Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

சீமான் எங்கே வழக்கை இழுத்தடித்தார்? வழக்கு தொடுத்த விஜி அண்ணிதானே வழக்கை இருமுறையும் வாபஸ் வாங்கினார்? சும்மா அடிச்சுவிடக்கூடாது!!

முதலில் விஜி அண்ணி பொலிஸ் முறைப்பாடு செய்ததும் சீமான் தன் அதிமுக மீதான செல்வாக்கை பாவித்து விசாரானையே இல்லாமல் பார்த்து கொண்டார், பின்னர் பலர் மூலம் தூது பேசினார், விஜிஅண்ணி கணக்கில் சீமான் சார்பில் பணம் கூட போட்டார் என்கிறார் விஜி அண்ணி.

இப்போ வழக்கு விசாரணை ஆரம்பமானவுடன் டெல்லி போய், 2 மாதம் வாய்தா வாங்குகிறார்.

என் மீது எவராவது பொலிஸில் போய் பாலியல் குற்ற முறைப்பாட்டை செய்தால், நான் அந்த விசாரணைக்கு முகம் கொடுத்து, முடிந்த விரைவில் அதை கோர்ட்டுக்கு கொணர்ந்து, நான் குற்றம் அற்றவன் என நிரூபிப்பேன்.

எந்த நிரபராதியிம் இப்படித்தான் செய்வார்.

Edited by goshan_che

  • Replies 71
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்..

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட

  • goshan_che
    goshan_che

    இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது. இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

முதலில் விஜி அண்ணி பொலிஸ் முறைப்பாடு செய்ததும் சீமான் தன் அதிமுக மீதான செல்வாக்கை பாவித்து விசாரானையே இல்லாமல் பார்த்து கொண்டார், பின்னர் பலர் மூலம் தூது பேசினார், விஜிஅண்ணி கணக்கில் சீமான் சார்பில் பணம் கூட போட்டார் என்கிறார் விஜி அண்ணி.

இப்போ வழக்கு விசாரணை ஆரம்பமானவுடன் டெல்லி போய், 2 மாதம் வாய்தா வாங்குகிறார்.

என் மீது எவராவது பொலிஸில் போய் பாலியல் குற்ற முறைப்பாட்டை செய்தால், நான் அந்த விசாரணைக்கு முகம் கொடுத்து, முடிந்த விரைவில் அதை கோர்ட்டுக்கு கொணர்ந்து, நான் குற்றம் அற்றவன் என நிரூபிப்பேன்.

எந்த நிரபராதியிம் இப்படித்தான் செய்வார்.

இம்மாதிரியான மனித மிருகங்களிடம் தான் நீதிமன்றமும் சமாதானமாக போங்கள் என்று சொல்கிறது, காலகொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செவ்வியன் said:

இம்மாதிரியான மனித மிருகங்களிடம் தான் நீதிமன்றமும் சமாதானமாக போங்கள் என்று சொல்கிறது, காலகொடுமை.

  1. மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  2. ஆனால் அப்படி சொல்லி 1991 இல் மசூதியை இந்து மத வெறியர்கள் இடித்துவிட்டார்கள்.

  3. ஆனால் அப்படி இடித்தவர்கள் மனது புண்பட கூடாது, ஆகவே இப்போ அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதிக்கிறோம்.

இதுதான் பிஜேபியின் இரும்பு பிடிக்குள் இருக்கும் இந்திய உச்சநீதிமன்றின் நடுவுநிலமை.

இவர்களிடம் நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பில் ஒரு அநியாயமும் இல்லை.

  1. ஒரு பாலியல் வழக்கை, மனுதாரர் வாபாஸ் வாங்கி, பின் இப்போ தொடர்கிறார் என்பதால் மட்டும், அடித்து நூப்பது அநீதியானது. குறிப்பாக, தான் அளுத்தத்துக்கு உள்ளாகி வாபாஸ் வாங்க வைக்கப்பட்டேன் என அவர் சொல்லும் போது.

  2. அதே போல் குற்றம் சாட்டபட்டவரை வழக்கை நிலுவையில் வைத்து - அதை ஒரு மிரட்டல் கருவியாக பாவிப்பதும் கூடாது.

