

இது எல்லாம் யாருக்குத் தெரியப்போகிறது என்கின்ற முரட்டு குருட்டு தைரியத்தில் உதயநிதி சொல்கிறார் பெரியாரின் பேரன் வருகிறேன் என்று.

என்ன செய்வது?

https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஏற்றுக்கொள்ளுவோம். ஏன்னா மனியம்மை மேல் அண்ணாவுக்கு ஒருகண், அண்ணாக்கு மடக்கிற பிளான் ஒண்டு இருந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்

Parani Krishnarajani அவர்களின் பதிவு....

இது சீமானுக்கும் திராவிடர்களுக்குமான சண்டை குறித்த எனது  கடைசிப் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

திரும்பத் திரும்ப ஈழ வரலாற்றை மையப்படுத்திப் பொய்களை முன் வைக்கும் போது சும்மா இருக்க முடியவில்லை.

தலைவரின் அகவை 50 ஐ சிறப்பிக்க 2003 இல்   கஸ்ரோ அண்ணா தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகம் முடிவெடுத்து அதன் கீழ் இயங்கிய ஈழமுரசு பத்திரிகை நிர்வாகத்திடம் அது ஒப்படைக்கப்படுகிறது.

 தலைவர் வழமை போல் இப்படியான தற் புகழ்ச்சிகளை விரும்பாத போதும் பேபி அண்ணா, யோகி அண்ணா, பாலகுமாரன் அண்ணா ஆட்களூடாக கஸ்ரோ அண்ணா தலைவருக்கு அழுத்தம் கொடுத்து சம்மதம்  பெறப்படுகிறது.  

மறைந்த ஈழப் போராட்ட முன்னோடியும் ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவருமான கவிஞர் கிபி அரவிந்தன் தலைமையில் நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த நால்வரில் நானும் ஒருவன்.

தலைவர் ஒரே ஒரு நிபந்தனையுடன் இதற்கு உடன்பட்டார். வரலாற்று திரிபு வரக் கூடாது.எனவே இதில் கட்டுரை எழுதுபவர்களின் அகராதி எனது மேசைக்கு வர வேண்டும் என்பதுதான் அது.

ஈழத்து ஆளுமைகள் மட்டுமல்ல சிங்கள, மேற்குலக, தமிழக ஆளுமைகள் பலரது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு தலைவருக்கு அனுப்பப்பட்டு பலரது பெயர்கள் நிராகரிக்கப்பட்டு வடிகட்டப்பட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த  நூல் 2004 இல் வெளியிடப்பட்டது.

அதில் சீமானது கட்டுரையும் ஒன்று. அதைத்தான் மேலே இணைத்துள்ளேன்.

சீமானுடன் மணியரசன் ஐயா, நெடுமாறன் ஐயா, திருமாவளவன், தியாகு, இன்குலாப், மருது  உட்பட பலரின் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

அந்த நூலில்  சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிட்டிணன், விடுதலை இராஜேந்திரன், கி. வீரமணி உட்பட எந்தப் பெரியாரிஸ்ட் களின் பதிவும் இடம்பெறவில்லை. அது ஏன் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்ப பிரச்சினை அதுவல்ல.  2008 பெப்ரவரி வரை  சீமான் என்ற ஒருத்தரைத் தலைவர் உட்பட யாருமே அறிந்திருக்கவில்லை என்ற கதையெல்லாம் புதுசு புதுசா அவிழ்த்து விடப்படுகிறது.

ரொம்பவே அயர்ச்சியாக இருக்கிறது.

 தலைவரை - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நேசித்த - அதற்காக உழைத்ததாகச் சொல்லும் திராவிடத் தலைவர்கள் இனியாவது ஈழப் போராட்ட வரலாற்றைக் கறைப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

நன்றி

பின்னிணைப்பு:

பலர் உள் பெட்டியில் வினாவுவதால் ஒரு சிறு விளக்கம்.

பெரியாரிஸ்ட்களிடம் கட்டுரை கேட்கப்படவில்லையா? அல்லது கேட்டு அவர்கள் கொடுக்கவில்லையா?என்பது குறித்து எனக்குத் தெரியாது.  ஏனென்றால் தமிழகத் தொடர்பை நேரடியாகக் கிபி அரவிந்தன் அவர்களே பார்த்துக் கொண்டார். அவர் தற்போது உயிருடன் இல்லை அத்தோடு வன்னியிலிருந்து இதைக் கையாண்ட போராளிகளும் ஒருத்தரும் உயிருடன் இருப்பதாகத் தெரியவில்லை.

