Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?

சீமான்

நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகள் அரசியல் அரங்கில் விவாதமானது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பு, ``இந்த வழக்கு ஏற்கெனவே மூன்றுமுறை தொடரப்பட்டு திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. புதிய அரசு ஆட்சியமைத்ததும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது" என்ற வாதங்களைப் முன்வைத்திருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிகக் நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்தப் பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தப் பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டிருக்கிறார்.

https://www.vikatan.com/amp/story/government-and-politics/interim-stay-on-trial-against-seeman-case-by-supreme-court

  • Replies 63
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' எ

  • goshan_che
    goshan_che

    சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்! Mathivanan MaranUpdated: Monday, March 3, 2025, 16:30 [IST] சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து

  • Justin
    Justin

    Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி

  1. இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமாந்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மடியில் கனம் இல்லை எனில் ஏன் வழக்கை சென்னை ஹைகோர்ட்டில் சந்தித்திருக்க முடியாது ? ஏன் டெல்லி வரை போய் தடை உத்தரவு வாங்க வேண்டும்?

  2. இதில் கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் பேசி தீர்க்க கூடிய வாய்ப்பை பற்றி உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது - ஒரு பாலியல்தொழிலாளியுடனா பேசி தீர்க்க சொல்கிறது உச்ச நீதிமன்றம்? ஆகவே சீமான் விஜி அண்ணியை பாலியல் தொலிலாளி என்றது கேள்விக்குள்ளாகிறது.

  3. உண்மையில் அரசியல் ரீதியில் சீமான் இப்படி தடையுத்தரவு பெற்றது அவரின் அரசியல் எதிரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் - திமுகவுக்கு விஜி அண்ணிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம்.

    இனி ஒவ்வொரு நாளும் விஜி அண்ணி வீடியோ போடுவார், சிமானிடம் அதை பற்றி கேட்க சீமான் உளறுவார், அதை வைத்து இன்னும் அரசியல் செய்வார்கள்.

  4. சீமான் ஒரு ரோ ஏஜெண்ட் என கண்டு கொண்டு எதிர்க்கும் என்போன்றோருக்கும் இது சீமானை அம்பலபடுத்த, மேலதிக சந்தர்ப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பாக போன வழக்கு.. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞரை களமிறக்கி.. ஆட்டத்தை மாற்றிய சீமான்

Shyamsundar IUpdated: Monday, March 3, 2025, 16:15 [IST]

seeman naam tamilar katchi

நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டது.

Also Read

பெண் விபச்சாரி என்றால் ஆணுக்கு பெயர்

சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seeman விஷயத்தில் Vijayalakshmi-க்கு ஆதரவாக Tweet போட்ட Kajal Pasupathy | Oneindia Tamil

இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கின் போக்கை மாற்றி உள்ளார்.

சீமான் வழக்கறிஞர்

இந்த வழக்கு, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்னா மற்றும் ஜஸ்டிஸ் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன் பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்நிமேஷ் துபே ஆஜராகி உள்ளார்.

Recommended For You

வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட சீமான்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சொல்கிறாரா? ஆ குழப்புதே!

பாலியல் குற்ற வழக்கில் சீமானுக்கு ஆஜராகும் நிர்நிமேஷ் துபே இதற்கு முன் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகள் ஆகும். அர்னாப்பிற்கு அவசர அவசரமான ஜாமீன் வாங்கி தந்தது இவர்தான். அதிக பீஸ் வாங்க கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவர்.

என்ன வழக்கு

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

You May Also Like

எனக்கு எதிராக எந்த வழக்கும் நிற்காது! என்னை விமர்சிக்க திமுக, திகவுக்கு தகுதியில்லை- சீமான்

நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகைக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை அந்த நடிகை குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜய லட்சுமியிடம் பெருந் தொகையை பெற்றிருப்பதாகவும் நடிகை புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் நடிகை கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை நடிகை திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்குத்தான் உச்ச நீதிமன்றம் ஸ்டே வழங்கி உள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-statement-against-sc-judgement-may-cause-him-problem-684585.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

4 minutes ago, goshan_che said:

சீமானுக்கு ஆஜராகும் நிர்நிமேஷ் துபே இதற்கு முன் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகள் ஆகும். அர்னாப்பிற்கு அவசர அவசரமான ஜாமீன் வாங்கி தந்தது இவர்தான். அதிக பீஸ் வாங்க கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் ஆஸ்தான வக்கீல்களில் ஒருவரை அண்ணனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமித் ஜி.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்!

