Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகள் மீதான தடை தங்களின் நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது என ஜேவிபி அறிவித்திருக்கின்றது

அதே போல பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்லி இருக்கின்றது

குறிப்பாக மனித உரிமை மீறல்கள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என பழைய கதை பேசியிருக்கின்றது

ஆனால் அதே ஜேவிபி போர்குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுள்ள சம்பத் துயகொண்டாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ளது

Haiti நாட்டில் குழந்தைகளை பா*லியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இராணுவத்திற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளில் ஒருவரான அருணா ஜெயசேகராவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளது

பிரித்தானியா தடை விதித்த அதிகாரிகளில் 11 கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தி கொ*ல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி வசந்த கரன்னாகொட அவர்களும் உள்ளடங்கிருக்கிறார்

உள்நாட்டு பொறிமுறையில் தீர்வு பற்றி பேசும் ஜேவிபி இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு உதவிய கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபை தலைவராக நியமித்துள்ளது

யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது

போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க போவதில்லை என அறிவித்துவிட்டு பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாக சொல்லுகின்றது

நல்லிணக்கம் பற்றி பேசும் ஜேவிபி தையிட்டி விகாரை விவகாரத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்தி அச்சுறுத்தி வருகின்றது

இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது

ஆனால் அங்குள்ள சட்டவிரோத கட்டுமானம் குறித்தோ அல்லது அதற்கு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் எந்த விசாரணையும் இல்லை

இது போதாதென்று பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 20 தமிழ் சிவில் மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஏவிவிட்டிருக்கின்றது

சம காலத்தில் மட்டக்களப்பு அரச வங்கியொன்றில் நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சுமணரத்தின தேரர் மீது எந்த நடவடிக்கையுமில்லை

திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீதான முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

வவுனியா ஊற்றுக்குளம் சாட்டவிரோத சபுமல்கஸ்கட விகாரை சூழலில் புதிய தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிருக்கின்றது

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வட்டவான் பகுதியில்“வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு புதிய தொல்லியல் இடமொன்றுக்கு அனுமதியளித்திருக்கின்றது

அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது

பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிருக்கின்றது

விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பது குறித்து எந்த அக்கறையுமில்லை

குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பது தெளிவாக இருக்கின்றது

நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமிழர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு (political will) எள்ளளவும் ஜேவிபி க்கு கிடையாது என்பதும் நிரூபணமாகின்றது

ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஜேவிபியை நியாயம் செய்யும் அறிஞ்சர் (?) பெருமக்களும் இப்போதாவது தங்கள் வாயை திறக்க கூடாதா ?

Facebook...இனமொன்றின் குரல்..நன்றீ

  • கருத்துக்கள உறவுகள்

487309182_1070570885107883_8074891581061

487330217_1071141201717518_4144871093276

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

யாரும் எதையும் முகப்புத்தகத்தில் எழுதலாம். மகிந்த குடும்பம் அல்லது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் புலிகளை வெறுத்தவர்கள். புலிகளின் இலக்காக இருந்தவர்கள். கருணாவை சாட்டி தப்ப முயல்கிறார்கள்.

அதற்காக கருணா நல்லவர் என்பதல்ல.

பாலசந்திரனை கொல்ல கோத்தபய தான் அனுமதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஒட்டுக்குழுவை உருவாக்கி அவர்கள் மூலம் தமது இலக்கை அடைய தொடக்கம் முதல் இறுதி வரை சிங்களம் தான் தப்ப முயன்றது வரலாறு.

உண்மை. சிங்களம் தப்பிக்க தமிழர் தரப்பின் மேல் பழியை போடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சரணடைய வந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர். கோத்தா தான் இதற்கு உத்தரவு இட்டது.

அத்துடன் பாலச்சந்திரன் இவர்களுடன் சேர்ந்து சரணடைய வரவில்லை. தலைவரின் நெருங்கிய உறவு ஒருவரால் இராணுவம் அனைத்தையும் முழுமையாக கைப்பற்றிய பின் அழைத்துவரப்படும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் என்று தான் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

487033617_1068919568612378_1759887503299

பிரித்தானிய அரசாங்கம் ஒரு “மொக்கு” அரசாங்கம் - கடுமையாக சாடும் கருணா.

