Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த 4 மில்லியன் இலங்கை ரூபாய் - ஐரோப்பாவில் அந்த காரின் விலை.

இதை இலங்கைக்கு கொண்டு போய் வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் கட்டி முடிய சிம்பிளாக 10 மில்லியன் தாண்டும்.

 இலங்கை கார் பிரச்சனை விளங்குகின்றது மோசமானது

48 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣.

அப்படி தான் அண்ணா எங்கள் ஆட்களில்இருக்கின்றார்கள்.ரஷ்யாவின் வளர்ச்சிக்காகவே கவலைபட்டு வருந்தி கொண்டிருக்கும் தமிழர்களை கண்டிருப்பீர்கள்  அவர்கள் ரஷ்யா காரை வாங்குவார்களா ரஷ்யா சொக்லேற்ரையாவது வாங்குவார்களா

  • Replies 54
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை

  • goshan_che
    goshan_che

    ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம்

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம்  இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கை

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 இலங்கை கார் பிரச்சனை விளங்குகின்றது மோசமானது

கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset.  மேலே அக்னி சொல்லி உள்ளார் பாருங்கள் - 2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம்.

அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ  370 ரூபாய்.

ஆனால் கார் விலை டபிளாகி  கூடியுள்ளது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம்.

அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ  370 ரூபாய்.

ஆனால் கார் விலை டபிளாகி  கூடியுள்ளது. 

உலக அதிசயம் தான்
எமது ஆட்களுக்கு காணிகள் வீடுகள்  வாங்கிவிடுவது மாதிரி தான் காரும் வாங்குவார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள். ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset.

இந்த விசயத்தை முதலில் கேள்விப்பட்ட போது நம்ப முடியாமல் தான் இருந்தது. போன வருடம் நான் இலங்கை போயிருந்த பொழுது, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு போன வாகனத்தின் ஓட்டுநரும் இதே கணக்கை சொல்லியிருந்தார். 

பல வருடங்களின் ஒரு இந்தியர் குறுகிய கால வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தார். ஆறு மாதங்கள் மட்டுமே அவருக்கு வேலை என்றிருந்தது. ஆறு மாதங்களின் பின்னர் அவர் திரும்பிப் போகவேண்டும். இங்கு ஒரு கார் வாங்கலாமா, வாங்கினால் திரும்பப் போகும் முன்  அதிக விலைக்கு விற்கலாம் தானே என்று என்னைக் கேட்டார். உலகத்தில் எங்குமே அப்படியெல்லாம் விற்க முடியாது, கார் வாங்கியவுடனேயே அதன் பெறுமதியில் நாலில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று சொன்னேன். அமெரிக்காவில் இது தான் நிலைமை.

அப்படியானால் ஏன் அதை நான் வாங்க வேண்டும் என்று அவர் கார் வாங்கவில்லை. ஆனால், பதிலாக, சென்னையில் ஒரு வீடு வாங்கினார். பம்மலுக்கு அருகே இருக்கும் அனகாபுத்தூரில் என்று ஞாபகம். மூன்று நண்பர்களும், இவருமாக நாலு யுனிற் உள்ள ஒரு கட்டிடத்தை வாங்கினார்கள். இரண்டு கீழே, இரண்டு மேலே என்றுள்ள தனித்தனி வீடுகள்.

அடுத்த வருடம் அங்கு கொட்டிய மழையில் இவரின் ஊர் வெள்ளக்காடாகியது. இவரின் வீடு கீழே இருந்தது. வீடு முழுவதும் வெள்ளத்தல் நிரம்பியது என்று சொன்னார்.

அமெரிக்காவிடம் இருந்து தப்பி, அனகாபுத்தூரிடம் மாட்டிக்கொண்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset.  மேலே அக்னி சொல்லி உள்ளார் பாருங்கள் - 2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம்.

அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ  370 ரூபாய்.

ஆனால் கார் விலை டபிளாகி  கூடியுள்ளது. 

காரும் இரட்டிப்பு பவுண்சும் இரட்டிப்பு! அப்ப கணக்கு சரி தானே அண்ணை?

