Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு

May 3, 2025

தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயரை வைப்போம் என கடற்றொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனை கடற்றொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என்ற ஒன்றை வெளியிட்டு மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட சகலரும் அமைதியையே விரும்பியதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

https://www.ilakku.org/தேசிய-தலைவரின்-பெயரை-பயன/

  • கருத்துக்கள உறவுகள்

என் பி பி ஈரச்சாக்கை நல்லா ஊறப்போட்டு எடுத்து கொண்டு வாறாங்கள்…

இனி ஒரே அமுக்குத்தான்…

தலைவர் படத்தை, பெயரை வைத்து என்ன மாதிரி ஏமாற்றலாம்…அதற்கு எப்படி மந்தைகள் போல் சனம் எடுபடும் என்பதை ராமலிங்கம், தமிழக செய்திகளை பார்த்து புரிந்து கொண்டு, இந்த திட்டத்தை வகுத்திருக்க கூடும்🤣.

யேசு பிரான் ரோமர்களின் அராஜகத்தை எதிர்த்து அவர்களால் சிலுவையில் அறையப்பட்டவர்.

ஆனால் அவரின் மறைவுக்கு சில காலம் பின், ரோமர்களே அவரின் போதனைகளை நிறுவன பட்ட மதமாக்கி, ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைமையக்கதை ரோமிற்குள் அமைத்தும் கொண்டனர்.

ஈழத்தமிழருக்கு காணி, பொலிஸ், சமஸ்டி அதிகாரம் கொடுப்பதை தடுக்கும் என்றால் - எஹலபொல, கெப்பிட்டிபொலாவ போல் பிரபாகரனும் இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவர் என அனுரா அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

npp.webp?resize=750%2C375&ssl=1

சர்ச்சைக்குரிய பிரசாரப் பாடல்-அரசாங்கத்தின் நிலைப்பாடு!

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது.

சுயாதீன கலைஞர்கள் குழுக்கள் சிலவற்றால் உருவாக்கப்பட்ட குறித்த பாடல்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கம் இணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடல் உருவாக்கம் மற்றும் பரப்புரைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த பாடலுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430747

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 01:35, goshan_che said:

தலைவர் படத்தை, பெயரை வைத்து என்ன மாதிரி ஏமாற்றலாம்…அதற்கு எப்படி மந்தைகள் போல் சனம் எடுபடும் என்பதை ராமலிங்கம், தமிழக செய்திகளை பார்த்து புரிந்து கொண்டு, இந்த திட்டத்தை வகுத்திருக்க கூடும்🤣.

தமிழ்நாட்டு பெருந்தலைவருக்கு திரள்நிதி திரளும் இரகசியத்தை ராமலிங்கம் சந்திரசேகர் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

NPP பிரசாரங்களில் ஒலித்த விடுதலைப்புலிகளின் பாடல் : விளக்கமளித்த பொதுச் செயலாளர்

தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளமை குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) கருத்து வெளியிட்டுள்ளது.

தங்களது கட்சிக்கும் அந்தப் பாடல்களுக்கும் தொடர்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்துள்ளார்.

அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை அண்மையில் பிரசாரததிற்காக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

சிவாஜிலிங்கம் எதிர்ப்பு

இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.KShivajilingam)  எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலே நிஹால் அபேசிங்க இவ்வாறு பதிலளித்துார்.

NPP பிரசாரங்களில் ஒலித்த விடுதலைப்புலிகளின் பாடல் : விளக்கமளித்த பொதுச் செயலாளர் | Npp Has Denied Releasing Tamil Campaign Songs

இது குறித்து கருத்து வெளியிட்ட பொதுச் செயலாளர், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் (K. Ilankumaran) முகநூலில் டாக் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் பகிரப்பட்ட காணொளி

அத்தகைய காணொளிகள் டாக் செய்யப்படுவதில், தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

NPP பிரசாரங்களில் ஒலித்த விடுதலைப்புலிகளின் பாடல் : விளக்கமளித்த பொதுச் செயலாளர் | Npp Has Denied Releasing Tamil Campaign Songs

அத்துடன் சில இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூலில் காணொளிகளை உருவாக்கி டாக் செய்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதியின்றி முகநூலில் காணொளிகளை டாக் செய்ய முடியாது என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/npp-has-denied-releasing-tamil-campaign-songs-1746505872

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.