Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோஷித ராஜபக்ஷ கைது

January 25, 2025  10:08 am

யோஷித ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199271

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பையனுக்கு 2006 இல் 17 அல்லது 18 வயதுதான் இருந்திருக்கும்.  ராஜபக்ச பிள்ளைகள் இந்த இளம் வயதிலேயே பணமோசடி, நில கொள்ளை செய்வதில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சில்லறைகளில் காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றாமல் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த குடும்பத்தினர் செய்த பாரிய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் சட்டமா அதிபரிடம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா_

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதான யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

January 25, 2025  06:09 pm

கைதான யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199294

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vanangaamudi said:

இந்த பையனுக்கு 2006 இல் 17 அல்லது 18 வயதுதான் இருந்திருக்கும்.  ராஜபக்ச பிள்ளைகள் இந்த இளம் வயதிலேயே பணமோசடி, நில கொள்ளை செய்வதில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சில்லறைகளில் காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றாமல் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த குடும்பத்தினர் செய்த பாரிய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் சட்டமா அதிபரிடம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா_

1.ஆதாரம் இருந்தாலும் ஜே வி.பி ஆட்சி முடிந்து மகிந்த குடும்பம் திரும்ப ஆட்சிக்கு வந்தால் ....


2.
ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை காட்டிக்கொடுப்பானா?

3. 
அரசியல் என்றால் ஒரு கண் துடைப்பு (மக்களுக்கு)இருக்கத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nunavilan said:

1.ஆதாரம் இருந்தாலும் ஜே வி.பி ஆட்சி முடிந்து மகிந்த குடும்பம் திரும்ப ஆட்சிக்கு வந்தால் ....


2.
ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை காட்டிக்கொடுப்பானா?

3. 
அரசியல் என்றால் ஒரு கண் துடைப்பு (மக்களுக்கு)இருக்கத்தானே வேண்டும்.

மக்களின் அன்றாட பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில் இது போன்ற அறிக்கைகள் வந்து கொண்டே யிருக்கும்...மகிந்தாவின் புதல்வர்களின் குடியுரிமையை அடுத்த தேர்தலுக்கு முதல் பறித்தெடுக்க முயற்சி செய்வார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

மக்களின் அன்றாட பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில் இது போன்ற அறிக்கைகள் வந்து கொண்டே யிருக்கும்...மகிந்தாவின் புதல்வர்களின் குடியுரிமையை அடுத்த தேர்தலுக்கு முதல் பறித்தெடுக்க முயற்சி செய்வார்கள் 

எதுவுமே நடக்காது புத்தரே...நாங்கள் ஊரிலை ஒரு விளையாட்டு விளையாடுவம்..ஒரு ஆளுக்கு கண்ணைக்கட்டிபோட்டு..மற்ற்வை சுத்த நிக்க..கண்கட்டினவர் ..ஆச்சிப் பூச்சி..தண்ணிதா என்று சத்தம் ம்போட்டபடி மற்றவரைத் தொடவருவது...அந்த விளையாட்டுத்தான் நடக்குது...தெற்கிலை உப்பு தேங்காய் ,அரிசி இல்லை ...உதயசூரியன் கடற்கரைக்கு பட்டன் ஏற்ற மாசக்கடைசியிலை வாறாராம்..☺️

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

எதுவுமே நடக்காது புத்தரே...நாங்கள் ஊரிலை ஒரு விளையாட்டு விளையாடுவம்..ஒரு ஆளுக்கு கண்ணைக்கட்டிபோட்டு..மற்ற்வை சுத்த நிக்க..கண்கட்டினவர் ..ஆச்சிப் பூச்சி..தண்ணிதா என்று சத்தம் ம்போட்டபடி மற்றவரைத் தொடவருவது...அந்த விளையாட்டுத்தான் நடக்குது...தெற்கிலை உப்பு தேங்காய் ,அரிசி இல்லை ...உதயசூரியன் கடற்கரைக்கு பட்டன் ஏற்ற மாசக்கடைசியிலை வாறாராம்..☺️

72 வருட நோய்க்கு மருந்து போட வெளிக்கிட்டிருக்கினம்.தலைமாட்டில் இந்தியா,கால்மாட்டில சீனா ,வயிற்றில் வலதுசாரியும்,இடதுசாரியும்....நோய் சுகமாகும் நோயாளி தப்புவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

72 வருட நோய்க்கு மருந்து போட வெளிக்கிட்டிருக்கினம்.தலைமாட்டில் இந்தியா,கால்மாட்டில சீனா ,வயிற்றில் வலதுசாரியும்,இடதுசாரியும்....நோய் சுகமாகும் நோயாளி தப்புவாரா?