தற்போது யோசிக்கும் போது இந்த வினா உதைக்கிறது. அதுதான் பதிவு செய்திருக்கிறேன். மற்றபடி இதை ஒரு திட்டமிட்ட நிராகரிப்பாக யாரும் கருத வேண்டாம்.

https://www.facebook.com/share/1BdSJRfdZs/

On 26/1/2025 at 23:12, goshan_che said:

🤣.

🙏

மன்னிக்கவும் @goshan_che உங்களது பெயர் தற்செயலாக வந்து விட்டது அழிக்க முடியவில்லை. நன்றி 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

அதில் சீமானது கட்டுரையும் ஒன்று. அதைத்தான் மேலே இணைத்துள்ளேன்.

சீமானுடன் மணியரசன் ஐயா, நெடுமாறன் ஐயா, திருமாவளவன், தியாகு, இன்குலாப், மருது  உட்பட பலரின் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை.

2004 இல் சீமானின் கட்டுரை எழுத அனுமதித்ததால், தலைவர் இல்லாத 2010 களில் தலைவரையும், புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தழுவி கட்சி அரசியல் செய்வதை தலைவர் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா?

2004 மார்ச் வரை கருணா அம்மானும்தான் தலைவரின் வலதுகரமாக விளங்கிய பெரும் போர்த்தளபதி. ஆனால் அவரின் செயற்பாடுகள் எப்படி புலிகள் இயக்கத்தை அழித்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது புலிகளின் சித்தாந்தத்தை சீமான் அழிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களை புலிகளின்மீது வெறுப்பைக் கக்கவும் வைத்துள்ளார்.

இந்த நிலையை உருவாக்கியதற்கு புலம்பெயர் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே முழுப்பொறுப்பு. தாயகத்தில் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதபோதும், புலம்பெயர் நாடுகளில் புலிகளின் சொத்துக்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு புலிகளின் பிரதிநிதிகளாக அனைத்துலகச் செயலகத்தினர் இருந்துவருகின்றனர். சீமானை கனடாவுக்கு அழைத்து, அவர் பேசிய பேச்சால் கனடிய அரசு அவரை வெளியேற்றியபோதே சுதாகரித்து இருந்திருக்கவேண்டும். சீமான் கட்சி தொடங்கி புலிகளின் தொடர்ச்சி என்று காண்பிக்க ஆரம்பித்தபோதே தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் புலிகளின் சொத்தை பங்குபிரிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இந்த நித்திரை போல நடிக்கும் உறவுகளுக்கும், மூளை கழுவப் பட்ட சீமான் ஆதரவாளர்களுக்கும் எதையும் நிரூபித்து வெல்லும் வரை  கட்டை வேகாதெனில், உங்களை தோழர் லெனின் போல போர்மலினில் தான் வைத்திருக்க வேண்டும்😂!

🤣 மகிந்தவுக்கு பக்கத்திலேயே

11 hours ago, nunavilan said:

இது – ‘ பெரியார் மணியம்மை திருமணம் ‘ பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???

…………………………………………………….

image-5.png?w=1024

………………………………………………………

9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து
“ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய
கட்டுரை :

………………………………………………………

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26.
அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது
ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில்
கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு
வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய்,
ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம்
செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து
கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூட கேட்டுத்
திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான்
தோன்றுமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்க
வில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள்
குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு
எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார
புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம்,
நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை,
பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால் தான்.

வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச்
சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர்
பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார்,
அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூதெய்தி
வந்தோம்… இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும்,
ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு
எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை
அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே
வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக்
காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச்
சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள்
அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை
என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை
ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம்
நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால்,
போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின்
உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட
வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள
எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து
தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது
ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –

பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய
வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம்
செய்து கொள்வதா காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும்
எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத
ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால்,
கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை
இருக்கும்…!

”ஏம்பா! திராவிடர் கழகம்…! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே…!!
என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.
சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும்
26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும்
நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று
பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும்
இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும்
ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா..! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே..!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே..! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே..! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே..! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,

இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில்,
இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள்
கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை,
என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று
சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-

என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி
மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக்
கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ
இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில்
துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் –
கதறிக்கொண்டேயிருக்கிறோம் –

கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்..! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்..!
எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த
நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்..! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம்
அயலாரைக் காண…! வேதனைப்படுகிறோம் தனிமையிலே…!
ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம்
புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி,
நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து
போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே…! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்…? உலகின் முன் தலைகாட்ட
முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள்
தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும்,72-26 இதை மறுக்கமுடியாதே…!

இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே…!
இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது
காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே..!
ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்..!
கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள்
கேட்டும் கேள்விகள் இல்லை…!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும்
கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது,பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டிய
தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’
புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது…? பெரியாரின் உயிரைப் பாதுகாக்க,உடலைப் பாதுகாக்க தக்கவிதமான
உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது
போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில்
ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம்
படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை…!
மணியம்மை வர நேரிட்டது…!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று
தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தொண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது
குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை
எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக
இருக்கிறார் – பதிவுத் திருமணம்…!! இந்த நிலையை யார் தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது
கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன்
காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்….!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி
”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக்
கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா….? என்று உலகம் கேட்கிறது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(பின் குறிப்பு – அண்ணாவும், இதர தம்பிகளும் இப்படி கதறித் துடித்ததன்
பின்னணியில் இருந்த உண்மையான காரணம் என்ன என்பது
இந்தக்கால இளைஞர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

பெரியார் அரும்பாடு பட்டு, பல வருடங்களாக சேர்த்து வைத்த
சொத்துகள் அனைத்தையும், அவரது காலத்துக்குப் பிறகு, தாங்கள்
அனுபவிக்கலாமென்று நினைத்திருந்தவர்களின் ஆசையில் மண்ணை
அள்ளிப்போட்டது இந்த திருமணமும், அதையொட்டி, பெரியார் அவர்கள்
அத்தனை சொத்துக்கும் வாரிசாக மணியம்மையார் அவர்களை
நியமித்த சட்டபூர்வமான ஆவணமும்….!!! )

.https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/

Karthikeyan Palanisamy சொல்கிறார்:

ஆனால் அந்த அத்தனை சொத்துக்களும் சிந்தாமல் சிதறாமல் வீரமணி அய்யாவிற்கு எப்படி வந்தது என்பதை எங்களுக்கு தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

Tamil சொல்கிறார்:

பெரியாரை திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கேவலப்படுத்தியதை விட உலகத்தில் யாரும் கேவலப்படுத்த முடியாது.

இது எல்லாம் யாருக்குத் தெரியப்போகிறது என்கின்ற முரட்டு குருட்டு தைரியத்தில் உதயநிதி சொல்கிறார் பெரியாரின் பேரன் வருகிறேன் என்று.

என்ன செய்வது?

https://vimarisanam.com/2023/11/17/இது-பெரியார்-மணியம்மை-தி/

இது பெரியார்….சிறியார் ஆகிய தருணம்.

இதை அண்ணா மட்டும் அல்ல எவருமே கண்டிக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை.

2004 இல் சீமானின் கட்டுரை எழுத அனுமதித்ததால், தலைவர் இல்லாத 2010 களில் தலைவரையும், புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தழுவி கட்சி அரசியல் செய்வதை தலைவர் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா?

2004 மார்ச் வரை கருணா அம்மானும்தான் தலைவரின் வலதுகரமாக விளங்கிய பெரும் போர்த்தளபதி. ஆனால் அவரின் செயற்பாடுகள் எப்படி புலிகள் இயக்கத்தை அழித்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது புலிகளின் சித்தாந்தத்தை சீமான் அழிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களை புலிகளின்மீது வெறுப்பைக் கக்கவும் வைத்துள்ளார்.

இந்த நிலையை உருவாக்கியதற்கு புலம்பெயர் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே முழுப்பொறுப்பு. தாயகத்தில் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதபோதும், புலம்பெயர் நாடுகளில் புலிகளின் சொத்துக்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு புலிகளின் பிரதிநிதிகளாக அனைத்துலகச் செயலகத்தினர் இருந்துவருகின்றனர். சீமானை கனடாவுக்கு அழைத்து, அவர் பேசிய பேச்சால் கனடிய அரசு அவரை வெளியேற்றியபோதே சுதாகரித்து இருந்திருக்கவேண்டும். சீமான் கட்சி தொடங்கி புலிகளின் தொடர்ச்சி என்று காண்பிக்க ஆரம்பித்தபோதே தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் புலிகளின் சொத்தை பங்குபிரிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.!

அருமையான விளக்கம்.

மேலே இணைக்கப்பட்ட கட்டுரையாசிரியர், நாம் எல்லாம் நியாபகமறதியில் அவதிபடுவதாக நினைத்து கதை விடுகிறார்.

சந்தோஷ் பேட்டியில் புலிகள்-சீமான் உறவு நிலை பற்றி, அதன் கனம் பற்றி மிக தெளிவாக விளக்கி உள்ளார்.

