Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். எனக்கு அன்பாய் கதைச்சு அப்பு ராசா என்று நடித்து வேலை வாங்க எல்லாம் தெரியாது.

அப்படி அன்பாய்க் கதைக்கவேண்டியதில்லை. அதட்டியும் கதைக்கவேண்டியதில்லை.

ஒருவரின் வேலையை அவர் முன்னர் செய்த இடத்தில் எப்படிச் செய்தார் என்று பார்க்கவேண்டும். நன்கு நம்பிக்கையானவர்களின் சிபார்சு என்றாலும் முழு நம்பிக்கை வைக்காமல் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து பிடிக்காவிட்டால் உடனேயே அனுப்பிவிடவேண்டும். ஆட்களைப் பிடிப்பது கடினம் என்பதற்காக சொட்டை வேலைக்காரரை வைத்து அவர்கள் சொறி வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனக்கும் ஊரில் போய் இருக்கும் ஐடியா இருக்கு. இன்னும் பல வருடங்கள் ஆகலாம்!

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அப்படி அன்பாய்க் கதைக்கவேண்டியதில்லை. அதட்டியும் கதைக்கவேண்டியதில்லை.

ஒருவரின் வேலையை அவர் முன்னர் செய்த இடத்தில் எப்படிச் செய்தார் என்று பார்க்கவேண்டும். நன்கு நம்பிக்கையானவர்களின் சிபார்சு என்றாலும் முழு நம்பிக்கை வைக்காமல் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்து பிடிக்காவிட்டால் உடனேயே அனுப்பிவிடவேண்டும். ஆட்களைப் பிடிப்பது கடினம் என்பதற்காக சொட்டை வேலைக்காரரை வைத்து அவர்கள் சொறி வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனக்கும் ஊரில் போய் இருக்கும் ஐடியா இருக்கு. இன்னும் பல வருடங்கள் ஆகலாம்!

எனக்கு மரம் வெட்ட பாத்திகள் கட்ட வந்தவர்கள் மூவர் நல்ல வேலைக்காரர்கள் தான். ஆனால் அவர்களும் நாம் பக்கத்தில் நின்று சொன்னால்த்தான் நன்றாகச் செய்கின்றனர். அந்தப்பக்கம் போனால் ஏனோதானோ என்றுதான். பொது அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைக் கூடத் தவராகச் செய்தால் என்ன செய்வது. நாம் போய் இருந்தால் மட்டுமே சரியானவர்களைத் தெரிவுசெய்ய முடியும். எல்லோரும் தம் வேலைகளை எல்லா இடமும் தக்கவைத்துக்கொள்ள அங்கொருகால் இங்கொருகால் என மனச்சாட்சியின்றி ஒழுங்காக ஒரு வேலையை முடிக்காமல் அழைக்கழிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் துணிந்து வாங்குங்கோ. எழுதுற விடயத்தில் உதவி தேவை என்றால் மணிவண்ணனின் போன் இலக்கம் தாறன் 😂

சமதரையில் புல்லு வெட்டுவதற்குத்தான் உந்த மெஷின் சரி. பாத்தி கட்டியிருக்கிற இடத்தில அதை நகர்த்துவது கடினம். உங்களுக்கு தோட்டத்தின் அனுபவம் இல்லை. அதனாலத்தான் உப்பிடிக்க சொல்கிறீர்கள். இந்தியாவில் எல்லாமே இருக்கு. எமது நாட்டில் எல்லாம் இறக்குமதி இல்லை. சிறிய உளவு இயந்திரங்கள், மரம் தடிகளை அரைக்கும் மிஷின் என்று எமக்கும் நிறைய ஐடியா இருக்கு. ஆனால் போய் இருக்காமல் எதையும் புதிதாக வாங்கி ஆரையும் நம்பி வைத்துவிட்டு வரும் எண்ணம் இல்லை.

இப்போதைக்கு அப்பிடி காணி கீணி வாங்கிறமாதிரி யோசினை இல்லை. காலம் மாறலாம். பார்ப்போம்.

இயந்திரங்களை வாங்க முடியுமாயின் வாங்கி உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொன்னமாதிரி, அங்கே இருந்து செய்வதுதான் நல்லது.

சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் உங்களிடம் வருகைதரலாம்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கேட்பது உங்கள் பெயரில் உள்ளதை வேறு ஒருவருக்கு மாற்றுவது பற்றியா ? அல்லது அங்கு உள்ளதை உங்கள் பெயருக்கு மாற்றுவது பற்றியா?

