Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

டிரம்ப் ஒரு passing cloud. ஆர் எஸ் எஸ் அப்படி அல்ல.

அடுத்து அமெரிக்கவை பிரிக்கும் எண்ணம் வரும் அளவுக்கு கூட எதிரிகள் அமெரிக்காவுக்கு இல்லை.

ஆனால் உடையும் நிலையை உருவாக்க வல்ல காரணிகள் பல உள்ளும், புறமுகாக இந்தியாவுக்கு உள்ளன.

அதிபர் ட்ரம்ப் என்ற மனிதரைப் பற்றிய உங்களின் பார்வை மிகச் சரியானது. அவர் ஒரு தனிமனிதராக தன்னுடைய இலாப - நட்டக் கணக்கையே எங்கெனும் பார்க்கின்றார். நண்பர்கள், எதிரிகள் என்று இல்லாமல், இலாபம் வருகின்றதா, இல்லையா என்றே எண்ணுகின்றார்.

ஆனல் அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருக்கின்றது. நடு அமெரிக்காவில் இருக்கின்றனர்; வருமானம் பெரிதும் குறைந்தவர்கள்; ஒரு அடையாளம் கொண்டவர்கள். வேறு சிலர் மிகப் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். இவர்கள் இலாப நட்டக் கணக்கு பார்ப்பவர்கள் இல்லை. இங்கிருக்கும் குடியேறிகளை மனிதத்தன்மை அற்ற முறைகளினூடு வெளியேற்றிக் கொண்டே, தென் ஆபிரிக்காவில் இருந்து வெள்ளை இன மக்களை புதிய குடியேறிகளாக கொண்டு வருபவர்கள் இவர்கள். ஆங்கிலம் மட்டுமே இங்கு ஒரு மொழி என்பவர்கள் இவர்கள். DEI வேண்டாம் என்பவர்கள் இவர்கள்.

அதிபர் ட்ரம்ப் இந்த விடயங்களில் அக்கறை இல்லாதவராக இருக்கக்கூடும். ஆனால் அதிபரின் வாக்கு வங்கி இவர்கள் தான். அதனாலேயே இந்தக் கொள்கைகள் இன்று இங்கு முன்னிறுத்தப்படுகின்றன. இதன் வேர்கள் நீண்டு, அது இறுதியில் ஒரு இனப் பாகுபாடாக வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

ஆமாம், மோடி அவர்களில் ஒருவர், அவர் பாடம் கற்றதே ஆர் எஸ் எஸில் தான். அதன் பின்னர் தான் அரசியலுக்கே வந்தார்.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் ஈழ‌ ஆதார‌வாள‌ரா அல்ல‌து இல‌ங்கை ஆத‌ர‌வு அல்ல‌து ஹிந்தியாவுக்கு உங்க‌ளின் ஆத‌ர‌வு

இதில் நீங்க‌ள் எது ?

எனது ஆத‌ர‌வு எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தபடாத அதை ஆதரவு என்று சொல்ல முடியாது எனது தாகமே முஸ்லிம் குடியரசு பாக்கிஸ்தான் 💪

1 hour ago, வீரப் பையன்26 said:

இந்தியா உடையாதென்பதுக்கு உங்க‌ளிட‌ம் இருக்கும் வெளிப்ப‌டை ஆதார‌த்தை சொல்ல‌ முடியுமா........................

இந்தியா உடையும் இந்தியா சிதறும் என்று கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழத்தமிழர்களும் முன் வரிசையில் நிற்கும் நீங்களும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kandiah57 said:

சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள்.

ஜேர்மனியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனது ஆத‌ர‌வு எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தபடாத அதை ஆதரவு என்று சொல்ல முடியாது எனது தாகமே முஸ்லிம் குடியரசு பாக்கிஸ்தான் 💪

இந்தியா உடையும் இந்தியா சிதறும் என்று கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழத்தமிழர்களும் முன் வரிசையில் நிற்கும் நீங்களும்

2009க்கு முத‌ல் அப்ப‌டி ஒரு என்ன‌ம் என‌க்குள் இருந்த‌து இல்லை என‌ நினைக்கிறேன்

வெறுப்பை உருவாக்கின‌வ‌ர்க‌ள் இந்தியா ஆட்ச்சியாள‌ர்க‌ள்................நான் கேட்ட‌ கேள்விக்கு நீங்க‌ள் ச‌ரியாக‌ ப‌தில் அளித்த‌ மாதிரி தெரிய‌ வில்லை

இந்தியாவில் ம‌ட்டும் ம‌த‌வாத‌ம் இல்லை தானே..................வ‌ட‌ நாட்டில் முஸ்லிம் சிறுவ‌ர்க‌ளை அடிச்சு கொடுமை ப‌டுத்தி ஜேய் ஷிரிராம் சொல்லு சொல்லு என்று அடிச்ச‌வை தான் இந்து ம‌த‌ இளைஞ‌ர்க‌ள்...................3000ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை குஜ‌ராத்தில் 2002ம் ஆண்டு துடி துடிக்க‌ கொன்ற‌வ‌ர் தான் மோடி............இது ம‌த‌வாத‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா😁😛........................

நான் ஈழ‌ த‌மிழ‌ன் என‌து ஆத‌ர‌வு என‌து நாட்டுக்கு என் மொழிக்கு

ஹிந்திய‌ தினிச்சு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்களின் மொழிய‌ அழிக்க‌ துடிக்கும் நாடு இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருப்ப‌தும் பார்க்க‌ இல்லாம‌ போவ‌து ப‌ல‌ மொழி பேசும் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து👍...............உங்க‌ள‌ பெத்த‌ தாய் இருக்க‌ த‌க்க‌ சிங்க‌ள‌த்திய‌ நீங்க‌ள் ம‌கே அம்மே என்று கூப்பிட்டால் உங்க‌ள‌ பெத்த‌ தாய்க்கு ம‌ன‌ம் எப்ப‌டி வ‌லிக்கும்................அதே போல் தான் ம‌ற்ற‌வ‌னின் மொழிய‌ அழிக்கும் போது அதுங்க‌ளின் ம‌ன‌ங்க‌ள் வேத‌னைப் ப‌டும்

அதே போல் தான் இந்தியாவில் ஹிந்தி தினிப்பு வேக‌மாக‌ தினிக்க‌ப் ப‌டுது........................

சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு மூன்று நேர‌ உண‌வு கொடுக்க‌ துப்பில்லா நாட்டில் அதுக‌ள் இந்திய‌ர்க‌ளாய் இருப்ப‌தும் பார்க்க‌ மாண்டு போக‌லாம்....................நான் இந்தியாவை ப‌ற்றி இன்னும் பெரிசா எழுத‌ வில்லை அப்ப‌டி எழுதினால் இந்த‌ திரி நாறிப் போய் விடும்😁..............................

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250519-233135-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

ஹிந்திய‌ தினிச்சு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்களின் மொழிய‌ அழிக்க‌ துடிக்கும் நாடு இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருப்ப‌தும் பார்க்க‌ இல்லாம‌ போவ‌து ப‌ல‌ மொழி பேசும் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து👍....

இவ்வளவிற்கு பின்பு கூட ரசோதரன் அண்ணா விளக்கமாக தெரித்து இருந்தாரே திராவிடம் தமிழ் பிராமணீயம் இந்துத்வா முஸ்லிம் முற்போக்கு தொளிலாளி முதலாளி என்று எல்லோரும் ஒன்றுபட்டு இந்தியர்களாக நின்றார்களே

22 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியாவில் ம‌ட்டும் ம‌த‌வாத‌ம் இல்லை தானே..................வ‌ட‌ நாட்டில் முஸ்லிம் சிறுவ‌ர்க‌ளை அடிச்சு கொடுமை ப‌டுத்தி ஜேய் ஷிரிராம் சொல்லு சொல்லு என்று அடிச்ச‌வை தான் இந்து ம‌த‌ இளைஞ‌ர்க‌ள்..

ஹிந்தி படங்களுக்கு பாட்டு எழுதுகின்ற ஒரு முஸ்லிம் கவிஞர் அவர் மதங்களை நிராகரிப்பவராம் அதனால் அவரை முஸ்லிம் மதவெறியர்கள் நீ நரகத்திற்கு செல்வாய் என்று மிரட்டினார்களாம். இந்து மதவெறியர்கள் அவர் முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானுக்கு போ எள்று சொன்னார்களாம் அவர் சொன்னாராம் தான் ஒன்றில் நரகத்திற்கு போக வேண்டும் அல்லது பாகிஸ்தான் போகவேண்டும் பாகிஸ்தானைவிட நரகமே மேலானது நான் நரகத்திற்கே செல்ல விரும்புகிறேன் என்றாராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி

பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???.

குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣

நான் முன்னைநாள் இந்திய ஜனாதிபதி கலாம் சொன்னதை பின் பற்றியே கனவு காண்கிறேன்🤣.

உங்கள் தர்க்கம் நியாயமானதே. சீனாவின் மிகபெரிய பலமும், பலவீனமும் அதன் சர்வாதிகார-முதலாளிதுவ கட்டமைப்பு. அதேபோல் உகிர் பிரச்சினை, தென் சீனக்கடலில் ஜப்பான், பிலிப்பீன்ஸ் உடன், அவுட்டர் மங்கோலியாவில் ரஸ்யாவுடன் எல்லை தகறாறு என சீனாவுக்கும் பல சிக்கல்கள் உள்ளன - ஆனால் இவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி கொள்ளும் இடத்தில் கூட இந்தியாவோ அதன் வெளி உறவு கொள்கையோ இல்லை.

திபெத்தில் மட்டும் அதுவும் திபெத்தின் எல்லைக்கு வெளியே முயல்கிறார்கள். மிகவும் மெலிதாக.

ஆப்கானிஸ்தானில் சாலே யை முந்தள்ளி - அது கிழிந்து போய் விட்டது.

45 minutes ago, ரசோதரன் said:

இதன் வேர்கள் நீண்டு, அது இறுதியில் ஒரு இனப் பாகுபாடாக வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

ஏற்கிறேன் ஆனால் இந்த நிலையையும் தாண்டி இந்தியா போய்விட்டது என்கிறேன்.

நெருப்பு உருவாக சகலதும் இப்போ இருக்கிறது. ஆக்சிசன் மட்டும் இல்லை. அதை சீனா ஊதுமாயின் பத்திகொள்ளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சீனாவோ அல்லது இன்னொரு மிகப்பெரிய வளமுள்ள நாடு விரும்பி, இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கினால், நிச்சயம் இந்தியா திணறும். ஆனால் இன்றைய உலகில் தங்களுக்கு சேதாரம் அதிகம் இன்றி எந்த ஒரு நாடும் இதைச் செய்வார்களா, செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. உக்ரேன் போன்ற ஒன்று கிடைத்ததால் அமெரிக்காவும், மேற்குலகும் ரஷ்யாவிற்கு இதையே செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவால் ஒரு முனையில் போரை நடத்த முடியுமா என்பதே இப்பொழுது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல முனைகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தால், இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. மற்றும் இன்றைய இந்தியாவின் பொருளாதாரமே உலகிற்கு சேவைகளை வழங்குதலில் தங்கியிருக்கின்றது. யுத்தமும், சேவைகள் வழங்குதலும் ஒன்றாக இருக்கமுடியாது.

இந்தியா உடைந்து போக வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பமே. அதன் மூலம் இந்திய வெறுப்பை காட்டவும், பிரிவதால் எங்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அதனாலேயே பலரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள்.

நான் நடைமுறைகளையும், உலகின் போக்கையும் அடிப்படையாக வைத்தே எனது கருத்துகளை எழுதுகின்றேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு தவிர்த்து விடுகின்றேன். 'நீங்கள் எந்தப் பக்கம்..................' என்ற கேள்விக்கு முன்கூட்டிய பதில் இது..................🤣

எனக்கு இரெண்டு நிலைதான். பல ஈழ தமிழர் நிலையும் இதுவே என நினைக்கிறேன்.

