Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

FB_IMG_1742933839908.jpg

சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட
சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே
சிற்றுண்டிகளினை விற்கிறார்கள்.

யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம்.

🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை
சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது.

கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு
கேட்டதற்கு..

🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்."

🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது.

🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம்.

🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள
சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு : 077 275 9799

வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்..

Copy post

https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/

Edited by நிழலி
தலைப்பை மாற்ற

  • நிழலி changed the title to யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

பூந்தி லட்டு முதல் சமோசா வரை
சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது.

அடுத்த தடவை இந்த கடைக்கு போய் சாப்பிட்டு பார்ப்போம்...🧡

மாற்று கருத்துவைக்க வேணுமே என்று என்ட கை துடிக்கும் பொழுது ....🤣

பாரம்பரிய உணவான வடை,போண்டா,சூசியம் போன்றவற்றை குறிப்பிடாமல் 🤣....சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣

  • கருத்துக்கள உறவுகள்

போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் ..........! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் ..........! 😁

உங்க ஏரியா தானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்க ஏரியா தானே.

ஓம் ........ ஓம் ........ முன்பு அப்படி ஒரு உணவகம் கிடையாது . ......... பின்னாளில் ஆரம்பித்திருக்கிறார்கள் போல ..........!

  • கருத்துக்கள உறவுகள்

போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் .

56 minutes ago, putthan said:

பாரம்பரிய உணவான வடை,போண்டா,சூசியம் போன்றவற்றை குறிப்பிடாமல் 🤣....

இதற்காக நான் அலையாத இடமில்லை...

சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣

எங்கு போனாலும் இதே மயம் ...புரியாணியும் கொத்து ரொட்டியும் ....வாழஇலையில் ..ஒரு சாப்பாடு சாப்பிட தேடித்திரிந்து அந்த ஆசை நிறைவுறாமலே வந்து சேர்ந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் .

இதற்காக நான் அலையாத இடமில்லை...

புலம் பெயர்ந்த பிரதேசங்களில் கிடைக்கும் ஆனால் தாயகத்தில் கஸ்டம் தான்...போல இருக்கு ...

மடகஸ்கர்,சிசெல்ஸ்,யூனியன் டெரிட்டரி,சில ஹரிபியன் தீவு நாடுகளில்,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 400 வருடங்களுக்கு முதல் குடியேரிய தமிழர்கள் சில நாட்டுபுற தெய்வங்களை இன்னும் வழிபடுகின்றனர் ..அவர்களுக்குள் கல்வியாளர்களும் அடக்கம்...ஆனால் தமிழர் பிரதேசங்களில் (தமிழ் நாடு உட்பட)கிராமப்புற வழிபாடு மாறி பெரும் தெய்வழிபாடு மற்றும் கொப்பரேட் சாமிகளின் வழிபாடு அதிகரித்து வருகிறது ....

அதுபோல நம்ம வடை ,போண்டா,சூசியம் எல்லாம் 400 வருடங்களின் பின்பும் சிட்னியில் கிடைக்க எம்பெருமான் சிட்னி நாயகன் முருகன் குருஞ்சி குமரன் அருள் பாலிக்க வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்."

இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன்.

தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள்

நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது

சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம்

முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அதுபோல நம்ம வடை ,போண்டா,சூசியம் எல்லாம் 400 வருடங்களின் பின்பும் சிட்னியில் கிடைக்க எம்பெருமான் சிட்னி நாயகன் முருகன் குருஞ்சி குமரன் அருள் பாலிக்க வேண்டும்🤣

உண்மைதான்...சிட்னியிலும் ..கனடாவிலும் இருக்கும்...ஆனால் சுவைதான் எங்கையோ போயிடும்..கைப்பக்குவம் என்பது எப்பவோ கைவிட்டுப்போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

ஓம் ........ ஓம் ........ முன்பு அப்படி ஒரு உணவகம் கிடையாது . ......... பின்னாளில் ஆரம்பித்திருக்கிறார்கள் போல ..........!

இந்த மூலையில் இருந்த கடையில் கீரைவடை விற்பார்கள்.சுவையாகவும் பசிக்கும் தாக்குப் பிடிக்கும்.

