Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

2009 க்கு முன் நடந்த நிகழ்வுகளை திரித்தால், பொய்யாக எழுதினால் - அதை சுட்டலாம், சுட்டியுள்ளோம்.

பல முறை எழுதியுள்ளேன் கேட்கத்தான் ஆளில்லை

இதை நீங்கள் கேட்கலாம் தானே என்பார்கள். ஆமாம் பருதி சுடப்படுவதற்கு முதல் ஞாயிறு என் பிள்ளை படிப்பை முடித்து விட்டான். பாவித்துக்கொள்ளுங்கள் என்றேன்.  இப்போது பருதி பங்கு பிரிப்பில் போய்ச் சேர்ந்தார் என்பவர்கள் நான் போய் கேட்டு போனவுடன் பங்கு பிரிப்பில் போய்ச் சேர்ந்தார் என்பார்கள். இதை நிலத்தில் கடந்து சென்றால் தெரியும் அதன் வலி.

  • Replies 50
  • Views 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம்,  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகர

  • goshan_che
    goshan_che

    மிக மோசமான வரலாற்று திரிப்பு. மூன்றரை ஆண்டுகளுக்கு முன் இதை பற்றி நான் யாழில் எழுதியது இன்னும் இருக்கிறது - தேடி வாசிக்கவும். நா.த.க குப்பாடிகளும், இன்னும் கொஞ்சம் பகிடி சொல்லும் “முள்ளம் பன

  • கிருபன்
    கிருபன்

    அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிக

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம்.

அவர்கள் எல்லாம் அறிக்கை தரமாட்டார்கள் என்று முழுநம்பிக்கை இருப்பதனால்தான் அறிக்கைவிடுவார்களா என்று சவாலாகப் பதிந்தேன்😁. ஆனால் பங்குபிரிப்பவர்கள் பங்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்று தெரியும்தானே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அவர்கள் எல்லாம் அறிக்கை தரமாட்டார்கள் என்று முழுநம்பிக்கை இருப்பதனால்தான் அறிக்கைவிடுவார்களா என்று சவாலாகப் பதிந்தேன்😁. ஆனால் பங்குபிரிப்பவர்கள் பங்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்று தெரியும்தானே!

அவர்களை பற்றி கதைக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி அருகதை இருக்கிறது. சிறுலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆயிரம் தலைவரின் மேய்ப்பாவலர்களும் ஆயிரம் பொட்டரின் வலது கைகளும் அவர்களை சுற்றி வதை செய்தபோது நீங்களும் அவர்களுடன் இணைந்து நின்று உங்கள் பங்கிற்கு கல் எறிந்தவர் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

பல முறை எழுதியுள்ளேன் கேட்கத்தான் ஆளில்லை

2009 முந்திய விடயங்கள் தவறாக எழுதபட்டால் அவை முடிந்தளவு திருத்தப்பட்டுள்ளன.

நீங்களும் “நேரம் மிச்சம்” என லைக் போட்டுள்ளீர்கள்.

மே 2009 ற்கு பின் எனக்கே யார் கள்ளன், யார் நல்லவன் என தெரியாத நிலை -குறிப்பாக புலத்தின் முன்னைநாள் செயற்பாட்டாளர் இடையே.

இதில் எவருக்காகவும் பேச முடியாத நிலையில்தான் என்னை போன்ற பொது மக்கள் உள்ளார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதற்காக தான் தொடர்ந்து எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிக்காதீர்கள் என்று எழுதுகிறேன். அதையாவது பார்த்தீர்களா????

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அவர்களை பற்றி கதைக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி அருகதை இருக்கிறது. சிறுலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆயிரம் தலைவரின் மேய்ப்பாவலர்களும் ஆயிரம் பொட்டரின் வலது கைகளும் அவர்களை சுற்றி வதை செய்தபோது நீங்களும் அவர்களுடன் இணைந்து நின்று உங்கள் பங்கிற்கு கல் எறிந்தவர் தானே.

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது.😀

அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு  அவர்களுடன் கதைக்கலாம். 

அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம் @விசுகு ஐயா!😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நான் அறிவால், பேச்சால்  ஒரு போதும் பேசுவதில்லை செயல் பேசுபவன். அது தான் கர்ணன் போன்று என்னை காத்து நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இதற்காக தான் தொடர்ந்து எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிக்காதீர்கள் என்று எழுதுகிறேன். அதையாவது பார்த்தீர்களா????

இது ஒரு டெலிகேற் பொசிசன் அண்ணை…

எல்லாரையிம் சாக்கில் போட கூடாது என்பது சரிதான், ஆனால் இதை பயன்படுத்தி கள்ளரும் சாக்கில் இருந்து தப்பி விடுவார்கள்.

ஆகவே இதற்கு நான் ஒரு பொறிமுறையை கண்டு பிடித்துள்ளேன். அதுதான் விடயம்-சார் அணுகுமுறை. Issue based approach.

உதாரணமாக சீமான் ஆதரவு - என்பது விடயம். அதில் யார் சீமான்-ஆதரவு நிலை எடுத்தாலும் - முதலில் விளக்கி பார்ப்பது, இல்லை எண்டால் சாக்கில் போட்டு வெளுக்க வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது உண்மையை கண்டறிய அல்ல. உங்கள் வழிக்கு வராதவர்களை எல்லாம் சாக்கில் போடும் தந்திரம். வேண்டுமானால் என்னையும் போட்டு வையுங்கள். பின்னர் அதை எடுத்து விட நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டி வரும்.😷

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இது உண்மையை கண்டறிய அல்ல. உங்கள் வழிக்கு வராதவர்களை எல்லாம் சாக்கில் போடும் தந்திரம். வேண்டுமானால் என்னையும் போட்டு வையுங்கள். பின்னர் அதை எடுத்து விட நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டி வரும்.😷

இது உண்மை கண்டறியும் வழி என நான் எப்போதும் கூறவில்லையே அண்ணை?

முன்பே சொல்லி உள்ளேன் - இங்கே ஒரு அன்ரி வருவா - கருணாவுக்கு ஆதரவாக எழுதுவா - மிச்சம் எல்லாரையும் குறைசொல்லி விட்டு சாக்கோடு சாக்காக கருணாவின் அரசியலை முன் தள்ளுவா - அவவிடமும் அந்த விடயத்தில் சாக்குத்தான் என் பதில்,

இன்னுமொரு நல்ல தம்பி வருவார் - தேசிக்காய்கள், புரொக்சிகள் என்பார் ஆனால் - பிள்ளையான் கருணாவை முன் நிறுத்துவார் - இந்த விடயத்தில் என் அவர் சார்பான அணுகுமுறை சாக்குத்தான்,

இந்த இரெண்டு இடத்திலும் நான் எழுதியவை உங்களுக்கு இனித்தது.

ஆனால் சீமான் விடயத்தில் அதே அணுகுமுறை கசக்கிறது.

ஆனால் என் அணுகுமுறை எப்போதும் ஒன்றேதான்.

ஈழத்தமிழர்களின் நீண்டகால இருப்புக்கு - ஈழத்தில் வடக்கு, கிழக்கு என எம்மை பிரிப்பதும், இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் சண்டையை மூட்டி விடுவதும் மிக ஆபத்தானது.

இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

நீங்கள் செஞசோன்ஸ், மொரட்டுவ அலும்னி, ஆகவே இப்படியான காரணமாய் இராது என நம்புகிறேன்.

நான் சென்ஜோன்சில் படித்தேனா?

இத்தனை வருடங்களாக நாம் ஒரு நாலு பேர்தான் காட்டு கத்தல் கத்தினோம்….ஆனால் அதுதான் இன்று புலம்பெயர் அமைப்புகள் அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

புலம்பெயர் இலக்கியவாதிகள், புலிகளின் நியாத்தை பேசியவர்கள், தமிழகத்தில் அறியப்பட்டவர், தமிழக ஊடகங்களுக்கு உண்மையை சொல்லும் நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வளவுகாலமும் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள் சீமான் பெரியாரை பற்றி சொன்னதும் வரிந்து கட்டிக்கொன்டு அறிக்கை விடுவதன் பின்னணி உங்களுக்கு புரியவில்லையா?