Mathivanan MaranUpdated: Monday, March 3, 2025, 16:30 [IST]

சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் 'விசாரணை' உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகை தம் மீது கூறிய பலாத்கார புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் டிஸ்மிஸ் செய்திருந்தார். அப்போது நீதிபதி கூறியிருந்ததாவது: சீமான் மீதான நடிகையின் பாலியல் பலாத்கார புகார் தீவிரமானது; சீமான் மீது நடிகைக்கு எந்த காதலுமே இல்லை. குடும்ப சிக்கல் காரணமாகவே சீமானை நடிகை சந்தித்தார். ஆனால் சீமானோ, திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையுடன் உறவு வைத்துள்ளார்; நடிகையே வழக்கை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது; ஆகையால் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதற்கு முகாந்திரமும் கிடையாது; பலாத்கார புகார் மீதான விசாரணையை முடித்து 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி இளந்திரையன் கூறியிருந்தார்.

Seeman Vijayalakshmi NTK

Also Read

டிரம்புக்கு ஒரு கும்புடு.. தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சீமானின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா இன்று விசாரித்தனர். இந்த விசாரணைக்குப் பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: 2 மாதங்களுக்குள் சீமான், நடிகை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். சீமான் மீது விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Just now, goshan_che said:

உத்தரவு: 2 மாதங்களுக்குள் சீமான், நடிகை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். சீமான் மீது விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது

புரிகிறதா?

அமித் ஷாவின் பணிப்பில்,

உச்சநீதிமன்றம் “மாமா” வேலை பார்க்கிறது.

அதாவது சீமான் தன்வாயால் பாலியல் தொழிலாளி என அழைத்தவருக்கு சீமான் சட்டப்பிரகாரம் இழப்பீடு கொடுக்க வேண்டுமாம்🤣.

அண்ணனுக்கு 2 மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பூலோக வரலாற்றிலேயே பாலியல் தொழிலாளியோடு குடும்பம் நடத்தி, இழப்பீடும் கொடுக்க போகும் முதல் அரசியல் ஆளுமை அண்ணனாகத்தான் இருக்கும்.

அண்ணன் அப்படிதான் இழப்பீடு கொடுக்க மாட்டேன் என வாய் ஜம்பம் அடித்துள்ளாராம்.

எப்படியும் டெல்லியில் வைத்து கேசை முடக்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை!

ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்து, தாமதமாக்கி சகல சந்து பொந்துகளுக்குள்ளாலும் பூந்து ஓடி, ஒழிந்து கொள்வது.

இனி அமித்ஷாவின் அண்டர் வேயாருக்குள் இருந்து அடிக்கடி வெளியே வந்து "மானத்திற்காக இறந்தவர்களின் மகன் நான்" என்று வாய் வேட்டு விடுவார் என நினைக்கிறேன், ஆள் மானஸ்தன்😎!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

டிஸ்கி

  1. இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமாந்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மடியில் கனம் இல்லை எனில் ஏன் வழக்கை சென்னை ஹைகோர்ட்டில் சந்தித்திருக்க முடியாது ? ஏன் டெல்லி வரை போய் தடை உத்தரவு

6 hours ago, goshan_che said:

அமித் ஷாவின் பணிப்பில்,

உச்சநீதிமன்றம் “மாமா” வேலை பார்க்கிறது.

சென்னை நீதிமன்றுக்கு........

தமிழ்நாட்டு காவல்துறைக்கு ..........

மாமி வேலை என்ன என்றே தெரியாது

பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

சென்னை நீதிமன்றுக்கு........

தமிழ்நாட்டு காவல்துறைக்கு ..........

