Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-372.jpg?resize=750%2C375&ssl

36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இன்று (30) காலை கூறினார்.

ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு “முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை” வழங்கிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது தொடர்பில் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் பதவிட்ட ஒரு அறிக்கையில்,

எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

அத்துடன், பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் இந்த பதவில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்கிறது.

உலகில் எங்கும் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் அதைக் கண்டித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானிய சதிகள் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது.

இதனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இராஜதந்திர தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியதால், பஹல்காம் படுகொலையில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் “ஆதரவாளர்களையும்” இந்தியா “அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று பிரதமர் மோடி ஏப்ரல் 24 அன்று உறுதியளித்தார்.

பதற்றங்களுக்கு நடுவே பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா குறைத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, அட்டாரி-வாகா எல்லையை மூடியது, அனைத்து பாகிஸ்தான் இராணுவ இணைப்புகளையும் வெளியேற்றியது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கைகளுடன் பதிலளித்து 1972 சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.

https://athavannews.com/2025/1429986

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

494479122_1100026652162306_6083316237049

  • கருத்துக்கள உறவுகள்

முப்படைகளுக்கு முழு சுதந்திரம் என்கிறார் மோடி!

adminApril 30, 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29.04.25) மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய் கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், இராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் இராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தகவல் வெளியாக்கியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://globaltamilnews.net/2025/214856/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானிலிருந்து எச்சரிக்கை

Digital News Team 30 ஏப்ரல், 2025

24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டம்; பாகிஸ்தானிலிருந்து எச்சரிக்கை

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஏப்ரல் 30) இரண்டாவது பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக உரிய பதிலளி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/317432

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ராணுவ தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் சந்தேகிப்பது ஏன்? என்ன நடக்கிறது?

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY/X.COM/TARARATTAULLAH

படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பை தொடர்ந்து, தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் (வலதுபுறம்), இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறியுள்ளார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டுமென உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திங்களன்று (ஏப்ரல் 28), சீனா, அமெரிக்கா, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தன. இருப்பினும், கடந்த பல நாட்களாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் போரின் விளிம்பில் நிற்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் நடவடிக்கையும் எடுக்க முடியுமா?

இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது சமீபத்திய அறிக்கையில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கைகளுக்குப் பிறகு, புதன்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலையில், பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் (சாத்தியமான) தாக்குதல் குறித்த அவரது அறிக்கை, இந்திய நேரப்படி அதிகாலை 3:09 மணிக்கு வெளியானது. தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றிய அவர் உருது மொழியில் ஒரு பதிவையும் வெளியிட்டார். அதில், 'அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா பாகிஸ்தானை தாக்கக்கூடும்' என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியது என்ன?

பாகிஸ்தான் மீது இந்தியா 'உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடும்' என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

திங்கள் கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "உடனடியாக ஏதாவது நடக்கலாம் என்பதால் எங்கள் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இத்தகைய சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவை எடுக்கப்பட்டுள்ளன," என்றார்.

இந்தியாவின் சாத்தியமான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம், அரசை எச்சரித்துள்ளதாகவும் கவாஜா ஆசிப் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்தப் பேட்டியில், 'பாகிஸ்தானின் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால், அந்தச் சூழ்நிலையில் மட்டுமே பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்' என்றும் கவாஜா ஆசிப் கூறினார்.

இதில் மூலோபாய முடிவுகளை எடுப்பது பற்றி கவாஜா ஆசிப் பேசியுள்ளார். இது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

ஆனால், இந்த நேர்காணலுக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் டிரிப்யூனுக்கு அளித்த பேட்டியில், 'அடுத்த இரண்டு-நான்கு நாட்களில் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தனது அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக' கவாஜா ஆசிப் கூறினார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலான சாமா டிவியிடம் பேசிய கவாஜா ஆசிப், "நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். போர் அச்சுறுத்தல் எழுந்து வருகிறது" என்றார்.

ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "அடுத்த இரண்டு-மூன்று அல்லது நான்கு நாட்களில் நாம் போரில் இறங்க வாய்ப்புள்ளது" என்றார்.