மே 2009 வரைக்கும் அதுதான் சீமானுக்கு புலிகள் கொடுத்த இடம்.

அதன் பின் போராட்டதை காயடிக்க ரோ நியமித்த போலிகளில் ஒருவர்தான் சீமான்.

புலம்பெயர் கள்ளர் சொத்தை அபகரிப்பதில் பிசியாக, வெற்றிடத்தை சீமான் நிரப்பி கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவேளை,  புலிகள் அழிந்த பின்னர் சொத்துகளை நாம் பங்கிட்டோம, கொடியையும் சின்னத்தையும் வைத்து சீமான் பிழைக்கட்டும்  என்று இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைக்கும் இந்த மாபியாக் கூட்டம் நினைத்திருக்கும்.

அதை விட இந்த பரணி என்பவர் மிக மோசமான இனவாதி.  தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாமல்  அடக்குமுறையும் அழிவும் மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்பும் மனநோயாளி.  நச்சுக்கருத்துகளை பரப்பிவருபவர். அநுர ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் மீது மிக கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்தது விடுவார்,  அதுவே எமக்கு நல்லது என்று எழுதியவர். அதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று தன்னை தொடரும் முட்டாள் கூட்டத்துக்கு எழுதியவர்.    தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பாரிய அடக்குமுறைகளை ஏவி விடும் அரசாங்கம் வரவேண்டும் என்று விரும்பும், தமிழ் மக்களின் அழிவை  ரசிக்கும் ஒரு சைக்கோ.

தன்னை போல் சைக்கோக்களாக இருக்கும் மண்டை முழுவதும் களிமண்ணை வைத்திருக்கும் சிறிய அளவிலான தனது fans கூட்டதை வைத்து தனது சைக்கோ கருத்துக்களை பரப்ப செய்பவர். இந்த நச்சு பாம்பின் கருத்துக்கள் பெரும்பான்மை தமிழ் மக்களை சென்றடைவதில்லை  என்பது ஒரு பெரிய ஆறுதல். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

மன்னிக்கவும் @goshan_che உங்களது பெயர் தற்செயலாக வந்து விட்டது அழிக்க முடியவில்லை. நன்றி 

இதுக்கேன் மன்னிப்பு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை.

2004 இல் சீமானின் கட்டுரை எழுத அனுமதித்ததால், தலைவர் இல்லாத 2010 களில் தலைவரையும், புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தழுவி கட்சி அரசியல் செய்வதை தலைவர் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா?

2004 மார்ச் வரை கருணா அம்மானும்தான் தலைவரின் வலதுகரமாக விளங்கிய பெரும் போர்த்தளபதி. ஆனால் அவரின் செயற்பாடுகள் எப்படி புலிகள் இயக்கத்தை அழித்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது புலிகளின் சித்தாந்தத்தை சீமான் அழிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களை புலிகளின்மீது வெறுப்பைக் கக்கவும் வைத்துள்ளார்.

இந்த நிலையை உருவாக்கியதற்கு புலம்பெயர் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே முழுப்பொறுப்பு. தாயகத்தில் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதபோதும், புலம்பெயர் நாடுகளில் புலிகளின் சொத்துக்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு புலிகளின் பிரதிநிதிகளாக அனைத்துலகச் செயலகத்தினர் இருந்துவருகின்றனர். சீமானை கனடாவுக்கு அழைத்து, அவர் பேசிய பேச்சால் கனடிய அரசு அவரை வெளியேற்றியபோதே சுதாகரித்து இருந்திருக்கவேண்டும். சீமான் கட்சி தொடங்கி புலிகளின் தொடர்ச்சி என்று காண்பிக்க ஆரம்பித்தபோதே தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் புலிகளின் சொத்தை பங்குபிரிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.!

Don't shoot the messenger,  ஆளைப்பார்க்காதே கருத்தை மட்டும் பார் என்பதெல்லாம் வெறும் உருட்டு உபதேசமா கோபாலு?

(நான் பரணியின் கட்டுரைகளை வாசிப்பதில்லை (இது கூட அவரது முகநூலில் இருந்து எடுக்கப்பட்டதல்ல) 

(அதேபோல் அனைத்துலகத்திலிருந்தும் தள்ளி நிற்பவன். ஆனால் இங்கு சீமானை தலைவருக்கு தெரியாது என்பதை அறிந்து கொள்ள மட்டுமே இதை இங்கே இணைத்தேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

பெரியாரிஸ்ட்களிடம் கட்டுரை கேட்கப்படவில்லையா? அல்லது கேட்டு அவர்கள் கொடுக்கவில்லையா?என்பது குறித்து எனக்குத் தெரியாது.  ஏனென்றால் தமிழகத் தொடர்பை நேரடியாகக் கிபி அரவிந்தன் அவர்களே பார்த்துக் கொண்டார். அவர் தற்போது உயிருடன் இல்லை அத்தோடு வன்னியிலிருந்து இதைக் கையாண்ட போராளிகளும் ஒருத்தரும் உயிருடன் இருப்பதாகத் தெரியவில்லை.

