Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 APR, 2025 | 08:00 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) வெளியிடப்பட்டன.

2024ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை இடம்பெற்றது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர்.

2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk , www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/213032

  • கருத்துக்கள உறவுகள்

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/jaffna-district-results-in-the-a-l-examination-1745679242

Edited by பிரபா
Add the link

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-314.jpg?resize=750%2C375&ssl

177,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பெறுபேறுகளின்படி மொத்தமாக 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 64.43 சதவீதமாகும்.

இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பரீட்சை முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 2 முதல் மே 16 ஆம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 51,587 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்று மாலை (26) ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தன.

https://athavannews.com/2025/1429649

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-320.jpg?resize=750%2C375&ssl

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை!

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள்.

4a47f28d-36aa-45eb-9878-37c968e7a738.jpg

c902cd7c-4184-4a9b-a870-0e3f2768ee11.jpg

bf17b26e-efb4-4da8-af25-ec7e712f405b.jpg

8b8fc902-9933-4b4b-a9bf-78288dde6afe.jpg

https://athavannews.com/2025/1429667

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் . இந்துவில் 55 மாணவர்களுக்கு 3A

adminApril 27, 2025

01-1-3.jpg?fit=1088%2C1540&ssl=1

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 55 மாணவர்களுக்கு மூன்று பாடங்களில் “ஏ“ சித்தி கிடைத்திருக்கின்றது. 33 மாணவர்கள் இரண்டு பாடங்களில் “ஏ” சித்தி பெற்றி ருக்கிறார்கள்.

உயிரியல் பிரிவில் 22 பேரும், பௌதீகவியல் பிரிவில் 27 மாணவர்களும், வர்த்தகத்துறையில் ஒருவரும் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்தியை பெற்றிருக்கிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

உயிரியல் விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் 1, 2, 3, 4 ஆம் இடங்கள், வர்த்தகத்தில் மாவட்ட நிலையில் முதலாம் இடம், பொறியியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட மாவட்ட நிலையில் முதலாம் இடம், பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம், உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம் யாழ் இந்துவுக்குக் கிடைத்துள்ளது.

https://globaltamilnews.net/2025/214743/

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சையில் மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின. 

அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cm9z3x79k002zqpzncl94uswc

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார். 

அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். 

இதே பாடப் பிரிவில் இரண்டாம் இடத்தை அனுராதபுரம் மத்திய கல்லூரி மாணவி கல்பா விதுசரனி பெற்றுள்ளதோடு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் ஜமுனாநந்தா பிரணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். 

கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் லெசந்து ரன்சர குமாரகே என்ற மாணவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் கந்ததாசன் தசரத் என்பவரும், மூன்றாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் தெவிந்து தில்மித் தஹநாயக்க என்பவரும் பெற்றுள்ளனர். 

கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

வணிகப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த இந்துவர சன்ஹித குமாரபேலி என்பவரும் நுகேகொட சுஜாதா கல்லூரியின் லெசந்தி உதாரா பெரேரா என்பவரும் பிடித்துள்ளனர். 

அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரத்தினபுரி பர்கசன் உயர் மகளிர் கல்லூரி மாணவி தினெத்மி மெதன்கா ஜனகாந்த கலைப்பிரிவில் இரண்டாம் இடத்தையும், கண்டி மஹமாயா மகளிர் வித்தியாலய மாணவி இசுரி அஞ்சலிகா பீரிஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில் முதலாம் இடத்தை நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரியின் மாணவன் காவ்ய ரவிஹங்சவும் இரண்டாம் இடத்தை இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் உஷான் மலிக் ஜயசூரியவும் மூன்றாம் இடத்தை நாகஸ்தெணிய ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் பசிந்து மதுசங்கவும் பெற்றுள்ளனர்.

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபே...
No image preview

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

3 A எடுத்தவர்களின் பெயர்களையும், படத்தையும், பாடசாலையையும் குறிப்பிடும் போது.... 3 F எடுத்தவர்களையும் குறிப்பிட்டு ஆறுதல் சொல்லாமல் இருப்பது கண்டிக்கப் பட வேண்டும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லி கல்லூரி மாணவன் தசரத் கணிதவியலில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடாளாவியரீதியில் இரண்டாவதாகவும் வந்துள்ளார்!