அதுசரி எமது போராட்டத்திற்கோ அல்லது அதன் பின்னரான காலத்திலோ, இந்த கார்த்தி, உருத்திரகுமார் ஆகியோரின் பங்களிப்பு என்ன என்றாவது சொல்லுங்களேன்??

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது உண்மை கண்டறியும் வழி என நான் எப்போதும் கூறவில்லையே அண்ணை?

முன்பே சொல்லி உள்ளேன் - இங்கே ஒரு அன்ரி வருவா - கருணாவுக்கு ஆதரவாக எழுதுவா - மிச்சம் எல்லாரையும் குறைசொல்லி விட்டு சாக்கோடு சாக்காக கருணாவின் அரசியலை முன் தள்ளுவா - அவவிடமும் அந்த விடயத்தில் சாக்குத்தான் என் பதில்,

இன்னுமொரு நல்ல தம்பி வருவார் - தேசிக்காய்கள், புரொக்சிகள் என்பார் ஆனால் - பிள்ளையான் கருணாவை முன் நிறுத்துவார் - இந்த விடயத்தில் என் அவர் சார்பான அணுகுமுறை சாக்குத்தான்,

இந்த இரெண்டு இடத்திலும் நான் எழுதியவை உங்களுக்கு இனித்தது.

ஆனால் சீமான் விடயத்தில் அதே அணுகுமுறை கசக்கிறது.

ஆனால் என் அணுகுமுறை எப்போதும் ஒன்றேதான்.

ஈழத்தமிழர்களின் நீண்டகால இருப்புக்கு - ஈழத்தில் வடக்கு, கிழக்கு என எம்மை பிரிப்பதும், இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் சண்டையை மூட்டி விடுவதும் மிக ஆபத்தானது.

இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.

அன்ரியையும் தம்பியையும் கழுவி கழுவி கலைத்து விட்டு வடக்கு கிழக்கில் ஒற்றுமை காண்போம் என்று நான் எப்பொழுதும் நினைப்பதில்லை. என் தங்கை தம்பிகளான இவர்களூடனேயே என்னால் சேர்ந்து நடக்கமுடியாதபோது......????

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.

இதேபோல்தான் திராவிடம், பெரியார் புராணங்களை யார் வந்து பாடினாலும் சாக்கு தயாராகவே இருக்கும்.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

இதில் ஒரு பின்ணனியையும் நான் காணவில்லை.

அப்படி ஏதும் பின்ணனியில் இயங்கினால் பெரியாரை பற்றி சீமான் முதலில் மோசமாக கதைக்க தொடங்கிய போதே எதிர்திருப்பார்கள்.

காலதாமதமாகவேனும் சீமான் முடிந்து விடும் சிண்டு எமக்கு எவ்வளவு பாதகமானது என்பதை கண்ட பின்பே இப்போ எதிர்கிறார்கள்.

ஈரோடு கிழக்கில் அல்ல அதற்கு முன்பே சீமான் பெரியாரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் பின் அவர்களின் செயலற்றதன்மையால் நட்டு கழண்ட அரசு என்ற பதத்தை அவர்களுக்கு கொடுத்தவன் நானே.

ஆனால் 2009 க்கு முன் உருத்திரகுமாருக்கு கணிசமான பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார், TGTE வரைபை தயாரித் experts இலும் ஒருவர்.

கார்த்தி 2009 க்கு முன் பங்களிக்கவில்லை, ஆனால் போலிக்காவை இனம் காட்டியதில் மிக பெரிய பங்கை வகித்தார்.

2 hours ago, Eppothum Thamizhan said:

இதேபோல்தான் திராவிடம், பெரியார் புராணங்களை யார் வந்து பாடினாலும் சாக்கு தயாராகவே இருக்கும்.

இங்கே நீங்கள் இரெண்டு விடயத்தில் தவறு விடுகிறீர்கள்.

இங்கே யாரும் தாமாக பெரியார் புகழ்பாடி திரி திறப்பதில்லை. கருத்து கூட எழுதுவதில்லை. 

சீமான் எம் பின்னால் ஒழிந்து கொண்டு பெரியாரை, திராவிட கொள்கையை தாக்கும் போது, அது எமக்கு பாதகமானது என்பதால் சீமான் மீது தாக்குதல் நடக்கிறது.