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

ஆரம்பத்திலிருந்தே பாலச்சந்திரனைக் கொல்ல இராணுவத்திடம் கோரியது கருணா என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். "இவனை விட்டால், தகப்பன் மாதிரியே மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குவான், ஆகவே கொல்லுங்கள்" என்று கருணா கூறியதாகச் செய்திகள் அப்போது வந்திருந்தன. அதேபோல ரமேஷைக் கொல்லச் சொன்னதும் கருணாதான். ஏனைய தளபதிகள் குறித்து இதுவரை நான் அறியவில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

தனது இனத்தைச் சேர்ந்த சிங்களத் தளபதிகளைக் காப்பாற்றுவதாக எண்ணி தனது வளர்ப்பு நாயான கருணாவைக் காட்டிக்கொடுத்து ஈற்றில் தன்னையும் இப்பட்டியலில் சேர்க்க மகிந்த விரும்புவான் என்று நினைப்பது கடிணம். கருணா இவற்றைச் செய்யவில்லை என்று நினைப்பதற்கு அவன் ஒன்றும் உத்தமன் இல்லையே?

அரசாங்க தரப்பு இதை நீதிமன்றம் ஒன்றில் கூறினால் ஏற்பார்களா? இந்த வாதம் எடுபடுமா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:

இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது

15 hours ago, alvayan said:

பிரித்தானியா அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகள் மீதான தடை தங்களின் நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது என ஜேவிபி அறிவித்திருக்கின்றது

அதே போல பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்லி இருக்கின்றது

குறிப்பாக மனித உரிமை மீறல்கள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என பழைய கதை பேசியிருக்கின்றது

ஆனால் அதே ஜேவிபி போர்குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுள்ள சம்பத் துயகொண்டாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ளது

Haiti நாட்டில் குழந்தைகளை பா*லியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இராணுவத்திற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளில் ஒருவரான அருணா ஜெயசேகராவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளது

பிரித்தானியா தடை விதித்த அதிகாரிகளில் 11 கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தி கொ*ல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி வசந்த கரன்னாகொட அவர்களும் உள்ளடங்கிருக்கிறார்

உள்நாட்டு பொறிமுறையில் தீர்வு பற்றி பேசும் ஜேவிபி இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு உதவிய கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபை தலைவராக நியமித்துள்ளது

யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது

போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க போவதில்லை என அறிவித்துவிட்டு பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாக சொல்லுகின்றது

நல்லிணக்கம் பற்றி பேசும் ஜேவிபி தையிட்டி விகாரை விவகாரத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்தி அச்சுறுத்தி வருகின்றது

இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது

ஆனால் அங்குள்ள சட்டவிரோத கட்டுமானம் குறித்தோ அல்லது அதற்கு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் எந்த விசாரணையும் இல்லை

இது போதாதென்று பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 20 தமிழ் சிவில் மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஏவிவிட்டிருக்கின்றது

சம காலத்தில் மட்டக்களப்பு அரச வங்கியொன்றில் நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சுமணரத்தின தேரர் மீது எந்த நடவடிக்கையுமில்லை

திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீதான முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

வவுனியா ஊற்றுக்குளம் சாட்டவிரோத சபுமல்கஸ்கட விகாரை சூழலில் புதிய தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிருக்கின்றது

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வட்டவான் பகுதியில்“வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு புதிய தொல்லியல் இடமொன்றுக்கு அனுமதியளித்திருக்கின்றது

அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது

பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிருக்கின்றது

விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பது குறித்து எந்த அக்கறையுமில்லை

குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பது தெளிவாக இருக்கின்றது

நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமிழர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு (political will) எள்ளளவும் ஜேவிபி க்கு கிடையாது என்பதும் நிரூபணமாகின்றது

ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஜேவிபியை நியாயம் செய்யும் அறிஞ்சர் (?) பெருமக்களும் இப்போதாவது தங்கள் வாயை திறக்க கூடாதா ?

Facebook...இனமொன்றின் குரல்..நன்றீ

இனமொன்றின் நியாயமான குரல் ...ஆனால் இதெல்லாவற்றையும் அபிவிருத்தி என்ற ஒற்றைசொல்லுக்குள் புதைத்துவிட்டு ,அதன் மேல் தமிழ் இளைஞர்களை வழி நடத்தி செல்ல இடதுசாரி முகமூடி அணிந்த சிங்கள இனவாத கட்சிகள்/அதிகர வர்க்கம் முன்வந்துள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

யாரும் எதையும் முகப்புத்தகத்தில் எழுதலாம். மகிந்த குடும்பம் அல்லது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் புலிகளை வெறுத்தவர்கள். புலிகளின் இலக்காக இருந்தவர்கள். கருணாவை சாட்டி தப்ப முயல்கிறார்கள்.