பின்னர் அவர் ஜியோ நியூஸிடம் பேசுகையில், "போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. எனவே அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்று நான் சொன்னேன். ஏதாவது நடக்க வேண்டுமெனில், அது அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் நடக்கும்" என்று கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நிலைமை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தனது அறிக்கையை, 'ஒரு போர் நடக்கப் போகிறது என்ற கணிப்பாகக் கருதக்கூடாது' என்றும், அடுத்த இரண்டு-மூன்று நாட்கள் முக்கியமானவை என்பதையே தான் குறிப்பிட்டதாகவும் கவாஜா ஆசிப் கூறினார்.

பதற்றங்களைத் தணிக்க நட்பு நாடுகளை பாகிஸ்தான் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

வளைகுடா நாடுகள் மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் பேசியுள்ளதாகவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கவாஜா ஆசிபின் இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

"பஹல்காம் சம்பவத்தை ஒரு சாக்காகக் கொண்டு அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எந்தவொரு தாக்குதலுக்கும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கப்படும். பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளுக்கு இந்தியாவே பொறுப்பாகும்" என்று தரார் தெரிவித்திருந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் காஷ்மீரி ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா அறிவித்தது.

இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கான விசாக்களை ரத்து செய்வது ஆகியவை அடங்கும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்திய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சிந்து நதியின் நீரை இந்தியா நிறுத்தினால், பாகிஸ்தான் அதை ஒரு 'போர் நடவடிக்கையாகக்' கருதும் என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் பொது அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, 'குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்' என்று கூறினார். இருப்பினும், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டனவா?

சமீப காலமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் இந்தியா முனைப்போடு இருந்தது. இந்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நிலைமை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பஹல்காம் தாக்குதல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நியூஸ்வீக்கில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் தெரிவித்திருந்தார்.

"கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது. தாக்குதல்களின் இலக்கு மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா பலமாக பதிலடி கொடுக்கும் என்பது உறுதி" என்று அவர் கூறியிருந்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சஞ்சய் லேலேவின் குடும்பத்தினர்

'தி கார்டியன்' பத்திரிகையிடம் பேசிய மைக்கேல் குகல்மேன், "இந்தியாவின் பார்வையில், பொதுமக்களின் அழுத்தம் மற்றும் தாக்குதலின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒருவித ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு அதிகம். இது நடந்தால், பாகிஸ்தான் பலவீனமாகத் தோன்ற விரும்பாது. பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என்பது உறுதி" என்றார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா அல்லது பாகிஸ்தானின் எந்தவொரு தவறான மதிப்பீடும் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"ஒரு வலுவான எதிர்வினையை நாம் காண முடிகிறது. இந்தியாவின் உறுதியை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் அறிவிக்கும் விதமாக அமையக்கூடிய ஒரு எதிர்வினை" என்று ராணுவ நிபுணர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசியிடம் கூறினார்.

2016 செப்டம்பரில் ஜம்மு காஷ்மீரின் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக இந்தியா கூறியது.

இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனத் தொடரணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019இல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியது.

"2016 முதல், குறிப்பாக 2019 வரை, பதிலடி கொடுக்கும் அளவு என்பது எல்லை தாண்டிய தாக்குதல் அல்லது வான்வழித் தாக்குதல்களை எட்டியுள்ளது. எப்போதும் போல, ஆபத்து என்னவென்றால் இரு தரப்பிலிருந்தும் தவறான கணக்கீடுகள் இருக்கலாம்" என்று ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார்.

பாகிஸ்தானில் பதற்ற நிலையா?

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,YOUTUBE/@ISPR

படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் அசிம் முனீர்

போர் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானிடம் இருந்து வரும் அறிக்கைகள் அந்நாட்டில் பயம் அல்லது அமைதியின்மை நிலவுவதைப் பிரதிபலிக்கின்றனவா?

இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் காட்ட முயல்வதே இந்த அறிக்கைகளின் அர்த்தம் என்று ராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"பாகிஸ்தான் இதுபோன்ற அறிக்கைகள் மூலம், தனது அரசாங்க மற்றும் ராணுவ மட்டத்தில் அனைத்திற்கும் தயார் நிலையில் உள்ளது என்பதையும், பாகிஸ்தான் தாக்கப்பட்டால், அந்நாடு அமைதியாக இருக்காது, பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்பதையும் இந்தியாவுக்கு சொல்ல விரும்புகிறது" என்று ராணுவ நிபுணர் அஜய் சுக்லா கூறுகிறார்.

இந்தியாவுடன் ராணுவ மோதலில் ஈடுபடும் திறன் தங்களுக்கு இருப்பதாகக் காட்டவும் பாகிஸ்தான் முயல்வதாக அஜய் சுக்லா கூறுகிறார்.

"பாலகோட் தாக்குதலின்போது, பாகிஸ்தான் இந்திய விமானப் படையின் ஒரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. தங்களது ராணுவத் திறன் குறித்த எந்தச் சந்தேகமும் வேண்டாம் என்பதைக் காட்ட பாகிஸ்தான் முயல்கிறது" என்று அஜய் சுக்லா கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான் படைகளுக்கு இடையிலான சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், "இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது" என்றார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்துப் பேசிய அஜய் சுக்லா, "பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் அறிக்கைகளை நாம் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினால், நாம் பின்வாங்கப் போகிறோம் என்று நினைக்கக் கூடாது" என்றார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று அஜய் சுக்லா நம்புகிறார்.

"இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானும் இந்தியாவும் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதையும், பஹல்காம் உயிரிழப்புகளுக்குப் பழிவாங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. பாலகோட் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இவ்வளவு பதற்றம் இருந்ததில்லை" என்று அவர் கூறுகிறார்.

அஜய் சுக்லாவின் கூற்றுப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு ராணுவ மோதல் நடக்கவிருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன.

மறுபுறம், பாகிஸ்தானின் காயிதே ஆசாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ராணுவ விவகாரங்களில் நிபுணருமான டாக்டர் சல்மா மாலிக், "பாகிஸ்தானில் பயமோ, அமைதியின்மையோ, பீதியோ இல்லை. வரவிருக்கும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதைத்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்" என்று கூறுகிறார்.

"பாகிஸ்தான் மக்களிடம் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாங்கள் எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார். இந்தியா நட்புக்கரம் நீட்டினால், அது நட்புக்கானதாக இருக்கும். தாக்குதல் நடந்தால், அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்" என்று அவர் கூறுகிறார்.

"பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறது, ஆனால் போர் ஏற்பட்டால், அது அதற்கு முழுமையாகத் தயாராக உள்ளது. பாகிஸ்தான் பயப்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாகிஸ்தான் போர் குறித்துப் பேசவில்லை, இந்தியா தரப்பில் ஏதேனும் நடவடிக்கை இருந்தால், பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்றுதான் கூறுகிறது" என்கிறார் சல்மா மாலிக்.

"பாலகோட் தாக்குதல் நடந்தபோதும், பாகிஸ்தான் பின்வாங்கவில்லை. எனவே இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தாலும், பாகிஸ்தானும் அதே வழியில் பதிலடி கொடுக்கும்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0m9783pmzmo

  • கருத்துக்கள உறவுகள்

கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் அவ்வாறனதொரு தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், குறித்த தாக்குதல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜமாலியின் எச்சரிக்கை

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் விடுத்த அணு ஆயுத பழிவாங்கும் அச்சுறுத்தல்களில் மிகவும் வெளிப்படையான ஒன்றாக இந்த எச்சரிக்கை கருதப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள முறுகல் நிலைக்கு மத்தியில் ஜமாலியின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்தியா சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் பங்கீட்டை நிர்வகிக்கும் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இடைநிறுத்தியது.

ஏவுகணையை சோதனை

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல போர்களை தடுப்பதற்கு உதவியதுடன், பதற்றமான இருதரப்பு உறவில் ஒரு அரிய உறுதிப்படுத்தும் ஏற்பாடாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது.

கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்..! | Pakistan S Nuclear Warning To India

போர் என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ சுடுவது மட்டுமல்ல என்றும் அதற்கு பல முகங்கள் உள்ளதாகவும் அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது, இது பசி மற்றும் தாகத்தால் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை ஒரு போர் நடவடிக்கை என்று கூறிய தூதுவர் காலித் ஜமாலி அதற்கு முழு அளவிலான அதிகாரம் உட்பட முழு பலத்துடன் பதிலளிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றையதினம் அப்தாலி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தமையானது, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/pakistan-s-nuclear-warning-to-india-1746351034

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/reel/668494692457194 👈

👆 பில்டிங் ஸ்ராங்கு... பேஸ்மெண்டு வீக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தில் விவேக் புதியவகை இசையில் பாடல் ஒன்றை இசைக்க…

வீட்டு பெருசுதான் போய்ட்டு…ஒப்பாரி வைக்கிறார்கள் என நினைத்து மயில்சாமி வாசலில் வந்து நிண்டு சாவு கூத்து ஆடுவார்.

பெருசு சாகவில்லை என தெரிந்ததும்…விவேக்கிடம்….

“சார் வெட்டியான் வேற சாரயத்தை கடனுக்கு வாங்கி குடிச்சுட்டான், அந்த பணத்தையாவது கொடு சார்” என்பார் மயில்சாமி🤣.

அந்த வெட்டியான் போல நானும் இரெண்டு வாரமா காத்து கிடக்கிறேன்😆.

சட்டு புட்டுன்னு அடி பட்டு…யார் பெரிய ரவுடி எண்டு காட்ட வேணாமா🤣.

36 மணிநேரத்தில் தாக்குதல் என செய்தி வந்தே நாலு நாள் ஆகி விட்டது😂.

ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣.

# கரப்பொத்தான் vs கொக்கிரோச்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஒரு படத்தில் விவேக் புதியவகை இசையில் பாடல் ஒன்றை இசைக்க…

வீட்டு பெருசுதான் போய்ட்டு…ஒப்பாரி வைக்கிறார்கள் என நினைத்து மயில்சாமி வாசலில் வந்து நிண்டு சாவு கூத்து ஆடுவார்.

பெருசு சாகவில்லை என தெரிந்ததும்…விவேக்கிடம்….

“சார் வெட்டியான் வேற சாரயத்தை கடனுக்கு வாங்கி குடிச்சுட்டான், அந்த பணத்தையாவது கொடு சார்” என்பார் மயில்சாமி🤣.

அந்த வெட்டியான் போல நானும் இரெண்டு வாரமா காத்து கிடக்கிறேன்😆.

சட்டு புட்டுன்னு அடி பட்டு…யார் பெரிய ரவுடி எண்டு காட்ட வேணாமா🤣.

36 மணிநேரத்தில் தாக்குதல் என செய்தி வந்தே நாலு நாள் ஆகி விட்டது😂.

ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣.

# கரப்பொத்தான் vs கொக்கிரோச்

மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂

உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி,

இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, goshan_che said:

🤣.

# கரப்பொத்தான் vs கொக்கிரோச்

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂

உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி,

இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣

உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உடான்ஸ் சாமியாரிடம் வாட்சாப்பில் கேட்டதில் - யாக குண்டத்தில் அமித்ஷா குடும்ப தலைபிள்ளையை இறக்கி அளப்பெரும் சோதியில் கலக்கவிட்டால் - பாகிஸ்தான் பலநூறாக சிதறும், சர்வதேச கிரிகெட்டும் தப்பிக்கும் என்கிறார்🤣.

Fli_46jakAIKi2J?format=jpg&name=small

இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்...

சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி...

பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Fli_46jakAIKi2J?format=jpg&name=small

இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்...

சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி...

பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂

சூனியம் வைக்கும் போது கால் மண்ணில் படவேணும் இல்லை எண்டால் சூனியம் ரிட்டர்ன் ஆகி விடும் என்கிறார் முஸ்லீம் மலையாள மாந்திரீகர் மஞ்சுமெல் பாய் .


