Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-63.jpg?resize=750%2C375&ssl=

இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.

இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலையிலும், ஏப்ரல் 05 ஆம் திகதி காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதனால், குறித்த வீதிகள் அவ்வப்போது பொதுப் பயன்பாட்டுக்காக அவ்வப்போது மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.

கூடுதலாக, இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் நபர்கள் தற்காலிக வீதி மூடல்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாளை கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அப்பேகாம வளாகத்தின் வீதிகளும் அவ்வப்போது மூடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2025/1427346

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1743777481529.jpg?resize=720%2C36

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று  இரவு வந்தடைந்தார்.

IMG-20250404-WA0162.jpg?resize=600%2C450

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

IMG-20250404-WA0163.jpg?resize=600%2C366

இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.

அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1427490

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

பெரிய திட்டத்துடன் தான் குழுவாக வந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

FB_IMG_1743777481529.jpg?resize=720%2C36

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று  இரவு வந்தடைந்தார்.

IMG-20250404-WA0162.jpg?resize=600%2C450

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

IMG-20250404-WA0163.jpg?resize=600%2C366

இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.

அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1427

வரவேற்க நின்ற பெண்களில். தமிழ் பெண்கள் இல்லையா ??? இந்த பெண்கள்

சாறம். கட்டி இருக்கிற. மாதிரி இருக்கிறது தமிழ் பெணகளையும். ஆராத்தி எடுக்க விட்டிருக்கலாம்… ஒவ்வொரு உரிமையாக பறிக்கிறார்கள் கவலையளிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nunavilan said:

பெரிய திட்டத்துடன் தான் குழுவாக வந்துள்ளார்கள்.

காங்கேசன் துறைக்கு பாய் மரக் கப்பலே....வருகுது என்றால் வடக்கு கிழக்கு உள்ள போகுது

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பெரிய திட்டத்துடன் தான் குழுவாக வந்துள்ளார்கள்.

தெரியவில்லை ஆனால் ரட்ம். அமெரிக்கா அதிபர் கனடாவை 51 மாநிலமாக். இணைப்பேன் என்றார் அப்படி இலங்கையை இந்தியாவின். ஒரு. மாநிலமாக. இணைப்பேன். என்ற துணிவு மோடிக்கு கிடையாது இப்போது இந்தியாவுக்கு ஒரு ரட்ம்ப் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

பெரிய திட்டத்துடன் தான் குழுவாக வந்துள்ளார்கள்.

கச்சதீவை சிறிலங்காவுக்கு கொடுத்த திட்டத்தின் வெற்றிகளை இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, putthan said:

கச்சதீவை சிறிலங்காவுக்கு கொடுத்த திட்டத்தின் வெற்றிகளை இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது

இந்தமுறையோடை ஏதும் வெளிக்கும் என நினைக்கின்றேன் ..பட்டாளத்தோடை பட்டாளமாக வந்திருக்கினம்...

இந்த்முறை ஒருவரும் தனிதனிய அப்பம் சாப்பிடப்போகேலாது

  • கருத்துக்கள உறவுகள்


கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி! Top News

[Saturday 2025-04-05 06:00]

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

  

இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி நேற்று இந்திய சமூகத்தினரைச் சந்தித்ததுடன், பொம்பலாட்ட கலைஞர்களின் நிகழ்வையும் ரசித்துள்ளார்.

இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அதிகாரபூர்வ சந்திப்புகள் ஆரம்பமாகும்.

modi-colombo-050425-seithy%20(1).jpg

modi-colombo-050425-seithy%20(2).jpg

modi-colombo-050425-seithy%20(3).jpg

https://seithy.com/breifNews.php?newsID=331604&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம்

April 5, 2025 10:47 am

மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பதாகைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

488063548_1131320495704045_6835804075160

https://oruvan.com/government-ignores-tamil-language-in-its-slogan-welcoming-modi/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம்

April 5, 2025 10:47 am

மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழியை புறக்கணித்த அரசாங்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பதாகைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

488063548_1131320495704045_6835804075160

https://oruvan.com/government-ignores-tamil-language-in-its-slogan-welcoming-modi/

தமிழ்... அரச மொழி என்பது எல்லாம்... வாக்குகளை பெற மட்டுமே.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்... இப்ப நவ துவாரத்தையும் மூடிக் கொண்டு இருப்பார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நாளை திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருக்கின்றார்

சம்பூரில் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 603 ஏக்கர் நிலபரப்பில் இது நிறுவப்பட இருக்கின்றது

ஆரம்பத்தில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த இவ் திட்டம் மக்கள் எதிர்ப்பையடுத்து இது சூரிய மின் உற்பத்தி திட்டமாக மாற்றப்பட்டிருந்தது

அதன் பிரகாரம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதாவது முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக செயற்படுத்த இருக்கின்றார்கள்

உண்மையில் அபிவிருத்தி மற்றும் முதலீடு தொடர்பிலான செயற்திட்டங்களை அரசியலை முன்னிறுத்தி எதிர்க்க வேண்டியதில்லை

ஆனால் அபிவிருத்தி என்கின்ற பேரில் வேறு தரப்பின் நலன்களை மையப்படுத்தியதாக இருக்கும் போது பேச வேண்டி இருக்கின்றது

சம்பூரில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில் 308 ஏக்கர் மிகவும் வளமான விவசாய நிலமாகும்.