அடிபட்ட வாகனங்களே வடிவாக மீளமைத்து விக்கிறாங்கள்! 
appreciating asset ற்கான காரணம் இறக்குமதி வரி அதிகம்(300%) என நினைக்கிறேன். கடந்த சில வருடங்கள் தான் வாகன இறக்குமதித் தடை உள்ளது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

இந்த விசயத்தை முதலில் கேள்விப்பட்ட போது நம்ப முடியாமல் தான் இருந்தது. போன வருடம் நான் இலங்கை போயிருந்த பொழுது, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு போன வாகனத்தின் ஓட்டுநரும் இதே கணக்கை சொல்லியிருந்தார். 

பல வருடங்களின் ஒரு இந்தியர் குறுகிய கால வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தார். ஆறு மாதங்கள் மட்டுமே அவருக்கு வேலை என்றிருந்தது. ஆறு மாதங்களின் பின்னர் அவர் திரும்பிப் போகவேண்டும். இங்கு ஒரு கார் வாங்கலாமா, வாங்கினால் திரும்பப் போகும் முன்  அதிக விலைக்கு விற்கலாம் தானே என்று என்னைக் கேட்டார். உலகத்தில் எங்குமே அப்படியெல்லாம் விற்க முடியாது, கார் வாங்கியவுடனேயே அதன் பெறுமதியில் நாலில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று சொன்னேன். அமெரிக்காவில் இது தான் நிலைமை.

அப்படியானால் ஏன் அதை நான் வாங்க வேண்டும் என்று அவர் கார் வாங்கவில்லை. ஆனால், பதிலாக, சென்னையில் ஒரு வீடு வாங்கினார். பம்மலுக்கு அருகே இருக்கும் அனகாபுத்தூரில் என்று ஞாபகம். மூன்று நண்பர்களும், இவருமாக நாலு யுனிற் உள்ள ஒரு கட்டிடத்தை வாங்கினார்கள். இரண்டு கீழே, இரண்டு மேலே என்றுள்ள தனித்தனி வீடுகள்.

அடுத்த வருடம் அங்கு கொட்டிய மழையில் இவரின் ஊர் வெள்ளக்காடாகியது. இவரின் வீடு கீழே இருந்தது. வீடு முழுவதும் வெள்ளத்தல் நிரம்பியது என்று சொன்னார்.

அமெரிக்காவிடம் இருந்து தப்பி, அனகாபுத்தூரிடம் மாட்டிக்கொண்டார். 

அடப்பாவமே…எப்படி புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

காரும் இரட்டிப்பு பவுண்சும் இரட்டிப்பு! அப்ப கணக்கு சரி தானே அண்ணை?

இல்லை - கார் 15 வருடம் பாவனை, மைல்லேஜ்ஜுக்கு பிறகும் வாங்கிய விலையை விட (2011 நாணய மாற்று வீத அடிப்படையில்) அண்ணளவாக 1. 5 இலட்சத்தால் (£1000) கூடியுள்ளது.

ஏனைய நாடுகளில் முதல் 3 வருடத்தில் ஷோ ரூம் விலையில் 45-50% போய்விடும்.

மேலே அக்னி சொன்ன இன்றைய மதிப்புக்கு இலங்கையில் £30,000 பெறுமதியான கார் யூகேயில் £500-1000 தான் போகும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

appreciating asset ற்கான காரணம் இறக்குமதி வரி அதிகம்(300%) என நினைக்கிறேன். கடந்த சில வருடங்கள் தான் வாகன இறக்குமதித் தடை உள்ளது என நினைக்கிறேன்.

இறக்குமதி தடை ஒரு முக்கிய காரணம்.

ஆனால் 2019 ற்கு முன்பே இலங்கை ரூபாய் மதிப்பில் அநேகமான என் நண்பர்கள் வாங்கிய விலையை விட கூடிய விலைக்குத்தான் கார்களை விற்றுள்ளார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரித்து செல்லும் இறக்குமதி வரி காரணமாக.

மேலே நான் சொன்ன பவுண்சுக்கு மாற்றி பார்ப்பது வெளிநாட்டவர் நோக்கில் மட்டும்தானே.

