Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது 

சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . 

தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் 

எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் 

இதை எல்லாம் அவர்கள் செய்தமைக்கு காரணம் " சீமானின் எழுச்சியை தடுப்பது " தான் . நேரடியாகவே சொன்னார்கள் " தங்களுக்கு வர வேண்டிய வாக்குகளில் 30 லட்சம் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு போகுது . இதை நாம் அனுமதிக்க முடியாது என்றார்கள் . இதுவரை திராவிட பெயர் சொல்லி சேர்ந்த வாக்குகள் முதன் முறை வேறு 

ஒரு பெயரால் திரள தொடங்குகியது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்திருந்தது . அந்த பெயர் " மேதகு" . 

எந்த பெயரால் அங்கு வாக்கு திரள்கிறதோ அந்த பெயரை பூச்சியமாக்கி விட்டால் வாக்கு திரள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் நினைத்தே " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியமாக்கும் " பரப்புரையை முன்னெடுத்து வந்தார்கள் 

காலம் உருண்டோடியது . 

இன்று . 

எந்த போராட்டத்தை களங்கப்படுத்த முயற்சித்தார்களோ , எவரை பூச்சியமாக்க வெளிக்கிட்டார்களோ அதை எல்லாம் புனிதமாக்கும் பணியை தி மு க IT விங் செய்து வருகிறது . 

விடுதலை புலிகள் திராவிடர்கள் பற்றி சொன்ன வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து , அவர்களே சொல்லி இருக்கிறார்கள் என்று அவர்களை உயரத்துக்கு கொண்டு போய் வைக்கிறார்கள் 

எந்த டி விகளில் " ஈழத்தமிழர்களில் போராட்டத்துக்கு ஏதிரானவர்களை தேடி பிடித்து பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ அதே டிவியில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் , முன்னாள் போராளிகள் " என்று பலரை பிடித்து பேட்டிகளை ஒளி பரப்புகிறார்கள் 

இந்திய - இலங்கை கூட்டு சதியால் கொல்லப்பட்ட கேணல் கிட்டு வின் வரலாறுகள் கலைஞர் டிவி யில் பரப்புரை செய்யப்படுகிறது . 

விதி வலியது .

நன்றி: சிவ ரதன்

காலம் எம்மை விடுதலை செய்யும்

https://www.facebook.com/share/18imsftho7/

  • Replies 50
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம்,  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகர

  • goshan_che
    goshan_che

    மிக மோசமான வரலாற்று திரிப்பு. மூன்றரை ஆண்டுகளுக்கு முன் இதை பற்றி நான் யாழில் எழுதியது இன்னும் இருக்கிறது - தேடி வாசிக்கவும். நா.த.க குப்பாடிகளும், இன்னும் கொஞ்சம் பகிடி சொல்லும் “முள்ளம் பன

  • கிருபன்
    கிருபன்

    அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிக

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம்,  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர்.

இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள்.  பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர்.

இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும்,  தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல  விடயம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் 

சிவப்பு இதற்கு.

இன்னொருத்தரை பார்த்து முட்டாள் என்று எவன் கணிப்பீடு செய்து இணைய வெளியில் பகிரங்கமாக அறிவிக்கிறானோ அவன் அடி முட்டாள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது 

சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . 

தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் 

எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் 

இதை எல்லாம் அவர்கள் செய்தமைக்கு காரணம் " சீமானின் எழுச்சியை தடுப்பது " தான் . நேரடியாகவே சொன்னார்கள் " தங்களுக்கு வர வேண்டிய வாக்குகளில் 30 லட்சம் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு போகுது . இதை நாம் அனுமதிக்க முடியாது என்றார்கள் . இதுவரை திராவிட பெயர் சொல்லி சேர்ந்த வாக்குகள் முதன் முறை வேறு 

ஒரு பெயரால் திரள தொடங்குகியது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்திருந்தது . அந்த பெயர் " மேதகு" . 