மாமி வேலை என்ன என்றே தெரியாது

பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல

றோ எங்கப்பா.. ?

images?q=tbn:ANd9GcRoCTI3ZNymra3v6ia0Ecs

றோ என்ன தக்காளி தொக்கா..??🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

றோ எங்கப்பா.. ?

images?q=tbn:ANd9GcRoCTI3ZNymra3v6ia0Ecs

றோ என்ன தக்காளி தொக்கா..??🤣🤣

ப‌ரோட்டா வேண்ட‌ போட்டின‌ம்😁.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

றோ எங்கப்பா.. ?

images?q=tbn:ANd9GcRoCTI3ZNymra3v6ia0Ecs

றோ என்ன தக்காளி தொக்கா..??🤣🤣

அவரை போலவே விளங்காதை பார்த்து சிரிக்கும் ரகம்தான் நீங்களும் என்பது தெரிந்ததே🤣.

நினைவூட்டல்

றோ-சீமான் தொடர்பு பற்றி நான் முன்வைத்த எந்த கேள்விக்கும் ஒரு பதில் தானும் சொல்லாதவர் நீங்கள்.

வெறும் மீம்ஸ் மட்டுமே.

இதில் வெட்கம் இல்லாமல், ரோ+திமுக+சீமான் கூட்டு சதியில் கொல்லப்பட்ட, சாட்டை துரையால் சாவு கட்டு கூட இடித்தழிக்கப்பட்ட சுப முத்துகுமாருக்கு, இப்போதான் அறிந்து கொண்டேன் என போன மாசம் திரி வேறு திறந்தீர்கள்.

செல்லம்…

உங்களுக்கு சுப முத்துகுமார் ஆர் எண்டு தெரியவே 2025 வரை ஆகியுள்ளது. அதுவும் யாழில் நான் சொன்ன பின் வந்த தேடலின் விழைவு. நீங்கள் எல்லாம் ரோவின் நகர்வுகளை உய்தறிவீர்கள் என நாந்தான் அதிகம் ஆசைபட்டு விட்டேன் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சுத்த அநியாயம்................... வெறும் ஆறே ஆறு மாத தொடர்பு....... தொடர்பு என்று கூட சொல்ல முடியாது, ஒரு சேவை கொடுக்கல் வாங்கல் என்று தானே அவர் சொன்னார்............ இதற்குப் போய் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீதிமன்றின் வெளியே.............

இந்த தடவை மதுரை செல்வம் பேச்சுவார்த்தையில் உசாராக இருக்கவேண்டும்.

விஜயலட்சுமி பல வருடங்களாக யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள்.........

என்ன, இந்தப் பக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றவுடன் தான் கொஞ்சம் யோசனையாக இருக்கின்றது.............

'அண்ணனின் ஆறு மாதங்கள்.........' என்று இன்னொரு பட்டியலை அவரின் எதிரிகள் வெளியிட்டு விடுவார்களோ என்று............................

அரசியலிலும், சினிமாவிலும் இது எல்லாம் சகஜம் என்ற முடிவுக்கு வந்து விட்டதால், இனிமேல் பிரச்சனை ஒன்றுமே இல்லை, இப்படியான விசயங்களை இடதுகை புறங்கையால் ஒதுக்கி விட்டு முன்னர் போலவே போய்க் கொண்டேயிருக்கலாம்...............

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஏன் இந்த முறை சிறுவர் பாலியல் துஸ்பிரயோகிகள் யாரும் கிடைக்கவில்லையோ முட்டு கொடுக்க, பெரியோர் பாலியல் குற்ற சாட்டுக்கு திரிக்கு வந்திருக்கிறியள் 🤣.

பரவாயில்லை இது சட்ட விடயம், ஏரோபிளேனுக்கு டயர் மாத்தும் விடயம் அல்ல, எனவே விளக்குகிறேன்.

  1. நான் எங்கேயும் சென்னை உயர் நீதிமன்றம் அரசியல் செல்வாக்குக்கு அப்பாற்பட்டது என சொல்லவில்லை.

  2. ஆனால் அபூர்வமாக சில நல்ல நீதிபதிகள் உயர் நீதி மன்றம் வரைக்கும் உயர்ந்து வந்து விடுவார்கள். பல தீர்ப்புக்களில் இதை முன்பே நாம் அலசி உள்ளோம்.

