Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

france.jpg?resize=750%2C375&ssl=1

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!

பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.  இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம்  பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகை எனவும்,  இதனை எரிக்கும்போது  தண்ணீரை மாத்திரம் வெளியிடுவதால்  சுற்றுச்சூழலுக்கு எந்த  பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்   மறுசுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழல் மாசற்ற எரிசக்தி ஆதாரம் என்பதால் எதிர்கால எரிசக்தியாக வெள்ளை ஹைட்ரஜன் கருதப்படுவதாகவும், இதனால் எந்த விதமான பச்சை வீட்டு  வாயுக்களும் உருவாகாது எனவும், எனவே இது  கார்பன் நீக்கமற்ற எரிசக்தியாகச் செயல்படுமெனவும் மாசு ஏற்படுத்தும் எரிசக்திகளுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பானது  உலகளாவிய ஹைட்ரஜன் சந்தையில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இது  உலகளவில் மீளச்சுழற்சி செய்யக்கூடிய எரிசக்திக்கான வரலாற்றுச் செயல்முறையாகக் கருதப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424736

இந்தச் செய்தி தவறாக இருக்கவே அதிக சந்தர்ப்பம் உள்ளது.

இது பிரெஞ்சு அரசினால் அறிவிக்கப்படவில்லை. பிரான்சிலுள்ள முதன்மை ஊடகங்களும் இச் செய்தியை வெளியிடவில்லை. செய்தியை வெளியிட்டவர்கள் யார் இந்தக் களஞ்சியத்தைக் கண்டுபிடித்தது, எங்கு உள்ளது போன்ற எந்தவொரு தரவுகயோ ஆதாரங்களையோ குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

இதைத் தான் நானும் எழுத நினைத்தேன். நன்றி இணையவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏப்ரல் 1 ம் திகதியோ என்று காலண்டரை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டியதாய்ப் போச்சுது . ........கொஞ்ச நாளாய் நாள் கிழமை ஒன்றும் தெரியாமல் ஒரே மறதியாய் போச்சு .........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

dance-saudi.gif arabic-dance.gif

மற்ற ஆட்கள் எண்ணை கேட்டு விடுவார்களோ என்று, பிரான்ஸ் அடக்கி வாசிக்குது போலை உள்ளது. ஜேர்மனியை மறக்காமல்.... எங்களுக்கு ஒரு எண்ணைக் குழாயை போட்டு விடுங்கள். இனி என்ன... @இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் "ஷேக்" உடுப்பு போட வேண்டியதுதான். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தி,நான் இன்னும் வாசிக்கவில்லை

https://www.euronews.com/next/2024/02/07/scientists-are-shocked-by-the-discovery-of-white-hydrogen-in-france-could-it-be-europes-fu

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

இந்தச் செய்தி தவறாக இருக்கவே அதிக சந்தர்ப்பம் உள்ளது.

இது பிரெஞ்சு அரசினால் அறிவிக்கப்படவில்லை. பிரான்சிலுள்ள முதன்மை ஊடகங்களும் இச் செய்தியை வெளியிடவில்லை. செய்தியை வெளியிட்டவர்கள் யார் இந்தக் களஞ்சியத்தைக் கண்டுபிடித்தது, எங்கு உள்ளது போன்ற எந்தவொரு தரவுகயோ ஆதாரங்களையோ குறிப்பிடவில்லை.

செய்தி உண்மை, ஆனால் வாசி சுட்டிக் காட்டியாது போல மிகவும் பழசு: 2023 இல் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

https://www.cnn.com/2023/10/29/climate/white-hydrogen-fossil-fuels-climate/index.html

இந்த பழைய செய்தியை இந்தியாவின் இன்னுமொரு காப்பியடி இணையத் தளம் பிரசுரிக்க, ஆதவனும் காப்பியடித்து அதிரடியாக வெளியிட்டிருக்கிறது!

அதி வேகமாக செய்தி கொப்பியடிக்கும் ஆதவன் ரீமுக்கு இப்ப தான் "அதிரடியாக" தெரிய வந்திருக்கிறது!

"கற்பூர ரீம்" தான் வைத்திருக்கிறார்கள்😂!

Times Now
No image preview

India's Ally In Europe Hits Jackpot Worth $92 Trillion, U...

France has discovered a massive 46-million-ton white hydrogen reserve in the Moselle region, valued at $92 trillion. Unlike gray and green hydrogen, white hydrogen requires no industrial production...
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இதைத் தான் நானும் எழுத நினைத்தேன். நன்றி இணையவன்.

அண்ணை உங்கள் கிணத்தில எனக்கு பங்கு உரிமை தருவியளே🤣

1 hour ago, Justin said:

செய்தி உண்மை, ஆனால் வாசி சுட்டிக் காட்டியாது போல மிகவும் பழசு: 2023 இல் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

https://www.cnn.com/2023/10/29/climate/white-hydrogen-fossil-fuels-climate/index.html

இந்த பழைய செய்தியை இந்தியாவின் இன்னுமொரு காப்பியடி இணையத் தளம் பிரசுரிக்க, ஆதவனும் காப்பியடித்து அதிரடியாக வெளியிட்டிருக்கிறது!