ஆகவே இரு தரப்புக்கும் அநீதியாக நடக்காமல் - விசாரணையை முடிக்க குறுகிய ஆனால் போதுமான அவகாசம் வழங்கி தீர்ப்பளிதார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உச்சநீதிமன்றத்தில் சைமன் தரப்பு மட்டுமே சமர்பித்தது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் எதுவும் வைக்கவில்லை இது சட்டநடைமுறையா இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை.

ஒன்று குற்றஞ்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்திற்கு தண்டிக்கப்படவேண்டும் இல்லை குற்றஞ்சாட்டியவர் பொய்யான குற்றச்சாட்டிற்கு தண்டிக்கபடவேண்டும்.

அண்ணனுக்கு பின்புலம் பெரும்பலம். இனிதான் அண்ணனோட ஆட்டத்தை பாக்கபோறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

உச்சநீதிமன்றத்தில் சைமன் தரப்பு மட்டுமே சமர்பித்தது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் எதுவும் வைக்கவில்லை இது சட்டநடைமுறையா இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை

இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது.

இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில் கூற பத்து நாள் கழித்து ஒரு தவணை கொடுக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

ஆனால் இங்கே கூட உச்சநீதி மன்றம் சீமானுக்கு அனுகூலமாக நடந்துள்ளது.

சீமானின் அப்ளிகேசனை பத்து நாள் தள்ளிவைத்து, தமிழ்நாடு அரசின் பதிலையும் பெற்று முடிவெடுக்காமல் - நேரடியாக 2 மாத அவகாசம் வழங்கி உள்ளனர்.

இந்த 2 மாச அவகாசம் மத்திய அரசின் துணையுடன் மீண்டும் ஒரு தடவை பெங்களூரில் இருக்கும் விஜி அண்ணியை மிரட்டி வாபஸ் வாங்க வைக்கவே.

1 hour ago, செவ்வியன் said:

அண்ணனுக்கு பின்புலம் பெரும்பலம். இனிதான் அண்ணனோட ஆட்டத்தை பாக்கபோறீங்க.

நிச்சயமாக….

இப்போதே எதிர்வு கூறுகிறேன்…

விஜி அண்ணி மீண்டும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவார், அல்லது பணத்தை கொடுத்து கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் ஆகி விட்டனர் என முடிப்பார்கள்.

இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் லிவ்விங் ருகெதர் ஆக வாழ்ந்த காலப்பகுதியில் சீமானுக்கும் விஜலட்சுமிக்கும் இடையே நடந்ததை,தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவே இருந்த உறவை, நீதிமன்றம் கண்டுபுடிக்கும் முன்னமே ஒரு சிலர் பாத்திருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு என்பதை கண்டிருக்கிறார்கள்..

ஹாஹா, அண்ணன் தன் அன்பு மனைவியிடம் "மாமா கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்" என கொஞ்சி குலாவி அவரே காணொளி பொது வெளியில் வெளியிடும் போது தனியா வேற போய் உங்களுக்கு பாக்கணுமா..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
2 hours ago, செவ்வியன் said:

அண்ணனுக்கு பின்புலம் பெரும்பலம். இனிதான் அண்ணனோட ஆட்டத்தை பாக்கபோறீங்க.

நிச்சயமாக….

இப்போதே எதிர்வு கூறுகிறேன்…

விஜி அண்ணி மீண்டும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவார், அல்லது பணத்தை கொடுத்து கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் ஆகி விட்டனர் என முடிப்பார்கள்.

இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன்.

நீங்கள் சொன்னது தான் இப்போது நடந்துள்ளது.

இனி சீமானை எதிர்த்து போராட போவதில்லை என்று அண்ணி விஜயலட்சுமி சொல்லிவிட்டாராம்

பாலியல் வன்கொடுமையாளர் சீமானின் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, செவ்வியன் said:

ஹாஹா, அண்ணன் தன் அன்பு மனைவியிடம் "மாமா கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்" என கொஞ்சி குலாவி அவரே காணொளி பொது வெளியில் வெளியிடும் போது தனியா வேற போய் உங்களுக்கு பாக்கணுமா..