28பேருக்கு 3A.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வெற்றிக் கதைகளை நாங்கள் தான் சொல்லோணும்... ♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💪🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te9/1/16/1f4aa_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

இது ஐந்தாம் ஆண்டு மூன்றாம் தவணையிலிருந்து, ஐலண்ட் ராங்க் செகண்ட் வந்தவனின் அமைதியான ஓர்மம்!

யாழ் / ஹாட்லிக் கல்லூரியின்,

செல்வன் கந்ததாசன் தசரத்

பெளதீக விஞ்ஞானப்பிரிவின் (கணித)

- மாவட்ட நிலை - 01 மட்டுமல்ல,

- தேசிய நிலை - 02

2024 GCE AL இல் இலங்கையில் இரண்டாவது பெரிய ஸ்கோரான 2.8394 எடுத்தவரான தம்பி தசரத் GCE OL இல் 9Aயும், எடுக்க அவரை படிப்பிச்சது யார்?

- ஒரேயொரு தோல்வியும், கொஞ்ச சிறு வயது அவமானங்களும்!

ஹாட்லிக் கல்லூரியின் தரம் 06 அனுமதியின் போது வரிசையில் கடைசியிலிருந்து 4வது இடத்தில் நின்றதை இன்னமும் மறக்காமல் இருந்த தசரத் - புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை விட 03 புள்ளிகள் குறைவாக பெற்றிருந்தவர்!!

பொதுவான வழக்கில், ஸ்கொலர்ஷிப் பெயிலான பொடியன் ஒருதன் தான் - அடுத்த ஒன்பதாவது வருடம் கணிதப்பிரிவில் தேசிய நிலையில் இரண்டாமிடம் என்ற ‘பெரீய’ செய்தி, வெறுமனே மாணவர்களுக்கானது மட்டுமல்ல பெற்றோருக்குமான இடியேறு.

தாயார் - ஆசிரியர்,

தந்தையார் - பிரதிக் கல்விப் பணிப்பாளர்,

தமையன் - பொறியியல்பீட மாணவன்

என்று வீட்டுக்குள்ளே ஏற்றிவிடும் கரங்கள் கிடைத்திருந்தாலும் - தனியொருவனாக தசரத், “உழைப்பின் உயர்வு” என்ற எங்களுக்கான திகிலூட்டும் திரைக்கதையை எழுதி ரியல் சினிமாவாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

நதி போல ஓடிக்கொண்டிரு, தம்பீ...♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🔥" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t50/1/16/1f525.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

நீதி:

- படிங்கடா பரமா?

பரீட்சைகள் தற்காலிகம்! படிப்பு நிரந்தரம்!! 🤚🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9e/1/16/1f91a_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">

May be an image of 1 person and smiling

நம்ம யாழ்ப்பாணம் ·


  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

3 A எடுத்தவர்களின் பெயர்களையும், படத்தையும், பாடசாலையையும் குறிப்பிடும் போது.... 3 F எடுத்தவர்களையும் குறிப்பிட்டு ஆறுதல் சொல்லாமல் இருப்பது கண்டிக்கப் பட வேண்டும். 🤣

https://www.facebook.com/reel/1010258551076782

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

மிகுந்த முயற்சியுடன் தான் நினைத்ததை சாதித்துக் காட்டிய மாணவன்.

காணொளியின் இறுதியில் பெற்றோர் படபடத்த நெஞ்சுடன் நிற்கும் போது, இவன் கூறிய பதிலை கேட்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

493067496_1117840907022627_8822889502550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை மீதான பொய் குற்றச்சாட்டுகளால் பாடசாலை கல்வியில் குழப்பம்; வைத்தியர் ஷாபியின் மகள் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி

27 APR, 2025 | 03:09 PM

image

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலின்போலியான கருத்தடை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபி சிகாப்தீனின் மகள் 2024 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மிகத்திறமையாக சித்தியெய்தி உள்ளார். 