1 . இந்தியா எமக்கு ஒரு தமிழ்நாடு மாடல் தீர்வை பெற்று தரின் - நான் ஜெய்கிந்த் சொல்ல ரெடி

  1. இல்லை எண்டால் இந்தியா உடைந்தாவது எமக்கு ஒரு விடிவு கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவ்வளவிற்கு பின்பு கூட ரசோதரன் அண்ணா விளக்கமாக தெரித்து இருந்தாரே திராவிடம் தமிழ் பிராமணீயம் இந்துத்வா முஸ்லிம் முற்போக்கு தொளிலாளி முதலாளி என்று எல்லோரும் ஒன்றுபட்டு இந்தியர்களாக நின்றார்களே

ஹிந்தி படங்களுக்கு பாட்டு எழுதுகின்ற ஒரு முஸ்லிம் கவிஞர் அவர் மதங்களை நிராகரிப்பவராம் அதனால் அவரை முஸ்லிம் மதவெறியர்கள் நீ நரகத்திற்கு செல்வாய் என்று மிரட்டினார்களாம். இந்து மதவெறியர்கள் அவர் முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானுக்கு போ எள்று சொன்னார்களாம் அவர் சொன்னாராம் தான் ஒன்றில் நரகத்திற்கு போக வேண்டும் அல்லது பாகிஸ்தான் போகவேண்டும் பாகிஸ்தானைவிட நரகமே மேலானது நான் நரகத்திற்கே செல்ல விரும்புகிறேன் என்றாராம்

ஒவ்வொருத‌ருக்கு ஒவ்வொரு பார்வை இருக்கு உற‌வே

கோஷான் அவ‌ர் ம‌ன‌சில் இருப்ப‌தை எழுதினார்

நான் இந்தியா என்ர‌ ந‌ச்சு பாம்ப்பு எவ‌ள‌வு ஆவ‌த்தான‌து என்ப‌தை எழுதினேன்........................

என்னை கேட்டால் பாக்கிஸ்தான் ந‌ல்ல‌ நாடு பாக்கிஸ்தானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌ ம‌க்க‌ள்..................இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் க‌ள்ள‌ நாய‌ல் அந்த‌ ம‌க்க‌ளை த‌ங்க‌ட‌ அழுக்கு பிடிச்ச‌ அர‌சிய‌லுக்காக‌ , ம‌த‌த்தால் பிரித்து , ஜாதியால் பிரித்து , அதுக‌ளை மோத‌ விட்டு குளிர் காய்வ‌து தான் இந்திய‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளின் வேலை............................

கேரிலா த‌விர்த்து ம‌ற்ற‌ ப‌ல‌ மானில‌ங்க‌ளில் இப்ப‌டியான‌ கொடுமைக‌ள் பல‌...................ஜெய்ஹிந் சும்மா வீர‌ வ‌சன‌ம் பேசி ம‌ற்ற‌வ‌ர்க‌ளை உசுப்பேத்த‌........................

இந்திய‌ன் ஆமியில் இருப்ப‌வ‌ர்க‌ள் பல‌ர் வ‌றுமையின் கார‌ண‌மாய் தான் ஆமியில் இணைந்த‌வை..................நாட்டு ம‌க்க‌ளுக்கு ஒழுங்கான‌ சாப்பாடு கிடையாது , இந்திய‌ நாட்டு இராணுவ‌த்துக்கும் ஒழுங்கான‌ சாப்பாடு கொடுப்பதில்லை....................இப்ப‌டி ஒவ்வொரு குறைக‌ளையும் சொல்லி கொண்டு போக‌லாம்................ஒரு நாள் டெல்லி ஆட்சியாள‌ர்க‌ளின் உண்மை முக‌ம் தெரியும் போது தான் இப்ப‌ நாம‌ விவாதிப்ப‌து உங்க‌ட‌ நினைவுக்கு வ‌ரும்👍😁........................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் க‌ள்ள‌ நாய‌ல் அந்த‌ ம‌க்க‌ளை த‌ங்க‌ட‌ அழுக்கு பிடிச்ச‌ அர‌சிய‌லுக்காக‌ , ம‌த‌த்தால் பிரித்து , ஜாதியால் பிரித்து , அதுக‌ளை மோத‌ விட்டு குளிர் காய்வ‌து தான் இந்திய‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளின் வேலை............................

சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு பாகிஸ்தானியர். இங்கு பலருக்கும் நன்றாகவே தெரிந்தவர். இவர் என்ன சொல்லுகின்றார் என்று கேட்டுப் பாருங்கள்:

https://www.youtube.com/watch?v=S3DH4DtFp-8

நாங்கள் எல்லாம் அங்கே போய் குடியிருக்க முடியாது. எந்த வெளியாருமே அங்கே போயிருக்க முடியாது. ஒரு விடுமுறைக்காகக் கூட அங்கே நாங்கள் போவதில்லை.

இன்று இந்தியாவில் ஒரு ஈழத்தமிழ் குடும்பத்தினருக்கு அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் மனவருத்தமான செய்தி. ஆனால், பாகிஸ்தானுக்கு போய் அங்கே வாழுங்கள் என்று நாங்கள் அவர்களுக்கு சொல்ல முடியுமா...... இது தான் உலகில் நாடுகளுக்கிடையேயான வித்தியாசம்...................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣

நான் சொல்ல‌ வ‌ருவ‌து பொரும்பாலும் டெல்லிய‌ ம‌ற்றும் த‌மிழ் நாட்டை இதுவ‌ரை ஆண்வ‌ர்க‌ளை

பெரும் த‌லைவ‌ர் , எம்ஜீ ஆர் , இவ‌யை த‌விர்த்து.....................................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣

ஆனா ஊனா சீமானின் பெய‌ரை இழுப்ப‌து உங்க‌ளுக்கு கைவ‌ந்த‌ க‌ல..............அவ‌ரும் த‌ட‌ம் புர‌ன்டால் அவ‌ரையும் மூர்க்க‌ த‌ன‌மாய் எதிர்ப்பேன்💪.....................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣

பதவி இல்லாத அரசியல்வாதி தான் தனது மகன்களுக்கு பல இலட்சங்கள் பணம் (இலங்கை ரூபாவில் கோடி) கட்டி தனியார் கலவிநிலையத்தில் ஆங்கிலம் மூலம் படிக்க வைக்கும் வசதி கொண்ட அரசியல்வாதி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பதவி இல்லாத அரசியல்வாதி தான் தனது மகன்களுக்கு பல இலட்சங்கள் பணம் (இலங்கை ரூபாவில் கோடி) கட்டி தனியார் கலவிநிலையத்தில் ஆங்கிலம் மூலம் படிக்க வைக்கும் வசதி கொண்ட அரசியல்வாதி

ஊழ‌ல் ம‌ன்ன‌ன் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எங்கை ப‌டிக்கிறார் எதில் போய் வ‌ருகிறார் என்று தெரியுமா....................