.. தப்பாது...விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

72 வருட நோய்க்கு மருந்து போட வெளிக்கிட்டிருக்கினம்.தலைமாட்டில் இந்தியா,கால்மாட்டில சீனா ,வயிற்றில் வலதுசாரியும்,இடதுசாரியும்....நோய் சுகமாகும் நோயாளி தப்புவாரா?

இவர்களை சீனா ஓரளவு நம்பும். சீனா பெயரில்தான் பொதுவுடமை. ஆனால் உள்ளுக்கு அப்படியில்லை. இந்த யே.வி.பி (JVP) என்ற என்.பி.பி (NPP) யும் உண்மையான மாக்ஸிஸவாதிகள் அல்லர்.பெயரில்தான் மாக்ஸிஸ்டுகள்.இந்தியா இவர்களை நம்பாது, ஆனால் நம்புறமாதிரி  நடித்து  அதற்குபின்வரும் அரசிடம் அறுவடை செய்யலாமென்ற நோக்கில் உதவும். சிலநேரம் வடை போச்சே நிலையும் ஆகலாம். ஆனாலும் இந்திய ராசதந்திரக் கூசாக்கள் தாங்கள் தமிழரை நசுக்கிவிட்டோம் என்று தமக்குள் பெருமைப்பட்டுக்கொள்வர். தமிழரது வேட்டியை உருவுவதாக நினைத்துத் தமது கோவணத்தையும் சிங்களத்திடம் இழப்பர். தமிழரால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று தமிழர் மீது தடைகளைப் போட்டு சிங்களத்தைக் குஷிப்படுத்துவர். என்னதான் செய்தாலும் சிங்கள ராசதந்திரத்திடம் இந்தியா தோற்பது நடக்கும். அது ஜெயவர்தன காலம் முதல் தொடர்கதையே. உலகம் இப்போ மத்தியகிழக்கு, உக்ரேன் என நேரமற்றநிலை. இவற்றைக்கடந்து இலங்கையரசு மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய நிறைய உழைக்க வேண்டும். அதற்கு இன்னும் 30ஆண்டுகளாவது எடுக்கும். அதற்கு முன்பாக இனப்பிரச்சினையும் தீர வேண்டும். தமிழரை அழிக்கக் கடன்பட்டு, கடன்பட்டு வந்த பொருளாதார வீழ்ச்சியை ஒரு இரு ஆண்டுகளில் சீராக்க அனுரவும் அவரது சகபாடிகளும் என்ன மந்திரவாதிகளா? தேங்காய்க்கு குறைந்தது 6ஆண்டு.. உப்புக்கு... என ஒரு காலம் தேவைதானே. அப்போது அடுத்த தேர்தல் வந்துவிடும் மீண்டும் ஊழலை ஒழித்தல்... புதிய நாட்டை அமைத்தல் என்ற கோசங்கள் கேட்கத் தொடங்கும். மறதிநோய்கண்ட மக்கள் மீண்டுமொரு வாக்குபதிவுக்குப் போவார்கள். இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறாது. இனவாதமெனும் ஆயுதமும் மகாவம்ச மதவாதமெனும் பௌத்தமமதையும் கோலோச்சும்வரை இந்தநிலையே    
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை - அமைச்சரவை பேச்சாளர்

26 JAN, 2025 | 10:58 AM
image
 

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சிஐடியினர் அது குறித்து விசாரணை செய்வார்கள். சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். யோஷித்த மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அவை தொடர்கின்றன. சிஐடியினரும் பொலிஸாரும் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/204907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிஸார் விளக்கம் !

