Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடைக்கிறாரா கொத்தனார்?

தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது.

அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல்.

ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும்.

துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை.

இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே.

அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது.

இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது.

பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை.

ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது.

இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான்.

இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது.

கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா.

மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம்.

இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள்.

குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும்.

இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார்.

அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”.

சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது.

பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு.

சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது.

தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது.

இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன்.

ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது.

தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா?

பிகு

பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உடைக்கிறாரா கொத்தனார்?

தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது.

அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல்.

ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும்.

துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை.

இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே.

அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது.

இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது.

பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை.

ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது.

இந்த இரு தளங்களிலும் பென்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான்.

இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது.

கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா.

மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம்.

இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள்.

குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும்.

இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார்.

அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”.

சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது.

பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு.

சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது.

தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது.

இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன்.

ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது.

தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா?

பிகு

பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.

கோசான், நீங்கள் எழுதியது உண்மையிலேயே கூர்மையான பார்வை... தமிழ் கலாச்சாரம் அதன் சொந்த அடையாளங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த போதிலும், சமூக ஊடகங்கள் அதில் புதிய அலைகளை உருவாக்கிவிட்டன என்பதில் எனக்கும் உடன்பாடு...

“தூத்துக்குடி கொத்தனார்” போன்ற பாடல்கள், மரியாதை குறைவான வார்த்தைகளை (அதுவும் எளிதில்) ஏற்றுக்கொள்ளும் சமூக நிலைமைக்கு அறிகுறி…. ஆங்கிலப் பாடல்களில் கெட்ட வார்த்தைகளை ஓரளவு ஏற்றுக்கொள்வது சரிதான்; ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய புதுமை (அல்லது புது வழக்கு) ஏற்படுவதே குறிப்பிடத்தக்க மாற்றம்...

இன்ஸ்டா, யூடியூப் போன்ற தளங்கள் இந்த மாற்றத்தை வேகமாக தள்ளிச் செலுத்துகிறது... குட்டி மியா போன்று கெட்டவார்த்தைகளை பேசி இளம் தலைமுறையின் “விரும்பும்” கலைஞர்கள்??(இவர்கள் கலைஞர்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை), சமூக ஊடக ஆற்றலால் பெரும் செல்வாக்கைப் பெறுகிறார்கள்... இது ஒரு வகையில் கலாச்சார மாற்றமா, அல்லது தமிழ் மொழியின் மிதநிலை தன்மைக்கு அடித்துக் கொள்ளுதலா என்பதை யோசிக்கவேண்டும்...

கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ஈழத்து குட்டிம்மா என புகழ்சூட்டக்கூடிய சாளினி என்கிற பெண்மணி பற்றி மிகப்பெரிய சர்ச்சை ஓடி இன்று அவர் இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்..

Reference 🤣🤣( 1)https://www.facebook.com/share/v/1Bf3xijrPP/?mibextid=wwXIfr

2) https://youtube.com/@salini24?si=rY39fND-RaoCysKY)

அப்புறம் அதே தளத்தில் சங்கவி என்கிற யூரியூப்பில் செய்தி சனல் நடத்துகிற பெண்பற்றியும் எழுதுகிறார்கள்.. எனினும் எனக்கு இந்த இரண்டாவது பெண்ணை பற்றி எழுதப்படுவதில் உடன்பாடு இல்லை என்பதுடன் இதை எழுதிய அதே தளம் பல நல்லவைகள் செய்தாலும் இந்தப்பெண் பற்றி எழுதியதற்கு(சாளினியை பற்றி அல்ல சங்கவி பற்றி எழுதியதற்கு) உரிய தண்டனை பெறவேண்டும்.. ஏனெனில் இந்த இரண்டாவது பெண் பொதுவெளியில் அப்படி எதுவும் பேசவோ எழுதவோ வீடியோ போடவோ இல்லை.. அவர்கள் சொல்வதுபோல் அந்த பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால்கூட பொதுவெளியில் இந்த உறவுகளில் சம்பந்தப்பட்ட யாரும் பேசாதவரை அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கிறேன்..