சீமான் அர‌சியலில் மாவீர‌ர்க‌ளின் ஆன்மாவோடு விளையாடினால் அத‌ற்கான‌ த‌ன்ட‌னையை நாம் க‌ண்டிப்பாய் அவ‌ருக்கு கொடுப்போம் , அவ‌ரின் ம‌னைவியிட‌ம் அந்த‌ கால‌த்திலே ப‌ண‌ம் இருந்த‌து முன்னாள் எம்பின்ட‌ ம‌க‌ள் அவா..............ஆன‌ ப‌டியால் இதை ப‌ற்றி பெரிதாக‌ அல‌ட்ட‌ தேவை இல்லை உற‌வே..........................

  • கருத்துக்கள உறவுகள்

எதுவென்றாலும் நான் சொல்வது எமது சொந்த நலனில் இருந்து.

இந்தியா உடைந்து எமக்கு தீர்வு / தனிநாடு வரும் என்பது - இதை என்னவென்று சொல்வது - இதை விட மாலைக்கனவு யதார்த்தமாக இருக்கும்.

எம்மிடம் ஆயுத பலம் இருந்தால் அதை ஓரளவு ஏற்காலம் (தமிழ் ந்நாட்டில் இருக்கும் மனித வலுவையும், தொழில்நுட்ப, உற்பத்தி வளத்தையும் இருபகுதியும் சேர்ந்து திரட்டலாம் என்று. இதன் உதாரணமான சமகால வரலாற்றை இப்போதைக்கு சொல்லாமல் விடுவது நல்லது.)

சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் மிகவும் ஏற்றதும், உற்ற நிலையும் இந்தியா உடைவது - சாதாரண புவியியலை பார்த்தே மிகவும் இலகுவாக எந்த ராஜதந்திரி, பாதுகாப்பு கொள்கைவகுப்பவர்கள். பொருளாதார கொள்கை வாங்குபவர்கள் போன்றவர்கள் அந்த முடிவை அடைவார்கள். ஏனெனில் அவர்கள் சிந்திப்பது, இயங்குவது யதார்த்தின் அடிப்படையில்.

(உடையும் போது தமிழ்நாடும் எப்படி இருக்கும் என்பது ஏனெனில் ஆயுத பலம் இல்லை.)

தெட்றக்கில், தேசஅரசு ஆயுதபாலமும், பயிற்றசையும் கொண்ட ஒரேயொரு அரசு சிறிலங்கா என்பதும்.

எல்லாற்றையும் தண்டி இந்திய உடைகிறது என்றால், முதலில் மேற்கு பாதுகாப்பது இலங்கை. சீன கூட இலங்கைக்கு எந்த விதத்திலும் பிரிவு வர கூடாது என்பதில். அது இலகுவாக செய்யக்கூடியதும்.

அந்த பகுத்தியில் இருக்கும் இரு நிலத்திணிவுகள் ஒன்று இலங்கை (ராஜதந்தியா மொழியில் நிலையான விமானந்தாங்கிகள், ஒன்று தாள்கிறது என்றால், மற்றதை எந்த அரசும் பாதுகாக்கும்)

வரலாற்றிலும், இலங்கைத்தீவுக்கு வடக்கே திரண்ட வளம், பலம் ஒன்றில் இலங்கைத்தீவை பிரித்தது, அல்லது ஒன்றாகியது, அல்லது அழுத்தத்தை பிரயோகித்தது.

அதே போல இலங்கைத்தீவில் பாரிய அரச மாற்றங்களை செய்ய முனையும் பகுதிகள் இப்பொது இந்தியாவை, வரலாற்றில் வடக்கில் திரண்ட அரச பலம் , வளத்தை கொண்டே செய்தன, செகின்றன, விடுதலைப் புலிகள் கூட அரசு சாரா அமைப்பாக வரலாற்றில் விதிவிலக்கான ஆயுத பலத்தை கொண்டு இருந்த்தும், இந்தியாவை வேண்டி நின்றனர் என்பதும்.

(உலகத்தில் ஆங்காங்கே அரசுக்கள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் திரள, முயல்கின்றன, இயற்கையான புவியியலாக இணைந்து இருந்தால் மேலதிக நன்மை)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

எங்க‌ளுக்கு ச‌ர்வ‌தேச‌த்தின் உத‌வி கிடைக்கும்...............Yugoslavia நாடு உடைந்த‌ போது 1995ம் ஆண்டு Republic of Bosnia and Herzegovina நாட்டை க‌டும் போர் செய்து அமெரிக்கா தான் இந்த‌ நாட்டுக்கு சுத‌ந்திர‌ம் பெற்றுக் கொடுத்த‌து..................ஈழ‌த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆயுத‌தால் ச‌ண்டை செய்வ‌து கைவ‌ந்த‌ க‌ல‌.................யூத‌ர்க‌ள் உல‌க‌ அள‌வில் ப‌ர‌வி இருந்து எப்ப‌டி த‌ங்க‌ளுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினார்க‌ளோ அதே போல் நாமும் உருவாக்குவோம்...........................உல‌க‌ வ‌ர‌லாறுக‌ள் என் போன்ற‌ லூசுக‌ளுக்கும் ந‌ங்கு தெரியும்😁😛........................ இந்த‌ ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போது உல‌கையே ஆண்ட‌ இங்லாந் நாட்டு பிர‌த‌ம‌ர் வாய் திற‌ந்து அறிக்கை விட்டு இருக்கிறார்....................

ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டால் சிங்க‌ள‌வ‌னுக்கு ஆப்புக்கு மேல் ஆப்பாய் வ‌ந்து அமையும்...................

2009 இந்தியா த‌லையிடாம‌ இருந்து இருக்க‌னும் சிங்க‌ள‌வ‌னின் முதுகெலும்ப்பை எம்ம‌வ‌ர்க‌ள் முறித்து இருப்பின‌ம்...........................