தற்போது யோசிக்கும் போது இந்த வினா உதைக்கிறது. அதுதான் பதிவு செய்திருக்கிறேன். மற்றபடி இதை ஒரு திட்டமிட்ட நிராகரிப்பாக யாரும் கருத வேண்டாம்.

 @goshan_che

சீமானே பெரிய பெரியாரிஸ்டாகயிருக்கும் போது வேறொருவர் வேண்டாமென்று தவிர்த்திருக்கலாம். அவர் எழுதிய கட்டுரையில் கூட பெரியாரை மேற்க்கோள் காட்டாமல் எழுத முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

Don't shoot the messenger,  ஆளைப்பார்க்காதே கருத்தை மட்டும் பார் என்பதெல்லாம் வெறும் உருட்டு உபதேசமா கோபாலு?

இவர் செய்தியை காவி வரும் messenger இல்லை அண்ணா - அவரே மெசேஜ் சொல்லுகிறார்.

உதாரணமாக மகிந்த சீமானை ஆதரித்தால்- மகிந்தவின் ரெக்கோர்ட்டையும் பற்றி கதைப்பது போலவே இது.

ஆகவே அவரை சூட் பண்ணலாம். 

———-

அண்மையில் சந்தோஷ், அமரதாஸ், ராஜ்குமார், கார்திக், வேல்முருகன் சொல்வது இதைத்தான்👇

1. சீமான் தலைவர் போட்டோ என நாம் காண்பவை - போலியானவை

2. ஆனால் தலைவரை சீமான் சில நிமிடங்கள் சந்தித்தார்

3. இது வெறும் ஹாய், ஹவ் ஆர் யூ சந்திப்பு. இதன் போட்டோவும், வீடியோவும் சந்தோஷ் வசம் உள்ளது.

5. துப்பாக்கி பயிற்சி ஏதும் கொடுக்கபடவில்லை.  அது எல்லாளன் படபிடிப்பு தளத்தில் சீமான் ஆசை பட்டு துவக்குடன் போஸ் கொடுத்து எடுத்த படம். இதன் ஜியோ லொக்கேசன் உள்ள மூலப்பிரதியிம் சந்தோசிடம் உண்டு.

4. பாலாமை கறி, கடலுணவு சாப்பிடாத சந்தோசுக்கு,  சந்தோசை ஏமாற்றி ஆட்டுக்கறி என புலிகள் கொடுத்தது. அதை தன் கதை என சீமான் சொல்கிறார். இதை போல தடா சந்திரசேகரனனுக்கு நடந்ததையும் தனது என்கிறார்.

5. தலைவரோ மதிவதனியோ சீமானை வீட்டுக்கு கூப்பிட்டு கையால் சாப்பாடு போட்டு, மணிக்கணக்கில் அரசியல் பேசவில்லை. (இது ஈழ போராட்டத்தை அனுபவித்தோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்).

6. புலிகள் சீமானை அதிகம் நம்பவில்லை( இதுவும் புலிகளை பற்றி அறிந்தோருக்கு புதிய செய்தி அல்ல).

7. விஜி அண்ணியை அருகில் வைத்து கொண்டு சாவுகளத்தில் இருந்து பேசிய சேரலாதனுடன் ஸ்கைப் பேசியதால், சேரலாதன் சீமான் தொடர்பை முறித்து கொண்டார்.

7. சூசை போன் எடுத்தது சந்தோசுக்கு. அந்த முழு உரையாடல் சந்தோஷ் வசம் உள்ளது. அதில் சீமானை போலவே ஏனையோர், வைகோ, மணி யையும் சூசை குறிப்பிட்டார்.

👆 இவை இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்வில்லை. 

ஆனால் சீமான் கதைகள் போல அல்லாமல் இந்த கதையாடலில் (narrative) அதிக உள்முரண்கள் இல்லை. அத்தோடு புலிகளின் சந்தேககுணம், இயங்கும் விதத்துடனும் இது ஒத்து போகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை நாம் தமிழரின் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமாரை றோ கொலை செய்தபின், சீமான் உயிருக்கு பயந்து றோவின் ஏஜெண்டாக மாறினார் என நினைத்தேன்.