அநேகமான இலங்கை கார் நுகர்வோர் வாங்குவதும், விற்பதும் இலங்கை காசில்தானே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

உலகத்தில் எங்குமே அப்படியெல்லாம் விற்க முடியாது, கார் வாங்கியவுடனேயே அதன் பெறுமதியில் நாலில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று சொன்னேன். அமெரிக்காவில் இது தான் நிலைமை.

உலகம் எங்குமே அப்படி தான்  இலங்கையை தவிர

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2025 at 07:27, விளங்க நினைப்பவன் said:

சிறப்பு
4 மில்லியன் இலங்கை ரூபாய்க்குள் வருகின்றது  brand new கார்
10 மில்லியனுக்கு குறைவாக இலங்கையில் வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அழ வேண்டியது இல்லை.

நாற்பது லட்சத்திற்கெல்லாம் வாய்ப்பேயில்லை இந்தியன் alto வே 68-70 லட்சங்கள் இதனுடைய ஜப்பான் வேரியண்ட் 75-78 லட்சங்கள். Wagon R high end 90 லட்சங்கள்(மற்றவை 84-87) . Toyota Aqua (Prius C ) -135 லட்சங்கள் 
Honda Vazel - 200 லட்சங்கள். Nissan XTrail - 2.5-3 கோடிகள் தொடலாமாம்.  Land Cruiser 250 high end  அண்ணளவாக 8-10 கோடிகள்.

முச்சக்கர வண்டியே 25 லகரங்களை தொடப்போகுதாம்    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாற்பது லட்சத்திற்கெல்லாம் வாய்ப்பேயில்லை இந்தியன் alto வே 68-70 லட்சங்கள் இதனுடைய ஜப்பான் வேரியண்ட் 75-78 லட்சங்கள். Wagon R high end 90 லட்சங்கள்(மற்றவை 84-87) . Toyota Aqua (Prius C ) -135 லட்சங்கள் 
Honda Vazel - 200 லட்சங்கள். Nissan XTrail - 2.5-3 கோடிகள் தொடலாமாம்.  Land Cruiser 250 high end  அண்ணளவாக 8-10 கோடிகள்.

முச்சக்கர வண்டியே 25 லகரங்களை தொடப்போகுதாம்    

ஓம்   இலங்கை கார் வரி பிரச்சனை விளங்கியது 😀
இலங்கை கார் புதிய விலை தகவல்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அக்னியஷ்த்ரா said:

உங்கள் சிங்கப்பூரரின் பாஸ்போர்ட் உலகின் முதலாவது சக்தி கொண்ட பாஸ்போட்டாக 2025 ல் வந்துள்ளது👍
யப்பான், தென் கொரியா 2 வது இடத்திலும்  அவுஸ்ரேலியா , யுகே 6 இடத்திலேயும்  கனடா 7 வது இடத்திலும்  அமெரிக்கா 9 இடத்திலும் வந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!

வாகன இறக்குமதிக்குத் தயக்கம் காட்டும் இறக்குமதியாளர்கள்!

இலங்கையில் வாகன இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர்கள், தற்போது வாகன இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாகன இறக்குமதிகளின்போதான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வாகனங்களுக்கான வரி விதிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கொள்வனவாளர்களை தேடிக்கொள்வதில் நிலவும் சிரமங்களினால் வாகன இறக்குமதி மந்த கதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வாகனம் தேவைப்படுவோர் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தற்பொழுது வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களை வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறக்குமதியாளர்கள் ஊடாக வாகனம் கொள்வனவு செய்யப்படும் போது கொள்வனவு செய்வோர் மீது மேலதிக வரி விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பெரிய வாகன இறக்குமதி நிறுவனங்கள் கூட முன்பதிவு அடிப்படையில் மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420860

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2025 at 03:18, goshan_che said:

யூகேயில் ஒரு யாரிஸ் £23,000 க்கு மேல்தான்.

யாரிஸ் கார் brand new வாங்கும் போது அனேகமாக 1500 -2000 பவுண்ஸ் தள்ளுபடி (தமிழ்புது வருட தள்ளுபடி😀 ) தருவார்களாம் .