அதற்காக கருணா நல்லவர் என்பதல்ல.

பாலசந்திரனை கொல்ல கோத்தபய தான் அனுமதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஒட்டுக்குழுவை உருவாக்கி அவர்கள் மூலம் தமது இலக்கை அடைய தொடக்கம் முதல் இறுதி வரை சிங்களம் தான் தப்ப முயன்றது வரலாறு.

ஆயுத போராட்டடைத்த அழிக்க தமிழ் ஒட்டுக்குழு,

அகிம்சை போராட்டத்தை அழிக்க இடதுசாரி முகமூடி போட்ட தமிழ் குழு

On 26/3/2025 at 00:04, பிழம்பு said:

இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள சிறீதரன் எம்.பி, இந்த விடயம் குறித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிதரனுக்கு பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை..

2066389731.jpg

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

“யுத்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அதேபோல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார். அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய ஆகியோர் பதவி நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள். அவ்வாறாயின் ஏன் சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்கவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே தடுத்தார்.

1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனிதப் படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொன்று, தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பெரிய பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்குப் பாடம் கற்பிக்கின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்தத் தடையை விதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்றும் நாட்டில் உள்ளார்கள்.

பிரித்தானியாவில் தற்போதைய முறையற்ற செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் நாட்டில் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தரப்பினர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். நினைவேந்தல் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது” என்றார்.

https://newuthayan.com/article/பொன்சேகா_மீது_பிரிட்டன்_ஏன்_தடை_விதிக்கவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

487170689_682153004208838_18973068955629

கருணாவுக்கு பிரித்தானிய பாதுகாப்பு கொடுத்தது என்பது உண்மை இல்லை!

2007, நவம்பர்,02, ல் பிரித்தானியாவிற்கு போலி கடவுச்சீட்டில் சென்றதால் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சரியாக எட்டு மாதங்களால் லண்டன் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டு 2008,யூலை,02, ல், லண்டனில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

லண்டனில் இருந்து இலங்கை அரசிடம் ஒப்படைக்கவே கட்டுநாயக்கா விமான நிலையம் வரை அவர்கள் வந்து இலங்கை அரசின் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Monisha Kokul

கருணா... பிரித்தானிய சிறையில் இருக்கும் போது.. மற்றைய கைதிகள் சுடு தண்ணீரால் ஊற்றிய கூத்தும் நடந்தது. அதனை கருணா மறந்திருந்தாலும், நாங்கள் மறக்கவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

487381759_1073449251486713_7099340110605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் ; சரத் பொன்சேகா தெரிவிப்பு!

1604536539.jpg

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜகத் ஜயசூரிய, வசந்த கரன்னாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள்.

போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன்.

அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திரசில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும்.

மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார். 

https://newuthayan.com/article/இராணுவத்தினர்_மனித_உரிமை_மீறல்களில்_ஈடுபட்டிருந்தால்_தண்டிக்கப்பட_வேண்டும்_;_சரத்_பொன்சேகா_தெரிவிப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம் ; முன்னாள் ஜனாதிபதிகளையும் உள்ளடக்கவேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

30 Mar, 2025 | 01:54 PM

image

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், 

இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்.

இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலைஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும். 

இவ்வாறு தடைவிதிக்கப்படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும். 

அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு

இதேவேளை 19காணாமல் போனஉறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். 

அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. 

மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.

எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

IMG_20250330_104333__1_.jpg

IMG_1014.jpg

IMG_1011.jpg

IMG_1017.jpg

IMG_20250330_104408__1_.jpg

IMG_20250330_104333__1_.jpg

https://www.virakesari.lk/article/210625

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2025 at 08:16, பிழம்பு said:

Gm2UYbFWoAEHXwk.jpg

இதில் இருவரின் ( கருணா + சவேந்திர சில்வா) பிறந்த திகதி மாதம் ஒன்றாகவும் மூவரின் ( கருணாகோடா வசந்த) பிறந்த திகதி ஒன்றாகவும் இருக்கிறது.

22/06 ( is it a coincidence?)

யாரவது நுமராலாகி கார்கள் இருக்கிறீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.