  3. ஆனால் அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றம் போகும் போது, அல்லது பிரதம நீதியரசர் ஆகும் போது, இந்த நியமனங்கள் மத்தியில் ஆளும் கட்சியின், ஆளும் வர்க்கதின் நலனை பேணுபவர்களுக்கே வழங்கபடும்.

  4. காரணம்? உயர் நீதிமன்று போல அன்றி, உச்ச நீதிமன்றின் அதிகாரம் பெரியது. அரசியல் சாசன பெஞ் மட்டும் அல்ல, மத்திய அரசு, தேர்தல் என பலதை நேரடியக விசாரிக்கும் நீதி மன்று இது. ஆகவே இதில் மத்தியில் ஆளும் கட்சி விரும்பும் ஆட்களையே போடுவார்கள். உதாரணமாக சுதந்திர இந்தியாவில் எத்தனை பிராமணர் அல்லாத பிரதமநீதியரசர்கள் இருந்தார்கள் என பார்த்தால் இது புரியும்.

  5. இந்தியாவில் central list, state list, concurrent list என அதிகாரபகிர்வு 3 லிஸ்டில் உள்ளது. இதில் நீதி துறை செண்டிரல் லிஸ்டில் உள்ளது.

  6. ஆகவே இந்திய நீதிபதிகளில், குறைந்த அளவு மத்திய அரசின் அளுத்தம் உள்ளவர்கள் மாவட்ட, மஜிஸ்டிரேட் நீதிபதிகள். அவர்களை விட கொஞ்சம் அளுத்தம் உடையவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள். மத்தியில் ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

  7. இதை உண்மையில் அமெரிக்காவில் வசிக்கும் நீங்கள் இலகுவில் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக New York Southern District Court போன்ற ஒரு கீழ் கோர்ட்டானது, அமெரிக்கன் Supreme Court ஐ விட political bias குறைவான கோர்ட். கிட்டதட்ட இதே நிலைதான் இந்தியாவிலும் (நீதிபதி நியமன முறையில் சின்ன வேறுபாடு உண்டு).

  8. இது மட்டும் அல்ல. இந்த சென்னை நீதிபதி சீமான் வழக்கை இழுத்தடிக்காமல் முடியுங்கள் என்றே கூறினார். சீமான் அதைதானே வேண்டுகிறார்.

  9. விஜி அண்ணி வழக்கு வழமை போல் வளசரவாக்கம் பொலிஸ் ஸ்டேசனில் தூங்கி கொண்டு இருந்தது. சீமாந்தான் இதை முடித்து வைக்க வேண்டும் என அவராக மனு போட்டார். அதைத்தான் நீதிபதி செய்தார். விசாரிக்காமல் முடிக்க முடியாது ஆனால் 12 கிழமைக்குள் முடியுங்கள் என்பதே அந்த தீர்ப்பு.

  10. இது சீமானுக்கும், விஜி அண்ணிக்கும் பக்கசார்பில்லாத ஒரு நல்ல தீர்ப்பு.

  11. ஆனால் விரைந்து வழக்கை முடித்து நிரபராதியாக வெளிவரவேண்டிய சீமான் - டெல்லிக்கு போய் அர்னாப் கோஸ்சுவாமியின் பாஜக ஆஸ்தான வக்கீலை வைத்து இப்போ வழக்கை 2 மாதம் இழுத்தடித்துள்ளார்.

  12. ஏன்? நீதி நிலைநாட்டப்பட்டு விடும் என்ற பயம்.

    நமக்கு விளங்காத விடயங்களை வாசித்தால் சில நேரம் பயம் வரும், சில நேரம் சிரிப்பு வரும்.

    முடிந்தளவு விளக்கி உள்ளேன்.