21 க்கு எடுக்கலாமாம்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாரிஸ் கார் brand new வாங்கும் போது அனேகமாக 1500 -2000 பவுண்ஸ் தள்ளுபடி (தமிழ்புது வருட தள்ளுபடி😀 ) தருவார்களாம் .

21 க்கு எடுக்கலாமாம்

யூகேயில் pre registered, delivery mileage காரை இப்படி எடுக்கலாம்.

இங்கே ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் நம்பர் பிளேட் மாறும்.

மார்ச் 2024 க்கு பின் வரும் கார் 24 பிளேட்…

செப்டெம்பர் 2024 - 74…..

மார்ச் 2025 - 25….

செப் 2025 - 75…..

ஒவ்வொரு டீலருக்கும் ஒவ்வொரு காலாண்டிலும் குறித்த அளவு கார்களை ரினிஸ்தர் பண்ணியே ஆக வேண்டிய quota ஒன்று உள்ளது.

இப்படி ரிஜிஸ்தர் பண்ணிய கார்கள் ஷோரூமில் நிற்கும் போதே 10-15% மதிப்பை இழக்கும்.

உதாரணமாக இப்போ மார்ச் 1ம் திகதி 25 பிளேட் வரப்போகிறது.

இன்று ஷோரூம் போய், 74 பிளேட் கார் ஒன்றை வாங்கினால் அது brand new. அதே காரை மார்ச் 1ம் திகதி வாங்கினால் அது used car. அந்த காரின் மதிப்பு, அது ஷோ ரூமில் நிற்கும் போதே பெப்28/மார்ச் 1 இற்கிடையான 24 மணியில் 10% குறைந்து விடும்.

இதே காரை மார்ச் 2ம் திகதி வாங்காமல், இன்று பெப் 17 இல் வாங்கினால் - உங்களுக்கு 8% கழிவு கிடைக்கலாம்.

அதாவது அடுத்த 2 கிழகைக்கு நீங்கள் brand new car ஓடலாம்.

இதுதான் நீங்கள் சொல்லும் 23,000 - 21,000 புத்தாண்டு விலைக்கழிவு.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-307.jpg?resize=750%2C375&ssl

BYD சொகுசு கார்களின் இலங்கை விலை விபரம்!

உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை கடந்த வருடம் திறந்து வைத்தது.

கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான காட்சியறையின் திறப்பு நிகழ்வானது 2024 ஆகஸ்டம் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், BYD ஸ்ரீலங்கா அவர்களின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) ஆகியவற்றுக்கான சிறப்பு விலைகளை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் 8 வருட உற்பத்தியாளர் பேட்டரி உத்தரவாதமும் 6 வருட உற்பத்தியாளர் வாகன உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம்.

BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா

BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா

BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா

BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா

BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா

BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா

BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா

BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா

BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா

BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா

https://athavannews.com/2025/1422480

@goshan_che , @விளங்க நினைப்பவன் , @அக்னியஷ்த்ரா , @ரசோதரன் , @நிழலி , @இணையவன் , @ஈழப்பிரியன் , @Justin , @ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480775204_1118462670291475_5219509700385

ஆட்டோ... ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது எந்த நாட்டுக் கார்?

சீன வாகனம் மலிவு என்கிறார்கள்.

ஏன் இறக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இது எந்த நாட்டுக் கார்?

சீன வாகனம் மலிவு என்கிறார்கள்.

ஏன் இறக்கவில்லை?

இது தான் அது, அண்ணா................... சைனாவின் வாகனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

இது தான் அது, அண்ணா................... சைனாவின் வாகனங்கள்.

ஓஓஓஓ அது இதுவா.நன்றி.

மலிவு என்றார்கள் பயங்கர விலையாக உள்ளதே?

இலங்கையில் விதிக்கும் வரியால் இந்த விலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓ அது இதுவா.நன்றி.

மலிவு என்றார்கள் பயங்கர விலையாக உள்ளதே?

இலங்கையில் விதிக்கும் வரியால் இந்த விலையோ?

எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........

