Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரதன் ஓட்டப் போட்டியில் ஆரம்பத்தில் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை.

கடைசியில் யார் முன்னுக்கு வருகிறார்கள் என்பதே வெற்றி.

இதே கோட்பாட்டோடு @goshan_che மெதுவாக முன்னேறிக் கொண்டே வருகிறார்.

வழமையான போட்டிகளில் @Ahasthiyan முன்னணியில் நிற்பார்.

இந்த தடவை ஒரேயடியாக கீழே நிற்கிறார்.

53 minutes ago, செம்பாட்டான் said:

நாளைக்கு ஒரு முசுப்பாத்திப் போட்டி. கடைசி இரண்டு பேரும் கடைசியா வாறதுக்குப் போடும் போட்டி.

வழமை போல், நாம் தெரிவு செய்த அணியே வெல்லும். அதுவும் உங்கட கிளி இருக்கும் போது.

தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

கிளிக்கு அலுவல் பார்த்தாச்சு.

இனி உங்க பாடு திண்டாட்டம் தான்.

'கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுது.........................'

🤣.....................

சிவாஜி போல ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கின்றன இந்த இரண்டு அணிகளும்............

டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மரதன் ஓட்டப் போட்டியில் ஆரம்பத்தில் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை.

கடைசியில் யார் முன்னுக்கு வருகிறார்கள் என்பதே வெற்றி.

இதே கோட்பாட்டோடு @goshan_che மெதுவாக முன்னேறிக் கொண்டே வருகிறார்.

வழமையான போட்டிகளில் @Ahasthiyan முன்னணியில் நிற்பார்.

இந்த தடவை ஒரேயடியாக கீழே நிற்கிறார்.

தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!

என்ன ஒரே தத்துவமாக் கிடக்கு. உங்களுக்கும் ஒளி கண்ணுக்க தெரியுதோ. ஒன்பது, பத்தென்று மாறி மாறி கனநாளா நிக்கிறியல். ஒவ்வொருத்தரா கீழ வாறம்.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, ஈழப்பிரியன் said:

தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!

ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சு கிளியோட ஜோடி சேர்ந்தாச்சு. இனிப்பாருங்க காளிட ஆட்டத்த.

ஒரு கூட்டு கிளியாக

ஒரு தோப்பு குயிலாக

பாடு பண் பாடு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூடு ஒரு கூடு

என்னென்ன தேவைகள்

அண்ணனை கேளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இந்தப் பறவை கிளியா அல்லது காகமா...........

இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................

அரகலயவில் ஊர்வலமாக வந்த பசில் காகம் .....இது என்ன மாய்மாலம் செய்யுமோ ..

4 hours ago, ரசோதரன் said:

  • கருத்துக்கள உறவுகள்

தோனியின் 400வது T20 போட்டி

SRH ஒருதரம்கூட சென்னையில் வென்றதில்லை

எப்பிடிப் பார்த்தாலும் குறைந்த விக்கட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்கள் உள்ள அணி. ஆரு.... SRHதான்.

பேபி ABD விளையாடுவாராம் என்று ஒரு ஊகம். நாலாம் இடத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டாராம்.

எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்......

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

அந்த முடிவு சரியென்றே நினைக்கிறேன். பட்லர் இந்த வருசம் புதுசா விளையாடுறார். போன வருசம் முழுக்க அவற்ற சுதப்பல் பார்க்கேலையோ. இங்கிலாந்து அணி வாங்காத அடியா. அவர் தலைமைப் பொறுப்பிலும் இருந்து விலகிவிட்டார்.

அது எல்லாவற்றையும் வைத்துத்தான் ராஜஸ்தான் அந்த முடிவை எடுத்திருப்பினம் இல்லையா.

ஜுரல் நல்ல தெரிவுதான். இளம்பெடியன் வேற. 24 வயதுதான். இன்றைக்கு அவன் காட்டின காட்டு பார்த்தனீங்கள்தானே.