குறைந்த அளவு மத்திய அரசின் அழுத்தம் ஆனால் கூடிய அளவு மாநில அரசின் அழுத்தம் உள்ளவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.. உயர் நீதிமன்ற நீதிபதியே சவுக்கு வழக்கில் சொல்லி இருக்கிறார் தன்னை அரச உயர்மட்டத்தில் இருந்து இருவர் சந்தித்து அழுத்தம் தந்ததாக.. ஆக சீமான் மாநில அரசின் அழுத்தம் அதிகமுள்ள உயர்நீதிமன்றத்தில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

குறைந்த அளவு மத்திய அரசின் அழுத்தம் ஆனால் கூடிய அளவு மாநில அரசின் அழுத்தம் உள்ளவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

நீதிதுறை முழுக்க முழுக்க செண்டிரல் லிஸ்டுக்கு கீழேதான் வருகிறது.

நியமனம், இடமாற்றம் எல்லாமும்.

மாநில அரசுக்கு எந்த உத்தியோக பூர்வ அதிகாரமும் நீதித் துறைமீது இல்லை.

சந்தித்து பேசலாம். அதை மீறி எதுவும் செய்ய முடியாது.

ஆனால் மத்திய அரசின் நீதி துறை மீதான பிடி அப்படி அல்ல.

சவுக்கின் நீதிபதி - இதை பற்றி நான் அறியவில்லை. இந்த நீதிபதி இப்படி கூறிய ஆதாரம் இருந்தால் தாருங்கள்.

ஏன் என்றால் இதை உண்மையில் ஒரு மாநில அரசியல்வாதி/அதிகாரி செய்து நீதிபதி அதை தக்க இடத்தில் முறையிட்டால் - அவர்கள் பல வருடம் சிறை செல்ல நேரிடும். சும்மா கதைத்தமைக்கே.

(வீடியோ ஆதாரம் எனில் - நீதிபதி பேசியதை இணையுங்கள், 3ம் நபர்களின் வியாக்கியானனக்களை அல்ல).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆக சீமான் மாநில அரசின் அழுத்தம் அதிகமுள்ள உயர்நீதிமன்றத்தில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்..?

இரெண்டு விடயம்.

  1. இங்கே சென்னை நீதிபதி எந்த விதத்திலும் அநியாயமாக நடக்கவில்லை.

    மிக நியாயமாக - வழக்கை இழுத்தடிக்காமல், 12 கிழமை அவகாசம் கொடுத்து பூர்வாங்க விசாரணையை முடிக்க சொல்லி உள்ளார்.

  2. இந்த வழக்கு என்றாவது விசாரிக்கப்பட்டால் - அது சென்னை உயர் நீதி மன்றில்தான் விசாரிக்கப்படும்.

    இங்கே சீமான் கூட சென்னை நீதிபதி மேல் புகார் ஏதும் கூறவில்லை. பொலிஸ் விசாரிக்கும் வேகத்தை பற்றியே புகார் கூறி உள்ளார்.

    பிரதிவாதியாக தமிழ் நாடு அரசுதான் உள்ளது. உச்சநீதிமன்று அல்ல.

சீமானே சொல்லாத விடயத்தை சீனியர் அட்வகேட் மருதும் அவரது ஜூனியர் லாயர் ஓணாண்டியும் சொல்லி அழுகிறீர்கள் 🤣.

22 minutes ago, ரசோதரன் said:

இதெல்லாம் சுத்த அநியாயம்................... வெறும் ஆறே ஆறு மாத தொடர்பு....... தொடர்பு என்று கூட சொல்ல முடியாது, ஒரு சேவை கொடுக்கல் வாங்கல் என்று தானே அவர் சொன்னார்............ இதற்குப் போய் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீதிமன்றின் வெளியே.............

இந்த தடவை மதுரை செல்வம் பேச்சுவார்த்தையில் உசாராக இருக்கவேண்டும்.

விஜயலட்சுமி பல வருடங்களாக யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள்.........

என்ன, இந்தப் பக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றவுடன் தான் கொஞ்சம் யோசனையாக இருக்கின்றது.............

'அண்ணனின் ஆறு மாதங்கள்.........' என்று இன்னொரு பட்டியலை அவரின் எதிரிகள் வெளியிட்டு விடுவார்களோ என்று............................

அரசியலிலும், சினிமாவிலும் இது எல்லாம் சகஜம் என்ற முடிவுக்கு வந்து விட்டதால், இனிமேல் பிரச்சனை ஒன்றுமே இல்லை, இப்படியான விசயங்களை இடதுகை புறங்கையால் ஒதுக்கி விட்டு முன்னர் போலவே போய்க் கொண்டேயிருக்கலாம்...............