ஆனால் இப்போ 2008 க்கு முன்பே plan பண்ணி, வேல்முருகன், கெளத்தூர் மணியை ஏமாத்தி தமிழகத்தில் இருந்த புலிகள் வலையமைப்பில் RAW plant பண்ணிய சிலீப்பர் செல் ஆக சீமான் இருக்க கூடும் என யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இவர் செய்தியை காவி வரும் messenger இல்லை அண்ணா - அவரே மெசேஜ் சொல்லுகிறார்.

உதாரணமாக மகிந்த சீமானை ஆதரித்தால்- மகிந்தவின் ரெக்கோர்ட்டையும் பற்றி கதைப்பது போலவே இது.

ஆகவே அவரை சூட் பண்ணலாம். 

———-

அண்மையில் சந்தோஷ், அமரதாஸ், ராஜ்குமார், கார்திக், வேல்முருகன் சொல்வது இதைத்தான்👇

1. சீமான் தலைவர் போட்டோ என நாம் காண்பவை - போலியானவை

2. ஆனால் தலைவரை சீமான் சில நிமிடங்கள் சந்தித்தார்

3. இது வெறும் ஹாய், ஹவ் ஆர் யூ சந்திப்பு. இதன் போட்டோவும், வீடியோவும் சந்தோஷ் வசம் உள்ளது.

5. துப்பாக்கி பயிற்சி ஏதும் கொடுக்கபடவில்லை.  அது எல்லாளன் படபிடிப்பு தளத்தில் சீமான் ஆசை பட்டு துவக்குடன் போஸ் கொடுத்து எடுத்த படம். இதன் ஜியோ லொக்கேசன் உள்ள மூலப்பிரதியிம் சந்தோசிடம் உண்டு.

4. பாலாமை கறி, கடலுணவு சாப்பிடாத சந்தோசுக்கு,  சந்தோசை ஏமாற்றி ஆட்டுக்கறி என புலிகள் கொடுத்தது. அதை தன் கதை என சீமான் சொல்கிறார். இதை போல தடா சந்திரசேகரனனுக்கு நடந்ததையும் தனது என்கிறார்.

5. தலைவரோ மதிவதனியோ சீமானை வீட்டுக்கு கூப்பிட்டு கையால் சாப்பாடு போட்டு, மணிக்கணக்கில் அரசியல் பேசவில்லை. (இது ஈழ போராட்டத்தை அனுபவித்தோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்).

6. புலிகள் சீமானை அதிகம் நம்பவில்லை( இதுவும் புலிகளை பற்றி அறிந்தோருக்கு புதிய செய்தி அல்ல).

7. விஜி அண்ணியை அருகில் வைத்து கொண்டு சாவுகளத்தில் இருந்து பேசிய சேரலாதனுடன் ஸ்கைப் பேசியதால், சேரலாதன் சீமான் தொடர்பை முறித்து கொண்டார்.

7. சூசை போன் எடுத்தது சந்தோசுக்கு. அந்த முழு உரையாடல் சந்தோஷ் வசம் உள்ளது. அதில் சீமானை போலவே ஏனையோர், வைகோ, மணி யையும் சூசை குறிப்பிட்டார்.

👆 இவை இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்வில்லை. 

ஆனால் சீமான் கதைகள் போல அல்லாமல் இந்த கதையாடலில் (narrative) அதிக உள்முரண்கள் இல்லை. அத்தோடு புலிகளின் சந்தேககுணம், இயங்கும் விதத்துடனும் இது ஒத்து போகிறது.

நன்றி சகோ 

இது சரியான பாதை தேடல் 

நீங்கள் இங்கே குறிப்பிட்ட அத்தனையும் சீமான் மேல் உள்ள எனது சந்தேக லிஸ்டில் இருக்கிறது. சிலது நிரூபிக்க பட்டும் உள்ளது. எனவே பொறுமை. எதைத் தான் இனி இழக்க நேரிடும்?? யாரைத் தான் நம்பமுடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை நினைவில் வைக்க மறக்க வேண்டாம்…

தலைவரை கொல்ல, மாத்தையா, தமிழக சிறையில் இருந்து தப்பிய போராளியை வைத்து றோ எப்படி வலை பின்னியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எமது போராட்டத்தை காயடிக்க அந்தளவு மினகெட்ட றோ - எந்தளவுக்கும் போகும்.

றோவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று - தமிழக/ஈழதமிழர் இடையே மாறா பகையை மூட்டி விடுவது. அதன் மூலம் ஈழத்தமிழரை மேலும் தனிமை படுத்தி, இந்தியாவை விட வேறு கதி இல்லை என ஆக்குவது.

