Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. 100 அடித்து தங்கள் மானத்தைக் காத்தார்கள்.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாம் முடிந்தது. ராஜஸ்தான் மூட்டையைக் கட்ட வேண்டியது தான். மும்பை புள்ளி பட்டியலில் முதலாவது.

யாழ் களத்தில் அந்த இரண்டு பேரும் ஒன்றாக இருந்தும் எமக்கு புள்ளிகள் கிடைப்பதில் மகிழ்ச்சி.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

koksal-eating.gif

அடுத்தடுத்து எட்டு , பத்து முறை தோல்விதான் .......... " வென்றால் மகிழ்ச்சி, தோல்வி பயிற்சி"யாகி பழகிப் போச்சு ....... ஒரே கஞ்சிதான் ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

koksal-eating.gif

அடுத்தடுத்து எட்டு , பத்து முறை தோல்விதான் .......... " வென்றால் மகிழ்ச்சி, தோல்வி பயிற்சி"யாகி பழகிப் போச்சு ....... ஒரே கஞ்சிதான் ......... ! 😂

நாம இப்ப ஒரே கப்பல்தான். முன்னுக்கு வேகமாகப் போனோம். பிறகு ஒரே குத்துக்கரணம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 50வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன் (61 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (53 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்), ஹார்டிக் பாண்டியா (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்) மின்னல் வேகத்தில் ஓட்டங்களை எடுத்தமையால் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறி விரைந்து ஆட்டமிழந்தனர். பின்னணி வீரரான ஜொஃவ்ரா ஆர்சர் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டனர்.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குச் செல்லும் தகுதியை இழந்து வெளியேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0767.jpeg

தொடரின் ஆரம்பத்தில் பல நாட்கள் முதலாவது இடத்தில் நின்ற @suvy ஐயா பத்தாவது நிலைக்கும் கீழே இறங்கியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, செம்பாட்டான் said:

நாம இப்ப ஒரே கப்பல்தான். முன்னுக்கு வேகமாகப் போனோம். பிறகு ஒரே குத்துக்கரணம்தான்.

குத்துக்கரணத்துக்கு மும்பாயின் தொடர் வெற்றிகளும் ஒரு காரணம்.

முதல் 5 போட்டிகளில் மும்பாய் ஒரு போட்டி மட்டுமே வென்றது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வெள்ளி 02 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

GT எதிர் SRH

13 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • நிலாமதி

  • சுவி

  • பிரபா

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? turkey_1f983.png

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாளைக்கு ஒரு அதிரடி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தொடரின் ஆரம்பத்தில் பல நாட்கள் முதலாவது இடத்தில் நின்ற @suvy ஐயா பத்தாவது நிலைக்கும் கீழே இறங்கியுள்ளார்!

முதல்வர் நந்தனாருக்கும் அவரைப் போற்றிப் பின் தொடரும் புலவருக்கும் நந்தனாரால் நியமிக்கப்பட்ட புதிய தளபதிக்கும் 🤣 வாழ்த்துக்கள்

தேடப்படும் பட்டியலில் பலருடனும் மகா மன்னர் ஒளிந்து விளையாடும் மர்மம் என்னவோ😂

3 hours ago, செம்பாட்டான் said:

அப்பாடா. 100 அடித்து தங்கள் மானத்தைக் காத்தார்கள்.

எனக்கென்னவோ யாருக்கோ மூன்று புள்ளிகளைக் காப்பாத்தியது மாதிரி இருக்கு 😃

ஆர்ச்சேரை எப்பவாவது சந்தித்தீங்களா 😅

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பழகிப் போச்சு ....... ஒரே கஞ்சிதான்

எப்போதுமே பழரசங்களை அருந்தி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்கள் மக்களின் நிலையை அறிந்து கொள்ள மக்களுடன் மக்களாக வாழ்ந்து கஞ்சி குடித்து வாழ்வது மன்னர்களின் குடியுரிமை அல்லவா😂

மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

9 minutes ago, வாத்தியார் said:

எனக்கென்னவோ யாருக்கோ மூன்று புள்ளிகளைக் காப்பாத்தியது மாதிரி இருக்கு 😃

ஆர்ச்சேரை எப்பவாவது சந்தித்தீங்களா 😅

சோழியன் குடுமி சும்மா ஆடுமா வாத்தியார். இனி 95க்குக் கீழ அடிக்கிறது கஷ்டம் என்று பார்த்தால், அதுக்கும் போட்டிக்கு வாறாங்கள். ஏதோ ஆர்ச்சர் இரண்டு ஆறு விட்டதினால் தப்பிச்சு. 😄🤑

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, கிருபன் said:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • ரசோதரன்

கிளியை குற்றம் சொல்லவும் முடியவில்லை............ ஆனால் இந்தப் போட்டியில் இப்படி தெரிவு செய்து வைத்திருக்கின்றதே............................🫢.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

கிளியை குற்றம் சொல்லவும் முடியவில்லை............ ஆனால் இந்தப் போட்டியில் இப்படி தெரிவு செய்து வைத்திருக்கின்றதே............................🫢.