  • கருத்துக்கள உறவுகள்

வாகன வரி சம்பந்தமான இணையத்தளம் ஒன்றில் 20000$ வாகனத்திற்கு வரி விபரம் கொடுத்து பார்த்தபோது 60லட்ச ரூபாவிற்கு வரிகளோட கிட்டத்தட்ட 2 கோடி வருகிறது!!

vehicle-tax.jpg

vehicle-tax1.jpg

https://cal.lk/vehicle-cost-calculator/

28 minutes ago, ரசோதரன் said:

எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........

புதிய வாகனங்களுக்கு வரி 300% என நினைக்கிறேன் அண்ணை. அதனால் ஜப்பானில் பாவித்த வாகனங்களை குறைந்த வரியோடு இறக்குமதி செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

புதிய வாகனங்களுக்கு வரி 300% என நினைக்கிறேன் அண்ணை. அதனால் ஜப்பானில் பாவித்த வாகனங்களை குறைந்த வரியோடு இறக்குமதி செய்கிறார்கள்.

300 வீதம் என்பது சரியாகத்தான் இருக்கும், ஏராளன். இது மிக அதிகம்.......🫢.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

New-Project-307.jpg?resize=750%2C375&ssl

BYD சொகுசு கார்களின் இலங்கை விலை விபரம்!

உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை கடந்த வருடம் திறந்து வைத்தது.

கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான காட்சியறையின் திறப்பு நிகழ்வானது 2024 ஆகஸ்டம் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், BYD ஸ்ரீலங்கா அவர்களின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) ஆகியவற்றுக்கான சிறப்பு விலைகளை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் 8 வருட உற்பத்தியாளர் பேட்டரி உத்தரவாதமும் 6 வருட உற்பத்தியாளர் வாகன உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம்.

BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா

BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா

BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா

BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா

BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா

BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா

BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா

BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா

BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா

BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா

https://athavannews.com/2025/1422480

@goshan_che , @விளங்க நினைப்பவன் , @அக்னியஷ்த்ரா , @ரசோதரன் , @நிழலி , @இணையவன் , @ஈழப்பிரியன் , @Justin , @ஏராளன்

ஆகச் சிறிய சீன இறக்குமதி பைட் ஒரு கோடி தாண்டுது.

4 hours ago, ரசோதரன் said:

எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........

இல்லை. இவை ஆடம்பர வசதிகளை அடைய கூடிய விலையில் தரும் “ஏழைகளின் டெஸ்லா” இவை.

பிரிதானியாவில் எலெக்ரிக்கார் மார்கெட்டில் மலிவான கார்களில் பைட்டும் ஒன்று.

3 hours ago, ஏராளன் said:

வாகன வரி சம்பந்தமான இணையத்தளம் ஒன்றில் 20000$ வாகனத்திற்கு வரி விபரம் கொடுத்து பார்த்தபோது 60லட்ச ரூபாவிற்கு வரிகளோட கிட்டத்தட்ட 2 கோடி வருகிறது!!

vehicle-tax.jpg

vehicle-tax1.jpg

https://cal.lk/vehicle-cost-calculator/

புதிய வாகனங்களுக்கு வரி 300% என நினைக்கிறேன் அண்ணை. அதனால் ஜப்பானில் பாவித்த வாகனங்களை குறைந்த வரியோடு இறக்குமதி செய்கிறார்கள்.

இன்றைய நடைமுறை தெரியாது.

2020 க்கு முன். நான் அறிந்தவரையில்.

  1. Manufactured date இல் இருந்து 3 வருடத்துட்பட்ட கார்களைதான் இறக்க முடியும்( ஜப்பான் ரிகொண்டிசன் என்றாலும்) .

  2. வாகனத்தின் “லக்சறி” அளவை பொறுத்து 150% -300% வரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆகச் சிறிய சீன இறக்குமதி பைட் ஒரு கோடி தாண்டுது.

இல்லை. இவை ஆடம்பர வசதிகளை அடைய கூடிய விலையில் தரும் “ஏழைகளின் டெஸ்லா” இவை.

பிரிதானியாவில் எலெக்ரிக்கார் மார்கெட்டில் மலிவான கார்களில் பைட்டும் ஒன்று.

ஏழைகளின் டெஸ்லாவே இந்த விலையா இலங்கையில்..............

இங்கு அமெரிக்காவில் நான் பார்க்கவில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கலாம்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.