உங்களுக்கு விரைவில் டின்னு கட்ட போகிறார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நீதிதுறை முழுக்க முழுக்க செண்டிரல் லிஸ்டுக்கு கீழேதான் வருகிறது.

நியமனம், இடமாற்றம் எல்லாமும்.

மாநில அரசுக்கு எந்த உத்தியோக பூர்வ அதிகாரமும் நீதித் துறைமீது இல்லை.

சந்தித்து பேசலாம். அதை மீறி எதுவும் செய்ய முடியாது.

ஆனால் மத்திய அரசின் நீதி துறை மீதான பிடி அப்படி அல்ல.

சவுக்கின் நீதிபதி - இதை பற்றி நான் அறியவில்லை. இந்த நீதிபதி இப்படி கூறிய ஆதாரம் இருந்தால் தாருங்கள்.

ஏன் என்றால் இதை உண்மையில் ஒரு மாநில அரசியல்வாதி/அதிகாரி செய்து நீதிபதி அதை தக்க இடத்தில் முறையிட்டால் - அவர்கள் பல வருடம் சிறை செல்ல நேரிடும். சும்மா கதைத்தமைக்கே.

(வீடியோ ஆதாரம் எனில் - நீதிபதி பேசியதை இணையுங்கள், 3ம் நபர்களின் வியாக்கியானனக்களை அல்ல).

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

Modified: 27 May, 24 11:16 am

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்புவழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1255270-savukku-shankar-case-lawyer-s-letter-seeking-action-against-two-who-pressured-the-judge.html

12 minutes ago, goshan_che said:

சீமானே சொல்லாத விடயத்தை சீனியர் அட்வகேட் மருதும் அவரது ஜூனியர் லாயர் ஓணாண்டியும் சொல்லி அழுகிறீர்கள் 🤣.

உச்ச நீதிமன்றம் சீமானுக்கு சாதகமாக பாஜாக ஊடாக முடிவெடுக்கும் என்று சீமானோ பாஜாகவோ உச்ச நீதிமன்றமோ தமிழ்நாடு பொலிசோ அரசோ சொல்லாததை றோ தலைமை அதிகாரி நீங்கள் சொல்லி அழவில்லையா.. அது மாதிரித்தான்..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உங்களுக்கு விரைவில் டின்னு கட்ட போகிறார்கள் 🤣

நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்.............

என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்...................

'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது..............

இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நன்றி இதை கொஞ்சம் கிண்டி பார்கிறேன்.

நீதிபதி இப்படி சொன்னனால் அது கட்டாயம் விசாரணைக்கு ஆளாகும் என்றே நினைக்கிறேன்.

இங்கே “தகுதி அடிப்படை” என எதை சொல்கிறார்கள் என தெரியவில்லை.

மர்ம நபர்கள் சவுக்கு சார்பாகா ஆஜரானார்களா? அல்லது மாநில அரசு சார்பாகவா?

தேடி பார்க்கிறேன்.

ஆனால் சுவாமிநாதன் அளுத்தத்துக்கு படியவில்லை. என தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

Modified: 27 May, 24 11:16 am

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்புவழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1255270-savukku-shankar-case-lawyer-s-letter-seeking-action-against-two-who-pressured-the-judge.html

உச்ச நீதிமன்றம் சீமானுக்கு சாதகமாக பாஜாக ஊடாக முடிவெடுக்கும் என்று சீமானோ பாஜாகவோ உச்ச நீதிமன்றமோ தமிழ்நாடு பொலிசோ அரசோ சொல்லாததை றோ தலைமை அதிகாரி நீங்கள் சொல்லி அழவில்லையா.. அது மாதிரித்தான்..🤣🤣

இந்த விடயத்தில், உயர்நீதிமன்றத்தின் ஏனைய இரு நீதிபதிகள் சொல்வதையும் பாருங்கள்:

The Hindu
No image preview

Justice G.R. Swaminathan passed orders ‘hastily’ in Savuk...