 

ShanaJanuary 26, 2025
 
1737899953-Manathunga-L.jpg

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதை யோஷித ராஜபக்ஷவின் நண்பர் அல்லது வேறு நபரொருவர் எடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என்றும், சந்தேக நபரின் நடத்தையைப் பொறுத்து, அந்த நேரத்தில் பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரியே சந்தேக நபருக்கு கைவிலங்கு போடலாமா வேண்டாமா என்பதை என்பதை தீர்மானிப்பார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, அவரை நாளை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது

 

https://www.battinews.com/2025/01/blog-post_101.html

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nochchi said:

இவர்களை சீனா ஓரளவு நம்பும். சீனா பெயரில்தான் பொதுவுடமை. ஆனால் உள்ளுக்கு அப்படியில்லை. இந்த யே.வி.பி (JVP) என்ற என்.பி.பி (NPP) யும் உண்மையான மாக்ஸிஸவாதிகள் அல்லர்.பெயரில்தான் மாக்ஸிஸ்டுகள்.இந்தியா இவர்களை நம்பாது, ஆனால் நம்புறமாதிரி  நடித்து  அதற்குபின்வரும் அரசிடம் அறுவடை செய்யலாமென்ற நோக்கில் உதவும். சிலநேரம் வடை போச்சே நிலையும் ஆகலாம். ஆனாலும் இந்திய ராசதந்திரக் கூசாக்கள் தாங்கள் தமிழரை நசுக்கிவிட்டோம் என்று தமக்குள் பெருமைப்பட்டுக்கொள்வர். தமிழரது வேட்டியை உருவுவதாக நினைத்துத் தமது கோவணத்தையும் சிங்களத்திடம் இழப்பர். தமிழரால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று தமிழர் மீது தடைகளைப் போட்டு சிங்களத்தைக் குஷிப்படுத்துவர். என்னதான் செய்தாலும் சிங்கள ராசதந்திரத்திடம் இந்தியா தோற்பது நடக்கும். அது ஜெயவர்தன காலம் முதல் தொடர்கதையே. உலகம் இப்போ மத்தியகிழக்கு, உக்ரேன் என நேரமற்றநிலை. இவற்றைக்கடந்து இலங்கையரசு மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய நிறைய உழைக்க வேண்டும். அதற்கு இன்னும் 30ஆண்டுகளாவது எடுக்கும். அதற்கு முன்பாக இனப்பிரச்சினையும் தீர வேண்டும். தமிழரை அழிக்கக் கடன்பட்டு, கடன்பட்டு வந்த பொருளாதார வீழ்ச்சியை ஒரு இரு ஆண்டுகளில் சீராக்க அனுரவும் அவரது சகபாடிகளும் என்ன மந்திரவாதிகளா? தேங்காய்க்கு குறைந்தது 6ஆண்டு.. உப்புக்கு... என ஒரு காலம் தேவைதானே. அப்போது அடுத்த தேர்தல் வந்துவிடும் மீண்டும் ஊழலை ஒழித்தல்... புதிய நாட்டை அமைத்தல் என்ற கோசங்கள் கேட்கத் தொடங்கும். மறதிநோய்கண்ட மக்கள் மீண்டுமொரு வாக்குபதிவுக்குப் போவார்கள். இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறாது. இனவாதமெனும் ஆயுதமும் மகாவம்ச மதவாதமெனும் பௌத்தமமதையும் கோலோச்சும்வரை இந்தநிலையே    
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நன்றி நொச்சி மிகவும் சரியான விளக்கம் ...  அடுத்த தேர்தலில் இவர்கள் இனவாதத்தை கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் .

14 hours ago, ஏராளன் said:

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சனை திசைமாற்ற இப்படியான கைதுகள் தேவை.என்ற "உங்களது மையின்ட் வோயிஸ்"
எங்களுக்கும் கேட்குது 

  • கருத்துக்கள உறவுகள்

யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை

27 JAN, 2025 | 10:43 AM
image
 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.

யோஷித்த ராஜபக்ஷ 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித்த ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/204995

  • கருத்துக்கள உறவுகள்

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுவதாகவும், யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுவதாகவும் சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்,” என்றார்.

இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என அவர் மேலும் கூறினார்.

https://thinakkural.lk/article/314951

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணம் எமக்குக் கிடையாது! நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

1244391654.jpg

பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணமில்லை. எமது ஆட்சியின்கீழ் அரசியற்பழிவாங்கலுக்கு முடிவுகட்டப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ச நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசியற்பழிவாங்கலுக்காகவும், குடும்பத்தைப் பழிவாங்கவும் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. சட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சினை இல்லை. ஆனால் சிலரை இலக்குவைத்து செயற்படுவத்துவதில்தான் பிரச்சினை உள்ளது.

எதிரணியை ஒடுக்கித் தமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கே தற்போதைய அரசாங்கம் முயல்கின்றது. நாம் தவறிழைத்திருந்தால் நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து அரசாங்கம் ஊடகக் கண்காட்சியை நடத்தக்கூடாது.

இந்த அரசுக்கு மக்கள் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, பலவந்தமாக ஆட்சியை மாற்ற முடியாது. தேர்தல் ஊடாகவே அது நடக்கும். அத்துடன், அரசியற்பழிவாங்கலுக்கு எமது ஆட்சியில் முடிவு கட்டப்படும்' -என்றார். 
 

https://newuthayan.com/article/ஆட்சி_மாற்றத்தை_ஏற்படுத்தும்_எண்ணம்_எமக்குக்_கிடையாது!_நாமல்_ராஜபக்ச_தெரிவிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார.

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படுத்த முடியாது” என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. யோஷித ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ள குறித்த பணமோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேக நபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம்.
வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதுதான் வழக்கமான நடைமுறை. பிணை சட்டத்தின் விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால், அல்லது நாட்டை விட்டு தப்பிச் செல்லாவிட்டால் பிணை வழங்குவது இயல்பானது. பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல” இவ்வாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1418564

  • கருத்துக்கள உறவுகள்

பாயில் உறங்கச் சொன்னார்கள்; தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் - யோஷித்த

Published By: RAJEEBAN   02 FEB, 2025 | 10:47 AM

image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  மகன் யோஷித்த  ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து யோஷித்த ராஜபக்ச சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,

அன்றைய தினம் சனிக்கிழமை நான் வீட்டிலிருக்கவில்லை. எனது குடும்பத்தினரும் வீட்டில் இருக்கவில்லை. இதனால் எனது வீடு பூட்டியிருந்தது.

நான் பெலியத்த இடமாறும் பகுதிக்கு அருகில் சென்றவேளை போக்குவரத்து பொலிஸை சேர்ந்த ஒருவர் எனது வாகனத்தை மறித்தார். முதலில் அவர் எனது வாகன பதிவுகுறித்த ஆவணங்களை சோதனையிட்டார். காப்புறுதி, வாகனசாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றையும் அவர் சோதனையிட்டார்.

என்னை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிஐடியினர் அந்த பகுதிக்கு வரும்வரை என்னை அங்கேயே இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் என்னை விசாரிக்கவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அங்கிருந்த அலுவலகத்தின் ஆசனத்தின்  அமர்ந்திருக்குமாறு என்னை அவர் கேட்டுக்கொண்டார்.

நான் பெலியத்தையில் உள்ள வீட்டிற்கு சென்று அங்கு காத்திருக்கின்றேன் என அவரிடம் தெரிவித்தேன்.

ஆனால் அவர் பணிவான முறையில் அதனை  ஏற்கமறுத்துவிட்டார்.

நான் எனது ஆதரவாளரின் திருமணவீட்டிற்கு சென்றுகொண்டிருந்தேன், நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னால் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்தேன்.

என்னை தடுத்துநிறுத்துவார்கள் என்பது எனக்கு தெரியாத போதிலும், எனது வீட்டிலிருந்து நான் அதிவேக வீதியை நோக்கி பயணித்த ஆரம்பித்த தருணத்திலிருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் என்னை பின்தொடர்கின்றார்கள் என்பது எனக்கு தெரிந்திருந்தது.

சிஐடியினர் அங்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் என்னை தங்களது வாகனத்திற்கு வருமாறு அவர்கள் உத்தரவிட்டனர், அதன் பின்னர் கொழும்பிலுள்ள சிஐடியி தலைமையகத்திற்கு புறப்பட்டோம் - இந்த பயணம் மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.