எந்த பெயரால் அங்கு வாக்கு திரள்கிறதோ அந்த பெயரை பூச்சியமாக்கி விட்டால் வாக்கு திரள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் நினைத்தே " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியமாக்கும் " பரப்புரையை முன்னெடுத்து வந்தார்கள் 

காலம் உருண்டோடியது . 

இன்று . 

எந்த போராட்டத்தை களங்கப்படுத்த முயற்சித்தார்களோ , எவரை பூச்சியமாக்க வெளிக்கிட்டார்களோ அதை எல்லாம் புனிதமாக்கும் பணியை தி மு க IT விங் செய்து வருகிறது . 

விடுதலை புலிகள் திராவிடர்கள் பற்றி சொன்ன வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து , அவர்களே சொல்லி இருக்கிறார்கள் என்று அவர்களை உயரத்துக்கு கொண்டு போய் வைக்கிறார்கள் 

எந்த டி விகளில் " ஈழத்தமிழர்களில் போராட்டத்துக்கு ஏதிரானவர்களை தேடி பிடித்து பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ அதே டிவியில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் , முன்னாள் போராளிகள் " என்று பலரை பிடித்து பேட்டிகளை ஒளி பரப்புகிறார்கள் 

இந்திய - இலங்கை கூட்டு சதியால் கொல்லப்பட்ட கேணல் கிட்டு வின் வரலாறுகள் கலைஞர் டிவி யில் பரப்புரை செய்யப்படுகிறது . 

விதி வலியது .

நன்றி: சிவ ரதன்

காலம் எம்மை விடுதலை செய்யும்

https://www.facebook.com/share/18imsftho7/

மிக மோசமான வரலாற்று திரிப்பு.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் இதை பற்றி நான் யாழில் எழுதியது இன்னும் இருக்கிறது - தேடி வாசிக்கவும்.

நா.த.க குப்பாடிகளும், இன்னும் கொஞ்சம் பகிடி சொல்லும் “முள்ளம் பன்றி தலை” புலம்பெயர் குப்பாடிகளும் சேர்ந்து கருணாநிதி நினைவுநாளில் தேவையில்லாமல் கருணாநிதி தெலுங்கன், பிரபாகரந்தான் தமிழின தலைவன் என எழுதி…

ஒரு வலிந்த சண்டையை மூட்டினர்…

அதன் பிரதிபலனாக தேவையில்லாமல் புலிகளை பற்றிய விமர்சனமும், விமர்சன காணொளிகளும் இதுவரை அது பற்றி அறியாத தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்து செல்லப்பட்டது.

இது சீமான்+ரோ விற்கு பலத்த வெற்றி.

புலிகளை, போராட்டத்தை நேசிப்பவர்களுக்கு  பலத்த தோல்வி.

சீமான்+ரோ செய்யும் எதிர் புரட்சி மிக நூதனமானது …இதை இன்னும் சில அண்ணைமார் விளங்கி கொள்ளவில்லை என்பது புரிகிறது.

3 hours ago, கிருபன் said:

இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள்.

எனக்கும் ஒரு அட்வான்ஸ் சிவப்பு பிளீஸ்.

நான் இன்னும் ஒரு படி மேலே போவேன்….

ஆதாரத்தோடு சீமான்+ரோ உறவை எடுத்து சொன்ன பின்னும், கார்த்தி, உருத்திரகுமார் இன்னும் பல சம்பந்தமில்லாதவர்கள் குரல் கொடுத்த பின்னும்…

இன்னும் சீமானுக்கு முட்டு கொடுக்கும் இப்படியானவர்கள்…

மூடர்கள் அல்ல…

Addicts - போதைக்கு அடிமையானவர்கள்….

சீமான் புலிகொடியையிம், தலைவர் படத்தையிம் போட்டால் - இவர்கள் addiction க்கு அதுபோதும்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

சிவப்பு இதற்கு.

இன்னொருத்தரை பார்த்து முட்டாள் என்று எவன் கணிப்பீடு செய்து இணைய வெளியில் பகிரங்கமாக அறிவிக்கிறானோ அவன் அடி முட்டாள். 

அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா!

50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். 

சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம். 

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.

இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா!

50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். 

சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம். 