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

அப்போ இவ்வளவு நாளும் நாம எல்லாம் வீட்டில் பாலியல் பலாத்காரமா பண்ணீட்டு இருந்திருக்கிறோம்..?

பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இவ்வளவு நாளும் பாலியல் குற்றவாளியாக வாழ்ந்த இந்த பாவியை மன்னித்திவிடும் ஜேசப்பா…🙏 🤣🤣

1 hour ago, goshan_che said:

ஆனால் இங்கே கூட உச்சநீதி மன்றம் சீமானுக்கு அனுகூலமாக நடந்துள்ளது.

இந்த 2 மாச அவகாசம் மத்திய அரசின் துணையுடன் மீண்டும் ஒரு தடவை பெங்களூரில் இருக்கும் விஜி அண்ணியை மிரட்டி வாபஸ் வாங்க வைக்கவே.

இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன்.

இவர் பாடும் துதியை கவனித்தீர்களா..? “றோ”வை விட்டு விட்டாரய்யா…🤣🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

அப்போ இவ்வளவு நாளும் நாம எல்லாம் வீட்டில் பாலியல் பலாத்காரமா பண்ணீட்டு இருந்திருக்கிறோம்..?

பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இவ்வளவு நாளும் பாலியல் குற்றவாளியாக வாழ்ந்த இந்த பாவியை மன்னித்திவிடும் ஜேசப்பா…🙏 🤣🤣

இவர் பாடும் துதியை கவனித்தீர்களா..? “றோ”வை விட்டு விட்டாரய்யா…🤣🤣🤣

ஐயா வழக்கே என்னை நம்பி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்பது தான். ஆனால் அண்ணன் முதலில் தெரியாது என்றார், பின்னர் 50 ஆயிரம் கொடுத்தேன் என்றார், பின்னர் விலைமாது என்றார், நீதிமன்றத்தில் சமரசமாய் போகிறோம் என்றார், வெளியில் சமரசத்துக்கே பேச்சில்லை என்கிறார். என்றாவது உண்மை பேசுவார் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செவ்வியன் said:

ஐயா வழக்கே என்னை நம்பி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்பது தான். ஆனால் அண்ணன் முதலில் தெரியாது என்றார், பின்னர் 50 ஆயிரம் கொடுத்தேன் என்றார், பின்னர் விலைமாது என்றார், நீதிமன்றத்தில் சமரசமாய் போகிறோம் என்றார், வெளியில் சமரசத்துக்கே பேச்சில்லை என்கிறார். என்றாவது உண்மை பேசுவார் என்று நம்புவோம்.

இது நான் முதலே சொல்லிவிட்டேன்… நாம் லிவிங்கி ருகெதரில் இருந்தோம் செட்டாகவில்லை பிரிந்துவிட்டோம் என்று அப்பவே சீமான் சொல்லி இருந்தால் இன்று பலரின் நேரம் மிச்சமாகி இருக்கும்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது நான் முதலே சொல்லிவிட்டேன்… நாம் லிவிங்கி ருகெதரில் இருந்தோம் செட்டாகவில்லை பிரிந்துவிட்டோம் என்று அப்பவே சீமான் சொல்லி இருந்தால் இன்று பலரின் நேரம் மிச்சமாகி இருக்கும்…

இதை செய்தாலும் தப்பி இருக்க முடியாது.

ஏன் என்றால்…கலியாணம் முடிப்பதாக ஏமாற்றித்தான், லிவிங்டு கெதர், கொஞ்சி குலாவுதல் சகலதுக்கும் இசைவு பெறப்பட்டது, அதாவது obtained consent through deception என்பதே விஜி அண்ணி வாதம்.

43 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர் பாடும் துதியை கவனித்தீர்களா..? “றோ”வை விட்டு விட்டாரய்யா…🤣🤣🤣

இதையும் முன்பே எழுதிவிட்டேன் விளங்காத மாதிரி நடிக்கிறீர்கள்.

  1. சீமானை ரோ கையில் எடுத்தது, தமிழ் தேசிய அரசியல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீங்காகாமல் தடுக்க.

  2. இந்திய மத்திய அரசின் கீழ்தான் றோ.