ஐந்தரை மணியளவில் அவர்கள் என்னிடம் சிறு வாக்குமூலமொன்றை பதிவு செய்துவிட்டு கொழும்பு மேலதிக நீதவானின்  இல்லத்திற்கு கொண்டு சென்றனர். என்னை தடுத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

yositha_1.jpg

நீதவான் நீதிமன்றத்தில் காத்திருந்தவேளை தனது பாவனைக்காக சகோதரர் இரண்டு போத்தல்களில் நீரை வழங்கினார் என தனது குடும்ப உறுப்பினருக்கு தெரிவித்துள்ள யோஷித்த ராஜபக்ச அவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு எனக்கு அனுமதி வழங்கவில்லை, மேலும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உண்பதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தான் சிறைச்சாலையில் சமைக்கப்பட்ட தேங்காய் சம்பலையும் சோற்றையும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ள யோஷித்த  என்னை சிறைக்கூண்டில் அடைத்துவைத்திருந்தார்கள். 45 நிமிடங்கள் மாத்திரம் வெளியே வர அனுமதித்தார்கள். பகலில் ஒரு தடவையும் மாலை  ஒரு தடவையும் என யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாயை தந்து உறங்கச்சொன்னார்கள், அன்றிரவு நான் உறங்கவேயில்லை என தெரிவித்துள்ள  யோஷித்த  ராஜபக்ச எனது நெருங்கிய நண்பர்களினது நடமாட்டத்தையும் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓரு மனிதன் குற்றவாளி என உறுதிப்படுதப்படும் வரை அவனை  நிராபராதி என்ற கருதவேண்டும் என்பது  இயற்கை நீதியின் கொள்கை எனவே அவர் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்பட்டுள்ளார், அவர் நடத்தப்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமானது "  எனதன்னை அடையாளம் காட்ட விரும்பாத அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறைச்சாலைக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ரக்பி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான யோஷித ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.' எனக்கு எதிரான வழக்கு எட்டு வருடகாலத்திற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது,அவ்வேளை என்னை விசாரணை செய்தார்கள் ஆனால் குற்றவாளி என அடையாளப்படுத்தவில்லை ஒருவரை மாத்திரம் குற்றவாளி  என குறிப்பிட்டார்கள்."

எனது தாய்வழி பாட்டியான டெய்சி பெரொஸ்ட்டை மாத்திரம் குற்றவாளி என குறிப்பிட்டிருந்தார்கள், ஆனால் இம்முறை என்னை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார்கள், என்னை தேடி கண்டுபிடிப்பதற்கு  ஏன் பல வாகனங்களையும் மோட்டார் சைக்கிளையும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை."

'என்னை சிஐடி அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தால் நான் அங்கு சென்று வாக்குமூலம் வழங்கியிருப்பேன், கதிர்காமத்தில் கட்டப்படும் வீடு தொடர்பில் சிஐடியில் ஆஜராகுமாறு ஜனவரி மூன்றாம் திகதியே உத்தரவிட்டிருந்தார்கள்.

https://www.virakesari.lk/article/205572

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

பாயில் உறங்கச் சொன்னார்கள்; தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் - யோஷித்த

விளக்கமறியலில்... ஐந்து நட்சத்திர விடுதியின், 
உபசரிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார் போலுள்ளது. 
அப்பன்,சித்தப்பன்...  பதவி இருக்கும் போது, 
பணிவாக நடந்திருந்தால்... ஏன் இந்த வில்லங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 25ஆம் திகதியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யோஷித ராஜபக்சவின் கைதுக்கு பின்னால் இந்தியாவின் பின்புலமாக இருக்கலாம் என இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“இந்திய நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவில் இருக்கும் செல்வந்தரின் ஊடாக ஹில்டன் ஹோட்டலுக்கு பக்கத்தில் இலங்கை ரூபாவில் 600 கோடி மதிப்பிலான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான பணப்பரிமாற்றம் தொடர்பில் தான் யோஷித கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

டெல்லியை தளமாக கொண்ட இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த ஒரு திட்டமாகதான் அதை பார்க்கிறார்கள்.

டெல்லியிலிருந்து தான் இந்த திட்டத்திற்கான பணம் வந்துள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....

https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-arrested-udaruppu-today-1738591884

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.