சீனா சிங்க‌ள‌வ‌னுக்கு ம‌றைமுக‌ ஆத‌ர‌வு கொடுத்தாலும் க‌ட‌சியில் சீனாவும் வாய் மூடி மெள‌வுன‌மாய் இருக்கும்...............சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு செய்த‌ கொடுமைக‌ள் ப‌ல‌ ஆதார‌த்தோடு இருக்கு...................ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ அள‌வில் ப‌ர‌ந்து வாழுகின‌ம்....................புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் அர‌சிய‌லில் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம்..........................இது வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து🙏👍........................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

.ஈழ‌த‌மிழ‌ர்க‌ளு

22 minutes ago, வீரப் பையன்26 said:

எங்க‌ளுக்கு ச‌ர்வ‌தேச‌த்தின் உத‌வி கிடைக்கும்...............Yugoslavia நாடு உடைந்த‌ போது 1995ம் ஆண்டு Republic of Bosnia and Herzegovina நாட்டை க‌டும் போர் செய்து அமெரிக்கா தான் இந்த‌ நாட்டுக்கு சுத‌ந்திர‌ம் பெற்றுக் கொடுத்த‌து..................ஈழ‌த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆயுத‌தால் ச‌ண்டை செய்வ‌து கைவ‌ந்த‌ க‌ல‌.................யூத‌ர்க‌ள் உல‌க‌ அள‌வில் ப‌ர‌வி இருந்து எப்ப‌டி த‌ங்க‌ளுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினார்க‌ளோ அதே போல் நாமும் உருவாக்குவோம்...........................உல‌க‌ வ‌ர‌லாறுக‌ள் என் போன்ற‌ லூசுக‌ளுக்கும் ந‌ங்கு தெரியும்😁😛........................ இந்த‌ ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போது உல‌கையே ஆண்ட‌ இங்லாந் நாட்டு பிர‌த‌ம‌ர் வாய் திற‌ந்து அறிக்கை விட்டு இருக்கிறார்....................

ச‌ர்வ‌தேச‌ம் த‌லையிட்டால்

சர்வதேசம் என்ன சத்திரமா?

மற்றவை பற்றி சொல்ல தேவை இல்லை உங்கள் அறிவு (சிந்திப்பது பின்)

எதிர்பார்த்தது.

30 minutes ago, வீரப் பையன்26 said:

2009 இந்தியா த‌லையிடாம‌ இருந்து இருக்க‌னும் சிங்க‌ள‌வ‌னின் முதுகெலும்ப்பை எம்ம‌வ‌ர்க‌ள் முறித்து இருப்பின‌ம்...........................

இது உண்மை என்றால், சிங்களவர் சிந்திக்க தெரிந்தவார்கள் தானே.

அனால் , நான் அது முற்றிலும் உண்மை என்று நம்பவில்லை. புலிகளும் அப்படி நம்பவில்லை.

உங்களை போன்றோர் தான் இந்த கதை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

சர்வதேசம் என்ன சத்திரமா?

மற்றவை பற்றி சொல்ல தேவை இல்லை உங்கள் அறிவு (சிந்திப்பது பின்)

எதிர்பார்த்தது.

இது உண்மை என்றால், சிங்களவர் சிந்திக்க தெரிந்தவார்கள் தானே.

அனால் , நான் அது முற்றிலும் உண்மை என்று நம்பவில்லை. புலிகளும் அப்படி நம்பவில்லை.

உங்களை போன்றோர் தான் இந்த கதை.

நீங்க‌ள் கொசுக் க‌டி க‌தையை இதுக்குள் எழுதும் போது , நான் எழுதின‌ உண்மை உங்க‌ளுக்கு ந‌ல்லா சுட்டுப் போச்சு........................க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ சிங்க‌ள‌வ‌ன் எப்ப‌டி எல்லாம் க‌த‌றுகிறான் என்று.............................எலும்பு துண்டுக்கு ஆசைப் ப‌டும் ந‌ப‌ரா நீங்க‌ள் இருக்க‌ மாட்டிங்க‌ள் என ந‌ம்புகிறேன்😁😛.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

சர்வதேசம் என்ன சத்திரமா?

மற்றவை பற்றி சொல்ல தேவை இல்லை உங்கள் அறிவு (சிந்திப்பது பின்)

எதிர்பார்த்தது.

இது உண்மை என்றால், சிங்களவர் சிந்திக்க தெரிந்தவார்கள் தானே.

அனால் , நான் அது முற்றிலும் உண்மை என்று நம்பவில்லை. புலிகளும் அப்படி நம்பவில்லை.

உங்களை போன்றோர் தான் இந்த கதை.

சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் க‌தைச்சு பேசி த‌மிழ‌ர்க‌ள் ஒரு தீர்வையும் பெற‌ முடியாது...............2002ம் ஆண்டை திரும்பி பார்க்கிறேன் குள்ள‌ ந‌ரி ர‌னில் செய்த‌ துரோக‌ங்க‌ளை......................எம்ம‌வ‌ர்க‌ள் அசுர‌ ப‌ல‌த்தோட‌ இருந்த‌ கால‌ம்.................ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் போடா விடில் , எம்ம‌வ‌ர்க‌ளின் அடுத்த‌ இல‌க்கு யாழ்பாண‌த்தை மீட்ப‌தாக‌ தான் இருந்து இருக்கும்.....................Osama bin Laden😡 2001 நீயூயோக்கில் செய்த‌ கொடுமை எங்க‌ட‌ போராட்ட‌த்தையும் பாதிச்ச‌து...................இந்த‌ அரைவேக்காடு செய்த‌ முட்டாள் த‌ன‌மான‌ செய‌லால் உல‌கில் இறுக்க‌மான‌ ப‌ல‌ முடிவுக‌ளை எடுத்த‌வை ப‌ல‌ நாடுக‌ள்.......................

  • கருத்துக்கள உறவுகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கே? இந்தியா - பாகிஸ்தான் மோதலில் விடை தெரியாத கேள்விகள்

இந்திய சிப்பாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 21 மே 2025, 02:14 GMT

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் ஆன நிலையில் இன்னும் விடை கிடைக்காத பல வினாக்கள் எஞ்சி நிற்கின்றன.

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இவற்றை 'பயங்கரவாதிகள் மறைந்து இருந்த முகாம்கள்' என்று இந்தியா கூறியது.

இதற்குப் பிறகு, எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போதும் அதற்குப் பின்னரும், இரு தரப்பினரும் பரஸ்பரம் பலவிதமான கூற்றுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்தக் கூற்றுகளில் சில உறுதிப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இந்த முழு சம்பவத்திலும், பல்வேறு ராணுவ, ராஜ்ஜிய மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை நேரடியாக பதில் கிடைக்கவில்லை அல்லது விடையளிக்கப்படவில்லை.

