Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அதிரடி தாக்குதல் 5 படையினர் பலி! 10 பேர் படுகாயம்

Featured Replies

திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம்

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

www.puthinam.com

ஆகா சிங்களத்துக்கு கோர அடி திஸ்ஸமகாரம கதிர்காமத்துக்கு அருகில் இருக்கும் பரதேசம் அப்படியாயின் இந்த செய்தி உண்மைதானா

திஸ்ஸமகரமவில் புலிகள்?: அச்சத்தில் மக்கள்- கோபத்தில் மகிந்த

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:34 AM ஈழம்] [க.திருக்குமார்]

தென்னிலங்கையின் திஸ்ஸமகரமவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி உள்ளதாக நேற்று பு மாலை பரவிய வதந்தியை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் உள்ள வான்படை தளத்திற்கு ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமகரமப் பிரதேசத்தில் உள்ள ரன்மினிதென்னப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஆயுதம் தாங்கிய நபர்கள் ஊடுரூவி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இத்தகவல் பரவியதனைத் தொடர்ந்து கடுமையாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பதறியடித்துக்கொண்டு திஸ்ஸமகரமவில் உள்ள வான் படைத்தளத்திற்குள் அடைக்கலம் தேடி ஓடியுள்ளனர்.

ரன்மினிதென்னப் பகுதியில் உள்ள "ஒசு உயன" எனப்படும் ஒன்பதாவது குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மூன்று கிராமங்களில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்களை கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் காவல்துறையினரும், ஆயுதப்படையினரும் பெரும் தேடுதல்களை கிரமங்களிலும், காட்டுப்புறங்களிலும் மேற்கொண்ட போதும் யாரும் காணப்படவில்லை.

இதனிடையே இச்சம்பவத்தினால் ஆத்திரமடைந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஒலிபரப்பு செய்து இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பும் வானொலி நிலையங்களின் அனுமதிகளை நிறுத்திவிட போவதாக தனது அமைச்சரவை நண்பர்களிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளார். :icon_mrgreen::unsure::wub::wub::lol::lol:

http://puthinam.com/full.php?2eZPtW00bfh0X...d433VI3b02sOP2e

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதினம் நடத்திய தாக்குதலா. இப்ப இந்தச் செய்தியை அங்க காணேல்ல..! :unsure::wub::icon_mrgreen:

25.10.2007

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா படை வாகனத்தொடரணி மீது தாக்குதல்.

அம்பாந்தோட்டை திஸ்ஸ மகாராம பகுதியில் சென்றுகொண்டிருந்த சிறிலங்கா படைவாகனத் தொடரணி மீது இன்று பிற்பகல் 4.35மணியளவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும் பத்திற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Sankathi

இதென்ன புதினம் நடத்திய தாக்குதலா. இப்ப இந்தச் செய்தியை அங்க காணேல்ல..! :lol::D:unsure:

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அதிரடி தாக்குதல் 5 படையினர் பலி! 10 பேர் படுகாயம்

இன்று மாலை அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம வீரவில பகுதியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் 5 சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல் மூலம் தெரியவருகிறது.

மாலை 4.30 மணியளவில் வீரவில பகுதியூடாக பயணித்த சிறீலங்கா படைகளின் வாகனத் தொடரணி மீதே இவ் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட தகவலில் படி 5 படையினர் கொல்லப்பட்டும் 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

வியாழன் 25-10-2007 17:26 மணி தமிழீழம் [மயூரன்]

அம்பாந்தோட்டை வீரவில பகுதியில் அதிரடி தாக்குதல் 5 படையினர் பலி! 10 பேர் படுகாயம்

இன்று மாலை அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம வீரவில பகுதியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் 5 சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல் மூலம் தெரியவருகிறது.

மாலை 4.30 மணியளவில் வீரவில பகுதியூடாக பயணித்த சிறீலங்கா படைகளின் வாகனத் தொடரணி மீதே இவ் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட தகவலில் படி 5 படையினர் கொல்லப்பட்டும் 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Pathivu

  • தொடங்கியவர்

செய்தி தவறு என்று மோகன் அண்ணா கூறியுள்ளார்....