இரெண்டாவது கீழே உள்ள பதிலில்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அன்ரியையும் தம்பியையும் கழுவி கழுவி கலைத்து விட்டு வடக்கு கிழக்கில் ஒற்றுமை காண்போம் என்று நான் எப்பொழுதும் நினைப்பதில்லை. என் தங்கை தம்பிகளான இவர்களூடனேயே என்னால் சேர்ந்து நடக்கமுடியாதபோது......????

அன்ரியோடும், தம்பியோடும் நான் எவ்வளவு தன்மையாக நட்போடு பழகுகிறேன் என்பதும், அவர்கள் கலைக்கபட கூடியவர்கள் அல்ல, கலைக்கபடவும் இல்லை என்பதும் நீங்கள் அறியாததல்ல.

ஆனால் - என்னை பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு பிரிவினையை அது எழும் சமயங்களில் எல்லாம் தலையில் ஒரு போடு போட்டே ஆக வேண்டும்.

அது வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ எழுந்தாலும்.

இதே சாக்கை யாழ் மையவாதிகளுக்கும் பாவித்துள்ளேன்.

ஆணி வேரை புடுங்கி விட்டு மரம் வளர்க்கமுடியாது. 

ஒற்றுமையின் பெயரில் பிரிவினைவாதத்தை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

இதே போல ஒரு ஆபத்துதான் ஈழ/தமிழக தமிழர் இடையே சிண்டு முடிந்து விடுவதும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2025 at 07:17, விசுகு said:

நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை. புலிகளின் பேட்டிகள் வீடியோக்கள் மற்றும் படங்களை கொண்டு வந்து தற்போது இங்கே கொட்டுபவர் அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே. அவ்வளவும் நஞ்சு. 

அத்துடன்  உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம்.

போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை. 

தமிழ் தேசியத்திற்கு விரோதமான கருத்தை  சிலர் ..எப்பொழுது தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கிச்சோ  அப்பொழுது இருந்து விதைத்து வருகின்றனர்...
தமிழர் விடுதலை கூட்டனி தொடங்கிய காலத்தில் ,அமிர்தலிங்கம்,செல்வா,ஜீ.ஜீ போன்றோரை வசை பாடினார்கள்...
பிறகு பிரபாகரனை வசை பாடினார்கள் 
இன்று சிறிதரனையும் ,குமார் பொண்ணம்பலத்தையும்  வசைபாடுகின்றனர்...

அர்ஜூனா ராமனாதன் ...நான் தேசிய தலைவரின் வழிவந்தவன் என கூறி கொண்டு பாராளுமன்றில் செய்யும் கூத்துக்களை பாருங்கள் ...இதுவரை ஒர் சாதாரண எம்.பி கூட செய்யாத,பேசாத இழிவான ,தரக்குறைவான செயல்களை செய்கின்றார்...இவரின் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை...சிங்கள பா.உ..க்களே இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேணும் என பாராளுமன்றில் கூறியுள்ளனர்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அருச்சுனா புலிக்கொடியை  ஆட்டினால் அவரும் நம்ம ஆளுதான் 😜

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

அருச்சுனா புலிக்கொடியை  ஆட்டினால் அவரும் நம்ம ஆளுதான் 😜

spacer.png

வல்வெட்டிதுறையில் அண்மையில் (தோழர்) சகோதரயா அனுராவின் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஒருவர் "வீரம் செறிந்த மண்ணில் வாழும் ம்க்களே"என பேசியிருந்தார் ...ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே ,மர்மமாய் இருக்கு....என பாடி அடுத்த அரசியல் கருத்து ஜாம்பாவான்களின் கருத்துக்கு லைக்  போடுவம்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

வல்வெட்டிதுறையில் அண்மையில் (தோழர்) சகோதரயா அனுராவின் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஒருவர் "வீரம் செறிந்த மண்ணில் வாழும் ம்க்களே"என பேசியிருந்தார் ...ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே ,மர்மமாய் இருக்கு....என பாடி அடுத்த அரசியல் கருத்து ஜாம்பாவான்களின் கருத்துக்கு லைக்  போடுவம்...🤣

🤣.................

ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....

spacer.png 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

🤣.................

ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....

spacer.png 

சிங்கள தெற்கு ஒர் றொட்டு அமைத்து
பூநகரியை மேடுறுத்தி பாலமைத்து
சிங்கள நன்நாட்டிளம் பெண்களுடன்
சுந்தர பாளியில் பாட்டெழுதி
கார்கள் ஓட்டி விளையாடிடுவோம்...

என்ன பாரதி மட்டுமா சிங்களவ்ருடன் உறவாட முடியும் நாஙகள் வல்வை மைந்தர்கள் சலைத்தவர்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

சிங்கள தெற்கு ஒர் றொட்டு அமைத்து
பூநகரியை மேடுறுத்தி பாலமைத்து
சிங்கள நன்நாட்டிளம் பெண்களுடன்
சுந்தர பாளியில் பாட்டெழுதி
கார்கள் ஓட்டி விளையாடிடுவோம்...

என்ன பாரதி மட்டுமா சிங்களவ்ருடன் உறவாட முடியும் நாஙகள் வல்வை மைந்தர்கள் சலைத்தவர்களா என்ன?

🤣......................

இலங்கையில் எல்லா வீதிகளும் போடப்பட்டாலும், இந்த வீதியை மட்டும் போடவே மாட்டம் என்று அடாத்தாக நின்றார்கள்................ பழி வாங்குகின்றார்களாம்.................🫣.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 15:41, கிருபன் said:

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது.😀

அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு  அவர்களுடன் கதைக்கலாம். 

அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம் @விசுகு ஐயா!😎

கிருபன் அளவுக்கு அறிவு இருப்பவர்கள் இங்கிலீசு தெரிந்தவர்கள் 
திருக்குறளை புறக்கணிக்க வேண்டும் 

திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுத என்ன தகுதி இருக்கிறது?

லண்டன் போனாரா? 
அல்லது யூனிவெர்சிடியில் குப்பை கொட்டினாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Maruthankerny said:

கிருபன் அளவுக்கு அறிவு இருப்பவர்கள் இங்கிலீசு தெரிந்தவர்கள் 
திருக்குறளை புறக்கணிக்க வேண்டும் 

திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுத என்ன தகுதி இருக்கிறது?

லண்டன் போனாரா? 
அல்லது யூனிவெர்சிடியில் குப்பை கொட்டினாரா? 

இப்படி விழல்க் கருத்துக்களை வைப்பதற்கு இடையிடையே யாழுக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்😜

உங்களின் கதையின்படி, இங்கிலீசு பேசும் அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், கனடியர்கள், அவுஸ்திரேலியர் எல்லாம் அறிவாளிகள்தான்!😂🤣

என்னிடம் மூன்று திருக்குறள் நூல்கள் உள்ளன. ஒன்று கலைஞர் கருணாநிதியின் உரையுடன்!

இலவசமாகப் படிக்க: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0612.pdf

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இப்படி விழல்க் கருத்துக்களை வைப்பதற்கு இடையிடையே யாழுக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்😜

உங்களின் கதையின்படி, இங்கிலீசு பேசும் அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், கனடியர்கள், அவுஸ்திரேலியர் எல்லாம் அறிவாளிகள்தான்!😂🤣

என்னிடம் மூன்று திருக்குறள் நூல்கள் உள்ளன. ஒன்று கலைஞர் கருணாநிதியின் உரையுடன்!

இலவசமாகப் படிக்க: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0612.pdf

அப்படி நீங்கள் பலடி அடிக்காது வாழ்ந்தால்தான் அதிசயம். 

இங்கிலீஸ் காரன் அதை ஒரு மொழியாகத்தான் பார்க்கிறான் 
அரைகுறைகள்தான் அதை அறிவாக பார்க்கிறார்கள்.

இந்த திரி முழுதுமே நீங்கள் செய்தது தனிமனித தாக்குதலதான் ஒரு உருப்படியான கருத்துகூட இல்லை. இந்த லட்ஷணத்தில்தான் தகுதி அறிவு பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.