Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

  • கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
  • விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
  • கீதா குமாரசிங்க – ரூ. 972,000
  • ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி  – ரூ. 1,143,000
  • குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
  • பிரேம்நாத் சி. தொலவத்த –  23 இலட்சம் ரூபா
  • பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
  • சம்பத் அத்துகோரள – ரூ.  2,540,610
  • ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800
  • விமல் வீரவன்ச  – ரூ. 2,954,000
  • பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000
  • அகில எல்லாவல – ரூ. 3,554,250
  • சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
  • சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
  • அஷோக பிரியந்த – ரூ. 7,295,000
  • சமன் பிரிய ஹேரத் –  105.2 இலட்சம் ரூபா
  • ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா
  • ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா
  • விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா
  • சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா
  • செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா
  • இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா
  • மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா
  • வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா
  • துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா
  • கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா
  • டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா
  • பிரசன்ன ரணவீர –  327 இலட்சம் ரூபா
  • டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா
  • ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா
  • எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா
  • சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா
  • சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா
  • அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா
  • சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா
  • பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா
  • கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா
  • மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா
  • நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா
  • அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா
  • காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா
  • ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ  – 934 இலட்சம் ரூபா
  • கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா

https://thinakkural.lk/article/315167

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா…. எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகையை பார்க்க தலை சுத்துது. இப்படி இருந்தால்… நாடு வங்குரோத்து ஆகும் தானே.

மகிந்த, கோத்தா, ரணில் ஆகியோரின் பெயர்களை காணவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

முதல்ல இவர்களது வீடுகள் உண்மையாக எரிந்ததா என்று விசாரணை செய்ய வேண்டும்.

22 minutes ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா…. எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகையை பார்க்க தலை சுத்துது. இப்படி இருந்தால்… நாடு வங்குரோத்து ஆகும் தானே.

மகிந்த, கோத்தா, ரணில் ஆகியோரின் பெயர்களை காணவில்லை.

இதுவரை எத்தனை தமிழர்களின் உடமைகளை இவர்களே எரித்திருப்பார்கள்.

இதுவரை யாருக்காவது நஸ்டஈடு கொடுத்திருக்கிறார்களா?

சிங்களவருக்கு வந்தால் இரத்தம்.

தமிழ் பேசும் மக்களுக்கு வந்தால் சட்னியா?

இன்னமும் தமிழர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்களே ஏதாவது நஸ்டஈடுடோ அதற்கு வாடகையே குத்தகையோ ஏதாகிலும் கொடுக்கத் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்ல இவர்களது வீடுகள் உண்மையாக எரிந்ததா என்று விசாரணை செய்ய வேண்டும்.

இதுவரை எத்தனை தமிழர்களின் உடமைகளை இவர்களே எரித்திருப்பார்கள்.

இதுவரை யாருக்காவது நஸ்டஈடு கொடுத்திருக்கிறார்களா?

சிங்களவருக்கு வந்தால் இரத்தம்.

தமிழ் பேசும் மக்களுக்கு வந்தால் சட்னியா?

இன்னமும் தமிழர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்களே ஏதாவது நஸ்டஈடுடோ அதற்கு வாடகையே குத்தகையோ ஏதாகிலும் கொடுக்கத் தயாரா?

உலக வங்கி, இந்தியா, அமெரிக்கா, பங்களாதேஷ்…. கொடுத்த கடன் எல்லாத்தையும் எடுத்து…  வீடு திருத்தி இருக்கிறார்கள் போலுள்ளது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உலக வங்கி, இந்தியா, அமெரிக்கா, பங்களாதேஷ்…. கொடுத்த கடன் எல்லாத்தையும் எடுத்து…  வீடு திருத்தி இருக்கிறார்கள் போலுள்ளது. 😂 🤣

உண்மையாக எரித்த வீடு உடைத்த வீடுகளுக்கு கொடுத்தால் பரவாயில்லை.

எத்தனை தமிழர்களின் வீடுகள் உடமைகள உயிர்களை அழித்தொழித்தார்கள்.

இதற்கு எந்த அரசாவது நஸ்டஈடு கொடுத்ததா?

கடைசி ஒரு மன்னிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த, கோத்தா, ரணில் ஆகியோரின் பெயர்களை காணவில்லை.

ரனில் எடுக்கவில்லை என நினைக்கிறேன்.
மற்ற இரண்டு கள்ளரும் கொள்ளையடித்தது போதாதா??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கியபடி தங்களுடைய சிங்கள அரசியல்வாதிகள் எப்படி நாட்டை குட்டி சுவராக்கி உள்ளனர் என்று இப்போ சாதாரண சிங்கள மக்களுக்கும் தெரிய வந்துள்ளது .

நல்ல காலம் பார் லைசன்ஸ் லிஸ்ட் போல் இதுவும் வாய் பேச்சில் காணாமல் போய்விடும் என்று நினைத்து இருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

னில் எடுக்கவில்லை என நினைக்கிறேன்.

ஆமா ரணில் ரொம்ப நல்லவர்தானே! அந்த ஜனாதிபதி என்ற கனவுப்பதவியைப் பெற்றது எல்லாவற்றையும் விடப் பெரிய நட்ட ஈடு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

ஆமா ரணில் ரொம்ப நல்லவர்தானே! அந்த ஜனாதிபதி என்ற கனவுப்பதவியைப் பெற்றது எல்லாவற்றையும் விடப் பெரிய நட்ட ஈடு.

ரணில் ஒரு தொகையை எடுக்கமுன் பதவி பறிபோய்விட்டது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர்; காமினி லொக்குகே

12 FEB, 2025 | 06:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மே 09 வன்முறையில் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? இழப்பீடு தொகையை பற்றி பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. 

ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை?

இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

பிலியந்தல பகுதியில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/206523

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.