பாதுகாப்பு மற்றும் ராஜ்ஜிய விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் விடை கிடைக்காத வினாக்களுக்கு பதிலை நிபுணர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்வோம்.

ஜம்மு காஷ்மீர்

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர்

பஹல்காம் தாக்குதல் நடத்தியது யார்?

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி, இருவர் பாகிஸ்தானியர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவல்துறை கூற்றுப்படி, அனந்த்நாக்கில் வசிக்கும் ஆதில் ஹுசைன் டோகர், ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகிய 3 பேரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்துவிட்டனர், எனவே இந்தியா அவர்களின் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டது. இந்தியா நடத்திய இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

ஆனால் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. எனவே பிபிசி இந்தக் கேள்வியை ராணுவ பிரிகேடியர் (ஓய்வு) ஜீவன் ராஜ்புரோஹித்திடம் கேட்டது.

நமது கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் ராஜ்புரோஹித், "இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பது கடினம், ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர் ஆதரவு வலையமைப்பு உள்ளது. இரண்டாவதாக, அவர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து உதவி கிடைக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இணைந்து, இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, பயங்கரவாதிகளைக் கொல்வது மட்டுமே போதுமானதல்ல. அதை இயக்கும் முழு கட்டமைப்பையும் தகர்க்க வேண்டியது அவசியம்."

"இந்த பயங்கரவாதிகளைக் கொல்வதை விட பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பான முழு சித்தாந்தத்தையும் ஒழிப்பது மிக முக்கியமானது. ஒருசில பயங்கரவாதிகளைக் கொல்வதால் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

எல்லை தாண்டிய தாக்குதல்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். பிபிசி உட்பட பல ஊடக அமைப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசியுள்ளன. இருப்பினும், அரசு தரப்பில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இங்கு எழும் கேள்வி என்னவென்றால், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் எல்லைப் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டாமா? என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராணுவ ஏர் மார்ஷல் (ஓய்வு) திப்தேந்து செளத்ரி, "இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு என சில நிலையான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் பிரத்யேக நெறிமுறை உள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதியில் மக்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது. ஜம்முவிலும், பஞ்சாபிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது" என்று கூறுகிறார்.

"எல்லை அருகே வசிக்கும் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக ஷெல் தாக்குதலை எதிர்கொண்டுள்ள அவர்கள், ஏற்கனவே தயாராக உள்ளனர். பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன, அவசர நிலையை சமாளிக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைரன் ஒலிக்கும் போதோ அல்லது மின்தடை ஏற்படும்போதோ என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார்.

"போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது அல்லது ராணுவம் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே, மக்களை அங்கிருந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் எல்லைப் பகுதிகள் காலி செய்யப்படுகின்றன. அதற்கு போதுமான நேரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது போர்ச்சூழல் இல்லை என்பதால், எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படவில்லை. திடீரென்று ஷெல் தாக்குதல் நடக்கிறது, எனவே எந்தவித முன்னெச்சரிக்கையும் கொடுக்க முடியாது" என்று அவர் விளக்கமாக விடையளிக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டது

போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மையா இல்லை பொய்யா?

ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் பெரிய அளவிலான உலோகத் துண்டு ஒன்று விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக இந்தியா எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.

மறுபுறம், இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இது குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தியிடம் கேட்கப்பட்ட போது, "நாம் போர் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும். தற்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? அதற்கு பதில் ஆம் என்பதே." என்று பதிலளித்தார்.

"தற்போது கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. அது எதிரிகளுக்கு சாதகமாக அமையலாம்... இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்... நமது விமானிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்" என்று ஏர் மார்ஷல் பார்தி கூறினார்.

பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "அவர்களின் விமானங்கள் நமது எல்லைக்குள் நுழைவதைத் தடுத்துவிட்டோம். அவற்றின் சிதைவுகள் எங்களிடம் இல்லை" என்றார்.

ஏர் மார்ஷல் செளத்ரியின் கூற்றுப்படி, ஒரு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் போது இழப்புகளை பகிரங்கமாக வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன.

"உதாரணத்திற்கு பாலகோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நமது சாதனைகளை பகிரங்கமாக வெளியிட நாங்கள் தயாராக இல்லை. இருந்தபோதிலும் அப்போது வெளியுறவு அமைச்சகம் பகிரங்கமாக தகவல்களை அளித்து வந்தது. பாதுகாப்பு அமைச்சகமும் பின்னர் அதில் இணைந்தது. பாதுகாப்பு அமைச்சகம் களத்திற்குள் வந்த நேரத்தில், நிலைமை மாறியிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் பிடிபட்டார். அதற்குப் பிறகு, உலகின் முழு கவனமும் தடம் மாறிவிட்டதால், பயங்கரவாதத்தை குறிவைக்கும் இந்தியாவின் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது."

"ராணுவத்திற்கு இழப்புகள் ஏற்படும். இது அவர்களின் வேலையின் ஒரு பகுதி. அது எவ்வளவு என்பதோ, எண்ணிக்கையோ முக்கியமானதல்ல. எத்தனை ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது முக்கியமல்ல. நமது அடிப்படை நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோமா என்பதுதான் முக்கியமானது. இழப்புகள் இருக்கும், ஆனால் முக்கியமான நோக்கம் எட்டப்பட்டதா என்பதே முக்கியம்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார்.

டிரம்பின் கூற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை

இந்தியா - அமெரிக்கா ஆலோசனை விவரம்

மோதலில் ஈடுபட்டிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை வெளியிட்டார்.

தனது அரசாங்கத்தின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் "உடனடியாகவும் முழுமையாகவும் மோதலை நிறுத்த" ஒப்புக்கொண்டதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார்.

மறுபுறம், இந்த சண்டை நிறுத்தம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) முன்முயற்சியின் பேரில் நடந்ததாக இந்தியா கூறியது. டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை.

இந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய தூதர் திலீப் சிங்குடன் பிபிசி பேசியது. இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. இதற்குப் பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் பேசியிருக்க வேண்டும். சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் முன்முயற்சி பாகிஸ்தானிடமிருந்து வர வேண்டும் என்று இந்தியா கூறியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவை இந்தியாவின் டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொள்ள வைத்தது. நமது டிஜிஎம்ஓ சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் சண்டைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டிருக்கும்" என்று ஊகிக்கிறார்.