உ.சா வின் ஆலோசனைப்படி ரெபேல், மிக், மிராஜ் எல்லாத்துக்கும் விங்கில் தேசிக்காய், காஞ்ச மிளகாய் கட்டி தொங்க விடப்பட்டுளதாக ஆய்வாளர் மணி கண்ணை உருட்டி, உருட்டி சொல்லிகிறார்.

ஆனால்…

“வாங்கடா பாகிஸ்தானுக்குள்ள… தேசிக்காய்க்கு எஸ்டிராவா நாமமும் பூசி அனுப்புறோம்”

என கொக்கரிக்கிறாராம் பாகிஸ்தான் தளபதி சாவல் ஹமீது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சூனியம் வைக்கும் போது கால் மண்ணில் படவேணும் இல்லை எண்டால் சூனியம் ரிட்டர்ன் ஆகி விடும் என்கிறார் முஸ்லீம் மலையாள மாந்திரீகர் மஞ்சுமெல் பாய் .


உ.சா வின் ஆலோசனைப்படி ரெபேல், மிக், மிராஜ் எல்லாத்துக்கும் விங்கில் தேசிக்காய், காஞ்ச மிளகாய் கட்டி தொங்க விடப்பட்டுளதாக ஆய்வாளர் மணி கண்ணை உருட்டி, உருட்டி சொல்லிகிறார்.

ஆனால்…

“வாங்கடா பாகிஸ்தானுக்குள்ள… தேசிக்காய்க்கு எஸ்டிராவா நாமமும் பூசி அனுப்புறோம்”

என கொக்கரிக்கிறாராம் பாகிஸ்தான் தளபதி சாவல் ஹமீது.

இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா.

இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன்.


ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா.

😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா.

இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன்.


ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா.

😂🤣

கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣.

அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும்.

ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣.

அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும்.

ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.

இன்னொரு சீமான் ஆதரவுக் குஞ்சு ஒண்டும் இடைக்கிடை வந்து கரையில வந்துநிண்டுகொண்டு கல்லெறிஞ்சுகொண்டு நிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இன்னொரு சீமான் ஆதரவுக் குஞ்சு ஒண்டும் இடைக்கிடை வந்து கரையில வந்துநிண்டுகொண்டு கல்லெறிஞ்சுகொண்டு நிக்கும்!

ஆரப்பா அது? அந்த ஏகலைவனோ? அல்லது நம்ம தூஷண துரைமுருகனோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது.

சீனாக்காரன் இருக்கும் வரைக்கும் பாக்கிஸ்தான் காரனும் பயப்பிடமாட்டான். சிங்களவனும் பயப்பிட மாட்டான். ஏன் ஜேர்மன்காரனும் பயப்பிட மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆரப்பா அது? அந்த ஏகலைவனோ? அல்லது நம்ம தூஷண துரைமுருகனோ🤣

ஏகலைவன் தான் அந்த ஆமைக்குஞ்சு!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 01:06, goshan_che said:

ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣.

# கரப்பொத்தான் vs கொக்கிரோச்

IPL, PSL இரண்டும் முடியுமட்டும் காத்திருக்கினம் போல இருக்கிது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-71.jpg?resize=750%2C375&ssl=

இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை!

இந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன.

விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும் மின்தடை போன்ற சூழ்நிலைகளுக்கு முதல் பதிலளிப்பதற்கான பயிற்சியில் இந்த நடவடிக்கை முதன்மையாக கவனம் செலுத்தும்.

ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்படும் இதுபோன்ற முதல் பயிற்சி இதுவாகும்.

மே 7 ஆம் திகதி திட்டமிடப்பட்ட நாடு தழுவிய மாதிரிப் பயிற்சிக்கு முன்னதாக, நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் செவ்வாயன்று (06) உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஒரு முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

2010 இல் அறிவிக்கப்பட்ட 244 நியமிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

https://athavannews.com/2025/1430804

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/reel/587160463776540 👈

இந்திய / பாகிஸ்தான் எல்லையில், "குறளி வித்தை" காட்டும் படையினர்.

495569535_664843663178863_84228970161307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

494929425_705651115474855_64832916142132

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.