Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

ஒரு மேல்முறையீடு. நான் இரண்டாவது ஆளாக என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே. அதைக் கணக்கில எடுத்தால்..

என்ன தம்பி தட்டிவானா?

யன்னலால் துணியை போட.

  • Replies 3.3k
  • Views 98.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தம்பி தட்டிவானா?

யன்னலால் துணியை போட.

மெயில் ரெயினாகவும் இருக்கலாம்....

என்ன பிரியன் ....ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறியள்....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தம்பி தட்டிவானா?

யன்னலால் துணியை போட.

வான் வெளிக்கிடும் வரையும், துணி போட்டாப் போட்டதுதானே. எத்தினை வானில ஏறி இருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வருகவே . .......வருகவே ........ !😂

இப்படியொரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்வை செய்து வாழ்த்திய சுவியருக்கு எனது நன்றிகள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

large-IMG-0435-jpeg-aa06514a54e0173b6045

சிம்ரன்! என்ன இதெல்லாம்? ஏன்? எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

தில‌க் வ‌ர்மா வ‌ந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டு காய‌ம் கார‌ண்மாக‌ வெளிய‌ போன‌து தான் மிச்ச‌ம்.....................

திலக் வர்மா காயம் காரணமாக (Retired hurt)வெளியே செல்லவில்லை. அவர் சரியாக விளையாடதாதினால் அணித்தலைவர் கார்திக் பாண்டியாவும் மகேலா ஜெயவர்த்தனாவும் எடுத்த முடிவினால் வெளியேறினார் (Retired out). ஐபிஎல் வரலாற்றில் இது 4 வது சம்பவம். முன்பு அஸ்வினும் இவ்வாறு ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் போது வெளியேறினார்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கந்தப்பு said:

திலக் வர்மா காயம் காரணமாக (Retired hurt)வெளியே செல்லவில்லை. அவர் சரியாக விளையாடதாதினால் அணித்தலைவர் கார்திக் பாண்டியாவும் மகேலா ஜெயவர்த்தனாவும் எடுத்த முடிவினால் வெளியேறினார் (Retired out). ஐபிஎல் வரலாற்றில் இது 4 வது சம்பவம். முன்பு அஸ்வினும் இவ்வாறு ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் போது வெளியேறினார்

ஆமாம். அவரினால் அடித்து ஆடவே முடியவில்லை. ஆனால் புரியாத விடயம், ஏன் அந்த நேரத்தில் செய்தார்கள். அதுவும் அடுத்து வந்தவர் ஒன்றும் பெரிய அடிகாரன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

மெயில் ரெயினாகவும் இருக்கலாம்....

என்ன பிரியன் ....ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறியள்....

உங்கள் பதவி ஏற்பு விழாவில் ஓடித்திரிந்து களைத்துப் போனேன்.

உங்களுக்கென்ன வெளிக்கிட்டு வந்து நின்றா சரி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உங்கள் பதவி ஏற்பு விழாவில் ஓடித்திரிந்து களைத்துப் போனேன்.

உங்களுக்கென்ன வெளிக்கிட்டு வந்து நின்றா சரி.

அய்யோ ..அய்யோ ..நீங்கள் ஓடித்திரிந்ததை உடுப்பு எடுக்கப் போனதிலையும் ..மேக்கப்காரர் மினைக்கெடுத்தினதிலையும் கவனிக்கவில்லை மன்னிச்சு விடுங்க்கோ

என்ன மொரு 10 மணித்தியாலத்திலை உடுப்பை கழட்டிப்போட்டு உங்களோடை வந்திடுவன்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

ஆமாம். அவரினால் அடித்து ஆடவே முடியவில்லை. ஆனால் புரியாத விடயம், ஏன் அந்த நேரத்தில் செய்தார்கள். அதுவும் அடுத்து வந்தவர் ஒன்றும் பெரிய அடிகாரன் இல்லை.

