Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ண்பா நான் 2011ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள போட்டிக‌ளில் க‌ல‌ந்து இருக்கிறேன்

இனி இதுக்கை என் வ‌ருகையை எந்த‌ உற‌வுக‌ளும் எதிர் பார்க்க‌ வேண்டாம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍.........................

பையா அவசரப்பட வேண்டாம்.அவருக்கு என்ன பிரச்சனையோ ஆனாலும் அவரும் நகைச்சுவை பேர்வழி தானே.உதுகளை எல்லாம் பெரிசு படுத்தமல் தொடரந்து வாங்கோ.இல்லாட்டால் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.அந்தப் பழி உங்களுக்கு தேவையா.

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வீரப் பையன்26 said:

வாத்தி என‌து யாழ்க‌ள‌ போட்டி அனுப‌வ‌த்தில் ப‌ல‌ உற‌வுக‌ள்

1 hour ago, வீரப் பையன்26 said:

இனி இதுக்கை என் வ‌ருகையை எந்த‌ உற‌வுக‌ளும் எதிர் பார்க்க‌ வேண்டாம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍.........................

வீரப்பையன் என்ன இது சின்ன பிள்ளைகள் மாதிரி

செம்பாட்டானுடன் கதைத்துப் பேசி....

இரண்டு பேருமாக வாங்கோ

தொடர்ந்தும் இந்த விளையாட்டுத் திரியில் கலாய்க்கலாம்😐

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2025 at 07:57, வீரப் பையன்26 said:

மும்பை அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு.................

இன்று மும்பை அணிவீரர்கள் எல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டு

அடைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஓட்டைகள் அடைக்கப்பட்டும் 😂

பிடுங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு கட்டப்பட்டும் 🤣களத்தில் இறக்கப்படுவார்களாம்

ஆகவே மும்பை இன்று வெல்லுது

நாங்கள் புள்ளியை அள்ளுது🤩

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ஆகவே மும்பை இன்று வெல்லுது

நாங்கள் புள்ளியை அள்ளுது🤩

பெங்களூரு நல்லா சாத்துது!!

RCB vs MI, 20th Match at Mumbai, IPL, Apr 07 2025 - Live Cricket Score

Live

20th Match (N), Wankhede, April 07, 2025, Indian Premier League

PrevNext

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

(10/20 ov) 100/2

Mumbai Indians FlagMumbai Indians

MI chose to field.Stats view

Current RR: 10.00

 • Last 5 ov (RR): 47/1 (9.40)

forecasterLive Forecast:RCB 199

Edited by Eppothum Thamizhan
updated

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஆகவே மும்பை இன்று வெல்லுது

நாங்கள் புள்ளியை அள்ளுது🤩

பெங்களூரு நல்லா சாத்துது!!

ஓட்டங்களைப் பார்த்தா இன்றும் முட்டை தான்.

முட்டை முட்டையா தின்று வாயு பறியுது.

5 hours ago, சுவைப்பிரியன் said:

இல்லாட்டால் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.அந்தப் பழி உங்களுக்கு தேவையா.

எத்தனை மணிக்கு தம்பி பசி வரும்?

222 மிகவும் கடினமான எண்ணிக்கை.

அடிப்பார்களா மும்பை?

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் அவர் வீட்டில் ஒரு பெரிய கோழிக்கூடு வைத்திருக்கின்றார் போல............. அவரைத் தேடிப் போவர்களுக்கு ஆசையாக அள்ளிக் கொடுக்கின்றார்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @suvy மேலே மேலே போகிறார்.

வாழ்த்துக்கள்.

17 முட்டைக் கோப்பி பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மும்பையின் விளையாட்டு சூப்பர் ........ நியாயமான தோல்வி . ........ பெங்களூருக்கு தண்ணி காட்டிவிட்டது . ........ இப்படி லக்னோவுடன் விளையாடி இருந்தால் திலக்கைத் திட்ட வேண்டிய தேவையே வந்திருக்காது . ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ரோகித் அவர் வீட்டில் ஒரு பெரிய கோழிக்கூடு வைத்திருக்கின்றார் போல............. அவரைத் தேடிப் போவர்களுக்கு ஆசையாக அள்ளிக் கொடுக்கின்றார்.................🤣.