Justice G. Jayachandran of the Madras High Court has said that Justice G.R. Swaminathan has exhibited bias against the State police by “showing interest in passing orders hastily without consulting...

“Rarely such [a] thing happens to a judge while discharging the duty. Even if such event happens, past history of this court says, judges used to report it to the Chief Justice and/or take action for interfering in the administration of justice and/or recuse from hearing the case. From the words of the learned judge, he being triggered by approach of two emissaries, has been forced to bypass the normal course.”

"இந்த அசாதரணமான, அரிதான தலையீட்டை , தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பது தான் முறையாக இருக்கிறது"

தற்போது சீமான் மீது உயர் நீதிமன்றம் வழங்கிய "உரிய முறையில் விசாரித்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணை, எப்படி சீமானுக்கு எதிரான ஒரு ஆணை என்று விளக்குங்கள்?

14 minutes ago, ரசோதரன் said:

நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்.............

என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்...................

'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது..............

இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.

மைனஸ் துப்பாக்கியெல்லாம் ஜுஜுபி சாரே😂! உங்கள் பச்சை பலன்சைக் கூடப் பாதிக்காது!

ஆனால், உங்களிடம் நிஜமாக மரியாதை வைத்திருக்கிறார்கள். கூண்டெல்லாம் பஞ்சு மெத்தை துணிந்தவர்களுக்கு!

யாழில் அடிக்கடி எனக்குக் கிடைக்கிற "மரியாதையை" 😎 வைத்துச் சொல்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்.............

என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்...................

'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது..............

இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.

நீங்கள் என்ன சாது…

நவீனன் என்ற ஒருவர் இருந்தார் …முன்னர் அவர்தான் செய்திகள் வெட்டி ஒட்டுவார். ஒரு கடமை போல் செய்வார்.

செய்தி திரியில் அவர் மருந்துக்கும் கருத்து எழுதி நான் காணவில்லை.

  1. தாம் இணைக்கும் பக்கசார்பான செய்திகளை அவர் இணைக்கும் செய்திகள் பின்னே தள்ளி விடுகிறது

  2. அவர் அவதாராக சங்ககாராவை வைத்தார்

அவருக்கு ஏறு நெத்தி, தெத்தி பல்லு என எதையோ சொல்லி விரட்டியே விட்டார்கள் 🤣.

இதை போல் Tulpen என ஒருவர். நான் முன்னர் எல்லாம் இதைவிட 100% கடுமையாக இவர்களுடன் டீல் பண்ணுவேன்.

அந்த மனிசன் என்னை அமைதியாக இருக்க சொல்லும், சமாதானமாக எழுதும்…கடைசியில் அவர் என்னை விட கடுமையாக இவர்களை கிழித்து தொங்க போட்டு விட்டு போய்விட்டார் 🤣.

அர்ஜூன், ஜூட், ஜீவன் சிவா…சாதுவாக வந்து சேதுவாக போனோர் பலர் 🤣.

ஆனால் முன்னர் போல் இப்போ குழுவாதம் இல்லை. முன்னர் மாபியா போல் இருக்கும் ஒவ்வொரு நகர்வும்.

12 minutes ago, Justin said:

இந்த விடயத்தில், உயர்நீதிமன்றத்தின் ஏனைய இரு நீதிபதிகள் சொல்வதையும் பாருங்கள்:

The Hindu
No image preview

Justice G.R. Swaminathan passed orders ‘hastily’ in Savuk...

Justice G. Jayachandran of the Madras High Court has said that Justice G.R. Swaminathan has exhibited bias against the State police by “showing interest in passing orders hastily without consulting...

“Rarely such [a] thing happens to a judge while discharging the duty. Even if such event happens, past history of this court says, judges used to report it to the Chief Justice and/or take action for interfering in the administration of justice and/or recuse from hearing the case. From the words of the learned judge, he being triggered by approach of two emissaries, has been forced to bypass the normal course.”

"இந்த அசாதரணமான, அரிதான தலையீட்டை , தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பது தான் முறையாக இருக்கிறது"

தற்போது சீமான் மீது உயர் நீதிமன்றம் வழங்கிய "உரிய முறையில் விசாரித்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணை, எப்படி சீமானுக்கு எதிரான ஒரு ஆணை என்று விளக்குங்கள்?