நம்ம சிம்ரன என்ன என்று சொல்லத் தெரியேல. மேற்கிந்தியதீவு வீரர்கள் இந்தமுறை நன்றாகவே இல்லை. அவர்கள் உலகம் முழுக்க விளையாடுற T20 போட்டிகளினால் இருக்கலாம். அங்கிருந்து வரும் வீரர்கள் அடித்துத் துவைக்கும் காலம் மலையேறிவிட்டது. கனகாலத்துக்கு காட்டடி அடிக்க முடியாது. உடல் பலம் மட்டும் போதாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இப்பிடிப் போடு எப்பிடிப் போறார் என்று பார்.

எனது அபிப்பிராயம் துருவ் ஜுரல்தான் ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என கருதுகிறேன் (யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்🤣), 8.75 ஓட்ட விகிதம் உள்ள நிலையில் களத்திற்கு வந்தவர் தடுப்பாட்டத்தில் இறங்கினார்.

ஓவருக்கு குறைந்தது 6 ஓட்டங்களை இலகுவாக எடுக்கும் நிலையில் கூட அதனை எட்டவில்லை, ஜுரல் தோனியினை போல விளையாடுபவர் என இணையத்தில் அவர் மேல் இரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் (தேவையில்லாமல் அதிக ரன் ரேட்டிற்கு உயர்த்திவிட்டு பின்னர் 6 கள் அடித்து கதாநாயகனாக ஆட்டத்தினை முடிப்பது).

அதனால் அவருடன் கூட்டணியில் இருந்த நிதிஸ் ரானாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு தனது தவறான ஆட்ட தெரிவின் மூலம் தேவையற்று ஆட்டமிழக்கும் நிலை உருவானது.

விக்கெட் விழுந்ததனால் மேலும் அழுத்தம் அதிகரித்து விக்கெட்டினை காக்கும் முயற்சியில் மேலும் ஓட்ட விகிதம் அதிகரித்தது.

நல்ல தொடக்கத்தினால் ஏற்பட்ட சாதாரணமாக விரட்ட வேண்டிய இலக்கை கடினமாக்கியவர் ஜுரல்.

இதே போலவே முந்தய போட்டிகளிலும் செய்தார், சாம்சன் அணிக்குள் மீண்டும் வந்தால் ஜுரலை நீக்கி விடலாம் என கருதுகிறேன்.

நிச்சயமாக ட்ராவிட் ஜுரலுடன் கதைப்பார் என கருதுகிறேன்.

56 minutes ago, செம்பாட்டான் said:

தோனியின் 400வது T20 போட்டி

SRH ஒருதரம்கூட சென்னையில் வென்றதில்லை

எப்பிடிப் பார்த்தாலும் குறைந்த விக்கட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்கள் உள்ள அணி. ஆரு.... SRHதான்.

பேபி ABD விளையாடுவாராம் என்று ஒரு ஊகம். நாலாம் இடத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டாராம்.

எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்......

SRH தரமான அணி, சென்னை அணி பல அணி வீரர்கள் போர்மிற்கு வர உதவுகின்ற அணி இன்று கைதராபாத்திற்கும் அந்த உதவியினை செய்வார்கள் என கைதராபாத் ஏன் எதிர்பார்க்கக்கூடாது?🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

அது சரிதான். ஆனால் அந்த நேரத்தில குருனாலும் மற்றைய சுழளர்களும் நன்றாக வீசிக்கொண்டிருந்தனர். அது காரணமாக இருக்கலாம். பாவம் இந்த முறை மன்னிச்சு விட்டுடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2025 at 06:10, vasee said:

குல்தீப் யாதவ் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார், இதுவரை காலமும் KKR அணியில் இடம்பெற்ற குல்தீப்பிற்கு பதிலாக வருணை KKR வாங்கியுள்ளது.