உங்களுக்கு கோழி

எங்களுக்கு முட்டை.

பாருங்க எப்படி வஞ்சகம் செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு கோழி

எங்களுக்கு முட்டை.

பாருங்க எப்படி வஞ்சகம் செய்கிறார்.

அவர் எங்களுக்கு கோழியை இன்னமும் தரவில்லை. எல்லா போட்டிகளும் முடியும் வரை அவர் அதை வைத்திருக்கப் போகின்றாராம்.................. அந்தக் கோழி இன்னும் சில முட்டைகள் போடும் போல.................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 20வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி, டேவ்டத் படிக்கல் ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காமல் எடுத்த 40 ஓட்ட விளாசலுடனும் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடைய ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடமுனைந்தாலும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். திலக் வர்மாவும், ஹார்டிக் பாண்டியாவும் வெற்றியை நோக்கி வேகமாக அடித்தாடி செல்ல முனைந்தபோது விக்கெட்டுகளை இழந்தமையால் பின்னர் வந்தவர்களும் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0454.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆடுகளத்தில் பெரும் தலைகள் எல்லாம் காணாமல் போயிட்டினம்...............☹️.

என்னப்பா நீங்கள்................ இதையெல்லாம் மனசில் வைத்துக் கொள்வதா............

தோனியைப் பாருங்கள்........... அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை அவர் கேட்க ஆரம்பித்தால், இதுவரை அவர் தன்னைத்தானே நாலு தடவைகள் சுட்டிருக்க வேண்டும்.................🤣.

தோணியே கவிழ்ந்தாலும்/கவிழ்த்தாலும், தோனி தோனி தான்.................... அதே தான் நீங்களும்......... சும்மா வந்து நடுவில் நில்லுங்க................🫱‍🫲.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் 08 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

21) செவ்வாய் 08 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

19 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? man-in-lotus-position_1f9d8-200d-2642-fe

 

backhand-index-pointing-down_1f447.png

22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

PBKS எதிர் CSK

இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • நந்தன்

இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? man-dancing_1f57a.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

ஆகா இதில என்னோடு 3 பேர் சேர்ந்திருக்கினம்.

உங்களுக்கு கோழியில்லை

முட்டை மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா இதில என்னோடு 3 பேர் சேர்ந்திருக்கினம்.

உங்களுக்கு கோழியில்லை

முட்டை மட்டும் தான்.

இந்த நாலு சேர்க்கை நல்ல சேர்க்கை, அண்ணா................. எங்களுக்கு புள்ளி வருகுது அல்லாவிட்டால் மழை வருகுது...............🤣.

ஆனால், அடுத்த போட்டிக்கு நீங்கள் இரண்டு பேர்கள் மட்டும் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றீர்களே......... அது தான் டெர்ரர் காம்பினேஷன் அண்ணை..............😜.

ஒரு கோழி, ஒரு முட்டை................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஐ நிலைகள்:

large.IMG_0454.jpeg

மாமன்னரும் அவரின் பாதுகாப்புக்கு கவசமாக வலம் வரும் படைத் தளபதியும் முன்னேறி வரும் நிலையில் மன்னரைப் பாடிப் புகழ புலவர்களும் பின் தொடர்வது மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கனின் பெருமையை காட்டி நிற்கின்றது 😂

இங்கே மன்னரின் படையணியில் இருந்து ஒரு வீரனைக் காணவில்லை

என்று நாங்கள் தெடிக் கொண்டிருக்கின்றோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இந்த நாலு சேர்க்கை நல்ல சேர்க்கை, அண்ணா................. எங்களுக்கு புள்ளி வருகுது அல்லாவிட்டால் மழை வருகுது...............🤣.

ஆனால், அடுத்த போட்டிக்கு நீங்கள் இரண்டு பேர்கள் மட்டும் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றீர்களே......... அது தான் டெர்ரர் காம்பினேஷன் அண்ணை..............😜.