அங்கு வேறு ஒருவர் பெயரில் இருக்கும் காணிகளை என் பெயருக்கு அல்லது என் பிள்ளைகளுக்கு மாற்றுவது பற்றி கேட்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான். எனக்கு அன்பாய் கதைச்சு அப்பு ராசா என்று நடித்து வேலை வாங்க எல்லாம் தெரியாது.

நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2025 at 21:53, செம்பாட்டான் said:

இப்போதைக்கு அப்பிடி காணி கீணி வாங்கிறமாதிரி யோசினை இல்லை. காலம் மாறலாம். பார்ப்போம்.

இயந்திரங்களை வாங்க முடியுமாயின் வாங்கி உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொன்னமாதிரி, அங்கே இருந்து செய்வதுதான் நல்லது.

சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் உங்களிடம் வருகைதரலாம்.

தாராளமாக வாங்கோ 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2025 at 22:31, குமாரசாமி said:

அங்கு வேறு ஒருவர் பெயரில் இருக்கும் காணிகளை என் பெயருக்கு அல்லது என் பிள்ளைகளுக்கு மாற்றுவது பற்றி கேட்கின்றேன்.

பிள்ளைகள் அதீத துணிவும் திறமையும் கொண்டவர்கள் என்றால் கூட அங்கு நாம் இல்லாதவரை காணியை அவர்கள் பெயருக்கு எழுதுவது நல்ல யோசனை இல்லை. அவர்கள் அங்கு சென்று இருக்கப்போவதில்லை. அவர்களை மற்றவர் ஏமாற்ற முயலலாம். நீங்கள் போய் இருப்பீர்கள் என்றால் உங்கள் பெயரில் எழுதுவது நல்லது. போவதில்லை என்று முடிவு எடுத்தால் விற்றுவிடுவதுதான் நல்லது. உங்கள் காணி வேறு யாரின் பெயரில் இருக்குமானால் உடனே உங்கள் பெயருக்கு மாற்றுவதுதான் நல்லது. உங்கள் உ றவினார் நல்லவர்கள் என்றாலும்கூட காலம் அவர்களை மாற்றலாம்.

On 13/4/2025 at 02:45, satan said:

நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

முதல் தடவை நான் புற்கள் பிடுங்கினேன். ஒவ்வாமை ஏற்பட்டு கைகள் எல்லாம் கொப்புளங்கள் ஏற்பட்டபின் கை வைப்பதில்லை. கடந்த ஆண்டு இரு அறைகளுக்கு மார்பிள் போட வெளிக்கிட்டு நானே அவர்களைத் திருத்துமளவு வேயாய். கடைசியில் போட்டுமுடியும்வரை கணவர் கூடவே நின்றதானால் ஒழுங்காகப் போட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைகள் அதீத துணிவும் திறமையும் கொண்டவர்கள் என்றால் கூட அங்கு நாம் இல்லாதவரை காணியை அவர்கள் பெயருக்கு எழுதுவது நல்ல யோசனை இல்லை. அவர்கள் அங்கு சென்று இருக்கப்போவதில்லை. அவர்களை மற்றவர் ஏமாற்ற முயலலாம். நீங்கள் போய் இருப்பீர்கள் என்றால் உங்கள் பெயரில் எழுதுவது நல்லது. போவதில்லை என்று முடிவு எடுத்தால் விற்றுவிடுவதுதான் நல்லது. உங்கள் காணி வேறு யாரின் பெயரில் இருக்குமானால் உடனே உங்கள் பெயருக்கு மாற்றுவதுதான் நல்லது. உங்கள் உ றவினார் நல்லவர்கள் என்றாலும்கூட காலம் அவர்களை மாற்றலாம்.

முதல் தடவை நான் புற்கள் பிடுங்கினேன். ஒவ்வாமை ஏற்பட்டு கைகள் எல்லாம் கொப்புளங்கள் ஏற்பட்டபின் கை வைப்பதில்லை. கடந்த ஆண்டு இரு அறைகளுக்கு மார்பிள் போட வெளிக்கிட்டு நானே அவர்களைத் திருத்துமளவு வேயாய். கடைசியில் போட்டுமுடியும்வரை கணவர் கூடவே நின்றதானால் ஒழுங்காகப் போட்டார்கள்.

