Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

22 FEB, 2025 | 05:17 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐடிசி  ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை புத்தாக்க மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

கடந்த காலங்களை சிந்தித்தே நாம் எதிர்காலம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எமது பழைய தலைவர்கள் தொடர்பில் நன்கு தெரியும். எமது நாட்டின் கடந்த காலம் தொடர்பில் நாம் பெருமையுடன் பேசுகிறோம். நாம் எதிர்காலம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். அது தொடர்பான கருத்தாடல்களில் புத்தாக்கங்கள் அவசியமாகும். குறிப்பாக புத்தாக்கம் தொடர்பில் சிந்திக்கும் போது அதில் ஆபத்துக்களும் இருக்கலாம். அனைவரும் புத்தாக்கங்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம். அது இலகுவான விடயமல்ல. புத்தாக்கங்கள் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். அதனை நாம் கட்டயாமாக செய்ய வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை மாத்திரம் சிந்தித்து புத்தாக்கங்களை மேற்கொள்ள முடியாது. அதில் புதிய சிந்தனைகள் தாக்கம் செலுத்துகின்றன. நிச்சயமாக நாம் அதனை செய்ய வேண்டும்.

காலம் கடந்த சட்டங்களும் அதில் இருக்கின்றன. இந்த காலப்பகுதியில் புத்தாக்கம், அபிவிருத்தி என்ற கொள்கையுடன் முட்டி மோத வேண்டும். அந்த மோதலின் ஒருபகுதியே சமூக சமத்துவமாகும். அந்த சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளமை எமக்கு கிடைத்த சுதந்திரத்தை ஜனநாயக முறையில் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை உணர்த்துகிறது.

இதன் ஊடாக சலுகைகளை பெற்றுக் கொண்ட பிரப்புக்கள் அரசில் பாகுபாடுகளை உருவாக்கினார்கள். இதன் காரணமாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த அரசியல் கலாசாரம் உருவாகியது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். அது நாம் எதிர்பார்த்த மாற்றமாக நாம் நினைக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/207393

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எமது நாட்டின் கடந்த காலம் தொடர்பில் நாம் பெருமையுடன் பேசுகிறோம்

ஐந்தாறு பெருமைகள்,எருமைகளை எடுத்து விடுங்கோவன் நாங்கள் வயசு போன நேரத்தில அறிந்து மகிழ்ச்சியடையலாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஐந்தாறு பெருமைகள்,எருமைகளை எடுத்து விடுங்கோவன் நாங்கள் வயசு போன நேரத்தில அறிந்து மகிழ்ச்சியடையலாம்

ஐந்து முன்னாள் எருமைகளை வேண்டுமானால் விடுகிறோம்

எங்கள் கம்பெனியால் இப்போதைக்கு அதுமட்டும்தான் முடியும் !

Sorry for the inconvenience பெருமைகள் not available at this time.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஐந்தாறு பெருமைகள்,எருமைகளை எடுத்து விடுங்கோவன் நாங்கள் வயசு போன நேரத்தில அறிந்து மகிழ்ச்சியடையலாம்

ஹரிணி அமரசூரிய அவர்கள் உண்மையில் சொன்னது எதுவெனில் " முன்பு எமது தலைவர்கள் எமது கடந்த கால பெருமைகளை பற்றி பேசினார்கள் (Previously our leaders talked about the glories of our past)" . வீரகேசரியில் வேலை செய்பவர்களுக்கு ஆங்கில மொழியாக்க வறுமை இருக்கின்றது. இப்பொழுது கூகுள் மொழிபெயர்ப்பி, செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்பன இலவசமாக கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம் தானே.சிங்கள தலைவர்கள் மட்டும் அல்ல, எமது தமிழ் தலைவர்களும் கால பெருமைகளை பற்றி பீத்திக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

புத்தாக்கங்கள் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். அதனை நாம் கட்டயாமாக செய்ய வேண்டும்

ஆங்கிலேயேர்களின் கல்வி முறையை அப்படியே கொப்பி அடித்தது சமூகத்தில் பல மாற்றங்களை உண்டாக்கியது என்பது உண்மை. ஆனால் அதுவே எமது மாணவர்களின் சிந்தனா சக்தியை பட்டை தீட்டவில்லை என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, zuma said:

சிங்கள தலைவர்கள் மட்டும் அல்ல, எமது தமிழ் தலைவர்களும் கால பெருமைகளை பற்றி பீத்திக்கொள்வார்கள்.