"அமெரிக்காவுடனான உறவை இணக்கமாக வைத்திருப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. பல விஷயங்கள் நெருக்கடியில் உள்ளன. இந்த உறவு அதிபர் டிரம்புடன் மட்டும் நின்றுவிடவில்லை" என்று அவர் கூறுகிறார்.

எதிர்ப்பும் போர் நிறுத்தமும்

சண்டை நிறுத்தம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள், சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கை தெளிவாக விளக்குமாறும் கேட்கின்றன.

இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டால், அது தொடர்பாக அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த வினாவிற்கு விடையளிக்கும் திலீப் சிங், "அப்படி எந்தவித நெறிமுறைகளும் இல்லை. இதுபோன்ற அதிமுக்கியமான மற்றும் ராணுவ நடவடிக்கைகளில், அரசாங்கம் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே, நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாதவர்களிடமிருந்து ஆலோசனையை பெற முடியாது. நடவடிக்கையின் விவரங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நடவடிக்கை பற்றிய தகவல்களை வெளிப்படையாக சொல்வது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்" என்று சொல்கிறார்.

டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்து கல்லூரியின் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் இதுபற்றி கூறுகையில், ராணுவக் கொள்கை விஷயங்களில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்ததற்கான முன்னுதாரணம் எதுவும் இல்லை என்கிறார்.

"1971 இந்தியா-பாகிஸ்தான் போரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அப்போதும் போர் உத்தி குறித்து எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற அமைப்பில், ராணுவம் தொடர்பான முடிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை, அவை பின்னர்தான் விவாதிக்கப்படுகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ராணுவம் தொடர்பான முடிவுகளை எடுப்பது ராணுவ உளவுத்துறை தொடர்பான விவரங்களை பெறுபவர்கள் தான். அதேபோல சண்டை நிறுத்தம் தொடர்பான முடிவை எடுப்பதும் அவர்கள் தான். எனவே, எதிர்க்கட்சிகளிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கவோ, கேட்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது" என்று பேராசரியர் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04eelkpwwko

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2025 at 23:09, குமாரசாமி said:

ஜேர்மனியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

தெரியும்,.அவர்கள் தங்களுடைய நாட்டில் தான் அழுகிறார்கள் சொந்த நாடு வெளிநாடு இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் அசுர‌ ப‌ல‌த்தோட‌ இருந்த‌ கால‌ம்.................ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் போடா விடில் , எம்ம‌வ‌ர்க‌ளின் அடுத்த‌ இல‌க்கு யாழ்பாண‌த்தை மீட்ப‌தாக‌ தான் இருந்து இருக்கும்

முதலில் யாழ்ப்பாணம் தமிழீழம் அல்ல.

அனால், அப்படி நடந்த்து இருந்தால் அது வரலாற்றில் பெரிய ஒரு சாதனை தான்.

சர்வதேச நியதி, அரசு- அரசு சாரா குழு என்ற அடிப்படையில், அரச படைகளை முறியடித்து வடக்கின் பெரு நகரத்தை கைப்பற்றுவது புலிகளின் நிலையை நகரம் / மாகாணம் அளவில் அரச மட்டத்துக்கு உயர்த்தி இருக்கும்.

8 hours ago, வீரப் பையன்26 said:

.Osama bin Laden😡 2001 நீயூயோக்கில் செய்த‌ கொடுமை எங்க‌ட‌ போராட்ட‌த்தையும் பாதிச்ச‌து...................இந்த‌ அரைவேக்காடு செய்த‌ முட்டாள் த‌ன‌மான‌ செய‌லால் உல‌கில் இறுக்க‌மான‌ ப‌ல‌ முடிவுக‌ளை எடுத்த‌வை ப‌ல‌ நாடுக‌ள்.......................

அனால், ஒசாமா பின் லாடன் தன புகலிகள் அழிவுக்கு (ஆக குறைந்தது பகுதி ) காரணம் என்றால் - நீங்கள் அதை சொல்ல வருவதாகவே எனக்கு புரிகிறது.

மேற்கு 2001 - 2002 இல் UN பாதுகாப்பு சபையில் இல் அரசு சாரா குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு இருக்கும் பாதுகாப்பை நீக்கி தீர்மானம் இயற்றிவிட்டும்,

ஏன் ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) இருக்கும் மேற்கு எதிர் அரசுசாரா குழுக்களை அழிக்க மேற்கு / us முயலவில்லை?

மறுவளமாக, ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) மற்றும் அதனை அண்டிய வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில அரசுக்களே கைவைக்கப்பட்டது?

மத்திய கிழக்கில், ஆக குறைந்தது, (அந்த தீர்மான தொனி அடிப்படையில்), நாடுகள் தாது அரச தலைமைள் குறிவைக் கப்பட்டது (சதாம், கடாபி,அசாத்) போன்றோர்

இதில் ஈரானும் உள்ளடக்கம், அனால், மற்றவர்களின் அனுபவத்தில் ஈரான் மிகவும் பெரியது, சண்டைக்கு போய் இலக்குகள் எட்டாமல் காயத்துடன் வெளிக்கிட வேண்டி வரும் என்ற முடிவில், ஈரான் பின்போட்டு, இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது.

அனால், ஆப்பிரிக்காவில் குறிவைக்கப்பட்டது அரசு சாரா குழுக்கள். ஏன்?

இந்த பாதுகாப்பு சபை தீர்மானம் அடிப்படையிலேயே, புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் நீதியான போர். மேற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது (மறைமுக நேரடி ஈடுபாட்டுடன்). அதில் இநதியாவின் நோக்கமும், இலக்கும் மேட்ற்கு / us உடன் ஒத்து போனது.

(இந்த தீர்மானம் ஒரு முக்கிய காரணம் இனப்படுகொலை என்பது கருத்தில் எடுக்கப்படாமல், அப்படி சொல்லப்படும் போது மேடற்கு அரசுக்களால் உள்நாட்டு சட்ட்டதை வைத்து, கடும்போக்காளர் என்ற முத்திரை குத்தி மூடப்படுவதற்கும் (குறிப்பாக US, UK ஆல்).