எங்க இந்தப்பக்கமாக் காணேல என்று பார்த்தன்.

நானும் இரண்டு பேரோட மாட்டுப்பட்டு இன்றைக்குத்தான் 2 புள்ளி கிடைத்தது. நாளைக்கு அவை இரண்டு பேரும் பிரிஞ்சிட்டினம். கிளியும் மற்றப் பக்கம் போட்டுது. என்னமோ ஏதோ என்டு பதறுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

குத்துக்கரணத்துக்கு மும்பாயின் தொடர் வெற்றிகளும் ஒரு காரணம்.

முதல் 5 போட்டிகளில் மும்பாய் ஒரு போட்டி மட்டுமே வென்றது. ஆனால் கடைசி 6 போட்டிகளில் தொடர் வெற்றி

உண்மைதான். இன்று அவர்கள் விளையாடியதைப் பார்த்தால், மிகவும் உறுதியான அணியாக உள்ளனர். அவர்களை அடிப்பது மிகவும் சிரமம். கோப்பையைத் தூக்கினாலும் தூக்கி விடுவார்கள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

உண்மைதான். இன்று அவர்கள் விளையாடியதைப் பார்த்தால், மிகவும் உறுதியான அணியாக உள்ளனர். அவர்களை அடிப்பது மிகவும் சிரமம். கோப்பையைத் தூக்கினாலும் தூக்கி விடுவார்கள் போல் உள்ளது.

பேபி பொடியனுக்காக ஆர் .ஆர் வெல்லும் என்று ஒரு ஆசை இருந்தது...அது கனவுதான்...என்றாலும் புள்ளிக்காக மும்பை வென்றதில் சந்தோசம்...நாம தோஸ்துதானே முன்னாலும் பின்னாலும் நிக்கிறம்...பிரியன் சார்தான் கயிற்றை விட்டுவிட்டார் ...கீழை போறார்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, alvayan said:

பேபி பொடியனுக்காக ஆர் .ஆர் வெல்லும் என்று ஒரு ஆசை இருந்தது...அது கனவுதான்...என்றாலும் புள்ளிக்காக மும்பை வென்றதில் சந்தோசம்...நாம தோஸ்துதானே முன்னாலும் பின்னாலும் நிக்கிறம்...பிரியன் சார்தான் கயிற்றை விட்டுவிட்டார் ...கீழை போறார்

சரி. பாத்துப்போம். எனது அடுத்தடுத்த தெரிவுகள் எல்லாம் பக்காவா இருக்கு.

இன்னும் 20 போட்டிகள் இருக்கு. இதுவரை 24 வெற்றி 25 தோல்வி 1 சமநிலை.

அந்த இரண்டு பேரோட மட்டும் சேர்ந்திடாதீங்க சார்!!!!!

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

உண்மைதான். இன்று அவர்கள் விளையாடியதைப் பார்த்தால், மிகவும் உறுதியான அணியாக உள்ளனர். அவர்களை அடிப்பது மிகவும் சிரமம். கோப்பையைத் தூக்கினாலும் தூக்கி விடுவார்கள் போல் உள்ளது.