அனேகமாக வெள்ளிக்கிழமை அல்லது விரதநாட்களில் கடையில் சாப்பிட பணம் தருவார்கள்.

பத்மாகபேக்கு போனால் மதியம் கூட்டமாக இருக்கும்.

இதிலென்றால் ஒன்று 10 சதம் 2 வடை வாங்கி வைரவ கோவில் மதிலில் இருந்து ஆறுதலாக சாப்பிடலாம்.

2 hours ago, வாத்தியார் said:

நாங்கள் படிக்கும்போது

ஓஓஓஓஓஓஓ வாத்தியாரும் இந்துவோ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

FB_IMG_1742933839908.jpg

சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட
சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே
சிற்றுண்டிகளினை விற்கிறார்கள்.

யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை."

பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம்.

🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை
சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது.

கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு
கேட்டதற்கு..

🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்."

🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது.

🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம்.

🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள
சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு : 077 275 9799

வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்..

Copy post

https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/

எல்லாம்... வியாபாரம் ஆகி விட்ட உலகில், இப்படி ஒரு நல்ல உள்ளம்... சேவை மனப்பான்மையுடன் கடை நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

14 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த மூலையில் இருந்த கடையில் கீரைவடை விற்பார்கள்.சுவையாகவும் பசிக்கும் தாக்குப் பிடிக்கும்.

அனேகமாக வெள்ளிக்கிழமை அல்லது விரதநாட்களில் கடையில் சாப்பிட பணம் தருவார்கள்.

பத்மாகபேக்கு போனால் மதியம் கூட்டமாக இருக்கும்.

இதிலென்றால் ஒன்று 10 சதம் 2 வடை வாங்கி வைரவ கோவில் மதிலில் இருந்து ஆறுதலாக சாப்பிடலாம்.

நானும் மதிய உணவாக இந்தக் கீரை வடையை சாப்பிட்டுள்ளேன்.

கோதுமை மாவில் செய்திருந்தாலும்... அதற்குள் போட்டுள்ள கீரை, பச்சை மிளகாய் போன்றவை நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:
9 hours ago, தமிழ் சிறி said:

On 25/3/2025 at 20:26, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓஓஓ வாத்தியாரும் இந்துவோ?

வாத்தியார் இந்து என்று தெரியாமல்..கிரிக்கட்டில்..சொறிந்து போட்டன்..வாத்தியாரிடம் வாங்கியும் கட்டிவிட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

On 25/3/2025 at 23:16, வாத்தியார் said:

இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன்.

தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள்

நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது

சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம்

முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்

On 26/3/2025 at 01:26, ஈழப்பிரியன் said:

இந்த மூலையில் இருந்த கடையில் கீரைவடை விற்பார்கள்.சுவையாகவும் பசிக்கும் தாக்குப் பிடிக்கும்.

அனேகமாக வெள்ளிக்கிழமை அல்லது விரதநாட்களில் கடையில் சாப்பிட பணம் தருவார்கள்.

பத்மாகபேக்கு போனால் மதியம் கூட்டமாக இருக்கும்.

இதிலென்றால் ஒன்று 10 சதம் 2 வடை வாங்கி வைரவ கோவில் மதிலில் இருந்து ஆறுதலாக சாப்பிடலாம்.

ஓஓஓஓஓஓஓ வாத்தியாரும் இந்துவோ?

1 hour ago, alvayan said:

வாத்தியார் இந்து என்று தெரியாமல்..கிரிக்கட்டில்..சொறிந்து போட்டன்..வாத்தியாரிடம் வாங்கியும் கட்டிவிட்டன்

அல்வாயன்… ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. 😂 🤣

சுவி, ஈழப்பிரியன், நெடுக்காலை போவான், வாலி, கந்தையா அண்ணை எல்லாரும் இந்துக் கல்லூரிதான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்… ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. 😂 🤣

சுவி, ஈழப்பிரியன், நெடுக்காலை போவான், வாலி, கந்தையா அண்ணை எல்லாரும் இந்துக் கல்லூரிதான்.

ஏன் சிறி உங்களை விட்டுட்டீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் சிறி உங்களை விட்டுட்டீங்க?

ஈழப்பிரியன்... தன்னடக்கம். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.