பையனுடைய ஆதங்கத்தினை உணர்ந்துள்ளது KKR அணி.🤣

2024 இல் குல்தீப் டெல்லியில்தானே விளையாடினார். 2024 இல் KKR க்கு குல்தீப் விளையாடவில்லை. 13.25 கோடிக்கு டெல்லி அணி குல்தீப்பினை தக்கவைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

தோனியின் 400வது T20 போட்டி

SRH ஒருதரம்கூட சென்னையில் வென்றதில்லை

எப்பிடிப் பார்த்தாலும் குறைந்த விக்கட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்கள் உள்ள அணி. ஆரு.... SRHதான்.

பேபி ABD விளையாடுவாராம் என்று ஒரு ஊகம். நாலாம் இடத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டாராம்.

எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்......

என்னவாகும் சார்....தோனி பக்தன் சார் நான்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கந்தப்பு said:

2024 இல் குல்தீப் டெல்லியில்தானே விளையாடினார். 2024 இல் KKR க்கு குல்தீப் விளையாடவில்லை. 13.25 கோடிக்கு டெல்லி அணி குல்தீப்பினை தக்கவைத்தது

தகவலுக்கு நன்றி, இனையத்தில் இருந்து தவறாக புரிந்து கொண்டிருப்பேன் என கருதுகிறேன், யாழ் கள போட்டியில் இணைந்த பின்னரே ஐபிஎல் இல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, செம்பாட்டான் said:

அது சரிதான். ஆனால் அந்த நேரத்தில குருனாலும் மற்றைய சுழளர்களும் நன்றாக வீசிக்கொண்டிருந்தனர். அது காரணமாக இருக்கலாம். பாவம் இந்த முறை மன்னிச்சு விட்டுடுவம்.

அவருடைய ஓட்டத்தினை விட அதிகமான பந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்ட ஒரே வீரராக அவர் இருந்திருந்தார், கடந்த போட்டிகளின் தோல்வியின் போது ராஜஸ்தான ரசிகர்கள் அவரில் கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்தார்கள், இந்த போட்டியின் பிறகு கொலைவெறியில் இருப்பாகள்.🤣

குருணலின் பந்து வீச்சிற்கு ஒற்றை ஓட்டம் எடுக்கமுடியவில்லை🤣, அவர் தேவையில்லாமல் ஏற்படுத்திகொண்ட அழுத்ததினை பார்த்து கேசல்வூட்டின் ஓவரை இறுதி ஓவருக்கு சேமித்து வைத்தார்கள் (அப்போது 2 ஓவர்கள் அவரிடம் இருந்தது), அதனால் பின் பகுதியில் அவர்கள் நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

சரி உங்களுக்காக இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டிருக்கு என்பதனை ஜுரலிடம் கூறுங்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

தகவலுக்கு நன்றி, இனையத்தில் இருந்து தவறாக புரிந்து கொண்டிருப்பேன் என கருதுகிறேன், யாழ் கள போட்டியில் இணைந்த பின்னரே ஐபிஎல் இல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

வீரப்பையன்தான் உங்களையும் என்னையும் குழப்பி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

அது சரிதான். ஆனால் அந்த நேரத்தில குருனாலும் மற்றைய சுழளர்களும் நன்றாக வீசிக்கொண்டிருந்தனர். அது காரணமாக இருக்கலாம். பாவம் இந்த முறை மன்னிச்சு விட்டுடுவம்.

ஒரு போட்டி ஓய்வு கொடுப்பார்கள், அது அவர்களை அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட தூண்டும், வீரர்களுக்கும் அது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

ஒரு போட்டி ஓய்வு கொடுப்பார்கள், அது அவர்களை அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட தூண்டும், வீரர்களுக்கும் அது தெரியும்.

இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல.

வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம்.

முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா.

கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

என்னவாகும் சார்....தோனி பக்தன் சார் நான்

ஜயகோ. எதுக்கும் மனதைத் திடப்படுத்தி வையுங்க. பழைய பன்னீர்ச்செல்வமா திரும்பி வருவாரா. இல்லை என்றுதான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, செம்பாட்டான் said:

அந்த "பினிஷர்" பட்லரத்தான் இங்கிலாந்து அணியும் தேடிக்கொண்டிருக்கினம். கண்டா போகச்சொல்லுங்க.

Class is permanent, Form is temporary என்று தெரியாமலா சொன்னார்கள்! அவரது கப்டன் சுமையே அவரை தடுமாற வைத்தது! அதுவும் இங்கிலாந்து பேப்பர்காரங்களை தெரியும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................

டெவல்ட் ப்ரேவிசை இறக்கிறம் SRHஐ தூக்கிறம்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................

சென்னைக்கு யாரும் ஆறு கடக்கக் கூடாது என்று ஒரு தடை போட்டிருக்கிறார்கள் . ....... விதிவிலக்கு தோனிக்கு மட்டும் .......கடைசி ஓவரில் வந்து ஓரிரு ஆறு அடித்து விட்டு சுபம் போட்டு விடுவார்கள் . ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

இப்போதுதான் ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லரின் அருமை புரியும்! அவரை தக்க வைக்காமல் ஹெட்மேயரையும் ஜூரோலையும் 11 கோடிக்கும் 14 கோடிக்கும் தக்க வச்சவை! அதை ராகுல் டிராவிட் சரியென்று வேற சொன்னவர்! டிராவிட் டெஸ்ட் டீமை கோச் பண்ணிறமாதிரி T20 டீமை கோச் பண்ணலாமென்று நினைக்கிறார்!

11,14 கோடிக்கு பட்லர் தக்கவைக்க விரும்புவாரா என்பதும் ஒரு கேள்வி. விராட் கோலி 21 கோடிகளுக்குத்தான் இணங்கினார். நிகலஸ் பூரணுக்கும் 21 கோடிகள் வழங்கப்பட்டது. கிளாசானுக்கும் 23 கோடிகள் வழங்கப்பட்டது . சென்ற வருடம் ராஜஸ்தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளிலும் பட்லர் விளையாடவில்லை. 2024 இல் நடைபெற்ற உலககிண்ண t20 போட்டிகளில் தயார்படுத்துவதற்காக பாகிஸ்தான் அணியுடன் t20 போட்டி தொடர் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். இதே மாதிரி Phil Salt (KKR), Will Jack (பங்களூர்) , Reece Topley ( பங்களூர்) போன்றவர்களும் முதல் சுற்று போட்டிகள் முடிய முன்பு இங்கிலாந்து அணி கேட்டதற்காக பாகிஸ்தான் அணியுடன் விளையாட சென்று விட்டார்கள்.

இம்முறை இறுதிப்போட்டி 26 திகதி மே மாதம் நடைபெறவுள்ளது. சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி 22 மே முதல் விளையாடவுள்ளது. சிலவேளை ஒரு சில இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிய முன்பே இங்கிலாந்து செல்லலாம். இது போன்ற காரணங்களுக்காகவும் பட்லரை சிலவேளை ராஜஸ்தான் அணி இம்முறை தக்கவில்லை என நினைக்கிறேன்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சென்னைக்கு யாரும் ஆறு கடக்கக் கூடாது என்று ஒரு தடை போட்டிருக்கிறார்கள் . ....... விதிவிலக்கு தோனிக்கு மட்டும் .......கடைசி ஓவரில் வந்து ஓரிரு ஆறு அடித்து விட்டு சுபம் போட்டு விடுவார்கள் . ........! 😂

மும்பாயிற்கு எதிரான சென்ற போட்டிகளில் 8 ஆறுகள் சென்னை அணியினால் அடிக்கப்பட்டது. அதில் 4 சிவம் டுபெய், தலா 2 ஜடேஜா, ஆயுஷ் ம்ஹாத்ரேயினால் அடிக்கப்பட்டது.தோனி ஒரு ஆறும் அடிக்கவில்லை.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல.

வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம்.

முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா.

கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁

அஸ்வினுடன் தொடர்பு கொண்டால் அவர் தோனிக்கு மொழிபெயர்த்து சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

பாதகத்திலும் ஒரு சாதகம் அந்த 4 அணிக்கு.🤣

4 hours ago, Eppothum Thamizhan said:

டெவல்ட் ப்ரேவிசை இறக்கிறம் SRHஐ தூக்கிறம்!

பத்திரன விளையாடமாட்டார் எனும் கருத்து நிலவுகிறது, அவருக்கு பதிலாக நாதன் எலிஸ் விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது (உறுதிப்படுத்தப்படாத செய்தி), நாதன் எலிஸ் விளையாடிய போட்டிகளில் சென்னை வென்றுள்ளது.

கைதராபாத் அணிக்கு விளையாடும் ஈசன் மலிங்காவினை 1.2 கோடிக்கு வாங்கியுள்ளார்கள், பத்திரன 13 கோடி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

Class is permanent, Form is temporary என்று தெரியாமலா சொன்னார்கள்! அவரது கப்டன் சுமையே அவரை தடுமாற வைத்தது! அதுவும் இங்கிலாந்து பேப்பர்காரங்களை தெரியும்தானே!

அது சரி. இங்கிலாந்து பத்திரிகைகள் சும்மா தும்மினாலே ஆள முடிச்சுவிட்டுடுவாங்கள்.

அந்தப் பயம்தான் பட்லரை தக்கவைக்காததற்கும்.

ஏன் அவர்கள் ஏலத்தில எடுக்க முயற்சிக்கவில்லயா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

11,14 கோடிக்கு பட்லர் தக்கவைக்க விரும்புவாரா என்பதும் ஒரு கேள்வி. விராட் கோலி 21 கோடிகளுக்குத்தான் இணங்கினார். நிகலஸ் பூரணுக்கும் 21 கோடிகள் வழங்கப்பட்டது. கிளாசானுக்கும் 23 கோடிகள் வழங்கப்பட்டது . சென்ற வருடம் ராஜஸ்தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளிலும் பட்லர் விளையாடவில்லை. 2024 இல் நடைபெற்ற உலககிண்ண t20 போட்டிகளில் தயார்படுத்துவதற்காக பாகிஸ்தான் அணியுடன் t20 போட்டி தொடர் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். இதே மாதிரி Phil Salt (KKR), Will Jack (பங்களூர்) , Reece Topley ( பங்களூர்) போன்றவர்களும் முதல் சுற்று போட்டிகள் முடிய முன்பு இங்கிலாந்து அணி கேட்டதற்காக பாகிஸ்தான் அணியுடன் விளையாட சென்று விட்டார்கள்.

இம்முறை இறுதிப்போட்டி 26 திகதி மே மாதம் நடைபெறவுள்ளது. சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி 22 மே முதல் விளையாடவுள்ளது. சிலவேளை ஒரு சில இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிய இங்கிலாந்து செல்லலாம். இது போன்ற காரணங்களுக்காகவும் பட்லரை சிலவேளை ராஜஸ்தான் அணி இம்முறை தக்கவில்லை என நினைக்கிறேன்

ஓம். இது வேற பிரச்சினையா. அப்பிடி இடையில விட்டு ஓடலாமா. தாலியக் கட்டினா குடும்பம் நடத்தித்தானே ஆகவேணும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

அஸ்வினுடன் தொடர்பு கொண்டால் அவர் தோனிக்கு மொழிபெயர்த்து சொல்லுவார்.

அஸ்வினும் சும்மா வாயக் குடுத்து வாங்கிக் கட்டியிருக்கிறார். தன்ர youtubeல சென்னையைப் பத்தி கதைக்கிறேல இப்போ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.