  3. றோவின் கைப்பாவை எவரோ, அவரை மத்திய அரசில் இருக்கும் கட்சி தன் தேவைக்கும் பயன்படுத்தி கொள்ளும்.

  4. நாளைக்கு ஆட்சி மாறினால் - அந்த கட்சியும் சீமானை பயன்படுத்தும். இப்போ எச் ராஜாவை பேறறிஞர் என்றவர் அப்போ ப சிதம்பரத்தை மூதறிஞர் என்பார்😃.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 01:44, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட்டும் நடைபெற இல்லை.. எங்கள் வீடு உங்கள் வீடு பக்கத்துவீடு என்று எல்லோருமே இதனால் பாதிக்கப்பட்டோம்.. வாழும் சாட்சிகள்..

ஆனால் லிவ்விங் ருகெதர் ஆக வாழ்ந்த காலப்பகுதியில் சீமானுக்கும் விஜலட்சுமிக்கும் இடையே நடந்ததை,தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவே இருந்த உறவை, நீதிமன்றம் கண்டுபுடிக்கும் முன்னமே ஒரு சிலர் பாத்திருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு என்பதை கண்டிருக்கிறார்கள்..

அப்படி எனில் அவர்கள் ஒன்றில் இந்த இருவரும் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த பெட் ரூமில் விளக்கு பிடிப்பவர்களாக அல்லது மாமா வேலை பார்ப்பவர்களாக அல்லது அடுத்தவன் பெட் ரூமில் கமெரா வைத்து அந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் சைக்கோக்களாகத்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது..

அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா?

எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........

கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்?

On 4/3/2025 at 07:48, பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..?

அப்போ இவ்வளவு நாளும் நாம எல்லாம் வீட்டில் பாலியல் பலாத்காரமா பண்ணீட்டு இருந்திருக்கிறோம்..?

இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா?

எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........

கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்?

இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்

ஓணாண்டியார் விளங்கினாலும் விளங்காதமாதிரி நடிப்பது தான் அவருக்கு ஒரே வழி!

சிரிப்புக் குறி போட்ட விசுகருக்கு பாலியல் வல்லுறவு என்றால் "பழைய தமிழ் திரைப்படங்களில் லிப்ஸ்ரிக் பூசிய வில்லன் கதறக் கதற கதாநாயகியை பலாத்காரம் செய்வது தான் வல்லுறவு" என்ற புரிதல் என நினைக்கிறேன்.

ஆனால், நீங்கள் மட்டும் தான் உண்மையாக விளங்காமல் இருக்கிறீர்கள் என நம்புகிறேன்: வயது குறைந்தவர், அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லாதவரோடு மென்மையாக உறவு வைத்துக் கொண்டாலும் அது சட்ட ரீதியாக பாலியல் வல்லுறவு தான். அதே போல, கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி (coercion by deception) உடல் இன்பம் பெற்றுக் கொள்வதும் பாலியல் வல்லுறவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இந்த விவாதத்தினுடைய நீட்சி உங்களுக்குத்தான் விளங்கவில்லை என்ன நினைக்கிறேன்..

அவர் சொல்ல்கிறார் பாலியல் குற்றவாளி என்று.

நாங்கள் சொல்கிறோம் நீதிமன்றில் நிறுவாதவரை யாருமே குற்றவாளி இல்லை என்று.. அது நீதி மன்றின் வேலை.. நீங்கள் யார் தீர்ப்பெழுத என்று.. என்ன ஆதாரம் என்று..

அவர் சொல்கிறார் சீமானே கொஞ்சிக்குலாவிய வீடியோ இணையத்தில் என்று ஒரு மொன்னை விளக்கம்..

அப்போ கொஞ்சிக்குலாவியவன் எல்லாம் பாலியல் குற்றவாளியா என்பது கேள்வி..

பாலியல் குற்றம் என்று நீங்கள் பட்டியலிடுவதில் மாற்றுக்கருத்தில்லை..

இப்போ சீமான் பாலியல்குற்றவாளி என்பதுதான் கேள்வி..

சீமான் சம்மதம் இல்லாமலோ அல்லது திருமணம் செய்கிறோன் என்று சொல்லியோ உறவு வைத்தாரா என்பது எப்படி இவருக்கு தெரியும்..?