நீங்கள் கடினமான வேலை செய்து பழக்கப்படாதவர், முதல்முதல் பிடுங்கும் போது அப்படித்தான் வரும். தொடர்ந்து செய்யும்போது கைகள் பலப்பட்டு, பின்பு நீங்களே வேலை பழகி, அவர்களை விட வேகமாகவும், அழகாகவும் செய்வீர்கள். அதன்பின் வீட்டில் இருக்க மாட்டீர்கள், தோட்டத்திற்குள் ஏதாவது செய்துகொண்டே இருப்பீர்கள். வேலையாட்கள் தேவையில்லை என்றே சொல்வீர்கள். எங்கள் அம்மாவுக்கும் உந்த வேலைகள் பரீட்சயமில்லை. ஆரம்பத்தில் விரல்கள் எல்லாம் பொக்களமாக்கி பல ஊசிகள் ஏற்றப்பட்டன. அதன்பின் தோட்டத்தில் எல்லாவேலையும் தானே செய்வா வீட்டுக்கு வராமலே நின்று. நாங்கள் கற்றுக்கொண்டு நமது வேலையை நாமே செய்ய ஆரம்பிக்கும்போது, தாங்கள் முறையாக, நிஞாயமாக வேலை செய்யாவிட்டால் தம்மை இனி யாரும் வேலைக்கு அழைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து சரியாக செய்வார்கள். இல்லது வேலை என்று சொல்லி வந்து சொறிவதை மறந்து விட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

கையில் புண்களினால் ஏற்பட்ட வடுக்கள் எனக்கு இரண்டு ஆண்டுகளாகியும் முற்றாகப் போகவில்லை. இலங்கையில் இருப்பவர்கள் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கையில் புண்களினால் ஏற்பட்ட வடுக்கள் எனக்கு இரண்டு ஆண்டுகளாகியும் முற்றாகப் போகவில்லை. இலங்கையில் இருப்பவர்கள் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்.

புல்லு புடுங்க வேண்டியதில்லை சாறாலம். அதற்கு ஜேர்மனியில் பலவகையான. ஆயுதங்கள் உண்டு” இரண்டு பேர. ஒரு நாளில் இரண்டு மூன்று நாலு ஏக்கர் சாறுவார்கள்.

அதாவது நிலத்தின் மேல் பகுதியில் 60. பாகை அல்லது 75 பாகையில். உழவாரம். போன்ற அமைப்பு இரும்பினால். ஆனாது. பாரமில்லாதது அதாவது மிக குறைவு இதனால் கொத்தி கொண்டு போவார்கள் குனிந்தால். அரை மணிவரை நிமிரக்காடாது. 🤣 பழகி விட்டீர்கள் என்றால் நீங்களே சம்பளத்துக்கு புல் வெட்டப். போவீங்கள். மிகவும் இலகுவான வேலை வெட்டப்பட்ட புல்லு கருகிவிடும் ஏருவாகும். பூக்கள் வர முதல் வெட்ட வேண்டும் பத்து பதினைந்து நாளைக்கு ஒருமுறை வெட்டலாம். அல்லது புல். இருந்தால் மட்டும் வெட்டலாம். இதற்கு நிறைய ஆயுதங்களுண்டு மின்சாரம் மற்றும் மின்சாரம் இல்லாமல் கையால் இயக்குவது தோட்டத்தில் பயிர்கள். இருக்கும் போதும் பாவிக்கலாம். இணையத்தில் தேடிப்பாருங்கள். நிச்சயம் லண்டனில் வேண்ட முடியும் நான் சொல்வது சின்ன மண்வெட்டி. போன்றது ஆனால் மண்வெட்டி. இல்லை லண்டனில் நாற்றுகள். எருக்கள். அதாவது பசளை மற்றும் தோட்டம் சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃

இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃

இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .

ஒன்று வரி செலுத்துங்கள், இல்லையேல் உடலை வருத்துங்கள். எப்படியென்றாலும் உங்கள் உடல் உழைத்தாலேயே வரியும் செலுத்த முடியும். புல் பிடுங்குவது ஒரு பொழுது போக்கு, உடற்பயிற்சி. ஒரு உழவாரம் வாங்குங்கள், முதலில்  ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் முப்பது நிமிடம் செருக்குங்கள், பின் நீங்களாகவே உங்களையறியாமல் நேரம் போவது தெரியாமல் செருக்குவீர்கள். அல்லது அயலில் யாராவது மாடு வைத்திருந்தால் செருக்கி எடுக்கும்படி சொல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உழுது விட்டு புல்லை வேரோடு அரித்து எடுத்து எரித்து விடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.