நாம் எதை இழக்கிறோம், எதை பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்ளும் தருணத்தில் இருக்கிறோம்... இன்ஸ்டா பாடல்கள், “பீப்” கலாச்சாரம் — இவை அனைத்தும் தமிழின் இயல்பான நெறிகளை மாற்றக்கூடிய ஆற்றலுடன் இருக்கின்றன... இது ஒரு வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும்...

- பாலபத்திர ஓணாண்டி

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற முயற்சிகளில் இந்த துறையில் இப்பொழுது தான் பிரபலமானாலும், இலக்கிய உலகில் இது போல காலத்துக்கு காலம் நடந்து கொண்டேயிருக்கின்றது.சில ஈழப் பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் உட்பட சிலர் மிகவும் வெளிப்படையாகவும், பல இடங்களில் வேண்டும் என்றே திணித்து எழுதுவது போன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சொற்களும், விவரணைகளும் இருந்தாலே அது ஒரு உச்சமான இலக்கியம் என்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரிவினரால் கருதப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்கள், அது எந்த வகை என்றாலும், டி ராஜேந்தர் வகை என்றாலும், அராத்து வகை என்றாலும், தூத்துக்குடி கொத்தனார் வகை என்றாலும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். ஒரு உடனடி மனக் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்கும் எந்த படைப்பும் நீண்ட காலம் தங்கி நிற்பதும் இல்லை. ஒரு மனிதனின் அடிமனதில் போய் தங்கி நிற்பதுக்கு எதுவும் இல்லாத எந்த வகையான படைப்பும் மறைந்து விடும் என்பதே என் அனுபவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான், நீங்கள் எழுதியது உண்மையிலேயே கூர்மையான பார்வை... தமிழ் கலாச்சாரம் அதன் சொந்த அடையாளங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த போதிலும், சமூக ஊடகங்கள் அதில் புதிய அலைகளை உருவாக்கிவிட்டன என்பதில் எனக்கும் உடன்பாடு...

“தூத்துக்குடி கொத்தனார்” போன்ற பாடல்கள், மரியாதை குறைவான வார்த்தைகளை (அதுவும் எளிதில்) ஏற்றுக்கொள்ளும் சமூக நிலைமைக்கு அறிகுறி…. ஆங்கிலப் பாடல்களில் கெட்ட வார்த்தைகளை ஓரளவு ஏற்றுக்கொள்வது சரிதான்; ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய புதுமை (அல்லது புது வழக்கு) ஏற்படுவதே குறிப்பிடத்தக்க மாற்றம்...

இன்ஸ்டா, யூடியூப் போன்ற தளங்கள் இந்த மாற்றத்தை வேகமாக தள்ளிச் செலுத்துகிறது... குட்டி மியா போன்று கெட்டவார்த்தைகளை பேசி இளம் தலைமுறையின் “விரும்பும்” கலைஞர்கள்??(இவர்கள் கலைஞர்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை), சமூக ஊடக ஆற்றலால் பெரும் செல்வாக்கைப் பெறுகிறார்கள்... இது ஒரு வகையில் கலாச்சார மாற்றமா, அல்லது தமிழ் மொழியின் மிதநிலை தன்மைக்கு அடித்துக் கொள்ளுதலா என்பதை யோசிக்கவேண்டும்...

கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ஈழத்து குட்டிம்மா என புகழ்சூட்டக்கூடிய சாளினி என்கிற பெண்மணி பற்றி மிகப்பெரிய சர்ச்சை ஓடி இன்று அவர் இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்..

Reference 🤣🤣( 1)https://www.facebook.com/share/v/1Bf3xijrPP/?mibextid=wwXIfr

2) https://youtube.com/@salini24?si=rY39fND-RaoCysKY)

அப்புறம் அதே தளத்தில் சங்கவி என்கிற யூரியூப்பில் செய்தி சனல் நடத்துகிற பெண்பற்றியும் எழுதுகிறார்கள்.. எனினும் எனக்கு இந்த இரண்டாவது பெண்ணை பற்றி எழுதப்படுவதில் உடன்பாடு இல்லை என்பதுடன் இதை எழுதிய அதே தளம் பல நல்லவைகள் செய்தாலும் இந்தப்பெண் பற்றி எழுதியதற்கு(சாளினியை பற்றி அல்ல சங்கவி பற்றி எழுதியதற்கு) உரிய தண்டனை பெறவேண்டும்.. ஏனெனில் இந்த இரண்டாவது பெண் பொதுவெளியில் அப்படி எதுவும் பேசவோ எழுதவோ வீடியோ போடவோ இல்லை.. அவர்கள் சொல்வதுபோல் அந்த பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால்கூட பொதுவெளியில் இந்த உறவுகளில் சம்பந்தப்பட்ட யாரும் பேசாதவரை அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கிறேன்..