அதி வேகமாக செய்தி கொப்பியடிக்கும் ஆதவன் ரீமுக்கு இப்ப தான் "அதிரடியாக" தெரிய வந்திருக்கிறது!

"கற்பூர ரீம்" தான் வைத்திருக்கிறார்கள்😂!

Times Now
No image preview

India's Ally In Europe Hits Jackpot Worth $92 Trillion, U...

France has discovered a massive 46-million-ton white hydrogen reserve in the Moselle region, valued at $92 trillion. Unlike gray and green hydrogen, white hydrogen requires no industrial production...

இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம்.

ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும்.

பிரான்ஸ் ஓக்கே - இங்கே யூகேயில் என்ன வளம் எடுத்தாலும் தனியார் கைக்குத்தான் போகும்.

நோர்வேயும் பிரிதானியாவும் ஒரே நேரத்தில் வடகடலில் எண்ணையை கண்டுபிடித்தன.

நோர்வேயின் வளம் அரச நிதியம் ஆகியது. அதனால் இன்று சாதராண நோர்வேஜியர்கள் பணக்காரார்.

பிரிதானிய வளம் BP எனும் நிறுவனத்துக்கு. அதனால் பங்குதாரார்கள் அதீத பணக்காரார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம்.

ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும்.

இதே பிரச்சனைதான் ஜேர்மனிக்கும்.நிலத்தடியில் கை வைத்தால் நிலம் சுடுகாடாகி விடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் மீதேன் வாயுக்களை உறிஞ்சு எடுக்க அந்த நிலங்களே பாலைவனமாகி விட்டது.

அது அமெரிக்காவை பாதிக்காது. பெரிய நிலப்பரப்பு. ஆனால் அமெரிக்காவின் ஒரு மாநில அளவிலான ஐரோப்பாவிற்கு இது சாத்தியமில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஓம்..சாத்தியத்துக்கு அப்பால், இன்னும் 30 வருடத்தில் இப்படியான நிலக்கீழ் எரி பொருளுக்கான தேவையும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதே பிரச்சனைதான் ஜேர்மனிக்கும்.நிலத்தடியில் கை வைத்தால் நிலம் சுடுகாடாகி விடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் மீதேன் வாயுக்களை உறிஞ்சு எடுக்க அந்த நிலங்களே பாலைவனமாகி விட்டது.

அது அமெரிக்காவை பாதிக்காது. பெரிய நிலப்பரப்பு. ஆனால் அமெரிக்காவின் ஒரு மாநில அளவிலான ஐரோப்பாவிற்கு இது சாத்தியமில்லை. 😂

அப்படி என்றால் எப்படி நிலக்கரியை எடுக்கிறார்கள்??? 1987 இல். Main. என்ற இடத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் வேலை செய்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அப்படி என்றால் எப்படி நிலக்கரியை எடுக்கிறார்கள்??? 1987 இல். Main. என்ற இடத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் வேலை செய்துள்ளார்

Prosper-Haniel இல் இருந்த கடைசி நிலக்கரிச் சுரங்கம் 2018 இல் மூடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அப்படி என்றால் எப்படி நிலக்கரியை எடுக்கிறார்கள்??? 1987 இல். Main. என்ற இடத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் வேலை செய்துள்ளார்

நிலக்கரி, மசகெண்ணை - இவற்றை எடுப்பது இலகுவான வேலை. நிலக்கரி, படிப்படியாக பூமியை அகழ்ந்து சென்று சுரங்கத்தினுள் மனிதர்கள் சென்று மேலே கொண்டு வருவார்கள். ஆபத்தான வேலை. இருந்தும் நிலக்கரிப் பாவனை இப்போது மிகவும் குறைவு. இதன் காரணம் நிலக்கரி உச்ச சூழல் மாசடைதலை உருவாக்கும் எரிபொருள் என்பது தான். பாவனை குறைவென்பதால் நிலக்கரி அகழ்வதும் அருகி விட்டது.

ஆனால், இந்த Shale gas எனப்படும் வாயுவை வெளியே கொண்டு வர hydraulic fracturing என்ற சிக்கலான முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது (படம் கீழே). சுருக்கமாக, நிலத்தினுள் ஒரு ஆழமான துளையிட்டு, அந்த துளையூடாக உயர் அழுத்தத்தில் இரசாயனத் திரவங்களை அனுப்பும் போது, ஆழத்தில் வெடிப்புகள் ஏற்பட, வாயு வெளியே வரும். இந்த முறையினால் ஆழத்தில் இப்படி வெடிப்புகள் உருவாக்கும் போது காலப் போக்கில் சிறு நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால், ஷேல் வாயுவை எடுப்பது மிகவும் பாதகமான ஒரு முறை - அப்படியே விட்டு விடுவது தான் புத்தி சாலித்தனம்.

large.hydraulicfracturing.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.