அதே போல விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்படுகின்ற 5 நீர் நிலைகள் இங்கு இருக்கின்றது.

அதே போல கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் அங்கிருக்கின்றன

இவ்வாறு வளமான வயல், குளங்கள் , பசுமையான காடு என பரந்த நிலத்தில் ஒரு பகுதியை மின் உற்பத்தி திட்டம் என்கின்ற பெயரில் இந்தியாவிற்கு தாரை வார்கின்றார்கள்

அந்த பகுதியில் தான் மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டுமென்றால் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்ற குளங்கள் அற்ற பெருங்காடுகளற்ற விலங்குகளின் வாழ்வை அச்சுறுத்தாத சூரியொளி அதிகம் கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பெற்றிருக்க முடியும் .

அதே போல சம்பூருக்கு மேலதிகமாக இலங்கை பூராகவும் தரிசு நிலங்கள் பரந்து விரிந்து இருக்கின்றன

ஆனால் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு வாழ்வாதாரத்திற்கு உதவும், அதிகாரமற்ற மக்களின் உறுதிக் காணிகளில் இந்த நிலையத்தை அமைக்க துணை போய் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள்

இந்த நிலத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜேவிபி ஆளும் கட்சியாக இதற்கு துணை போகின்றது என்பது தான் அதியுச்ச துன்பமான நிகழ்வாகும்

குறிப்பாக மக்களின் ஜீவனோபாயத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எத் திட்டங்களையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என பேசிய ஜேவிபியின் பிரதி அமைச்சர் திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அமைதியாக இருக்கின்றார்

சம்பூர் மக்களின் காணிகள் அவர்களிடம் சேர்க்கப்படும் வரையில், போராடுவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழு முதல் நீதிமன்றங்கள் வரை சென்ற திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அதிகாரத்திலிருந்தும் வேடிக்கை பார்க்கின்றார்

சூரிய உற்பத்தி திட்டத்தை நடை முறைப்படுத்தினால் வருடந்தோறும் பெரும்போகத்தில் மட்டும் 112,000 புசல் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என சொல்லுகின்றார்கள்

ஆனால் அதிகாரமற்ற மக்கள் என்ன செய்ய முடியும் ? யாரிடம் முறையிட முடியும் ?

அந்த மக்களோடு இருந்து அவர்களுக்காக பேசிய ஜேவிபி யே தடம்மாறி அவர்களை கைவிட்ட பின்னர் என்ன செய்ய முடியும் ?

2005 ஆம் ஆண்டு விபு கட்டுப்பாட்டின் கீழ் சம்பூர் இருந்த நேரமே இந்தியா இலங்கையிடம் அங்கு அனல் மின் நிலையமொன்றை அமைக்க கோரிக்கை வைத்திருந்தது

நுரைச்சோலை மின் உற்பத்தி சீனாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு நெருக்கமான சம்பூரில் தனக்கு மின் உற்பத்தி நிலையம் வேண்டும் என இந்திய நிர்பந்திக்கின்றது

திருகோணமலை எண்ணெய் குதங்கள், திருகோணமலை துறைமுகம் என தொடங்கி யாழ்ப்பாண தீவுகள் வரை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றது

இதற்காக ஜேவிபி யை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள்

செப்டம்பர் 12, 1989 அன்று மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவராகப் பணியாற்றிய Dr. Gladys Jayawardene அவர்களை இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய எடுத்த தீர்மானித்தமைக்காக ஜேவிபி கொ*லை செய்தது

இவ்வாறு இந்திய எதிர்ப்பை மையப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய அதே ஜேவிபி இன்று ஆளும் கட்சியாக இந்தியாவிற்கு துணை போகின்றது

அண்மைய காலத்தில் இலங்கை பொருத்தமற்ற வேறு தரப்புகளின் விருப்பங்களை மையப்படுத்திய அபிவிருத்தி முயற்சிகளால் தான் Debt Trap யில் சிக்கி கொண்டது

இந்த தடவை மக்களை அகதிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து விட்டு முதலீட்டு திட்டங்களை கட்டியெழுப்ப முடியாது என்பதை தெரிந்து கொள்ளும்

May be an image of 5 people


இனமொன்றின் குரல்

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488678621_1460140072146887_5141758911434

கொழும்பில் மோடிக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம்.

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

488390025_1460132978814263_6177414400882

இது தொடர்பில் தான் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன்.
இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள்.
அத்தோடு கொழும்பில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்தினரின் அற்புதமான வரவேற்புக்கு மழை எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியிருந்தார்.