  • தொடங்கியவர்

2ND LEAD

Sri Lanka Navy convoy ambushed in Hambantota

[TamilNet, Thursday, 25 October 2007, 12:02 GMT]

A guerrilla team of attackers have ambushed a Sri Lanka Navy (SLN) convoy in Thissamaharama division in the Hambantota district in the southern province around 4:35 p.m. Thursday, according to travelers who have witnessed the attack. The attackers have opened fire and charged grenades on a bus carrying military personnel. Thissamaharama division is situated in the constituency of the Sri Lankan president Mahinda Rajapaksa.

Five military personnel were seen dead following the ambush, according to the civilian sources.

The Liberation Tigers have stepped up guerilla operations in the Eastern Ampaa'rai district and the bordering southern districts.

Thissamaharam is located 174 km southeast of Colombo and 118 km south of Ampaa'rai town.

Further details are not available at the moment

செய்தி உண்மை என நினைகிறன் தமிழ் நெட் செய்தி வெளியிட்டிருக்கு

  • தொடங்கியவர்

செய்தி உண்மை என நினைகிறன் தமிழ் நெட் செய்தி வெளியிட்டிருக்கு

ஆம மோகன் அண்ணாவை தடை செய்யனும் கண்ட படி தனிக்கை செய்ய முடியாத படி :unsure:

  • தொடங்கியவர்

2ம் இணைப்பு)திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்கா கடற் படையினர் பலி- 10 பேர் காயம்

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையில் உள்ள திஸ்ஸமகாராமவில் சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேரூந்தில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற போது திஸ்ஸமகாராமவில் இன்று வியாழக்கிழமை மாலை 4:53 மணியளவில் கைக்குண்டுகளாலும், துப்பாக்கியாலும் சுட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 5 கடற்படையினர் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையிலிருந்து 118 கிலோ மீற்றர் தொலைவு தெற்கிலும், கொழும்பிலிருந்து 174 கிலோ கிலோ மீற்றர் தென்கிழக்கிலும் திஸ்ஸமகாராம அமைந்துள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் இந்தச் செய்தி கேட்டு சந்தோசப்படாதேங்கோ....

பிறகு வருவினம்போராளிகள் இறந்து போயிருந்தால் நாங்கள் "இப்படிச் செய்வது சரிதானா" என்டு :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tamilnet செய்தியை வெளியிடும் முன்பாகவே நிதர்சனம் இதை வெளியிட்டு இருந்தது என நினைக்கிறேன்.

:unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் இந்தச் செய்தி கேட்டு சந்தோசப்படாதேங்கோ....

பிறகு வருவினம்போராளிகள் இறந்து போயிருந்தால் நாங்கள் "இப்படிச் செய்வது சரிதானா" என்டு :unsure:

நிட்சயமாக உண்மை தான். சிறிது காலத்துக்கு முன்னர் யாழ் களத்தில் ஒரு இஸ்லாமிய சகோதரிக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக பந்தி பந்தியாக எழுதினார்கள். ஆனால் தமிழீழத்தில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் அவர்கள் கண்களுக்கு தெரியாது.

உதாரணமாக இந்த செய்தி

இத்தாக்குதலில் நிறைமாத கர்ப்பிணித்தாயான றஞ்சி (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் குழந்தையைப் பிரசவித்து இறந்துள்ளார். குழந்தையும் இறந்தே பிறந்துள்ளது. றஞ்சியின் உடன்பிறப்பான 10 வயது கெளசல்யா மற்றும் அவர்களின் தந்தை ஜெயபாலசிங்கம் (வயது 61) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3RD LEAD

6 SLN killed in Tiger ambush in Hambantota

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23591

ஆனால் சிங்கள இணைய செய்திகளின்படி 7(SLN) பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்

  • தொடங்கியவர்

இதென்ன புதினம் நடத்திய தாக்குதலா. இப்ப இந்தச் செய்தியை அங்க காணேல்ல..! :lol::D:unsure:

(3ம் இணைப்பு)அம்பாந்தோட்டையில் புலிகள் அதிரடித் தாக்குதல்: 6 கடற்படையினர் பலி- 12 பேர் படுகாயம்

[வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காவின் மற்றொரு கோட்டையான அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாராமவில் சிறிலங்கா கடற்படைப் பேரூந்து மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது "புதினம்" நிருபரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

மகிந்த ராஜபக்சவின் சொந்தத் தொகுதியான அம்பாந்தோட்டையின் முதன்மை நகரமான திஸ்ஸமகாராமவில் 25 சிறிலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்து மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் தாக்குதல் நடத்தினர்.