நாம் எதை இழக்கிறோம், எதை பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்ளும் தருணத்தில் இருக்கிறோம்... இன்ஸ்டா பாடல்கள், “பீப்” கலாச்சாரம் — இவை அனைத்தும் தமிழின் இயல்பான நெறிகளை மாற்றக்கூடிய ஆற்றலுடன் இருக்கின்றன... இது ஒரு வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும்...

- பாலபத்திர ஓணாண்டி

நன்றி…

இதை கொஞ்சம் free யாகத்தான் விட வேண்டும் போல இருக்கிறது.

மாறி கொண்டிருப்பதுதானே கலாச்சாரம்.

கேப்டன் மகள் படத்தில் வரும் “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” என்ற பாடல் அருவருப்பானது, கெட்ட உள்ளார்த்தம் உடையது என கூறி அதை என்னை வீட்டில் கேட்க விடமாட்டார் என் அப்பா🤣.

இது ஒரு சின்ன மேட்டர் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. அதில் என்ன விரசம் என்பது இன்னும் விளங்கவில்லை🤣.

இப்ப கொத்தானாரை கேட்டதும் நாமும் பூமர் அங்கிள் போல் ரியாக்ட் பண்ணுகிறோமோ தெரியவில்லை.

மேற்கத்தை சமூகம் இதை எல்லாம் தாண்டி வந்தும், இன்னும் ஓடி கொண்டுதானே இருக்கிறது. அடியோ சீரழியவில்லை என்பது நம்பிக்கை தருகிறது.

சாளினி ஆரம்பத்தில் அடக்கமாகதான் இருந்தவர். பின்னர் கொமெண்டுக்கு, பதில் சொல்லி கீழ்தரமாக பதில் சொல்லி போடும் வீடியோக்களின் பிரபலத்தை பார்த்து விட்டு மாறினார்.

கண்ணுக்கு முன்னால் நடந்த சீரழிவு அது.

குட்டி மியாவும் பாதி ஈழத்தமிழர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாதுவெல்லாம் நிலைக்காது எதிர்ப்பைக்காட்டி அதை பிரபலப்படுத்துவதை விட கடந்து போகவேண்டியதுதான். ஊரில் குடித்து விட்டு சிலர் புலம்புவதை கடந்து போவதைப் போல் கடந்து போகவேண்டியதான்.எத்தனை ஆயிரம் ஆண்டுகால மொழி உலகின் மூத்தமொழி இப்படி எத்தனை விடயங்களைக் கடந்து வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது.

நாங்கள் தான் எல்லாவற்றிலும் பின் தங்கியவர்கள் ஆச்சே

இதையும் கடந்து போவம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கட்டுப்பாடில்லா ஊடக வளர்ச்சியால் வந்த வினை.

எண்டாலும் எம்ஜிஆர் பட பாடல்களை கேட்டால் இன்றையவர்கள் நேரடியாக பாடுவதை அன்று மறைமுகமாக பாடியிருப்பார்கள்.

அதிலையும் வைரமுத்துவும் லேசுப்பட்ட ஆளில்லை.🤣

https://youtu.be/Vi7xbHxW0SU?si=Wxgi72w-dph-t_LN

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நாங்கள் தான் எல்லாவற்றிலும் பின் தங்கியவர்கள் ஆச்சே

இதையும் கடந்து போவம்

நல்லாத்தான் இருக்கு கடந்து போவோம்...கலி காலம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தூத்துகுடி கொத்தனாரு”.

இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன்.

நன்றாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன்.

நன்றாகவே இருந்தது.

பாட்டும்...பொழிப்புரையும் நல்லா இருந்தது என்று சொல்லுங்க...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.