488566860_1460132888814272_5280803362569

488459451_1460132902147604_1129588290851

489299020_1460132925480935_3502861182099

பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அங்கு வந்தடைந்த இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அவர் ஹோட்டலில் இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கைகுலுக்கி உரையாடுவதைக் காண முடிந்தது.

https://athavannews.com/2025/1427559

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

600f1185-f6f0-48c8-ad87-e857eb77fa85-1.j

இந்திய- இலங்கை தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது  இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான  இராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு  பல்வேறு பட்ட ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1427570

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

140fbde0-5ac2-48dd-93ac-7c288ddcec80-1.j

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது.

4f03a532-32e3-4e06-ac3f-d92030c29072.jpg

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

834874fb-66b5-416e-8a40-13443cc72f69.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

f117fa2b-7342-4597-b322-37817bba35b8.jpg

அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

140fbde0-5ac2-48dd-93ac-7c288ddcec80.jpg

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர்.

cb78bedd-7956-4f92-9a16-e9a0f41cb616.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில்இ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்இ வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

f7e8e97b-2afe-4264-b196-230d996f9c98.jpg

https://athavannews.com/2025/1427522

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489446418_1079670847531220_1582756072364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

india.jpg?resize=716%2C375&ssl=1

இந்திய-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்!

இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணி இணையவழியாகத் தொடங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427580

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488654573_1107270384749152_2582691133390

488831946_1107270054749185_5280406801102

488655494_1107270064749184_3609213691619

488649391_1107270371415820_6925950625921

488657890_1107270511415806_9000690505885

ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

unnamed-1.jpg?resize=640%2C375&ssl=1

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால்  பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.

வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம்,இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இதேவேளை பிரதமர் குறித்த விருதினைப் பெற்றுக் கொண்ட  பின்னர், செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் ஒன்றைக் கூறி  தனது நன்றியை தெரிவித்தார்.

குறித்த திருக்குறளின் பொருளானது ” நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை எனவும், அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்றும்   பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  பிரதமர் மோடி தனது X தளத்தில் தமிழ் மொழி மூலம் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவானது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

424df335-d9a4-4cab-91fb-2f1fc1cbccea.jpg

 மித்ர விபூஷண பதக்கத்தின் சிறப்பம்சங்கள்

  • தர்ம சக்கரம் இரு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைத்த பகிரப்பட்ட பௌத்த  பாரம்பரியத்தை குறிக்கிறது.

  • அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு பானையான பொன் கலசம், செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.

  • நவரத்தினம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது, இது தூய தாமரை இதழ்களால் சூழப்பட்ட ஒரு பூகோளத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது.

  • இந்த விருது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்புஇ கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் ஆன்மீக ராஜதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பிற்கும் ஒரு ஒளிரும் அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வளர்ப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

  • https://athavannews.com/2025/1427588

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மேலும் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  பிரதமர் மோடி தனது X தளத்தில் தமிழ் மொழி மூலம் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

சிங்களத்தில். வெளியிடவில்லை சுத்த தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்... அரச மொழி என்பது எல்லாம்... வாக்குகளை பெற மட்டுமே.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்... இப்ப நவ துவாரத்தையும் மூடிக் கொண்டு இருப்பார்களே.

ஆனால் மோடி ஜீ தமிழில் நன்றி தெரிவித்துள்ளார் டுவிட்டரில் ...அந்த வகையில் மோடி ஜீ அச்சா ஜீ..

2 hours ago, Kandiah57 said:

சிங்களத்தில். வெளியிடவில்லை சுத்த தமிழ்

மோடி ஜீ அச்சா ஜீ..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் ஒன்றைக் கூறி  தனது நன்றியை தெரிவித்தார்.

மோடி ஜீ ,வாழ்முகி ராமாயணத்திலிருந்து கருத்துசொல்லாமல் தமிழ் மொழியில் கருத்து சொன்ன திருவள்ளுவரின் திருக்குரளிலிருந்து கருத்து சொன்னதை வர வேற்கின்றோம்...

திருவள்ளுவர் பெளத்தர்/சமணர் அதுதான் மோடி ஜீ அனுரா டோழரை குளிர பண்ண அப்படி சொல்லியிருப்பார் என சில கருத்துக்களும் வரலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது.

விருது கொடுப்பதில் டோழர் மார் நன்றாக செயல் படுகின்றனர் ஆனால் மோடியின் நண்பரின் சூரிய கதிர் மின் உற்பத்திக்கு தடையை போடுயினம் ...

ஒரு காலத்தில் இந்த டோழர் கோஸ்டியினர் அப்பட்ட எப்பா மசால தோசை ,வட என அரச சொத்துக்களையும் ,தமிழ் மக்களின் உயிர்களையும் ,சொத்துக்களையும் நாசமாக்கிய கோஸ்டிகள் இன்று இந்தியா பிரதமருக்கு ராஜ மரியாதை....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.