எமது தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல தமிழர்களிலும் பெருமை புழுகி திரிபவர்கள் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா அரசு, கடந்த அரசுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்தகாலத்தில் ஆயுததாரிகள் கலாச்சாரம், அவர்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உருவாக்கம், தண்டனை விலக்கு, எல்லாம் அளவுக்கு மிஞ்சி அளித்து, தமது அரசை கட்டியெழுப்பி, தம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து நாட்டை சூறையாடினார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் முடியவில்லை. ஆயுத கலாச்சாரம், அச்சுறுத்தல், காட்டுச்சட்டங்கள், வடக்கில் பயங்கரவாதம் மீளெழுகிறது எனும் பிரச்சாரத்தின் மூலம் பிரச்னைகளை திசைதிருப்பல். இப்போ, அனுராவின் ஆட்சி மாற்றத்திற்கு தமிழரின் ஆதரவு, எல்லோரும் சமம் எனும் அவரின் கூற்று, கடந்த ஆட்சியாளரை கதிகலங்க வைத்துள்ளது. தமது அரசியல் மூலதனம் எனும் இனப்பிரச்சனை ஒழிக்கப்பட்டால்; தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தமது ஊழல்கள் வெளிவந்தால் நிரந்தர சிறை அல்லது குடியுரிமை பறிப்பு நிகழலாம். பாதாள உலகத்தை வளர்த்து, போதைப்பொருள், வன்முறை கலாச்சாரத்தால் பயனடைந்தவர்கள், அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்படப்போகிறார்கள். அதனால் சாட்சிகளை அழித்தல், அரசாங்கத்தின்மீது பழிபோடல், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கல், இனக்கலவரத்தை ஏற்படுத்தல், ஜே .வி. பி .யை சாட்டி தாங்கள் அரங்கேற்றிய தமிழருக்கெதிரான கொடுமைகளை நேரடியாக அரசாங்கத்தின் தலையில் கட்டுதல். போன்றவற்றின் மூலம் அரசை கலைப்பது, ஆட்சியை கைப்பற்றுவது. முடிந்தால் அனுராவையே கொலை செய்வது போன்றன அரங்கேற ஒத்திகை நடக்கிறது. நாட்டில் அநேக ஆயுதப்படைகள் கடந்த ஆட்சியாளருக்கே விசுவாசமானவர்கள். காரணம்: அதிக சலுகைகள், லஞ்சம், ஊழல், தண்டனையிலிருந்து விடுதலை, விலக்களிப்புகள் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானரையே ஆட்சிக்கு அமர்த்த விரும்புவார்கள். அனுர, சட்டங்களை கடுமைப்படுத்த வேண்டும், இராணுவம் போலீசை கண்காணிக்க வேண்டும். விசேடமாக கோத்தாவின் நன்மதிப்பைப்பெற்ற சவேந்திர சில்வா போன்ற தளபதிகள். மஹிந்த கோஷ்ட்டியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படவேண்டும். எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தால் ஒரு சில மாதங்களில் இவற்றை அடக்கி சாதகமான நாட்டை உருவாக்கலாம். விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் அஞ்சினால், ஜனாதிபதி பதவி பறிபோவதுடன் கொலை செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம். கடந்த கால அரசுகளுக்கு கைகொடுக்க இந்தியா வந்தது. அனுராவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

அதற்கு ஒரு தடியில் கரட்டினை கட்டி தொங்கவிட்டு அதனை நாட்டிற்கு முன்னே நீட்டினால் நாடு முன்னோக்கி நகரும்😁.

மக்களுக்கு இப்படி பேச்சுக்களை பேசி பேசியே அடுத்த 4 வருடங்கள் கொல்ல போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விளங்க நினைப்பவன் said:

எமது தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல தமிழர்களிலும் பெருமை புழுகி திரிபவர்கள் இருக்கின்றனர்.

எங்ளுடைய ஆட்களின் புழுகினால் ஒர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆட்சி கட்டமைப்புக்கள் குட்டிசுவராக போகாது...

16 hours ago, vasee said:

அதற்கு ஒரு தடியில் கரட்டினை கட்டி தொங்கவிட்டு அதனை நாட்டிற்கு முன்னே நீட்டினால் நாடு முன்னோக்கி நகரும்😁.

மக்களுக்கு இப்படி பேச்சுக்களை பேசி பேசியே அடுத்த 4 வருடங்கள் கொல்ல போகிறார்கள்.

அந்த கரட் பெளத்த சிங்களவருக்கு முழுமையா கிடைக்க வேணும் என்ற எண்ணம் இருந்தால் நாடு எங்கே முன்னேறுவது

  • கருத்துக்கள உறவுகள்

16 hours ago, satan said:

தமது அரசியல் மூலதனம் எனும் இனப்பிரச்சனை ஒழிக்கப்பட்டால்; தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தமது ஊழல்கள் வெளிவந்தால் நிரந்தர சிறை அல்லது குடியுரிமை பறிப்பு நிகழலாம். பாதாள உலகத்தை வளர்த்து, போதைப்பொருள், வன்முறை கலாச்சாரத்தால் பயனடைந்தவர்கள், அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்படப்போகிறார்கள்.

இவர்களும் (என்.பி.பி ) கோத்தாவின் ஆட்சி கவிழ்ப்புக்கு US aidடம் நிதி பெற்று ...மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒர் (கோத்தாவின் )ஆட்சியை கவிழ்த்து தமது "இடதுசாரி "கொள்கையை நிலைநாட்ட செய்துள்ளனர் .ஆகவே இவர்களும் சுத்தமானவர்கள் இல்லை... (இதுவும் ஒர் அரசவிரோத செயல் இது பெரிய பெரிய சக்திகளின் ஆதரவுடன் நடந்திருக்கும்)

(இன்று நடைபெறும் பாதாள உலக கொலைகளுக்கும் இதில் பங்கு இருக்கலாம் அது தான் கிளீன் சிறிலங்கா நடை பெறுகின்றதோ தெரியவில்லை யாவும் எனது கற்பனை)

இடது சாரி கொள்கை சிறிலங்காவில் தலை தூக்குவதை நாட்டு மக்கள் விரும்பினாலும் ஏனைய புற‌ சக்திகள் விரும்பாது ...1971 ஆம் ஆண்டு "இடதுசாரி" புரட்சியை பயங்கரவாதம் என்ற சொல்லை பாவித்து இலகுவாகஅடக்கி ஒடுக்கிவிட்டார்கள் ...புறசக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும்...

இனவாதிகளினதும்,மதவாதிகளினதும் ஆட்சிகள் ஆசியாவில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் ஆட்சியை தொடர முடியும் அதை புறசக்திகள் விரும்பும். ...ஆனால் இடதுசாரி ஆட்சி என்பது மிகவும் கடினமானது....

மேலும் இந்த இடது சாரி ஆட்சி சோறு கிடைக்கவில்லை என்பதனால் திடிரேனே வந்த ஆட்சி ...மக்கள் இடதுசாரி கொள்கையுடன் வாக்கு போடவில்லை ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.