ஆமாம் 

கள்ளன்

கொள்ளைக்கூட்டம்

வியாபாரி

ஆட்டையப் போட்டவன் 

என்றெல்லாம் சொல்லி நிறுவமுடியாமல் போக இப்ப இது. 

நல்லா வரமாட்டியல். சொன்ன நாக்கு அழிஞ்சு தான் சாவியள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

😂🤣 சீமான் பின்னால் போனால் இதுக்கும் மேலே சொல்லுவியள்..

காகம் திட்டி மாடு சாவதில்லை😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

😂🤣 சீமான் பின்னால் போனால் இதுக்கும் மேலே சொல்லுவியள்..

காகம் திட்டி மாடு சாவதில்லை😎

நான் சீமானின் பின்னால் என்று எப்பொழுது நான் சொன்னேன்.  

அப்படியானால் நீங்கள் இங்கே இணைக்கும் திரிகள் எல்லாம் நீங்கள் பின்னால் போவதா?

திமுக இவ்வாறு செய்தது என்று வாசித்ததை இங்கே விவாதித்து உண்மையை அறிந்து கொள்ளத் தான் இணைத்தேன். ஆனால் நீங்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

😂🤣 

காகம் திட்டி மாடு சாவதில்லை😎

இந்த புதிய தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

நான் சீமானின் பின்னால் என்று எப்பொழுது நான் சொன்னேன்.  

அப்படியானால் நீங்கள் இங்கே இணைக்கும் திரிகள் எல்லாம் நீங்கள் பின்னால் போவதா?

திமுக இவ்வாறு செய்தது என்று வாசித்ததை இங்கே விவாதித்து உண்மையை அறிந்து கொள்ளத் தான் இணைத்தேன். ஆனால் நீங்கள்???

இணைத்ததனால்தான் விவாதிக்கின்றோம். 

ஆனால் ஒரு தேசியச் செயற்பாட்டளாராக இருந்த  உங்களால் சீமானும் நாம் தமிழர் கட்சியும் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் புலிக்கொடியையும் ஏன் பாவிக்கின்றார்கள் என்று புரியவில்லையா? நன்றாகவே புரியும். 

ஆனால் புலிக்கொடியை ஆட்டுபவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர் என்று நம்புவது உங்கள் குணம். அதையும் இணைத்து ஏன் சீமானைக் கழுவி ஊத்துவதில் ஈடுபடுவதில்லை என்று வியாக்கியானம் தந்தீர்கள்.

கீழேயுள்ள இணைப்பில் உள்ளது உங்கள் சொந்தக் கருத்தா அல்லது எங்கேயோ பார்த்ததை வெட்டி ஒட்டினீர்களா?

2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை டந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட் ஒன்றே

10 minutes ago, விசுகு said:

இந்த புதிய தகவலுக்கு நன்றி.

ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்வதில் தப்பில்லை!😀

மாடு என்ன எருமை என்றும் சொல்லலாம். எங்களுக்கு தடித்த தோல் (thick skin)😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

காகம் திட்டி மாடு சாவதில்லை😎

இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். நீங்கள் நாலுபேர் இங்கு காட்டுக்கத்து  கத்துவதால் எதுவும் ஆகப்போவதில்லை! அது சீமானுக்கோ அல்லது புட்டினுக்கோ!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

இணைத்ததனால்தான் விவாதிக்கின்றோம். 

ஆனால் ஒரு தேசியச் செயற்பாட்டளாராக இருந்த  உங்களால் சீமானும் நாம் தமிழர் கட்சியும் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் புலிக்கொடியையும் ஏன் பாவிக்கின்றார்கள் என்று புரியவில்லையா? நன்றாகவே புரியும். 

ஆனால் புலிக்கொடியை ஆட்டுபவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர் என்று நம்புவது உங்கள் குணம். அதையும் இணைத்து ஏன் சீமானைக் கழுவி ஊத்துவதில் ஈடுபடுவதில்லை என்று வியாக்கியானம் தந்தீர்கள்.

கீழேயுள்ள இணைப்பில் உள்ளது உங்கள் சொந்தக் கருத்தா அல்லது எங்கேயோ பார்த்ததை வெட்டி ஒட்டினீர்களா?