தந்தை எதிர்கொண்ட நெருக்கடிகளை தொடர்ந்து கடும் மன அழுத்தங்களை எதிர்கொண்டதால் தான் கல்விகற்றுக்கொண்டிருந்த பாடசாலையிலிருந்து விலகவேண்டிய நிலையை எதிர்கொண்ட போதிலும் அவர் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதினார் கடும் மனஉறுதியை வெளிப்படுத்தினார்.

இவர் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 ஏ பெற்றுள்ளார்.

494356492_2384453555245304_2325451693772

https://www.virakesari.lk/article/213059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/317326

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியானது.

இந்நிலையில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லெசந்து ரன்சர குமாரகே, பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா, உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும், கம்பஹா, ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செனாலி சமத்கா, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன் யமுனானந்தா பிரணவன் பிடித்தார்.

அவரது சகோதரன் யமுனானந்தா சரவணன் நாடளாவிய ரீதியில் 5ஆம் இடத்தை பிடித்தார்.

இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் ஆவர்.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து தில்மித் தஹாநாயக்க கணிதப் பிரிவில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அதே பாடசாலையின் மாணவர் நவிந்து தினெத் தென்னகோன் கணிதப் பிரிவில் நாட்டிலேயே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

https://thinakkural.lk/article/317320

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3

28 APR, 2025 | 02:08 PM

image

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஞாயிற்றுக்கிழமை (27)  வெளியானது.

இந்நிலையில், அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளும் தங்கள் பெறுபேறுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை (28) அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் தற்போது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளீடு செய்வதன்  ஊடாக பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பார்வையிடலாம். அத்துடன், பெறுபேறுகளை உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk  ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.

மீள் பரீசிலணை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னர் பாடசாலைகளுக்கு அச்சிடப்பட்ட பிரதிகள் அதிபர்களுக்கு  வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டது.

இந்நிலையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை மே மாதம்  2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை  https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்கலாம்.

https://www.virakesari.lk/article/213137

  • கருத்துக்கள உறவுகள்

493908905_1125733576236166_8102596414844

9458 பேர்... 3 A எடுத்துள்ள அதே நேரம்,

29,244 பேர்... 3 F எடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=1401763397518062 👈

👆 காணொளி: வியக்க வைத்த இரட்டை சகோதரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/317326

~64% பல்கலை நுழைவதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றாலும், இவர்கள் அனைவருக்கும் அரசபல்கலை செல்ல வாய்ப்புக் கிடைக்காது. இவர்களுள் மூன்றிலொரு பங்கினர் அரச பல்கலை அனுமதி பெறுவர், மூன்றில் இரண்டு பங்கினர் பெறு பேறுகளை வைத்துக் கொண்டு வேறு வழிகளில் உயர்கல்வியைப் பெற வேண்டியிருக்கும். இது சில மாதங்களில் வெளியிடப் படும் Z-score இனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப் படும்.

On 27/4/2025 at 09:02, தமிழ் சிறி said:

3 A எடுத்தவர்களின் பெயர்களையும், படத்தையும், பாடசாலையையும் குறிப்பிடும் போது.... 3 F எடுத்தவர்களையும் குறிப்பிட்டு ஆறுதல் சொல்லாமல் இருப்பது கண்டிக்கப் பட வேண்டும். 🤣

நான் முதல் தடவை தோற்றிய போது, நாலு பாடங்களும் F எடுத்த ஆளாக்கும்.😄

இரண்டாம் தடவை 2 A யும் 2 C யும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா வேம்படி முடிவுகளைக்காணோம் இந்த முறை முடிவுகள் சரியில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0748.jpeg

large.2a2cf827-d4be-415b-8fe4-71f06d257011.jpeg

24 minutes ago, புலவர் said:

என்னப்பா வேம்படி முடிவுகளைக்காணோம் இந்த முறை முடிவுகள் சரியில்லையோ?

முடிவுகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நான் முதல் தடவை தோற்றிய போது, நாலு பாடங்களும் F எடுத்த ஆளாக்கும்.😄

இரண்டாம் தடவை 2 A யும் 2 C யும்.

மனம் தளராமல்…. இரண்டாம் முறை பெரும் வெற்றி பெற, விசேட வைராக்கியம் வேண்டும். அதனை சிறப்பாகவே செய்துள்ளீர்கள். 👍🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.