கொஞ்சிக்குலவின வீடியோ என்கிறார்.. உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் யார்தான் கொஞ்சிக்குலவுவது இல்லை.. இதெல்லாம் ஒரு காரணமா..? திருமணம் செய்கிறேன் என்று சொன்னதற்கு அல்லது கோயிலில் மாலை மாற்றியதற்கு பொதுவெளியில் ஆதாரம் உண்டா..? இவரிடம் உண்டா..? இல்லைத்தானே.. அப்போ அதைக்கண்டுபிடிக்க வேண்டியது நீதிமன்றம்.. அதற்கு முன்னம்

பாலியல் குற்றவாளி , பாலியல் குற்றவாளி என்று சொல்ல என்னகாரணம்..? காழ்ப்புணர்ச்சி..

காழ்ப்புணர்ச்சியுடன் முன்முடிபுடன் அனுகினால் இப்படித்தான் உங்கள் எல்லோரின் பதிலும் இருக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

தமிழ் சரியாக வாசிக்க தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மறு பக்கத்தால் இது புனைவான குற்றச்சாட்டு என்பதற்கு அவர் பலர் மீதும் இதே குற்றச்சாட்டை வைப்பதால் அவரே காரணமாகிவிடுகிறார். பெண் என்பதற்காக சட்டங்களில் கொடுக்கப்பட்ட சலுகைகளை அவர் தவறாக புரிந்து பயன் படுத்தி வருவது போல் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

மறு பக்கத்தால் இது புனைவான குற்றச்சாட்டு என்பதற்கு அவர் பலர் மீதும் இதே குற்றச்சாட்டை வைப்பதால் அவரே காரணமாகிவிடுகிறார். பெண் என்பதற்காக சட்டங்களில் கொடுக்கப்பட்ட சலுகைகளை அவர் தவறாக புரிந்து பயன் படுத்தி வருவது போல் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.

இதை இப்படியே விடக்கூடாது.

விஜி அண்ணி விலகி போனாலும்…அவர் மேல் சீமான் வழக்கு போட்டு, தான் குற்றமற்றவர், அவர் சொன்னது பொய் என நிறுவ வேண்டும் என்கிறீர்களா?

பிகு

அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழ பாம் வைப்பது அவர் ஆட்களேதான்.

நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

தமிழ் சரியாக வாசிக்க தெரியுமா?

உங்களுக்கா? நான் நினைக்கவில்லை😎! எனவே, உங்களுக்காக அமெரிக்காவின் புதிய "உத்தியோக பூர்வ மொழியான" ஆங்கிலத்தில்:

Relevant sections:

  1. Sections like 370 of the IPC encompass different forms of coercion, including using threats, force, or deception. 

  2. Consent under deception:

    If someone is deceived into giving consent, it is not considered valid consent in the eyes of the law. 

  3. Recent amendments:

    The Criminal Law Amendment Act of 2013 further strengthened the legal framework 👉regarding consent and sexual assault, including considering deception as a form of coercion. 

49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் சம்மதம் இல்லாமலோ அல்லது திருமணம் செய்கிறோன் என்று சொல்லியோ உறவு வைத்தாரா என்பது எப்படி இவருக்கு தெரியும்..?

விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டு இது தான். இதை இல்லையென்று கோர்ட்டில் போய் நிறுவக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கேசை தள்ளுபடி செய்யவும், குற்றம் சாட்டுபவரை செல்வாக்கினால் அகற்றவும் முயன்றமையால் தான் உங்களிடம் கேட்கிரேன்: ஏன் சீமான் எதிர்கொள்ளத் தயங்குகிறார்? ஒரு விளக்கம் தானே இருக்க முடியும் இதற்கு? மடியின் கனம்!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

மறு பக்கத்தால் இது புனைவான குற்றச்சாட்டு என்பதற்கு அவர் பலர் மீதும் இதே குற்றச்சாட்டை வைப்பதால் அவரே காரணமாகிவிடுகிறார். பெண் என்பதற்காக சட்டங்களில் கொடுக்கப்பட்ட சலுகைகளை அவர் தவறாக புரிந்து பயன் படுத்தி வருவது போல் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.