2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை டந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட் ஒன்றே

ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்வதில் தப்பில்லை!😀

மாடு என்ன எருமை என்றும் சொல்லலாம். எங்களுக்கு தடித்த தோல் (thick skin)😂

நான் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ஏற்றிருக்கிறேன். அப்படியானால் அவர் பின்னால் செல்பவனா??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். நீங்கள் நாலுபேர் இங்கு காட்டுக்கத்து  கத்துவதால் எதுவும் ஆகப்போவதில்லை! அது சீமானுக்கோ அல்லது புட்டினுக்கோ!!

அப்போ நீங்கள் ஏன் யாழுக்கு வந்து எழுதுகிறீர்கள்?

நீங்கள் நாட்டு கத்தல் கத்துவதாலும் எதுவும் மாறாதுதானே?

அல்லது ஒரு சில கள உறவுகள் சொல்லுவதற்கு எதிர் கருத்தை எழுதி அவர்களை சீண்டும் ஒரே காரணத்துக்காக யாழில் எழுதுகிறீர்களோ?

நீங்கள் செஞசோன்ஸ், மொரட்டுவ அலும்னி, ஆகவே இப்படியான காரணமாய் இராது என நம்புகிறேன்.

பிகு

எறும்பூர கல் தேயும்.

சிறு துளிதான் பெரு வெள்ளமாகும்.

இத்தனை வருடங்களாக நாம் ஒரு நாலு பேர்தான் காட்டு கத்தல் கத்தினோம்….ஆனால் அதுதான் இன்று புலம்பெயர் அமைப்புகள் அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

புலம்பெயர் இலக்கியவாதிகள், புலிகளின் நியாத்தை பேசியவர்கள், தமிழகத்தில் அறியப்பட்டவர், தமிழக ஊடகங்களுக்கு உண்மையை சொல்லும் நிலையை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சீமான்-றோ கூட்டு சதியை முறியடிக்க ஒரு கதவு திறந்துள்ளது.

கட்டையில் போகும் போது நமக்கு யாரும் எந்த கொடியையும் போர்த்த போவதில்லை, அதற்கு நாம் தகுதியானவரும் இல்லை……

ஆனால் ஒரு நச்சு விதைதை இனம் காட்ட, நசுக்க எம்மால் முடிந்ததை செய்தோம் என்ற நிம்மதியில் கண்மூடுவோம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ஏற்றிருக்கிறேன். அப்படியானால் அவர் பின்னால் செல்பவனா??? 

மண்டையன் குழுவின் அட்டகாசங்களைப் பார்க்காததால் உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.  

ஆனால் எங்களால் சுரேஷை மண்டையன் குழுத்தலைவராகத்தான் பார்க்கமுடியும். 

புலிகள் சர்வதேச நாடுகளின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டதாலும், தமிழ் அரசியல் அமைப்புக்களை ஒடுக்கவில்லை என்று காண்பிக்கவும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை இக்கட்சிகள் முன்னெடுக்க விரும்பியதாலும் கூட்டமைப்பினுள் சேர்த்துவிட்டார்கள். 

ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் அட்டகாசங்களுக்கு மன்னிப்புக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. அதனால் அவரை இப்போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நீங்கள் நாட்டில் இல்லை இருந்திருந்தால் தாயக மக்களைப் போலவே அவரை தமிழர் பிரதிநிதியாக ஏற்கவேண்டி இருந்திருக்கும். அவர்களும் உங்கள் அளவுக்கு மண்டையன் குழுவின் அட்டகாசங்களை அனுபவிக்க இல்லை போலும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது 

 ஏன் நாங்கள் தி,மு.க வினரை குற்றம் சொல்வான் ...எங்கன்ட யாழ்களத்திலயே எவ்வளவோ கருத்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது ...

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது 

சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . 

தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் 

எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் 

மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உண்மை.
"அரக்கர் கூட்டம்", "ஆயிரம் பூக்கள்", "புதியவன் டீம்", "ஒன்றாக" ... இப்படியான பல பெயர் தாங்கிய குழுக்கள் சேர்ந்து விடுதலை புலிகள் தலைவரையும், போராளிகளையும், குறிப்பாக பெண் போராளிகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து சில இலங்கை முஸ்லீம் தனி நபர்கள் , ஒட்டுக்குழு நபர்களையும் ஒன்றிணைத்து 2  வருடங்களாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

நன்றி சகோ 

இதை தான் நான் தேடினேன். ஆனால் இங்கே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

 ஏன் நாங்கள் தி,மு.க வினரை குற்றம் சொல்வான் ...எங்கன்ட யாழ்களத்திலயே எவ்வளவோ கருத்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது ...

நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை. புலிகளின் பேட்டிகள் வீடியோக்கள் மற்றும் படங்களை கொண்டு வந்து தற்போது இங்கே கொட்டுபவர் அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே. அவ்வளவும் நஞ்சு. 

அத்துடன்  உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம்.

போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Sasi_varnam said:

மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது 

சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . 

தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் 

எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் 

மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உண்மை.
"அரக்கர் கூட்டம்", "ஆயிரம் பூக்கள்", "புதியவன் டீம்", "ஒன்றாக" ... இப்படியான பல பெயர் தாங்கிய குழுக்கள் சேர்ந்து விடுதலை புலிகள் தலைவரையும், போராளிகளையும், குறிப்பாக பெண் போராளிகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து சில இலங்கை முஸ்லீம் தனி நபர்கள் , ஒட்டுக்குழு நபர்களையும் ஒன்றிணைத்து 2  வருடங்களாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது உண்மை.

இதை பொய் என யாரும் மறுக்கவில்லையே?

25 minutes ago, விசுகு said:

நன்றி சகோ 

இதை தான் நான் தேடினேன். ஆனால் இங்கே???

ஏன் அண்ணை தேடுவான்?

இந்த கூட்டங்கள் எல்லாம் சீமான் தோண்டி விட்ட பூதங்கள் என்றும்.

இரெண்டு பக்கத்தையும் இயக்குவது இந்திய மத்திய புலனாய்வு என்றும் அப்போதே நான் யாழில் எழுதி உள்ளேனே?

அந்த திரிகளில் @Sasi_varnam கூட கருத்துரைத்த நியாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒன்றும் தாமாக செய்யவில்லை. அவர்களின் தலைவரை எல்லை மீறி திட்டியதற்கு  எதிர்வினையையே அவர்கள் ஆற்றினார்கள். அது இயல்பானது. முதலில் அவ்வாறு செய்து தூண்டி விட்ட புலம் பெயர் மாபியா கூட்டமே அதில் முதல் குற்றவாளிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே.

யாரை சொல்கிறீர்கள் @கிருபன் ஜியையா?

அல்லது என்னையா?

அல்லது @island ஐயா?

மற்றயவர்கள் தம் நிலையை சொல்லுவார்கள்.

ஆனால் உங்களை போல் எந்த இயக்கதின் வாலாகவும் நான் எப்போதும் இருந்ததில்லை.

புலிகள் இருந்த போது பொது நன்மைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என அமைதியாய் இருந்தேன்.

அவர்கள் அழிந்த பின், அவர்களை சாட்டி கொள்ளை அடித்தவர்கள் புலிகளின் பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் செய்ய முற்பட்ட போது, கடந்த கால தவறு மீள நடக்க கூடாது எந்த நோக்கில் புலிகளின் மீதான நியாயமான விமர்சனத்தை முன்வைதேன்.

இது புலிகளை கழுவி ஊத்துதல் அல்ல.

புலிகளுக்கு கொடுத்த அதே leverage ஐ வேறு யாருக்கும் கொடுத்து இன்னொரு முள்ளிவாய்காலை எமது மெளனத்தின் மூலம் உருவாக்கி விட கூடாது என்பதால் எழுந்த கருத்துகள் அவை.

இப்போ அவற்றை மீள முன்வைக்க தேவையில்லை 15 வருடங்களில் சகலதும் மாறி விட்டது என்பதால் - இப்போ நடப்பு அரசியல் மீது என் பார்வையை முன்வைக்கிறேன்.