நீங்கள் சொல்வது சரி. கடைசி சில ஓவர்களுக்கு முதல் முடிவெடுத்தாலும் திலக் வர்மா அடிப்பார் என்று கொஞ்ச நேரம் விட்டுப்பார்த்தார்கள். அணியில் ராஜ் பவார் என்று ஒரு சகலதுறை ஆட்டக்காரரும் இருந்தார். அவர் பந்தும் வீசவில்லை. மிச்சல் சான்ட்னரை விட வேகமாக அடிப்பாரா தெரியாது. மிச்சல் சாண்டார் பெரிய அடிகாரர் இல்லை. ஆனால் கண்டபாட்டுக்கு குறைந்த பந்துகளுக்கு அடிக்கக்கூடியவர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

அஸ்வின்ட‌ ப‌ந்து வீச்சும் ச‌ரியே இல்லை ,

தீப‌க் கோடா , விஜ‌ய‌ச‌ங்க‌ர் , இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரியான‌ வீர‌ர்க‌ள் கிடையாது

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌மா , வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டை சுட்டி காட்டி என்ன‌ ப‌ல‌ன்

ல‌க்னோ அணியில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌ தீப‌க் கோடாவை சென்னை அணி அவ‌ரை வேண்டின‌து மிக‌ப் பெரும் பிழை

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ப‌ஞ்சாப் ஏல‌த்தில் வேண்டி விட்ட‌து

டோனி ம‌ற்றும் அஸ்வின் முழுதாய் ஓய்வை அறிவிக்க‌னும்

டோனிக்கு 43வ‌ய‌து ஆக‌ போகுது ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும்

அஸ்வினின் ப‌ந்து வீச்சும் சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம்..............அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் நொர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போடுகிறார்............மற்ற‌ சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை ந‌ம்ப‌ முடியாது................................................

சென்னை தனது சொந்த ஆடுகளத்தில் 6/7 போட்டிகளை வென்று வெளியே 1 போட்டியினை வென்றலாலும் அரையிறுதிக்கு தேர்வாகிவிடலாம் எனும் நோக்கில் தமிழ்நாட்டு வீரர் அஸ்வினையும் நூரையும் கொண்ட சென்னை சுழல் மைதானத்திற்கு ஏற்ப அணியினை தயார் செய்திருக்கலாம் ஆனால் இதுவரை சென்னை எதிர்பார்த்த சொந்த மைதான நலனை சென்னை இது வரை பெறவில்லை.

அனித்தலைமையில் சொதப்பும் ருத்துராஜ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது, அவருக்கு பதிலாக தோனி அணித்தலமையினை ஏற்பார் என கூறப்படுகிறது.

டேவன் கொன்வே அணிக்குள் மீண்டும் இடம் பெறுவார் எனவும் அன்சூல் சென்னைக்கு இன்று ஆடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, ஓவர்டன் நீக்கப்படலாம் எனும் கருத்தி நிலவுகிறது.

Pitch and conditions

The Chepauk track continues to be a mystery to an extent that Fleming has stated there is "no home advantage" for CSK. A hot and humid afternoon is in the offing in the only day game in Chennai this season.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣

இது ஒரு அணியின் விளையாட்டு.

வாய்ச்சதும் சரியில்லை வந்ததும் சரியில்லை எனும் கவலையில் பையன் இருக்கிறார்🤣, இன்றைய போட்டியில் சென்னையும் ராஜஸ்தான் அணியும் வெல்வதன் பின்னர் இந்த பரம்பதத்தில் பையனுக்கு இனி ஏறுமுகம்.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெல்ல நிங்களும் சேர்ந்து இறைவனை பிராத்தியுங்கள் (எனது தேர்வும் இந்த இரண்டு அணிகள்).🤣

4 hours ago, கந்தப்பு said:

திலக் வர்மா காயம் காரணமாக (Retired hurt)வெளியே செல்லவில்லை. அவர் சரியாக விளையாடதாதினால் அணித்தலைவர் கார்திக் பாண்டியாவும் மகேலா ஜெயவர்த்தனாவும் எடுத்த முடிவினால் வெளியேறினார் (Retired out). ஐபிஎல் வரலாற்றில் இது 4 வது சம்பவம். முன்பு அஸ்வினும் இவ்வாறு ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் போது வெளியேறினார்

அந்த முடிவை பாண்டியா எடுக்கவில்லை மகேல எடுத்தார் என ஒரு கருத்தினை கூறுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=eg2jwR3SLa4

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

வாய்ச்சதும் சரியில்லை வந்ததும் சரியில்லை எனும் கவலையில் பையன் இருக்கிறார்🤣, இன்றைய போட்டியில் சென்னையும் ராஜஸ்தான் அணியும் வெல்வதன் பின்னர் இந்த பரம்பதத்தில் பையனுக்கு இனி ஏறுமுகம்.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெல்ல நிங்களும் சேர்ந்து இறைவனை பிராத்தியுங்கள் (எனது தேர்வும் இந்த இரண்டு அணிகள்).🤣

அந்த முடிவை பாண்டியா எடுக்கவில்லை மகேல எடுத்தார் என ஒரு கருத்தினை கூறுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=eg2jwR3SLa4

நீங்கள் சொல் வது சரி. மகேலாதான் முதலில் முடிவெடுத்தார். பிறகு கார்திக் பாண்டியா அதற்கு ஆதரவு அளித்தார்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0435.jpeg

முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.

16 போட்டி முடிய 5 கேள்விக்கு மட்டும் சரியாக பதில் அளித்து 10 புள்ளிகள் எடுத்திருக்கிறேன். 11 கேள்விகள் பிழை. பேசாமல் விடைகளை எழுதும் போது எது எனக்கு பிழையான விடையாகத் தோன்றிய அணிகளை விடையாக எழுதியிருக்கலாம். 11 கேள்விக்கு சரி எடுத்து 22 புள்ளிகள் பெற்று செம்பாட்டன், அல்வாயனுக்கு முன்னால் நின்று இருப்பேன். போகிற போக்கை பார்த்தால் குமாரசாமியும் கோஷானும் என்னை முந்துவார்கள் போல இருக்குது. SRH,MI , CSK இணை நம்பி மோசம் போயிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

ஆனாலும் அந்த எட்டு சொச்சப் பேருக்கிடையில் கடும் போட்டி போல. உடைச்சுக் கொண்டு மேலே வரலாமோ.

2 hours ago, vasee said:

வாய்ச்சதும் சரியில்லை வந்ததும் சரியில்லை எனும் கவலையில் பையன் இருக்கிறார்🤣, இன்றைய போட்டியில் சென்னையும் ராஜஸ்தான் அணியும் வெல்வதன் பின்னர் இந்த பரம்பதத்தில் பையனுக்கு இனி ஏறுமுகம்.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெல்ல நிங்களும் சேர்ந்து இறைவனை பிராத்தியுங்கள் (எனது தேர்வும் இந்த இரண்டு அணிகள்).🤣

அந்த முடிவை பாண்டியா எடுக்கவில்லை மகேல எடுத்தார் என ஒரு கருத்தினை கூறுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=eg2jwR3SLa4

இஞ்ச..... ராஜஸ்தான நீங்கள் வைச்சிருங்கோ. சென்னையை எனக்குக் குடுத்திடுங்க. சென்னையை வைத்து அடி அடி என்டு அடிக்கவேணும். டெல்லி குடுக்கிற குடுவையைப் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

திலக் வர்மா காயம் காரணமாக (Retired hurt)வெளியே செல்லவில்லை. அவர் சரியாக விளையாடதாதினால் அணித்தலைவர் கார்திக் பாண்டியாவும் மகேலா ஜெயவர்த்தனாவும் எடுத்த முடிவினால் வெளியேறினார் (Retired out). ஐபிஎல் வரலாற்றில் இது 4 வது சம்பவம். முன்பு அஸ்வினும் இவ்வாறு ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் போது வெளியேறினார்