உண்மைதான் இந்த சட்டங்கள் அதுவும் பெண்களை முதன்மை படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டது உண்மையில் துன்புறுத்தப்படும் உதவி அற்ற பெண்களுக்காக.. ஆனால் இந்த சட்டங்களின் நன்மைகள் கிராமப்புறங்களில் குடித்து விட்டு வந்து தினம் தினம் கணவன்மாரால் துன்புறுத்தப்படும் சீதனக்கொடுமை மாமியார் கொடுமை என்று துன்புறுத்தப்படும் படிக்காத கிராமப்புற பெண்களை சென்றடைவதில்லை மாறாக நகர்ப்புறங்களில் பணக்காற, சினிமா போன்ற புகழ்பெற்ற மற்றும் படித்து நல்ல நிலையில் சம அந்தஸ்த்துடன் வாழும் பெண்களால் தவறாக பயன்படுத்தப்படவே இப்பொழுது எல்லாம் அதிகம் பயன்படுகிறது..

5 minutes ago, Justin said:

விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டு இது தான். இதை இல்லையென்று கோர்ட்டில் போய் நிறுவக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கேசை தள்ளுபடி செய்யவும், குற்றம் சாட்டுபவரை செல்வாக்கினால் அகற்றவும் முயன்றமையால் தான் உங்களிடம் கேட்கிரேன்: ஏன் சீமான் எதிர்கொள்ளத் தயங்குகிறார்? ஒரு விளக்கம் தானே இருக்க முடியும் இதற்கு? மடியின் கனம்!

மறுவளமாக விஜலட்சுமியும் ஏன் வாபஸ் வாங்கி வாபஸ் வாங்கி விளாடுரார்..? உறுதியாக நின்று கேசை நடத்தலாமே..? ஆக அவர் நோக்கமும் நீதி பெறுவதல்ல நிதி பெறுவதே.. ஆகவே இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் மூன்றாம் நபராகிய நாம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு “பாலியல்குற்றவாளி” என்று தீர்ப்பெழுதாமல் நீதிமன்றத்திடம் விட்டுவிட்டு மூடிட்டு இருப்பதுதான் சரியாக இருக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான் இந்த சட்டங்கள் அதுவும் பெண்களை முதன்மை படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டது உண்மையில் துன்புறுத்தப்படும் உதவி அற்ற பெண்களுக்காக.. ஆனால் இந்த சட்டங்களின் நன்மைகள் கிராமப்புறங்களில் குடித்து விட்டு வந்து தினம் தினம் கணவன்மாரால் துன்புறுத்தப்படும் சீதனக்கொடுமை மாமியார் கொடுமை என்று துன்புறுத்தப்படும் படிக்காத கிராமப்புற பெண்களை சென்றடைவதில்லை மாறாக நலர்ப்புறங்களில் பணக்காற, சினிமா போன்ற புகழ்பெற்ற மற்றும் படித்து நல்ல நிலையில் சம அந்தஸ்த்துடன் வாழும் பெண்களால் தவறாகவே பயன்படுத்தப்படவே இப்பொழுது எல்லாம் அதிகம் பயன்படுகிறது..

இங்கு அமெரிக்காவில் பல கறுப்பு இளைஞர்கள் மீது வெள்ளைக்கார பெண்களால் இப்படி பொய் வழக்குகள் போடப்பட்டு ... அது கோட்டிலேயே பொய் என்று நிரூபணம் ஆனா போதும்கூட ....... வெறும் மன்னிப்பு கேட்டு பெண்கள் சுதந்திரமாக சென்று இருக்கிறார்கள். எதனை பேர்கள் நிரூபிக்க முடியாது உள்ளே இருக்கிறார்களோ தெரியவில்லை.