இன்னும் ஒரு முக்கியமான விடயம், இன்னொரு திரியில் எழுதினேன் வாசிக்கவில்லை போலும்.

சீமான் தனியே புலிகளை வித்தால் - போய் தொலை சனியனே என விட்டு விடலாம், ஆனால் அவர் கெடுதல் செய்வது ஒட்டு மொத்த ஈழ-தமிழக தமிழர் நல்லுறவுக்கு.

இதை புலிகளை ஆதரித்த, நியாயமாக விமர்சித்த, கழுவி ஊத்திய எல்லாரும் கேள்வி கேட்கலாம் - ஈழ தமிழராய் இருந்தால் போதும்.

கட்டாயம் முதல் வெடிக்கு முதல் ஓடி வந்து, புலத்தில் நிண்டு விலாசம் காட்டி, தன் சந்ததியை வளர்த்து கொண்ட புலிவால்களாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

27 minutes ago, விசுகு said:

அத்துடன்  உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம்.

இல்லை இந்த வீணாய் போன புலம்பெயர் புதுநாக்குகள் 13 வருடமாய் சீமானை கண்டிக்காமல் - இப்போதாவது கண்டிக்கிறார்களே என்றுதான் சொல்கிறோம்.

இவர்கள் எல்லாம் ஒரு சால்வைக்கும், பொன்னாடைக்கும் அலையும் கூட்டம் என்பது தெரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை. 

எப்படி அதை கண்டு கொள்வது…

யார் கள்ளன்…யார் நல்லவன் என தெரியாத அளவுக்கு…. குழப்பியடித்து வைத்துள்ளார்கள்….

ஒரு சிலரை நம்பிக்கையானவர் என நீங்களே எழுதினீர்கள்…பிறகு பார்த்தால் அவர்களே போலிகாவை முன் தள்ளிய கள்வர்கள் என தெரிய வருகிறது….

நீங்கள் முகத்தில் வழிந்த ஒரு லோடு சாணியை வழித்து விட்டு வெள்ளையிம் சொள்ளையுமாக வலம் வருகிறீர்கள்.

இதே களத்தில் போலிக்கா நேரம் பலர் உங்களையே சந்தேகப்பட்டு எழுதினரா இல்லையா? (நான் இன்றும் நீங்கள் மோசமானவர் என நம்பவில்லை, ஆனால் மிக மோசமாக நம்பி ஏமாறுபவர்).

இப்படி ஒரு எவரையும் நம்பமுடியாத நிலையில் - நாம் எப்படி பரிதிக்காகவோ, குருதிக்காகவோ கதைக்க முடியும்?

2009 க்கு முன் நடந்த நிகழ்வுகளை திரித்தால், பொய்யாக எழுதினால் - அதை சுட்டலாம், சுட்டியுள்ளோம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்கள் நாட்டில் இல்லை இருந்திருந்தால் தாயக மக்களைப் போலவே அவரை தமிழர் பிரதிநிதியாக ஏற்கவேண்டி இருந்திருக்கும். அவர்களும் உங்கள் அளவுக்கு மண்டையன் குழுவின் அட்டகாசங்களை அனுபவிக்க இல்லை போலும்?

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் பிரதிநிதியாக எத்தனை தேர்தல்களில் என்ற வரலாறு தெரிந்தால் அவரை தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லமாட்டீர்கள்.  மண்டையன் குழு என்ன செய்தது என்பதை உணர்ந்திருந்தால் கடைசிவரை ஈபிஆர் எல் எவ் ஐ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். 

சுரேஷ் பிரேமச்சந்திரன் 1989 இல் ஈபிஆர் எல் எவ் அடாவடி அதி உச்சத்தில் இருந்தபோது எம்பியாக தெரிவானார். இது கள்ள வாக்குகளினால் அவரை பாராளுமன்றம் செல்லவைத்தது.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக, புலிகளின் ஆசீர்வதத்தினூடாக, 2004இல் எம்பியானார். 2010 இலும் தட்டித் தடுமாறி எம்பியானார். அதன் பின்னர் தொடர்தோல்விதான்.

மக்கள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.