சென்றவருடம் ரோகித் சர்மாவின் அணித்தலைவர் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது . மும்பாய் ரசிகர்கள் இதனை விரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போதும், துடுப்பாட்டாம் செய்யும் போதும் மும்பாய் ரசிகர் அவரை கூக்குரல் இட்டு ஏளனம் செய்தார்கள். சென்ற வருடம் மும்பை அணி 4 போட்டிகள் மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது. யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சில எழுதினார்கள். இந்த வருடம் மீண்டும் மகேலா ஜெயவர்த்தனா மும்பாய் முதன்மை பயிற்சியாளர். ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பூமாரா , சூரியகுமார் ஜாதவ், திலக் வர்மா போன்றவர்கள் தக்கவைக்கப்பட்டார்கள். ஏலத்தில் போல்ட், தீபக் சகார், ரயான் டிக்கெல்டன், வில் ஜாக் போன்றவர்களும் எடுக்கப்பட்டார்கள். முதல் 5 போட்டிகளில் 4 இல் மும்பாய் தோற்றது. ஏன் இங்கு யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ரோகித்தும் சூரியகுமாரும் விரும்பாததினால் ஏனோதானோ என்று விளையாடுகிறார்கள் என்ற பொருளில் சக கருத்தாளர் ஒருவர் எழுதியதை வாசித்த ஞாபகம். 5 வது போட்டியில் இருந்து பூமரா விளையடத்துடங்கினார். ஆரம்பத்தில் out of form இல் இருந்தாலும் மும்பையில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் இருந்து ரோகித் சர்மா சிறப்பாக விளையாட துடங்கினார். சூரியகுமார் ஜாதவ், ராஜன் ரிக்கெல்டன் போன்றவர்களின் சிறப்பான துடுப்பட்டங்களும், போல்ட், பூமாரா போன்றவர்களின் பந்து வீச்சுகளும், ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான தலைமையும், மகேலாவின் பயிற்சியும் சேர மும்பாய் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கந்தப்பு said:

ஓ அப்பிடி வேற போன வருசம் நடந்துதா. பாண்டியா ஒரு கோப்பை வென்றுதானே மும்பைக்கு வந்தவர்.

எல்லாம் ஒரே நேரத்தில் click ஆகுது. ரோகித்தும் சூர்யாவும் தோடர்ந்து நன்றாகச் செய்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரையும் சொல்லி வைத்துத் தூக்கினால், மும்பை முடிஞ்சிடும். அதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். அவர்களுக்கு இன்னும் 3 போட்டி இருக்கு. மூன்றும் முன்னுக்கு நிற்கும் அணிகளுடன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2025 at 03:05, ஈழப்பிரியன் said:

Old is gold

என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.

பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா 😄

On 1/5/2025 at 03:41, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள்.

சென்ற வருடம் கடைசியாக வந்தது மும்பாய், கடைசிக்கு முதல் பஞ்சாப். 8 ம் இடம் குஜராத். ஆனால் இவை தற்போது முதல் 4 இடங்களில் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

சென்ற வருடம் கடைசியாக வந்தது மும்பாய், கடைசிக்கு முதல் பஞ்சாப். 8 ம் இடம் குஜராத். ஆனால் இவை தற்போது முதல் 4 இடங்களில் இருக்கின்றன.

வாழ்க்கை ஒரு வட்டம். அதில தோக்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோப்பான். நாம வாழ்ந்து பார்த்திட வேண்டியதுதான்.

நமக்கும் முதல் கொஞ்சப் போட்டிகளில் நடந்ததும் இப்போ நடக்கிறதும் அவ்வாறே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குப் போகும் என்றும் ஒருவர் சம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்றும் கணித்திருந்தார்கள்!

large.IMG_0768.jpeglarge.IMG_0769.webp

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஐந்து பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குப் போகும் என்றும் ஒருவர் சம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்றும் கணித்திருந்தார்கள்!

large.IMG_0768.jpeglarge.IMG_0769.webp

இப்பிடி சங்கூதிட்டீங்களே. அப்பிடியே CSK பக்தாலையும் கணக்குப் போட்டால், 5 பேர்தான் மிஞ்சும் போல. என்னமோ போங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

இப்பிடி சங்கூதிட்டீங்களே. அப்பிடியே CSK பக்தாலையும் கணக்குப் போட்டால், 5 பேர்தான் மிஞ்சும் போல. என்னமோ போங்க.

ஏன் SRHஐ விட்டுட்டியல்! அவையையும் சேர்த்தால் இரண்டு மூன்றுதான் மிஞ்சும் போல கிடக்கிது!

  • கருத்துக்கள உறவுகள்

494481238_1467447644227331_3628543485566

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, செம்பாட்டான் said:

தொடங்கிட்டாங்களா. முந்தி பாக்கிஸ்தான் வீரர்களை அப்பிடிச் சொல்லுவினம். அப்ரிடி தனது 18 வயதில் வேகமான சதம் அடித்த போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வந்திருந்தது. இப்படி கதைப்பவர்களின் மனதில் எரிச்சலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அந்தப் பையன் அதிர்ஷ்டத்தால் தான் அன்று நூறு அடித்தான் என்று நைசாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நேரடியாக அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் அன்று அவனது நாள், அடித்ததெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியது, அப்படி இப்படி என்று ஒரு கூட்டம். ஒருவனது திறமையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கீழே தள்ளாமல் இருந்தாலே போதுமானது.