நான் வசிக்கும் இடத்தில் ஒரு கறுப்பினத்தவரை (ஆயுத முனையில்) கடையில் களவு போன வழக்கில் தவறான நபரை 17 வயதில் கைது 20 வருடங்கள் பின்பு இப்போதான் அவர் இவர் இல்லை என்று விடுதலை செய்து இருக்கிறார்கள். 20 வருடங்கள் செய்யாத தப்புக்கு உள்ளே இருப்பது என்பது எவ்வளவு கொடுமை

அதே போல கொழுத்த பணக்கார பையன்கள் ஏழை பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு .... பணம் மற்றும் அந்தஸ்து அரசியல் பின்புலங்களை பாவித்து சுதந்திரமாக திரிகிறார்கள்

ஒரு வழக்கு டாகுமெண்டரி ஆக கூட வந்திருக்கிறது இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இங்கு அமெரிக்காவில் பல கறுப்பு இளைஞர்கள் மீது வெள்ளைக்கார பெண்களால் இப்படி பொய் வழக்குகள் போடப்பட்டு ... அது கோட்டிலேயே பொய் என்று நிரூபணம் ஆனா போதும்கூட ....... வெறும் மன்னிப்பு கேட்டு பெண்கள் சுதந்திரமாக சென்று இருக்கிறார்கள். எதனை பேர்கள் நிரூபிக்க முடியாது உள்ளே இருக்கிறார்களோ தெரியவில்லை.

நான் வசிக்கும் இடத்தில் ஒரு கறுப்பினத்தவரை (ஆயுத முனையில்) கடையில் களவு போன வழக்கில் தவறான நபரை 17 வயதில் கைது 20 வருடங்கள் பின்பு இப்போதான் அவர் இவர் இல்லை என்று விடுதலை செய்து இருக்கிறார்கள். 20 வருடங்கள் செய்யாத தப்புக்கு உள்ளே இருப்பது என்பது எவ்வளவு கொடுமை

இவர்கள் போன்றவர்கள் எல்லாம் “கரிசனை”க்கு உரிய பெண்கள் அல்ல.. « Cunning Women « 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

உங்களுக்கா? நான் நினைக்கவில்லை😎! எனவே, உங்களுக்காக அமெரிக்காவின் புதிய "உத்தியோக பூர்வ மொழியான" ஆங்கிலத்தில்:

Relevant sections:

  1. Sections like 370 of the IPC encompass different forms of coercion, including using threats, force, or deception. 

  2. Consent under deception:

    If someone is deceived into giving consent, it is not considered valid consent in the eyes of the law. 

  3. Recent amendments:

    The Criminal Law Amendment Act of 2013 further strengthened the legal framework 👉regarding consent and sexual assault, including considering deception as a form of coercion. 

விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டு இது தான். இதை இல்லையென்று கோர்ட்டில் போய் நிறுவக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கேசை தள்ளுபடி செய்யவும், குற்றம் சாட்டுபவரை செல்வாக்கினால் அகற்றவும் முயன்றமையால் தான் உங்களிடம் கேட்கிரேன்: ஏன் சீமான் எதிர்கொள்ளத் தயங்குகிறார்? ஒரு விளக்கம் தானே இருக்க முடியும் இதற்கு? மடியின் கனம்!

ஒழுங்கா தமிழே வாசிக்க தெரியாது

இதிலே இங்கிலீஷில் விளக்கம் வேற

எதோ தாங்கள்தான் உலகத்தில் சடடம் இயற்றியது போல ஏதும் பெருமை என்னமோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஐயியிடம் கேட்ட போது....🙂

பாலியல் வல்லுறவு (Sexual Assault) என்பது ஒரு நபரின் சம்மதம் இல்லாமல் அல்லது சம்மதிக்க முடியாத நிலையில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. இது பல வடிவங்களில் இருக்கலாம், அவற்றில் சில:

உடல் தொடர்பு இல்லாத பாலியல் துஷ்பிரயோகம்: பாலியல் கருத்துகள், பாலியல் வகையில் தவறாகப் பேசுதல், அசௌகரியப்படுத்தும் வகையில் பார்த்தல் போன்றவை.

உடல் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோகம்: தவறான தொடுதல், முத்தமிடுதல், பாலியல் உறவுக்கு முயற்சித்தல் அல்லது பலாத்காரம் செய்தல் போன்றவை.

பாலியல் பலாத்காரம் (Rape): ஒருவரின் சம்மதம் இல்லாமல் பாலியல் உறவு கொள்வது. இது மிகவும் கடுமையான வடிவம் ஆகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.