ஈழத்தமிழர்களை இந்தியாவை தவிர வேறு எவருடனும் நெருங்க விட கூடாது - இது இந்தியாவின் இலங்கை கொள்கையில் ஒரு முக்கிய அங்கம்.

எம்மை மேற்குக்கு எதிராக திருப்புவது….

எம்மை திராவிட கொள்கைக்கு எதிராக திருப்புவது….

இரெண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செவ்வியன் said:

சீமானே பெரிய பெரியாரிஸ்டாகயிருக்கும் போது வேறொருவர் வேண்டாமென்று தவிர்த்திருக்கலாம். அவர் எழுதிய கட்டுரையில் கூட பெரியாரை மேற்க்கோள் காட்டாமல் எழுத முடியவில்லை

சீமானின் வாழ்த்துக்குறிப்பில் இப்படி உள்ளது..

மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்ற மந்திரத்தைச் சொல்லித் தந்த நம் தந்தை பெரியாரின் கைத்தடிதான் காலத்தின் கட்டாயம் கருதி உங்கள் கையில் ஆயுதமாக இருக்கின்றது.

 விடுதலைப் பேரொளி பக் 249

PDF இல் பக்கம் 250

https://tamileelamarchive.com/article_pdf/article_0e4825e62299e1a661df212f640ca364.pdf

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாம் தமிழரின் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமாரை 

நாம் தமிழரின் முதலாவது மாநில ஒழுங்கமைப்பாளர் முத்துக்குமார் என்பது எங்குள்ளது..? நான் பார்த்த பழைய வீடியோக்களில் எல்லாம் முத்துக்குமார் பக்கத்தில் நிக்கவே நாம் தமிழர்கட்சியின் முதன்மை ஒருங்கினைப்பாளர் சீமான் என்றே குறிப்பிடுகிறார்கள்.. அப்போ முத்துக்குமார் உயிருடன் இருக்கும்போதே சீமானுக்கு பதவி மாற்றிக்கொடுக்கப்பட்டதா..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழரின் முதலாவது மாநில ஒழுங்கமைப்பாளர் முத்துக்குமார் என்பது எங்குள்ளது..? நான் பார்த்த பழைய வீடியோக்களில் எல்லாம் முத்துக்குமார் பக்கத்தில் நிக்கவே நாம் தமிழர்கட்சியின் முதன்மை ஒருங்கினைப்பாளர் சீமான் என்றே குறிப்பிடுகிறார்கள்.. அப்போ முத்துக்குமார் உயிருடன் இருக்கும்போதே சீமானுக்கு பதவி மாற்றிக்கொடுக்கப்பட்டதா..?

https://www.naamtamilar.org/2011/02/நாம்-தமிழர்-கட்சியின்-மா-8/?amp=1

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி சுப.முத்துகுமார் அவர்கள் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

தலைமையகம்பிப்ரவரி 16, 2011
cats111111-696x838.jpg

நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முத்துகுமார் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முத்துகுமாரின் மரணத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதில் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் என்று எங்குள்ளது..? முன்னனி மானில ஒருங்கமைப்பாளர் என்றுதானே உள்ளது..? அதிலும் தலைமை மாநில ஒருங்கமைப்பாளர் சீமான் என்றே உள்ளது.. ஆக பல மாநில ஒருங்கமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.. அவர்களில் முத்துக்குமாரும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர்.. இவர்களை எல்லாம் ஒருங்கினைக்கும் பிரதான ஒருங்கினைப்பாளராக சீமான் இருந்திருக்கிறார்.. அப்படித்தானே வருகிறது இதன்படி பார்த்தால்..?

7 minutes ago, கிருபன் said:

சீமானின் வாழ்த்துக்குறிப்பில் இப்படி உள்ளது..

மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்ற மந்திரத்தைச் சொல்லித் தந்த நம் தந்தை பெரியாரின் கைத்தடிதான் காலத்தின் கட்டாயம் கருதி உங்கள் கையில் ஆயுதமாக இருக்கின்றது.

 விடுதலைப் பேரொளி பக் 249

PDF இல் பக்கம் 250

https://tamileelamarchive.com/article_pdf/article_0e4825e62299e1a661df212f640ca364.pdf

2011 களில் என்று நினைக்கிறன்.. சீமானின் பெரியார்பற்றிய ஒரு உரையை கேட்டே பெரியாரைப்பற்றி தேடிப்படித்தேன் முதன்முதலில் அப்போழுது.. அன்றிலிருந்துதான் பெரியாரின்மேல் பேர் ஈர்ப்புக்கொண்டவன் ஆனேன்..

அதில் எனக்கு பிடித்தது..