இலங்கைக்கு UK சொல்லுவதே பொதுவாக கருத்தில் எடுக்கப்படும் மேற்கால், குறிப்பாக பாதுகாப்பு சபையில். ஏனெனில், பிரித்தானிய காலனித்துவ அகற்றத்தில் சிறிலங்கா அரசு உருவாகியது.)

17 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் கொசுக் க‌டி க‌தையை இதுக்குள் எழுதும் போது , நான் எழுதின‌ உண்மை உங்க‌ளுக்கு ந‌ல்லா சுட்டுப் போச்சு

மேலே சொன்னது வெளித்தோற்றத்தில் தனித்தவை

அல்லது தொட்டம் தொடமானவை , 2 கண்டங்கள், மூன்று புவியியல் பிரதேசங்களில்.

அனால், அவற்றுக்கு தொடர்பு இருக்கிறது.

இவை முக்கியமானவை, மேலும் சில விடயங்களும் இருக்கிறது

அப்படி விளங்காதவர்களே கொசுக்கடி என்போர். அதில் நீங்களும் ஒன்று.

ஒன்றும் புதுமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

முதலில் யாழ்ப்பாணம் தமிழீழம் அல்ல.

அனால், அப்படி நடந்த்து இருந்தால் அது வரலாற்றில் பெரிய ஒரு சாதனை தான்.

சர்வதேச நியதி, அரசு- அரசு சாரா குழு என்ற அடிப்படையில், அரச படைகளை முறியடித்து வடக்கின் பெரு நகரத்தை கைப்பற்றுவது புலிகளின் நிலையை நகரம் / மாகாணம் அளவில் அரச மட்டத்துக்கு உயர்த்தி இருக்கும்.

அனால், ஒசாமா பின் லாடன் தன புகலிகள் அழிவுக்கு (ஆக குறைந்தது பகுதி ) காரணம் என்றால் - நீங்கள் அதை சொல்ல வருவதாகவே எனக்கு புரிகிறது.

மேற்கு 2001 - 2002 இல் UN பாதுகாப்பு சபையில் இல் அரசு சாரா குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு இருக்கும் பாதுகாப்பை நீக்கி தீர்மானம் இயற்றிவிட்டும்,

ஏன் ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) இருக்கும் மேற்கு எதிர் அரசுசாரா குழுக்களை அழிக்க மேற்கு / us முயலவில்லை?

மறுவளமாக, ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) மற்றும் அதனை அண்டிய வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில அரசுக்களே கைவைக்கப்பட்டது?

மத்திய கிழக்கில், ஆக குறைந்தது, (அந்த தீர்மான தொனி அடிப்படையில்), நாடுகள் தாது அரச தலைமைள் குறிவைக் கப்பட்டது (சதாம், கடாபி,அசாத்) போன்றோர்

இதில் ஈரானும் உள்ளடக்கம், அனால், மற்றவர்களின் அனுபவத்தில் ஈரான் மிகவும் பெரியது, சண்டைக்கு போய் இலக்குகள் எட்டாமல் காயத்துடன் வெளிக்கிட வேண்டி வரும் என்ற முடிவில், ஈரான் பின்போட்டு, இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது.

அனால், ஆப்பிரிக்காவில் குறிவைக்கப்பட்டது அரசு சாரா குழுக்கள். ஏன்?

இந்த பாதுகாப்பு சபை தீர்மானம் அடிப்படையிலேயே, புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் நீதியான போர். மேற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது (மறைமுக நேரடி ஈடுபாட்டுடன்). அதில் இநதியாவின் நோக்கமும், இலக்கும் மேட்ற்கு / us உடன் ஒத்து போனது.

(இந்த தீர்மானம் ஒரு முக்கிய காரணம் இனப்படுகொலை என்பது கருத்தில் எடுக்கப்படாமல், அப்படி சொல்லப்படும் போது மேடற்கு அரசுக்களால் உள்நாட்டு சட்ட்டதை வைத்து, கடும்போக்காளர் என்ற முத்திரை குத்தி மூடப்படுவதற்கும் (குறிப்பாக US, UK ஆல்).

இலங்கைக்கு UK சொல்லுவதே பொதுவாக கருத்தில் எடுக்கப்படும் மேற்கால், குறிப்பாக பாதுகாப்பு சபையில். ஏனெனில், பிரித்தானிய காலனித்துவ அகற்றத்தில் சிறிலங்கா அரசு உருவாகியது.)

மேலே சொன்னது வெளித்தோற்றத்தில் தனித்தவை

அல்லது தொட்டம் தொடமானவை , 2 கண்டங்கள், மூன்று புவியியல் பிரதேசங்களில்.

அனால், அவற்றுக்கு தொடர்பு இருக்கிறது.

இவை முக்கியமானவை, மேலும் சில விடயங்களும் இருக்கிறது

அப்படி விளங்காதவர்களே கொசுக்கடி என்போர். அதில் நீங்களும் ஒன்று.

ஒன்றும் புதுமை இல்லை.

ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்!

அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Eppothum Thamizhan said:

ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்!

14 hours ago, Kadancha said:

மேலே சொன்னது வெளித்தோற்றத்தில் தனித்தவை

அல்லது தொட்டம் தொடமானவை , 2 கண்டங்கள், மூன்று புவியியல் பிரதேசங்களில்.

அனால், அவற்றுக்கு தொடர்பு இருக்கிறது.

இன்னும் சற்று விளக்கமாக, வெளிப்படையாக அவற்றுக்கு தொடர்பு இல்லாத தோற்றம்.

அதை தான் நீங்கள் சொல்வது

ஆகவே உங்களுக்கு அடியும் தெரியவில்லை, நுனியும் தெரியவில்லை என்பது வெளிப்படை.

1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!

அனால், அப்படித்தான் வெளிநாட்டு, அரசியல், இராணுவ நகர்வுகள் , அடியும் தெரியாது, நுனியும் தெரியாது,

அப்படி தெரிந்து வடாக கூடாது (அதாவது செய்பவரின் நோக்கம், போக்கு ) என்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டது.

இதை கூட அறியாமல், ChatGPT ஐ நடச்சொல்வது.

(குறிப்பு: சொல்லியவற்றை Chatgpt இடம் கொடுத்து, அதன் முடிவு என்ன என்பதையும், அந்த முடியின் அடிப்படியில் உங்கள் சிந்தனையால் அடைந்த முடிவை சொல்லலாம்.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.