கடற்படையின் பேரூந்துக்கு மிக அண்மையாக நெருங்கிச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் கடற்படைத் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடற்படையினரின் பேருந்தும் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது என்றார் இளந்திரையன்.

திஸ்ஸமகாராம சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் மாவட்டமும் ஜே.வி.பி.யினது கோட்டையும் ஆகும்.

ஏற்கனவே அம்பாந்தோட்டையின் தலமன்கஸ்கடவில் சிறிலங்கா இராணுவ முகாம், தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு தொடர்ச்சியாக அங்கு படைத்தரப்பு மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இன்று அதே அம்பாந்தோட்டையின் முதன்மை மையத்துக்குள் நகர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சிறிலங்கா படைத் தரப்புக்கு மற்றொரு பலமான அடியைக் கொடுத்துள்ளனர்.

அம்பாறையிலிருந்து 118 கிலோ மீற்றர் தொலைவு தெற்கிலும், கொழும்பிலிருந்து 174 கிலோ கிலோ மீற்றர் தென்கிழக்கிலும் திஸ்ஸமகாராம அமைந்துள்ளது.

மகிந்தவுக்கு எல்லாளன் படை நடவடிக்கை மூலம் காத்து புடுங்க பட்டது இன்று இப்படி எல்லாம் தாக்கினால் கோவணத்தை கழட்டி தலையில கட்டுவன் என அழாத குறையா சொல்லுறாராம்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு எல்லாளன் படை நடவடிக்கை மூலம் காத்து புடுங்க பட்டது இன்று இப்படி எல்லாம் தாக்கினால் கோவணத்தை கழட்டி தலையில கட்டுவன் என அழாத குறையா சொல்லுறாராம்

ஏற்கனவே அதத் தோளில தானே போட்டிருக்குது மனுசன்! தலையிலயும் கட்டுமாமோ? பாவம் சிரந்தி. எப்படித்தான் "கப்"பைத் தாங்குமோ!!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

Rebel bus bomb attack kills 6 navy personnel in southern Sri Lanka, rebels say

The Associated PressPublished: October 25, 2007

COLOMBO, Sri Lanka: Separatist Tamil rebels said their fighters killed six navy personnel in a rare attack in southern Sri Lanka on Thursday.

In a statement e-mailed to the Associated Press, the rebels claimed they attacked a bus carrying 25 sailors, killing six of them and wounding another 12, in the village of Tissamaharam in the southern district of Hambantota.

But navy spokesman Cmdr. D.K.P. Dassanayake denied the rebels' claim.

Most of Sri Lanka's decades-long civil war has been confined to northern and eastern provinces.

http://www.iht.com/articles/ap/2007/10/25/...ebel-Attack.php

போரின் நேரடி விளைவுகளை தென்னிலங்கை மக்களும் உணருகிற காலம் வந்திட்டுது - மகிந்த நல்லது தான் செய்கிறார்

எவ்வளவு காலத்திற்கு தான் எங்கட சனமும் அனுபவிக்கிறது

போரின் நேரடி விளைவுகளை தென்னிலங்கை மக்களும் உணருகிற காலம் வந்திட்டுது - மகிந்த நல்லது தான் செய்கிறார்

எவ்வளவு காலத்திற்கு தான் எங்கட சனமும் அனுபவிக்கிறது

போரின் தாக்கம் தென்னிலங்கையில் உணர்த்தப்படும்போதுதான் சிங்களம் தீர்வு பற்றிப் பேசும். வேறு வழியில்லை. போர்பற்றிய பயம் அதன் விளைவுகளை அறியாதவர்கள், அதன் கொடூரத்தை உணரமாட்டார்கள். தமிழர்கள் மீது போர் திணிக்கப்பட்டுள்ளதால் அது முழுநாட்டிற்கும் உரியதானது. தென்னிலங்கை சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வடகிழக்கு அவலத்தில் மூழ்குவாதா? ஆகவே உங்கள் கருத்துத்தான் எனது ஆணித்தரமான கருத்து.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சகோதரர்களின் தேன் நிலவு காலம் முடிவடைந்து விட்டது போல இருக்கு. சிங்கள பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம் பொருளாதார மையங்கள் எப்பொழுதும் தாக்கப்படலாம்.

இது இரண்டாம் கட்டத்தை தாண்டும் போது சில வேளைகளில் பொது மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதொன்றாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.