திக‌லக் வ‌ர்மா மைதான‌த்துக்கு 8 ஓவ‌ரும் 1 ப‌ந்தும் இருக்கும் போது மைதான‌த்துக்கு வ‌ந்தார் , வ‌ந்து ப‌ந்த‌ வீன் அடித்தார் , இல‌ங்கை கொச் அது ம‌ட்டும் தூங்கி விட்டு 10 ஓவ‌ருக்கு பிற‌க்கு அவ‌ரை வெளியில் எடுப்ப‌தில் என்ன‌ ப‌ல‌ன்.......................

தில‌க் வ‌ர்மாவின் விளையாட்டு பார்க்க‌ பிடிக்க‌ல‌.......................

குஜ‌ராத் அணியிட‌ம் மும்பை தோத்த‌னுக்கு தில‌க் வ‌ர்மாவும் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளும் தான் கார‌ன‌ம்.........................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

@alvayan அவர்களின் வேண்டுகோளை நீங்கள் ஏற்கலாம். பாத்துப் பண்ணுங்க.

எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣

இது ஒரு அணியின் விளையாட்டு.

அப்ப‌டியே த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்கும் Tamil Nadu Premier League கிரிக்கேட்டையும் பார்த்தால் தெரியும் எத்த‌னை திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று......................அது நீங்க‌ள் பார்த்தால் என‌து ஆத‌ங்க‌ம் உங்க‌ளுக்கு புரியும்

வெறும‌ன‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியும் ஜ‌பிஎல்லையும் பார்த்தால் இப்ப‌டி தான் எழுத‌ தோனும்..................

அவுஸ்ரேலியா

இங்லாந்

த‌மிழ் நாடு

இந்த‌ மூன்று நாட்டு உள்ளூர் கில‌ப் விளையாட்டை அதிக‌ம் பார்க்கிற‌ நான்..........................

பெங்க‌ளூர் அணியில் இருந்து க‌ல‌ட்டி விட்ட‌ வீர‌ர் தான் வில் ஜ‌க்ஸ்..................இவ‌ர் ப‌ல‌ விளையாட்டில் ஆமை வேக‌த்தில் விளையாடி விட்டு ஏதாவ‌து ஒரு விளையாட்டில் அதிர‌டியா விளையாடுவார்.................ல‌க்னோ மைதான‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் அந்த‌ மைதான‌த்தில் இவ‌ரால் நிலைத்து நின்று விளையாட‌ முடிய‌ வில்லை..................ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை பில்ட‌ர் நிக்கும் இட‌த்துக்கு ச‌ரியா அடிக்கிறார் , உண்மையில் இவ‌ர் எல்லோ வீர‌ர்😁......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

வாய்ச்சதும் சரியில்லை வந்ததும் சரியில்லை எனும் கவலையில் பையன் இருக்கிறார்🤣, இன்றைய போட்டியில் சென்னையும் ராஜஸ்தான் அணியும் வெல்வதன் பின்னர் இந்த பரம்பதத்தில் பையனுக்கு இனி ஏறுமுகம்.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெல்ல நிங்களும் சேர்ந்து இறைவனை பிராத்தியுங்கள் (எனது தேர்வும் இந்த இரண்டு அணிகள்).🤣

அந்த முடிவை பாண்டியா எடுக்கவில்லை மகேல எடுத்தார் என ஒரு கருத்தினை கூறுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=eg2jwR3SLa4

அண்ணா

உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும்

விக்வாஸ் தொட‌ர் பார்க்கிறேலையா...................என்னால் அதில் ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காட்ட‌ முடியும்

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் என்னால் ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காட்ட‌ முடியும்...........................

கில‌ப் விளையாட்டில் ப‌ல‌ வீர‌ர்க‌ள் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தியும் சில‌ வீர‌ர்க‌ளுக்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை......................