நான் தேடிய போது இது கிடைத்தது👇.

நீதிமன்றம் நியமித்த 3வது நீதிபதியே - நீதிபதி சுவாமிநாதன் சொன்ன “அந்த இருவர்” கதை ஒரு கஞ்சா கப்ஸா கதை என சொல்லாமல் சொல்லுகிறார்.

சுவாமிநாதனின் நெற்றி பட்டையை நான் காணவில்லை🤣

சவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பளித்திருக்கிறார்” - 3வது நீதிபதி!

Published:11th Jun, 2024 at 12:53 PM

நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன்

நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன் புதிய தலைமுறை

தமிழ்நாடு

“நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு பாரபட்சமானது” என்று, சவுக்கு சங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தார்கள்.

Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'இரண்டு நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல' என கடந்த வியாழன் அன்று தெரிவித்து இருந்தார்.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்

puthiya thalaimurai

இந்நிலையில், 3 வது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வந்தபோது, அரசு தரப்பிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பாரபட்சமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

மேலும், “எதிர்தரப்பினருக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில் இரண்டு தரப்பினருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கிய பிறகே வழக்கில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் சட்ட கல்லூரியின் அடிப்படை பாடம்.

நீதிபதி சுவாமிநாதன்

நீதிபதி சுவாமிநாதன்

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அனுகியதாலேயே, அரசின் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது என்பது ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

அவ்வாறு அவரை சிலர் அணுகி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அல்லது இது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அல்லது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சுவாமிநாதன் இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல் உத்தரவு பிறப்பித்தது பாரபட்சமானது” என குறிப்பிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்

ட்விட்டர்

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதி கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றிய நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Puthiyathalaimurai
No image preview

சவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீ...

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புக

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சீமான் ஒரு ரோ ஏஜெண்ட் என கண்டு கொண்டு எதிர்க்கும் என்போன்றோருக்கும் இது சீமானை அம்பலபடுத்த, மேலதிக சந்தர்ப்பம்.

கனவு காண்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

கனவு காண்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.

2026 இல் தனித்து நின்று ஒரு சீட் ஆவது என…🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதோ சவுக்கு சங்கர் ஏதோ சொல்கிறார்

https://www.facebook.com/share/r/16FZR2FsBP/

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் வடிவேலுக்கு இதை விட கூட்டம்🤣.

ஆனா அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை…

ஒரு டெப்பாசிட்…சை….மனுசனங்களடா நீங்க🤣

தமிழ் நாட்டு வாக்காள பதருகளா🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதோ சவுக்கு சங்கர் ஏதோ சொல்கிறார்

https://www.facebook.com/share/r/16FZR2FsBP/

இவரையும் நீங்கள் அண்டர்கவரில் பின் தொடர்கிறீர்களா விசுகர்? 😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தேசிய அரசியலின் முக்கிய இருப்பே டெல்லி அதிகார பீடத்தை எதிர்ப்பதில் தான் தங்கியுள்ள நிலையில், இதுவரை டெல்லி அதிகார பீடத்தை எதிர்தது மக்களை திரட்டி எந்த போராட்டதையும் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி செய்ய வில்லை. அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் இல்லை. வெறும் ஊடகங்கள் முன்னால் நின்று குரைப்பது தான் சீமானின் வேலை. இப்போது தனக்கு பிரச்சனை என்ற வுடன் உச்சநீதி மன்றத்தை அணுகி பணத்தை வாரியிறைத்து சிறந்த வக்கீலை அணுகி விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். விசாரணையை எதிர்கொண்டு தான் சுற்றவாளி என்று நிரூபிப்பதை விடுதது பாதிக்கப்பட்டவருடன் டீல் பேசி வழக்கை முடிக்க பார்கிறார்.

சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் அந்த வழக்கை முடிக்குமாறு நீதி மன்றத்தில் தானே வழக்கு தொடர்ந்த சீமான் அந்த வழக்கு விசாரணையே தனக்கு ஆப்பாக போவதை கண்டவுடன் விசாரணைக்கு தடை கேட்டுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.