“மூத்திரச்சட்டியை சுமந்துகொண்டு எம்மீது வீசப்பட்ட சூத்திரப்பட்டத்தை துடைக்கபோராடியவர் ஜயா பெரியார்.. கண்ணாடிக்கு மேல் ஒரு பெரிய கண்ணாடியை போட்டுக்கொண்டு குனிந்து குனிந்து எமது எதிர்காலத்தை தேடியவர் ஜயா பெரியார்..”

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் என்று எங்குள்ளது..? முன்னனி மானில ஒருங்கமைப்பாளர் என்றுதானே உள்ளது..? அதிலும் தலைமை மாநில ஒருங்கமைப்பாளர் சீமான் என்றே உள்ளது.. ஆக பல மாநில ஒருங்கமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.. அவர்களில் முத்துக்குமாரும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர்.. இவர்களை எல்லாம் ஒருங்கினைக்கும் பிரதான ஒருங்கினைப்பாளராக சீமான் இருந்திருக்கிறார்.. அப்படித்தானே வருகிறது இதன்படி பார்த்தால்..?

இங்கதான் டிவிஸ்டே…

கட்சி ஆரம்பிக்கபட்ட போது…,,

முண்ணணி ஒருங்கிணைப்பாளர் முத்து குமார். இவர் தமிழ் தேசியம் சார்ந்து கொள்கை நிலைப்பாடுகளை கட்டுப்படுத்துவார்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - இவர் பொது மக்கள் மத்தியில் கட்சியை எடுத்து போவார்.

இவர்களின் கீழ் ஏனையோர். ஏனைய ஒருங்கிணைபாளர்களுக்கு துறைகள் கொடுக்கப்பட்டன.

ஆனால் இரெட்டை தலைமையான சீமானுக்கும், முத்துகுமாருக்கும் துறைகள் இல்லை. தலைமை, முண்னனி என்ற அடைமொழிகள் மட்டுமே.

கட்சி இந்திய தேசியத்தை எதிர்க்கும், தமிழ் தேசியத்தை அதற்கு மாற்றாக நிறுத்தும்.

இதுதான் கட்சியின் அடிப்படையாக இருந்தது.

———-

இதன் பின் முத்துகுமார் வழிக்கு வராததால் றோ அவரை போட்டு தள்ளியது.

சீமானே எல்லாமும் ஆகினார். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இந்திய தேசியத்தை ஏற்கும் இன்னொரு கட்சி ஆகியது நாதக.

கீழே ஒரு லிங்க் கொடுக்கிறேன்.

தன்னோடு சேர்ந்து கட்சி ஆரம்பித்தவரை, எப்படி விலக்கி கதைக்கிறார் சீமான் என பாருங்கள்.

முத்துகுமார் அறிமுகம் இல்லாதவர் என்கிறார். அறிமுகம் இல்லாதவரையா கட்சியில் முண்ணனி ஒருங்கிணைப்பாளர் ஆக்கினார்?

https://www.facebook.com/share/v/162ZcBRq5e/?mibextid=wwXIfr

ஏன் முத்துகுமாருக்கான இடத்தை சீமான் இப்படி சிறுப்பித்து அவர் எல்லாம் சும்மா யாரோ மணி அனுப்பிய பையன் என சொல்கிறார்?

வழமையா செத்தவனை வைத்து அரசியல் செய்யும் சீமான் ஏன் இவரை மட்டும் மறைக்கிறார்?

இத்தனைக்கும் பிறகும் ஒரு பொய் கஞ்சா வழக்கில் ஸ்டாலின் ஏன் சீமானை தூக்கி உள்ளே போட மறுக்கிறார்?

எல்லா கேள்விகளுக்கும் விடை…

RAW.

அடிப்படையில் றோவால் ஹாண்டில் பண்ணபடும் சீமான், ரோவின் தலைமையில் எந்த கட்சி இருக்கிறதோ அதன் சொல்படி ஆட நிர்பந்திக்கபட்டவர்.

இன்றைக்கு அது பிஜேபி. நாளைக்கு அது காங்கிரஸ் அல்லது மூன்றாம் அணி. 

பிகு

@பாலபத்ர ஓணாண்டிஅண்மையில் நீங்கள் வருத்திய ஒரு சம்பவத்தை எழுதினீர்கள்.

அதே போல் இந்த சீமான் ஆதரவுக்காக நீங்கள் இன்னும் சில அல்லது பல வருடங்களில் வருந்தத்தான் போகிறீர்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

👆இது சாபமோ, கோபமோ இல்லை.

என்னால் இதற்கு மேல் கன்வின்ஸ் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.