சும்மா ஜ‌பிஎல் என்ர‌ ப‌ண‌ ம‌ழை விளையாட்டையும் ச‌ர்வ‌தேச‌ போட்டியையும் பார்த்தால் இப்ப‌ விளையாடுப‌வ‌ர்க‌ள் தான் வீர‌ர்க‌ள் என்று தெரியும் , இவ‌ர்க‌ளை விட‌ சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

அப்ப‌டியே த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்கும் Tamil Nadu Premier League கிரிக்கேட்டையும் பார்த்தால் தெரியும் எத்த‌னை திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று......................அது நீங்க‌ள் பார்த்தால் என‌து ஆத‌ங்க‌ம் உங்க‌ளுக்கு புரியும்

வெறும‌ன‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியும் ஜ‌பிஎல்லையும் பார்த்தால் இப்ப‌டி தான் எழுத‌ தோனும்..................

அவுஸ்ரேலியா

இங்லாந்

த‌மிழ் நாடு

இந்த‌ மூன்று நாட்டு உள்ளூர் கில‌ப் விளையாட்டை அதிக‌ம் பார்க்கிற‌ நான்..........................

பெங்க‌ளூர் அணியில் இருந்து க‌ல‌ட்டி விட்ட‌ வீர‌ர் தான் வில் ஜ‌க்ஸ்..................இவ‌ர் ப‌ல‌ விளையாட்டில் ஆமை வேக‌த்தில் விளையாடி விட்டு ஏதாவ‌து ஒரு விளையாட்டில் அதிர‌டியா விளையாடுவார்.................ல‌க்னோ மைதான‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் அந்த‌ மைதான‌த்தில் இவ‌ரால் நிலைத்து நின்று விளையாட‌ முடிய‌ வில்லை..................ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை பில்ட‌ர் நிக்கும் இட‌த்துக்கு ச‌ரியா அடிக்கிறார் , உண்மையில் இவ‌ர் எல்லோ வீர‌ர்😁......................

எல்லாலாலாலாத்தையும் பாக்கிற உங்களுக்கு, எப்படி இப்படி எதிர்பார்க்க தோனுது.

நான் இந்தப் போட்டியை மட்டுமே சொல்லவில்லை. எல்லாப் போட்டியிலேயும், நீங்கள் ஒரு வீரரையும் விடுறதில்லையே. அதுதான் சும்மா ஜாலியா கேட்டேன்.

அதுசரி. உங்கள் முன்னனுமானப் படி, இன்று தொடங்கிய இங்கிலாந்தில் கழகங்களுக்கிடையிலான போட்டியைப் பத்தி நான் ஒன்றுமே அறியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் அல்வாயனுக்கு வாழ்த்துகள் கூடவே செமபாட்டகனுக்கும்.சத்தமில்லாமல் முன்னேறிவரும் நந்தனுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

எல்லாலாலாலாத்தையும் பாக்கிற உங்களுக்கு, எப்படி இப்படி எதிர்பார்க்க தோனுது.

நான் இந்தப் போட்டியை மட்டுமே சொல்லவில்லை. எல்லாப் போட்டியிலேயும், நீங்கள் ஒரு வீரரையும் விடுறதில்லையே. அதுதான் சும்மா ஜாலியா கேட்டேன்.

அதுசரி. உங்கள் முன்னனுமானப் படி, இன்று தொடங்கிய இங்கிலாந்தில் கழகங்களுக்கிடையிலான போட்டியைப் பத்தி நான் ஒன்றுமே அறியவில்லை.

இங்லாந்தில் ந‌ட‌க்கும் county championship போட்டி பெரிசா பார்ப்ப‌து இல்லை அதே போல் டெஸ்ட் விளையாட்டும் பார்க்கிறேல‌

ஒரு விளையாட்டின் முடிவுக்கு 5 நாள் காத்து இருக்க‌னும்

இங்லாந் county championship 4நாள் விளையாடுவின‌ம்...............

இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டில் நான் அதிக‌ம் விரும்பி பார்ப்ப‌து 100ப‌ந்து போட்டி...............t20 blast போட்டி

அடுத்த‌தாய் 50ஓவ‌ர் போட்டி.................. இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் 4வ‌கை கிரிக்கேட் போட்டி ந‌ட‌க்கும் அதில் மூன்று வ‌கை போட்டிய‌ தொட‌ர்ந்து பாப்பேன்👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

16 போட்டி முடிய 5 கேள்விக்கு மட்டும் சரியாக பதில் அளித்து 10 புள்ளிகள் எடுத்திருக்கிறேன். 11 கேள்விகள் பிழை. பேசாமல் விடைகளை எழுதும் போது எது எனக்கு பிழையான விடையாகத் தோன்றிய அணிகளை விடையாக எழுதியிருக்கலாம். 11 கேள்விக்கு சரி எடுத்து 22 புள்ளிகள் பெற்று செம்பாட்டன், அல்வாயனுக்கு முன்னால் நின்று இருப்பேன். போகிற போக்கை பார்த்தால் குமாரசாமியும் கோஷானும் என்னை முந்துவார்கள் போல இருக்குது. SRH,MI , CSK இணை நம்பி மோசம் போயிட்டேன்

நீங்க‌ள் என்னை வீட‌ வீர‌ர்க‌ளின் காய‌ங்க‌ள் ப‌ற்றி இணைய‌த்தில் வாசித்து தெரிஞ்சு வைச்சு இருந்தும் இப்ப‌டி முட்டை கிடைப்ப‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு

முத‌ல் 5 போட்டியில் வும்ரா விளையாடி இருக்க‌ மாட்டார் என்று என‌க்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தால் மும்பை அணிய‌ தெரிவு செய்து இருக்க‌ மாட்டேன்.................

முன்பு போல் கிரிக்கேட் செய்திகள் நான் இப்ப‌ வாசிப்ப‌தில்லை குறைத்து விட்டேன்................அத‌ன் விலைவு புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நிக்கிறேன்.................................

  • கருத்துக்கள உறவுகள்

@செம்பாட்டான் @vasee

இந்த‌ இருவ‌ரில் யார் சிற‌ந்த‌ வீர‌ர் சொல்லுங்கோ...............

இர‌ண்டு பேரும் இங்லாந் நாட்டை சேர்ந்தவ‌ர்க‌ள்................................................

Screenshot-20250405-114029-ESPNCricinfo.

Screenshot-20250405-114133-ESPNCricinfo.

.............................................

இர‌ண்டு பேரும் சென்னை அணிக்காக‌ விளையாடின‌வை..............

Jamie Overton இவ‌ருக்கு இது தான் முத‌ல் ஜ‌பிஎல்.................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இஞ்ச..... ராஜஸ்தான நீங்கள் வைச்சிருங்கோ. சென்னையை எனக்குக் குடுத்திடுங்க. சென்னையை வைத்து அடி அடி என்டு அடிக்கவேணும். டெல்லி குடுக்கிற குடுவையைப் பாருங்க.

டெல்லி ஒன்று காலி ௦/1😃

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வாத்தியார் said:

டெல்லி ஒன்று காலி ௦/1😃

கில்டிப் ஜ‌டாவும் அஸ்ச‌ர் ப‌ட்ட‌லும் சுழ‌ல் ப‌ந்தில் க‌ல‌க்கின‌ம்

டெல்லி 175 ர‌ன்ஸ் அடிச்சால் ச‌ரி சென்னை அவ‌ர்க‌ளின் மைதான‌த்தில் ம‌ண்ணை க‌வ்வும்

இர‌ண்டு நியுசிலாந் வீர‌ரை தொட‌க்க‌ வீர‌ரா தெரிவு செய்து இருக்கின‌ம் பாப்போம் ந‌ல்லா விளையாடுகின‌மா என்று............................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.