ஒரு கோழி, ஒரு முட்டை

ஒரு கோழி ஒரு முட்டை

முட்டைக்குள் இரண்டு கரு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நாளை செவ்வாய் 08 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

21) செவ்வாய் 08 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

19 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? man-in-lotus-position_1f9d8-200d-2642-fe

 

backhand-index-pointing-down_1f447.png

22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

PBKS எதிர் CSK

இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • நந்தன்

இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? man-dancing_1f57a.png

கடைசி 14 போட்டிகளில் ஒரே ஒரு கேள்வி மட்டும் சரி எடுத்திருக்கிறேன். எனது ராசிப்படி நான் தெரிவு செய்யாத LSG, PBKS ஆகிய அணிகள் இன்று வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றய விளையாட்டை பார்த்தால் ரோஹித்தும், சூரியாவும் ஹர்டிக் தலைமையில் மும்பை வெல்லவே கூடாது என்பதுபோல் விளையாடுவதாக யாருக்கும் தோன்றவில்லையா! அத்துடன் ஏன் ஏழு பௌலர்களுடன் விளையாடினார்கள் என்றும் புரியவில்லை! மஹேலவும் சொதப்பிறார்!!

பெங்களூரு ஐந்து பௌலர்களுடன் மட்டுமே விளையாடியதால் விக்கட்டுகள் விழும்போதும் பயப்படாமல் வந்து அடித்து ஆடினார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Eppothum Thamizhan said:

நேற்றய விளையாட்டை பார்த்தால் ரோஹித்தும், சூரியாவும் ஹர்டிக் தலைமையில் மும்பை வெல்லவே கூடாது என்பதுபோல் விளையாடுவதாக யாருக்கும் தோன்றவில்லையா! அத்துடன் ஏன் ஏழு பௌலர்களுடன் விளையாடினார்கள் என்றும் புரியவில்லை! மஹேலவும் சொதப்பிறார்!!

பெங்களூரு ஐந்து பௌலர்களுடன் மட்டுமே விளையாடியதால் விக்கட்டுகள் விழும்போதும் பயப்படாமல் வந்து அடித்து ஆடினார்கள்!

தீபக் சகார் 2 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 29 ஓட்டங்கள் கொடுத்ததினால் அவரின் மிகுதி 2 ஓவர்களுக்கு பகுதி நேர பந்து விச்சாளர் வில் ஜாக்கும், இளம் பந்து விச்சாளார் விக்னேஷ் புதுருக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. ரோகித் சர்மா, SRH அணியின் ட்ரெவர் கெட் போல out of form இல் இருப்பதாக தெரிகிறது. எனினும் 9 பந்துகளில் விரைவாக 17 ஓட்டங்கள் பெற்றார் . யாஷ் டயல் வீசிய சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தார். அந்த பந்து வீச்சினை superb riposte என வர்ணனையாளர்கள் வியந்து சொன்னார்கள். சூரியகுமார் யாதவ் இதற்கு முன்பு விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

489651042_17917648128081165_333623089761

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ராசி நல்லாய் வேலை செய்யுது. LSG நல்லாய் விளையாடுகிறார்கள். இன்னும் ஒரு முட்டை கிடைக்கும் போல இருக்கிறது .🤔😳

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

என்னுடைய ராசி நல்லாய் வேலை செய்யுது. LSG நல்லாய் விளையாடுகிறார்கள். இன்னும் ஒரு முட்டை கிடைக்கும் போல இருக்கிறது .🤔😳

என்ன கந்தப்பு உங்களுக்கும் வாயு வாயுவா பறியுது போல.

கே கே ஆரும் நல்ல அடிக்கிறார்கள்.

இதே வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தால் வெற்றி நிச்சயம்.

Current RR: 14.60

 • Required RR: 11.06

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து விக்கெட் போய்விட்டது! இன்றைக்கும் முட்டைதான்!😢

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன கந்தப்பு உங்களுக்கும் வாயு வாயுவா பறியுது போல.

கே கே ஆரும் நல்ல அடிக்கிறார்கள்.

இதே வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தால் வெற்றி நிச்சயம்.

Current RR: 14.60

 • Required RR: 11.06

என்னுடைய ராசிக்கு நல்லாய் விளையாடிய KKR 7 க்கு விக்கெட் போயிட்டுது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.