வயதினை பார்ப்பதனை விட்டு திறமையினை பார்த்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன், பொதுவாக வயது குறைவான ஒருவருக்கு வழங்கப்படும் ஆர்ப்பாட்டமான ஆதரவு அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பே காரணமாக இருக்கின்றது.

பிரித்திவ் சா வந்த போது அவரது உள்ளூர் போட்டியில் விளையாடிய பெறுபேறுகள் தெண்டுல்கரின் பெறுபேறு போல இருந்தமையால் அவர் பெரிதும் கொண்ட்டாடப்பட்டார், அப்போதய இந்தியணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என விரும்பினோம் (நான் அவாரது விளையாட்டினை பார்த்திருக்கவில்லை).

பின்னர் ஒருவாறு தேசிய அணியில் இடம் பெற்றார் அதனை தொடர்ந்து ஐ பி எல் இலும் இடம்பெற்றார், இப்போது அவர் பற்றி யாரும் பேசுவதில்லை.

அதே போல் வயதானவர் தொடர்ந்து விளையாடினால் அவருக்கெதிரான கருத்துக்களும் வருகின்றன, இளையோருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் எனும் விருப்பே அதற்கு காரணமாக இருக்கின்றது.

இங்கு வயது ஒரு பேசு பொருளாகின்ற நிலை காணப்படுகிறது.

இவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போல சிந்திக்கிறார், நேற்றைய போட்டியில் சாகரின் பந்து வீச்சில் ஜெஸ்வால் எதிர் கொண்ட போது அடுத்த பக்கம் இருந்தார்.

நீங்கள் இதனை அவதானித்திருப்பீர்கள் என கருதுகிறேன், ஜெஸ்வாலுக்கு களத்தடுப்பு எல்லைக்கோட்டில் உள்ள இரண்டு வீரர்கள் wide deep third man, deep backward square leg.

இவர் ஆடவந்த போது களத்தடுப்பில் சிறிய மாற்றம் செய்தார்கள் wide deep third man இனை fine deep third man ஆக மாற்றினார்கள்.

அதனை பார்த்து பந்து 4 ஆவது 5 ஆவது விக்கெட்டுக்கு அளவு குறைந்த பந்தாக வரும் என கணித்து தனது நிலையினை பந்து வீசுவதற்கு முன்னதாகவே எடுத்திருந்தார் (பின் கால் 3ஆவது விக்கெட்டிலும் முன் கால் திறந்த நிலையில் முதலாவது விக்கெட்டுக்கு வெளியே என), ஆனால் அது மும்பாய் அணி திட்டமிட்டே அவ்வாறு செய்திருந்தது அவருக்கு தேவையான அளவு குறைந்த பந்து வரும் என எதிர்பார்க்க வைத்து புல் லெந்தில் பந்து வீசி தூக்கி அடிக்க முடியாதவாறு செய்து ஆட்டமிழக்க செய்தார்கள்.

அனுபவமான வீரர்களே non strike இல் நிற்கும் போது வாய்பார்த்துக்கொண்டிருப்பார்கள் (ஒரு போட்டியில் மனிஸ் பாண்டே non striker இல் வாய்பாத்துக்கொண்டிருந்து தோனியிடம் பரிதாபகரமாக திட்டு வாங்கியிருந்தார்.) ஆனால் இவர் மிக அவதானமாக விடயங்களை அவதானிக்கிறார்.

இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனவே தோன்றுகிறது .

11 hours ago, ரசோதரன் said:

கிளியை குற்றம் சொல்லவும் முடியவில்லை............ ஆனால் இந்தப் போட்டியில் இப்படி தெரிவு செய்து வைத்திருக்கின்றதே............................🫢.

கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் டைட்டன்ஸ் இடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், இன்றைய போட்டியில் கில் அதிக ஓட்டங்களை எடுத்தால் அதிக ஓட்டம் எடுப்பவராக கில்லை தெரிவு செய்த எனக்கு புள்ளி கிடைக்கும் அத்தோடு குஜராத்திற்கு வெற்றியும் கிடைக்கும் (கட்டாந்தரையில் கில்லும் மிக நன்றாக விளையாடுவார்)😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.